திரிபுரா
திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும். நாட்டின் மூன்றாவது மிகச்சிறிய மாநிலமான இது 10,491 கிமீ (4,051 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 3,671,032 மக்கள் தொகை இருந்தனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 0.3% ஆகும். மேலும் வடகிழக்கு இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாம் மாநிலம் இதுவாாகும்.
திரிபுரா ত্রিপুরা | |
---|---|
இந்திய மாநிலம் | |
![]() | |
![]() Location of Tripura in இந்தியா | |
![]() Map of Tripura state, showing its eight districts | |
நாடு | ![]() |
பகுதி | ஏழு சகோதரி மாநிலங்கள் |
தொடக்கம் | 21 Jan. 1972† |
தலைநகரம் | அகர்தலா |
மாவட்டம் | 8 |
அரசு | |
• ஆளுநர் | சத்தியதேவ் நராயண ராய் [1] |
• முதலமைச்சர் | மாணிக் சாகா (பாஜக) |
• சட்டமன்றம் | ஓரவை முறைமை (60 seats) |
• மக்களவை | மாநிலங்களவை 1 மக்களவை (இந்தியா) 2 |
• உயர் நீதிமன்றம் | திரிபுரா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,491.69 km2 (4,050.86 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 27th (2014) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 36,71,032 |
• தரவரிசை | 22nd (2014) |
• அடர்த்தி | 350/km2 (910/sq mi) |
நேர வலயம் | IST (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-TR |
HDI | ![]() |
HDI rank | 6th (2014) |
படிப்பறிவு | 96.8 per cent (1st) {2015}.[2][3][4][5] |
ஆட்சி மொழி | Bengali and கொக்பரோக்[6] |
இணையதளம் | tripura.nic.in |
†It was elevated from the status of Union-Territories by the North-Eastern Areas (Reorganisation) Act 1971 |
வரலாறுதொகு
சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர்.
அரசியல்தொகு
திரிபுரா மாநிலம் 60 சட்டமன்ற தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தொகுதியும் கொண்டது.
திரிபுரா மாநில அரசு மூன்று பிரிவுகளை உடையது. செயலாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு, சட்டமியற்றும் பிரிவு ஆகியவையே அவை. செயலாக்கப் பிரிவில் அமைச்சர்களும், அவர்களின் தலைவராக முதலமைச்சரும் இருப்பர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மாநிலத்தை 60 தொகுதிகளாகப் பிரித்து, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகராகவும், மற்றொருவர் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். சபாநாயகரின் தலைமையில் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சபாநாயகர் இல்லாத சமயத்தில் துணை சபாநாயகர் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவார்.[7] சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். திரிபுரா நீதித்துறையின் உயர் அமைப்பாக திரிபுரா உயர் நீதிமன்றம் செயல்படும். இதன் கீழ் பல நீதிமன்றங்கள் இயங்குகின்றன[8][9] ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட . கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சி அமைக்க அழைக்கப்படுவர். இந்த மாநிலத்தில் இருந்து இரு உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஊர்கள் ஊராட்சித் தலைவரின் கீழும், பழங்குடியின மக்கள் வாழும் இடங்கள் அவர்களின் தன்னாட்சிக் குழுவின் ஆட்சியின் கீழும் செயல்படுகின்றன.[10] இந்தக் குழு 527 பழங்குடியின கிராமங்களின் உள்ளாட்சிக்கு துணை புரிகிறது.[10][11]
மாவட்டங்கள்தொகு
திரிபுரா மாநிலம் எட்டு வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவைகள்;
மக்கள் தொகையியல்தொகு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி திரிபுரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 3,673,917 உள்ளது. நகர்புறங்களில் 26.17% மக்களும், கிராமப்புறங்களில் 75.83% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.84% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,874,376 ஆண்களும் மற்றும் 1,799,541 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 960 வீதம் உள்ளனர். 10,486 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.22% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.53% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.73% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 458,014 ஆக உள்ளது.[12]
சமயம்தொகு
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,063,903 (83.40%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 316,042 (8.60%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 159,882 (4.35%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,070 (0.03%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 860 (0.02%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 125,385 (3.41%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 1,514 (0.04%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 5,261 (0.14%) ஆகவும் உள்ளது.
மொழிகள்தொகு
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான வங்காளத்துடன் இந்தி மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
போக்குவரத்துதொகு
விமானம்தொகு
அகர்தலாவிலுருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கர்பில் எனுமிடத்தில் உள்ள விமான நிலையம் உள்ளது. நாட்டின் குவாஹாத்தி, கொல்கத்தா, புதுதில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் வானூர்திகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. குவாஹாத்திக்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவில் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும்.
