இணையக் கணினி நூலக மையம்

இணையக் கணினி நூலக மையம் (OCLC, Online Computer Library Center, Inc.) ஒரு "உலகின் தகவல் அணுக்கத்தை விரிவுபடுத்தவும் தகவலறிவதற்கான செலவுகளைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பெற்ற இலாபநோக்கற்ற, உறுப்பினர்களுக்கான, கணினி நூலகச் சேவை மற்றும் ஆய்வு அமைப்பாகும்".[1] இது 1967இல் ஓகையோ கல்லூரி நூலக மையம், எனத் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தனது உறுப்பின நூலகங்களின் துணையுடன் உலகின் மிகப்பெரிய இணைய பொதுவணுக்கப் பட்டியலான வேர்ல்டுகேட்டை உருவாக்கி பராமரிக்கிறது. இந்த கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களாக 170 நாடுகளில் 72,000 நூலகங்களும் ஆவணக் காப்பகங்களும் அருங்காட்சியகங்களும் உள்ளன.

இணையக் கணினி நூலக மையம்
Online Computer Library Center
வகைஇலாபநோக்கற்ற அங்கத்தினர் கூட்டுறவு
நிறுவுகை1967 (1967)
தலைமையகம்டப்ளின், ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய
முக்கிய நபர்கள்இசுகிப் பிரிட்சர்டு, தலைவரும் முதன்மை செயல் அதிகாரியும்
தொழில்துறைநூலக சேவைகள்
உற்பத்திகள்வேர்ல்டுகேட்டு, பர்ஸ்ட்டுசர்ச்சு, தூவி தசம வகைப்படுத்தல், நூலக மென்பொருளான விடிஎக்ஸ், வெப்சங்க்சன், கொசின்பாயிண்ட்டு
இணையத்தளம்www.oclc.org

மேற்சான்றுகள்தொகு

  1. "About OCLC". OCLC. செப்டம்பர் 16, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 18, 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு