இந்திய உயர் நீதிமன்றங்கள்
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) உயர் நீதிமன்றம் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
இந்தியாவின் நீதியாண்மை அமைப்பு அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன்படி அமைக்கப்பட்ட 25 இந்திய உயர் நீதிமன்றங்கள்' தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின்கீழ் வருகின்றன.
வரையறை
உயர்நீதிமன்றங்களுக்கு கீழ் உரிமையியல் (சமூக நலன்) நீதிமன்றங்கள் (சிவில்), குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
தண்டனை அதிகாரம்
உயர்நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது மாநிலத்தின் உரிமை இயல் (சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும். மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும்.
விசாரணை அதிகாரம்
கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் (writ-ரிட்) அழைப்பாணை மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியல் சட்ட விதி 224-இன்படி விசாரணை செய்யும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, விதி 214-இன்படி நிறுவப்பட்டுள்ளன.
அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் தொகு
ஒவ்வொரு மாநிலங்களும் அதன் மாவட்டங்களை நீதிபரிபாலணைக்கு ஏற்ப பிரிக்கப்படும். இவை மாவட்ட அமர்வு நீதிபதியால் (தொடர் விசாரணை நீதிபதி-அமர்வு நீதிபதி) அல்லது மாவட்ட நீதிபதியால், நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
உரிமை இயல்(சமூக நல) வழக்குகள் மாவட்ட நீதிபதியால் மேற்கொள்ளப்படும் . குற்றவியல் வழக்குகளை அமர்வு நீதிபதி மேற்கொள்வார். அமர்வு நீதிபதியே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரத்தில் உள்ள நீதிபதியாவார்.
உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்தியக் குடியரசுத் தலைவரின் பெயரால், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
உயர் நீதிமன்றங்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்குகின்றன. இவர்களின் பதவிப்படி நிலை மாநிலத்திற்குள்ளே #14 என்றும் மாநிலத்திற்கு #17 என்றும் வழங்கப்பெற்று அழைக்கப்படுகின்றனர்.
நீதிபதிகளின் எண்ணிக்கை
இதர நீதிபதிகளின் எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு, தேசிய சராசரி சதவிகிதம் கணக்கிட்டு அதன்படி நீதிபதிகளின் எண்ணிக்கைக் கூட்டவோக் குறைக்கவோப் படுகின்றது.
பழமையானது
இந்திய உயர் நீதி மன்றத்தில் மிகவும் பழமையானது கொல்கத்தா உயர் நீதிமன்றமே. இது நிர்மானிக்கப்பட்டது 1862.
சுற்று அமர்வு
அமர்வு நீதிமன்றங்களும் மாநில, வழக்குகளின் தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. சிறிய மாநிலங்களில் சுழற்சி அ சுற்று அமர்வு நீதிமன்றங்களாக செயல்படுகின்றன. இவை சுழற்சி அ சுற்று நீதிமன்றங்கள் எனப்படுகின்றது.
உயர் நீதிமன்றங்கள் தொகு
இருபத்தினான்கு-(24) உயர்நீதிமன்றங்களின் பட்டியல் மாநிலங்களின் வரிசைப்படி பெயர்கள், ஆளுமை (தலைமை), அமர்வு மற்றும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ↑ மூலப் பெயர் ஆக்ரா. பின் 1875 ல் அலகாபாத்துக்கு மாற்றப்பட்டது.
- ↑ லாகூர் உயர் நீதிமன்றம் நிலைநாட்டபெபெற்ற ஆண்டு 1919-03-21. நீதிபரிபாலண எல்லைகளின் நீட்சியாக பிரிக்கப்படாத பஞ்சாப் ம்ற்றும் தில்லி வரை கொண்டுள்ளது.. 1947-08-11 ல் பஞ்சாப் உயர்நீதிமன்றம் தனியாகப் பிரிக்கப்பட்டு அதன் அமர்வுகள் இந்திய சுயாட்சி சட்டம், 1947 சிம்லாவில் தொடங்கப்பட்டு அதன் நீதிபரிபாலணை நீட்சிகளாக பஞ்சாப், தில்லி மற்றும் தற்பொழுதய இமாச்சலப் பிரதேசம் மற்றும் அரியானா. 1966 ல் பஞ்சாப் மறு சீரமைப்புக்குப் பிறகு பஞ்சாப்மற்றும் அரியானா உயர்நீதிமன்றமாக செயல்பாட்டைத் துவங்கியது. தில்லி உயர் நீதிமன்றம 1966-10-31 ல் சிம்லாவுடன் நிலைநாட்டப் பெற்றது அதன் இருக்கை சிம்லாவில் இருந்தது.
- ↑ இதன் மூலப் பெயர் அசாம் உயர் நீதிமன்றம் மற்றும் நாகாலாந்து, 1971 ல் வட கியக்கு மறு சீரமைப்பு சட்டம், 1971 ன்படி கௌகாத்தி உயர் நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் கண்டது.
- ↑ ஸ்ரீநகர் கோடைக்காலத் தலைமையகம், ஜம்மு குளிர்காலத் தலைமையகம்.
- ↑ மூலப் பெயர் மைசூர் உயர் நீதிமன்றம், 1973 ல் கர்நாடகா உயர் நீதிமன்றம் என்று மாற்றம் கண்டது..
- ↑ திருவாங்கூர்-கொச்சின் உயர் நீதிமன்றமாக ஜூலை 7, 1949, ல் துவங்கப்பட்டது. கேரள மாநிலம் அமைந்த பிறகு, மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 ன் படி, திருவாங்கூர்- கொச்சின் உயர்நீதிமன்ற சட்டத்தை நீக்கி கேரள உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் கொண்டது. இதன் நீதீபரிபாலணமும் கேரலாவிலிருந்து லட்சத்தீபம் வரை நீட்சிக் கொண்டது.
- ↑ இந்திய அரசு சட்டம், 1935 ன் மைய அதிகாரத்தின் கீழ் 2-1-1936 அன்று வழங்கப்பட்ட காப்புரிமை பத்திரத்தின்படி உயர் நீதிமன்றம் நாக்பூரில் நிர்மானிக்கப்பட்டது. 1956 ல் மாநில மறு சீரமைப்புக்குப் பின் இந்த உயர் நீதிமன்றம் ஜபல்பூருக்கு மாற்றப்பட்டது.
- ↑ மூலப் பெயர் பஞ்சாப் உயர் நீதிமன்றம், 1966 ல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் கொண்டது.
உயர் நீதிமன்றங்கள் மாநிலங்களின் வரிசைப்படி/ யூனியன் பிரதேசங்கள் தொகு
மேற்கோள்கள் தொகு
- "இந்திய உயர் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகளும் அதன் இருக்கைகளும் அ அமர்வுகளும்". ஈஸ்டர்ன் புத்தக கம்பெனி. http://www.ebc-india.com/lawyer/hcourts.htm. பார்த்த நாள்: செப்டம்பர் 2, 2005.
- "உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது". தகவல் பத்திரிகை;இந்திய அரசு. http://pib.nic.in/archieve/lreleng/lyr2003/roct2003/30102003/r301020036.html. பார்த்த நாள்: செப்டம்பர் 2, 2005.
- "நீதிபரிபாலணம்". இந்திய உச்ச நீதிமன்றம். http://supremecourtofindia.nic.in/new_s/constitution.htm. பார்த்த நாள்: செப்டம்பர் 2, 2005.
- "இந்திய அரசியலமைப்பு". விக்கி சோர்ஸ். http://en.wikisource.org/wiki/Constitution_of_India. பார்த்த நாள்: டிசம்பர் 31, 2005.