அஞ்சல் குறியீட்டு எண்
(அஞ்சலக சுட்டு எண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஞ்சல் குறியீட்டு எண் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN) அல்லது பின்கோடு இந்தியாவில் அஞ்சல் சேவைகளை அளிக்கும் இந்திய அஞ்சல்துறையினால் அஞ்சல் அலுவலகங்களைக் குறித்திட பாவிக்கப்படும் எண்ணாகும். இந்த எண் ஆறு இலக்கங்கள் கொண்டது. இந்த முறை ஆகஸ்ட் 15 , 1972 அன்று நடைமுறைக்கு வந்தது.
அமைப்புதொகு
இந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது.இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்தும்.
இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின் மண்டலங்கள்:
- 1 - தில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காசுமீர் உட்பட), சண்டிகார்
- 2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்
- 3 - இராசத்தான், குசராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி
- 4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுக்கர்
- 5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்
- 6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி
- 7 - ஒரிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- 8 - பீகார், சார்க்கண்ட்
- 9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)
முதல் இரு இலக்கங்கள் | அஞ்சல் வட்டம் |
---|---|
11 | தில்லி |
12 and 13 | அரியானா |
14 to 16 | பஞ்சாப் |
17 | இமாச்சலப் பிரதேசம் |
18 to 19 | சம்மு & காசுமீர் |
20 to 28 | உத்திரப் பிரதேசம் |
30 to 34 | இராசத்தான் |
36 to 39 | குசராத் |
40 to 44 | மகாராட்டிரம் |
45 to 49 | மத்தியப் பிரதேசம் |
50 to 53 | ஆந்திரப் பிரதேசம் |
56 to 59 | கர்நாடகம் |
60 to 64 | தமிழ்நாடு |
67 to 69 | கேரளம் |
70 to 74 | மேற்கு வங்காளம் |
75 to 77 | ஒரிசா |
78 | அசாம் |
79 | வடகிழக்கு இந்தியா |
80 to 85 | பீகார் மற்றும் சார்க்கண்ட் |