குஜராத்தி
குசராத்தி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. மொத்தம் 46 மில்லியன் மக்களால் பேசப்படும் இது உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் 23 ஆவது இடத்தில் இருக்கிறது. இது ஒப்பிட்டளவில் புதிய மொழியாகும். ஏறத்தாழப் பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதன் இலக்கண அமைப்பு பிற இந்தோ ஆரிய மொழிகளான பஞ்சாபி, நேபாளி, இந்தி, பெங்காலி மராத்தி போன்றவற்றை ஒத்தது. சில திராவிட மொழி இயல்புகளும் உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Ernst Kausen, 2006. Die Klassifikation der indogermanischen Sprachen (Microsoft Word, 133 KB)
- ↑ "Constitution of the Republic of South Africa, 1996 – Chapter 1: Founding Provisions". gov.za. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
- ↑ "Language, England and Wales - Office for National Statistics". www.ons.gov.uk. பார்க்கப்பட்ட நாள் 2024-02-14.