கூட்டுறவு என்பது கூட்டுறவுக் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சமூக, பொருளாதார, நிறுவன அமைப்பாகும்.[1][2][3]

வரைவிலக்கணங்கள்

தொகு
  • மக்கள் தங்கள் பொதுப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, எவ்வித கட்டாயமுமின்றி தாமாகவே முன்வந்து மனிதர்கள் என்ற நோக்கில் சமத்துவ அடிப்படையுடன் மக்களாட்சி முறையில் ஒருங்கிணைந்து இயங்கும் முறையே கூட்டுறவாகும். - கல்வெர்ட்
  • குடியாட்சி போன்ற அமைப்பு, சுயேட்சையுடன் சேர்தல், சுயாதீனக் கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோகம், உறுப்பினர்களிடையே அநியோன்யம், ஒற்றுமை, திருந்திய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை ஏற்று தன்மானம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து உழைப்பதே கூட்டுறவு. - E, S. போகாடஸ்
  • ஒவ்வொருவரும் தமக்காகவும் பிறருக்காகவும் தமது திறன்களையும் கருவிகளையும் தம்முடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து அதனால் ஏற்படும் இலாபமோ நட்டமோ எதுவானாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் முறைதான் கூட்டுறவு. - ஹெரிக்

கூட்டுறவுக் கொள்கைகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cooperatives
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


தனிக்கட்டுரை: கூட்டுறவுக் கொள்கைகள்

1995 ம் ஆண்டு அனைத்துலக கூட்டுறவு ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள்.

1. தன்விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை.

2. மக்களாட்சி முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிர்வாகமும்.

3. உறுப்பினர்களின் பொருளாதாரப் பங்களிப்பு

4. கட்டுப்பாடுகளின்றியும் தானாகவும் தொழிற்படல்.

5. கல்வி, பயிற்சி, தகவல்.

6. கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு.

7. சமூக மேம்பாடு

மேற்கோள்கள்

தொகு
  1. "Statement on the Cooperative Identity". International Cooperative Alliance. Archived from the original on 27 November 2020.
  2. "Cooperative identity, values & principles". ICA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-04.
  3. Domar, Evsey (1966). "The Soviet Collective Farm as a Producer Cooperative". The American Economic Review (American Economic Association) 56 (4): 734–757. https://www.jstor.org/stable/1813525. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுறவு&oldid=4098685" இலிருந்து மீள்விக்கப்பட்டது