பாலசினோர் சமஸ்தானம்
பாலசினோர் சமஸ்தானம் ( State of Balasinor, 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பாலசினோர் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தின் பாலசினோர் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1921-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையில் இருந்த பாலசினோர் சமஸ்தானம் 490 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 32,618 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் பாலசினோர் சமஸ்தானம் குஜராத் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.
பாலசினோர் சமஸ்தானம் બાલાસિનોર રિયાસત | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
பிரித்தானிய இந்தியாவின் ரேவா கந்தா முகமையில் பாலசினோர் சமஸ்தானம் (அடர் நீல நிறம்) | ||||||
தலைநகரம் | பாலசினோர் | |||||
வரலாற்றுக் காலம் | பிரித்தானிய இந்தியா | |||||
• | நிறுவப்பட்டது | 1758 | ||||
• | இந்திய விடுதலை | 1949 | ||||
Population | ||||||
• | 1901 | 32,618 | ||||
தற்காலத்தில் அங்கம் | பாலசினோர் தாலுகா, மகிசாகர் மாவட்டம், குஜராத், இந்தியா |
வரலாறு
தொகுமுகலாயப் பேரரசின் இறுதிக் காலத்தில் படைத்தலைவராக இருந்த பஷ்தூன் இனத்தின் பாபி வம்ச நவாப் முகமது கான் பாபி என்பவர் 28 செப்டம்பர் 1758 அன்று பாலசினோர் சமஸ்தானத்தை நிறுவினர்.[1][2]பின்னர் மராத்தியப் பேரரசில் பாலசினோர் சமஸ்தானம் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பாலசினோர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் இருந்தது. பாலசினோர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பாலசினோர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று 1948 மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பாலசினோர் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ States before 1947 A-J