ஜபல்பூர்
ஜபல்பூர் (Jabalpur, இந்தி: जबलपुर) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓர் நகரமாகும். இது இந்தூர் மற்றும் போபாலை அடுத்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூன்றாவது மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள மகாகௌசால் பகுதியில் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஜபல்பூர் கோட்டம் மற்றும் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது.
— நகரம் — | |||||||
அமைவிடம் | 23°9′38″N 79°56′19″E / 23.16056°N 79.93861°Eஆள்கூறுகள்: 23°9′38″N 79°56′19″E / 23.16056°N 79.93861°E | ||||||
மாவட்டம் | ஜபல்பூர் | ||||||
ஆளுநர் | ஓம் பிரகாஷ் கோலி[1] | ||||||
முதலமைச்சர் | சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2] | ||||||
நகரத்தந்தை | பிரபாத் சாகு | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
11,17,200 (2001[update]) • 110/km2 (285/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
108.000 சதுர கிலோமீட்டர்கள் (41.699 sq mi) • 411 மீட்டர்கள் (1,348 ft) | ||||||
குறியீடுகள்
|
வரலாற்றில், கல்ச்சூரி, கோண்டா பேரரசுகளின் மையமாக விளங்கிய ஜபல்பூர் மராத்தாக்கள் மற்றும் முகலாயர்களின் ஆட்சியில் மாறிமாறி இருந்து வந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானியர்களால் பிடிக்கப்பட்டு ஜுப்பல்போர் என ஆட்சியின் பாசறை நகரமாக உருவாக்கப்பட்டது. விடுதலை இயக்கத்தின் போது சுபாசு சந்திரபோசை காங்கிரசின் தலைவராக முதல்முறை தேர்ந்தெடுத்த திரிபுரி மாநாடு இங்கு தான் நடைபெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு ஜபல்பூரைத் தலைநகரமாகக் கொண்டு மகாகோசல் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. 1990ஆம் ஆண்டு மண்டல் ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு எதிரான போராட்டத்தில் பன்னிரெண்டு பதின்ம வயதினர் தானேயிட்டுக்கொண்டு தீயில் மாண்டதை அடுத்து தேசிய அளவில் கவனம் பெற்றது.
Referencesதொகு
வெளியிணைப்புகள்தொகு
- அலுவல் இணையதளம் பரணிடப்பட்டது 2010-03-06 at the வந்தவழி இயந்திரம்
- ஜபல்பூர் தரவுகள்
விக்கிப்பயணத்தில் Jabalpur என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |