பேச்சு:இந்திய உயர் நீதிமன்றங்கள்

இந்திய உயர் நீதிமன்றங்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சொல்

தொகு

நிதிபரிபாலணை ச்ற்றுப் பழைமையான வார்த்தை தான் நீதியாண்மை நாம் பயன்படுத்துவதில்லை. நீதி என்பது ஆண்மையோ ஆளுமையோ கொண்டதல்ல. நீதி முறை என்று சட்டக் களஞ்சியத்தில் உள்ளது. தமிய் இணையம் சட்டப்புத்தகத்தில் இதான் உள்ளது.--செல்வம் தமிழ் 12:16, 12 மார்ச் 2009 (UTC)

நீதிமுறை நன்றாக உள்ளது. சட்டக்களஞ்சியத்தில் இருப்பது கூடுதல் வலுச்சேர்க்கிறது. மன்னர்கள் முறை செய்து அறம் வளர்த்ததாகச் செய்யுள்கள் உள்ளன என்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 12:57, 12 மார்ச் 2009 (UTC)

முறை வகுத்து, முறை செய்து என்பன கலைச்சொற்கள். பொதுவாக வகு என்றால் பிரி, பகு என்று பொருள், ஆனால் பிரித்து, பகுத்து, ஒன்றை நேர்த்தியாய் செய்ய வழி "வகுத்தலுக்கு" design, organize, ordain என்னும் பொருள்களும் உண்டு. திருக்குறளில்,
  வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
  தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

  என்று கூறுவதில் வரும் வகுத்தான் என்பது மேற்குறித்த பொருள்களில் வருவன.நீதி வழங்கல் என்றும் கூறலாம். நீதி முறை என்பதும் நல்ல சொல். முறைப்படுத்தி என்றால், வரிசைப் படுத்தி, ஒழுங்குபடுத்தி, சீராக அமைத்து என்றெல்லாமும் பொருள்தரும். உரிமைகளின் படியும் சட்டதிட்டங்களின் படியும் சரியான "முறையில்" நடப்பது முறை.--செல்வா 13:16, 12 மார்ச் 2009 (UTC)

Return to "இந்திய உயர் நீதிமன்றங்கள்" page.