சுரேந்திரநகர்
சுரேந்திரநகர் (Surendranagar) குஜராத் மாநிலத்தில் ஒரு பெரிய நகரமும் மாநகராட்சியும் ஆகும். சுரேந்திரநகரின் சகோதரி நகரம் வாத்வான் நகரம் ஆகும். சுரேந்திரநகரின் மக்கட்தொகையை ஒப்பிடும் போது, கல்வித் துறையில் சுரேந்திரநகர் குஜராத் மாநிலத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. சௌராஷ்டிர தீபகற்பத்திற்கு செல்லும் வாயிலாக சுரேந்திரநகர் அமைந்துள்ளது.[1] சுரேந்திரநகர் மக்கட்தொகை சுமார் 2,00,000 ஆகும்.
சுரேந்திரநகர்
સુરેન્દ્રનગર சலாவாத் / வெலவதார் பருத்தி நகரம் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | சுரேந்திரநகர் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 45 km2 (17 sq mi) |
ஏற்றம் | 98 m (322 ft) |
• அடர்த்தி | 207/km2 (540/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 3630xx |
தொலைபேசி குறியிடு எண் | 91 -2752 |
வாகனப் பதிவு | GJ-13 |
மிக அருகே உள்ள நகரம் | வாத்வான் நகரம் |
பாலின விகிதம் | 958:1000 ♂/♀ |
எழுத்தறிவு | 80.25%% |
மக்களவைத் தொகுதி | பாரதிய ஜனதா கட்சி |
சட்டமன்ற தொகுதி | இந்திய தேசிய காங்கிரஸ் |
நகர நிர்வாகம் | சுரேந்திரநகர் மாநகராட்சி |
வானிலை | வறண்ட வானிலை(Köppen) |
இணையதளம் | surendranagardp |
பொருளாதாரம்
தொகுஉயர்ரக பருத்தி நூலான சங்கர் பருத்தி நூல் தயாரிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் உப்பில் 25 விழுக்காடு சுரேந்திரநகர் சுரங்கங்களிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. மின் சாதனங்கள், ரொட்டி, பீங்கான், மருத்துவமனை மருந்துகள், இயந்திரவியல் தளவாடங்கள், பிலாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் அதிகமான சிறு மற்றும் குறு தொழில் கூடங்கள் கொண்டுள்ளது.
சுரேந்திரநகர் மிகப்பெரிய மொத்த விற்பனை தானிய சந்தைகள், நகை மாளிகைகள், ஜவுளிச் சந்தைகள், (குறிப்பாக சேலைகள்) கொண்டுள்ளது. இந்தியாவில் இங்கு மட்டுமே நகைத் தொழிலாளர்களுக்கு, செயத வேலையின் விழுக்காடு விகிதத்தில் கூலி வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-03-04.
வெளி இணைப்புகள்
தொகு- Surendranagar Collector பரணிடப்பட்டது 2011-08-21 at the வந்தவழி இயந்திரம்
- SurendranagarOnline
- Golivecart - An eCommerce Platform பரணிடப்பட்டது 2020-11-24 at the வந்தவழி இயந்திரம்