பதினறும எண் முறைமை

பதினறும எண்கள் (ஆங்கிலம்: Hexadecimal) பதினாறை அடிப்படையாக கொண்ட எண்கணித முறையாகும். பல கணினி மென்பொருட்களும் பதினறும எண்களை கொண்ட நிரல்களாகவே தொகுக்கப்படுகின்றன.

எண்கணிதம் இடத்தை அடிப்படையாக கொண்டது. ஒரு எண் இருக்கும் இடத்தை பொறுத்து அதன் பெருக்கும் அளவு அமைகிறது. ஒன்று, பத்து, நூறு என்று எண்கள் இடத்தை கொண்டு அளவிடப்படுகிறது. அதனால்தான் 9க்கு அடுத்து 2 இலக்கத்திற்கு தாவுகிறோம். மொத்தத்தில் எண்களெல்லாம் 0-9 முடிய உள்ள 10 எண்களே. அடி 16 என்றோ 16ன் அடிப்படை என்றோ குறிக்கப்படும் எண்கள் 0-15 வரை வந்து அதன் பின்பு 2 இலக்கங்கள் தொடங்கும். அதாவது பதினாறின் மடங்காக, இரண்டாவது இலக்கத்திற்கு போகும் போது ஒரு பதினாறு முடிந்துவிட்டது என்றும், மூன்றாவது இலக்கத்திற்கு போகும் போது 256 முடிந்துவிட்டது என்றும் பொருள் படும். பத்தை அடிப்படையாக கொண்டு 2 இலக்கம் வருவதைப்போலவே பத்து வரை அதே எண் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. மிச்சமுள்ள 6 எண்களும் ஆங்கில எழுத்துக்களான A/a, B/b, C/c, D/d, E/e, F/f என்று குறிக்கப்படுகிறது. இதன் வரிசை 1,2,3,4,5..9,a,b,c,d,e,f,10,11,12..19,1a,1b,1c,1d,1e,1f,20... என்று நீளும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "The hexadecimal system" (in en). Ionos Digital Guide இம் மூலத்தில் இருந்து 2022-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220826084201/https://www.ionos.co.uk/digitalguide/server/know-how/hexadecimal-system/. 
  2. Knuth, Donald Ervin (1986). The TeXbook. Duane Bibby. Reading, Mass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-13447-0. இணையக் கணினி நூலக மைய எண் 12973034. Archived from the original on 2022-01-16. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. The string "\x1B[0m\x1B[25;1H" specifies the character sequence Esc [ 0 m Esc [ 2 5; 1 H. These are the escape sequences used on an ANSI terminal that reset the character set and color, and then move the cursor to line 25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினறும_எண்_முறைமை&oldid=4100370" இலிருந்து மீள்விக்கப்பட்டது