மோகன் யாதவ்

மத்தியப்பிரதேச முதலமைச்சர்

மோகன் யாதவ் (Mohan Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். யாதவ், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் தக்ஷின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார்.[2][3][4]

மோகன் யாதவ்
Deputyஇராஜேந்திர சுக்லா & ஜெகதீஷ் தேவ்தா
19வது முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 திசம்பர் 2023
ஆளுநர்மங்குபாய் சாகன்பாய் படேல்
முன்னையவர்சிவராஜ் சிங் சௌகான்
உயர் கல்வி அமைச்சர்
மத்தியப் பிரதேசம்
பதவியில்
2 சூலை 2020 – 12 திசம்பர் 2023
முன்னையவர்ஜித்து பட்வாரி
தொகுதிஉஜ்ஜைன்
சட்டப் பேரவை உறுப்பினர்-மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மார்ச்சு 1965 (1965-03-25) (அகவை 59)[1]
உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், India
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)1/1 முஞ் மார் கானி, உஜ்ஜைன், மத்தியப்பிரதேசம்
முன்னாள் கல்லூரிவிக்ரம் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி
வணிகர்
வழக்கறிஞர்

அரசியல் வாழ்க்கை

தொகு

யாதவ் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் உஜ்ஜைன் தக்ஷின் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2018 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், இவர் மீண்டும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உஜ்ஜைன் தக்ஷின் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார்.

2 சூலை 2020 அன்று யாதவ் சிறீ சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் மாநில அமைச்சராகப் பதவியேற்றார்.[5]

முதல்வராக

தொகு

திசம்பர் 11, 2023 அன்று பாஜக இவரை மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சராக அறிவித்தது. மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இவரது பெயரை மத்தியப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சி அங்கீகரித்தது. மோகன் யாதவ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இருந்து வந்தவர். இவர் உஜ்ஜைன் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக அண்மையில் நடைபெற்ற 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தேர்வானார். முன்னர் இவர் சிவராஜ் சிங் சௌகான் அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராக இருந்தார்.

13 டிசம்பர் 2023 அன்று முதலமைச்சராக மோகன் யாதவ் மற்றும் துணை முதலமைச்சர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் இராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவி ஏற்றனர்.[6][7] சட்டமன்றத் தலைவராக நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Member Profile of Madhya Pradesh Vidhan Sabha" (PDF). mpvidhansabha.nic.in.
  2. http://www.freepressjournal.in/ujjain/bhoomi-pujan-of-eye-hospital-held/1017827 Bhoomi pujan of eye hospital held
  3. http://myneta.info/mp2013/candidate.php?candidate_id=747 My Neta
  4. http://www.freepressjournal.in/ujjain/bjp-remembers-pt-upadhyay-on-his-death-anniversary/1017815 BJP remembers Pt Upadhyay on his death anniversary
  5. "Mohan Yadav appointed minister in shivraj singh-government". பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
  6. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார் மோகன் யாதவ்
  7. மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_யாதவ்&oldid=3845694" இலிருந்து மீள்விக்கப்பட்டது