சந்த் சமஸ்தானம்

சந்த் சமஸ்தானம் அல்லது சந்திரம்பூர் சமஸ்தானம் (Santrampur State or Sant State)[1] and Soanth[2])1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். சந்த் சமஸ்தானத்தின் தலைநகரம் சந்திரம்பூர் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தின் சந்திரம்பூர் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் சந்த் சமஸ்தானம் குஜராத் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.

சந்த் சமஸ்தானம்
1255–1948
கொடி of சந்த் சமஸ்தானம்
Flag of the Sant State
தற்கால குஜராத் மாநிலத்தில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ரேவா கந்தா முகமையில் இளஞ்சிவப்பு நிறத்தில் சந்த் சமஸ்தானப் பகுதிகள், ஆண்டு 1800-1950
தற்கால குஜராத் மாநிலத்தில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ரேவா கந்தா முகமையில் இளஞ்சிவப்பு நிறத்தில் சந்த் சமஸ்தானப் பகுதிகள், ஆண்டு 1800-1950
தலைநகரம்சந்திரம்பூர்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
1255
1948
தற்போதைய பகுதிகள்மகிசாகர் மாவட்டம், குஜராத், இந்தியா
சந்த் சமஸ்தான மன்னர் ஜோரவேர் சிங், ஆண்டு 1922

வரலாறு

தொகு

ராணா பதான் சிங் சந்த் இராச்சியத்தை நிறுவினார். [3][4][5][1]பின்னர் மராத்தியப் பேரரசில் சந்த் சமஸ்தானம் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சந்த் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் இருந்தது. சந்த் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சந்த் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1960 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சந்த் சமஸ்தானம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gazetteer of the Bombay Presidency: Rewa Kántha, Nárukot, Cambay, and Surat states (in ஆங்கிலம்). Government Central Press. 1880.
  2. Aitchison, C.U.; Talbot, A.C (1876). A collection of treaties, engagements, and sunnuds relating to India and neighboring countries. Vol. IV. Calcutta: Foreign Office Press.
  3. Rathore, Abhinay. "Sant (Princely State)". Rajput Provinces of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  4. "SANT". 2018-07-11. Archived from the original on 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  5. Solomon, R. V.; Bond, J. W. (2006). Indian States: A Biographical, Historical, and Administrative Survey (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120619654.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்த்_சமஸ்தானம்&oldid=3632335" இலிருந்து மீள்விக்கப்பட்டது