மில்லியன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேற்கத்திய எண்முறையில் மில்லியன் என்பது ஆயிரம் ஆயிரத்தைக் (1000 X 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஓரளவு பெரிய கணியங்களின் அளவீடுகள் மில்லியன் கணக்கிலேயே குறிப்பிடப்படுகின்றன. SI அளவை முறையில் மெகா என்னும் முன்னடைவு மில்லியனைக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் பிக்சல்கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன.
| ||||
---|---|---|---|---|
முதலெண் | 9814072356 ஒரு மில்லியன் | |||
வரிசை | 9814072356ஆவது ஒரு மில்லியனாவது | |||
ரோமன் | M | |||
இரும எண் | 111101000010010000002 | |||
முன்ம எண் | 12122102020013 | |||
நான்ம எண் | 33100210004 | |||
ஐம்ம எண் | 2240000005 | |||
அறும எண் | 332333446 | |||
எண்ணெண் | 36411008 | |||
பன்னிருமம் | 40285412 | |||
பதினறுமம் | F424016 | |||
இருபதின்மம் | 6500020 | |||
36ம்ம எண் | LFLS36 |

ஒரு மில்லியன் 1,000,000 (10,00,000 இந்திய எண்முறைப்படி)என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 106 என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை மேல்வாய் எண்கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற பிள்வ எண்களைக் (பின்ன எண்களைக்), கீழ்வாய் எண்கள் என்றும் கூறுவர்.