தொடருந்துதொகு
வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தில் உள்ள அகர்தலா தொடருந்து நிலையம், அசாம் மாநிலத்தின் லாம்டிங் நகரத்தின் லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக புதுதில்லியுடன் இணைக்கிறது.[13]
பேருந்துகள்தொகு
மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கௌஹாத்தி, சில்லாங் மற்றும் சில்சர் நகரங்களுடன் அகர்தலா இணைக்கப்பட்டுள்ளது. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. மேலும் அகர்தலாவிலிருந்து வங்காள தேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு செல்வதற்கு பேரூந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் கொல்கத்தா வரை இயக்க இந்திய - வங்காள தேச அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தட்பவெப்ப நிலைதொகு
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயர் சராசரி °C (°F) | 25.6 (78.1) |
28.3 (82.9) |
32.5 (90.5) |
33.7 (92.7) |
32.8 (91) |
31.8 (89.2) |
31.4 (88.5) |
31.7 (89.1) |
31.7 (89.1) |
31.1 (88) |
29.2 (84.6) |
26.4 (79.5) |
30.52 (86.93) |
தாழ் சராசரி °C (°F) | 10 (50) |
13.2 (55.8) |
18.7 (65.7) |
22.2 (72) |
23.5 (74.3) |
24.6 (76.3) |
24.8 (76.6) |
24.7 (76.5) |
24.3 (75.7) |
22 (72) |
16.6 (61.9) |
11.3 (52.3) |
19.7 (67.4) |
பொழிவு mm (inches) | 27.5 (1.083) |
21.5 (0.846) |
60.7 (2.39) |
199.7 (7.862) |
329.9 (12.988) |
393.4 (15.488) |
363.1 (14.295) |
298.7 (11.76) |
232.4 (9.15) |
162.5 (6.398) |
46 (1.81) |
10.6 (0.417) |
2,146 (84.488) |
ஆதாரம்: [14] |
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ http://tripura.gov.in/government/keycontact/2
- ↑ Shivangi Narayan (9 September 2013). "How Tripura became India's top literate state". Governance Now. http://www.governancenow.com/news/blogs/how-tripura-became-indias-top-literate-state. பார்த்த நாள்: June 20, 2015.
- ↑ Syed Sayyad Ali (8 September 2013). "Tripura beats Kerala in literacy chart". The Hindu (Agartala). http://www.thehindu.com/news/national/other-states/tripura-beats-kerala-in-literacy-chart/article5107261.ece. பார்த்த நாள்: June 20, 2015.
- ↑ "Tripura tops literacy rate with 94.65 per cent, leaves behind Kerala". IBNLive.com. Cable News Network. 9 September 2013. Archived from the original on 2013-09-13. https://web.archive.org/web/20130913005546/http://ibnlive.in.com/news/tripura-tops-literacy-rate-with-with-9465-per-cent-leaves-behind-kerala/420560-3-224.html. பார்த்த நாள்: June 20, 2015.
- ↑ "State of Literacy" (PDF). censusindia.gov.in. June 20, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bengali and Kokborok are the state/official language, English, Hindi, Manipuri and Chakma are other languages". Tripura Official government website. Archived from the original on 12 பிப்ரவரி 2015. https://web.archive.org/web/20150212025154/http://tripura.gov.in/knowtripura. பார்த்த நாள்: 29 June 2013.
- ↑ "Tripura Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre. 13 மே 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "About us". Tripura High Court. 26 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sharma, K Sarojkumar; Das, Manosh (24 March 2013). "New Chief Justices for Manipur, Meghalaya & Tripura high courts". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/guwahati/New-Chief-Justices-for-Manipur-Meghalaya-Tripura-high-courts/articleshow/19163853.cms. பார்த்த நாள்: 24 March 2013.
- ↑ 10.0 10.1 "State and district administration: fifteenth report" (PDF). Second Administrative Reforms Commission, Government of India. 2009. p. 267. 10 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 18 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "About TTAADC". Tripura Tribal Areas Autonomous District Council. 8 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tripura Population Census data 2011
- ↑ First Commercial Broad Guage Freight Train Arrives In Tripura
- ↑ "Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1901–2000 data" (PDF). India Meteorology Department. p. 6. 17 அக்டோபர் 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 29 January 2013 அன்று பார்க்கப்பட்டது.