பில்லியன்
இருமநுல்லியம் அல்லது பில்லியன் (billion) என்பது மேற்கத்திய எண்முறையில் ஆயிரம் நுல்லியம் / மில்லியனைக் (1000 × 1000 × 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது. ஒரு பில்லியன் 1,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு பில்லியன் 109 என எழுதப்படும்.[1][2][3]
பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 × 10002). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 × 10001). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 × 10003). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 × 10004). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yard". Investopedia. பார்க்கப்பட்ட நாள் 13 November 2017.
- ↑ "figures". The Economist Style Guide (11th ed.). The Economist. 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781782830917.
- ↑ "6.5 Abbreviating 'million' and 'billion'". English Style Guide: A handbook for authors and translators in the European Commission (PDF) (8th ed.). European Commission. 3 November 2017. p. 32.