இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 20 ஆண்டுகள், 2 மாதங்கள்,  2 நாட்கள் ஆகின்றன.

தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.


இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.

விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள்
இந்த பயனர் விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டத்தின் உறுப்பினர் ஆவார்.
சுந்தர்
சுந்தர்
சுந்தர், தேடுபொறித் துறையில் பணியாற்றும் தகவல்பெறுநுட்ப வல்லுனர். 2004-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம், தமிழ் விக்கிப்பீடியாக்களில் பங்களித்து வருகிறார். மொழியியல், உயிரியலில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதியுள்ள கட்டுரைகளில் வெண்பா, மௌடம், புணர்ச்சிப் பரவசநிலை, கிப்பன் பண்டம், பகடிப்பட இயற்பியல், கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை, மாந்தவுருவகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ் விக்சனரி தானியங்கித் திட்டம் மூலம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழ் விக்சனரியில் சேர்த்தது சுந்தரின் ஆகச் சிறந்த பங்களிப்பு ஆகும். மேலும் இவர், மீடியாவிக்கி நுட்பப் பணிகள், விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள், கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும், விக்கிமீடியா உறவுத் திட்டங்களுடனான தொடர்பிலும் ஈடுபட்டு வருகிறார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிமேனியாவில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகளைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றைப் படித்துள்ளார்.
விக்கிப்பீடியா:பாபேல்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

en-3 This user is able to contribute with an advanced level of English.
hi-2 यह सदस्य हिन्दी भाषा का मध्यम स्तर का ज्ञान रखते हैं।
kn-1 ಈ ಬಳಕೆಗಾರನಿಗೆ ಸ್ವಲ್ಪ ಕನ್ನಡ ತಿಳಿದಿದೆ
ml-1 ' ' നിലവാരം മാത്രമുള്ള വ്യക്തി.
ja-1この利用者は初級日本語ができます。
பகுப்பு:விக்கிப்பீடியர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

தொகு
 
சுந்தர் உங்கள் அயராத அரும்பணியையும் வழிகாட்டுதலையும் கருதி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா

தமிழ் விக்கிபீடியாவில்

தொகு

சிலர் ஆழ உழுவார்கள், நான் அகல உழுபவன். இரண்டுமே தமிழ் விக்கிபீடியாவிற்கு இன்றியமையாதவை. கோடையில் மழை இல்லாதபோது மண்ணைக் கிளறி அகல உழுவதன்மூலம் மழைநீரை ஈர்க்க முடியும், அதுபோல புதுப்பயனர்கள் தேடுபொறிகள் மூலமும் பிற வழிகளிலும் வரும்பொழுது அவர்களுக்கு எந்தத்துறையினரானாலும் ஈடுபாடு ஏற்படுத்துபவை பல்துறைக் கட்டுரைகள். அதே நேரம் மயூரநாதன் போன்றோர் சிறந்த ஒருமித்த கட்டுப்பாட்டுடன் முழுமையான கட்டுரைகளை உருவாக்குகின்றனர். அவை நமக்கு ஏற்றமளிப்பவை. நற்கீரன் போன்றோர் தொழில்நுட்பக் கட்டுரைகளை உருவாக்குவதிலும் வாய்க்கால் வரப்புகளாம் கொள்கைப் பக்கங்கள் உருவாக்குவதில் முனைப்புக் காட்டுகிறார்கள். இரவி, சிவகுமார் போன்றோர் கொள்கை அளவிலும், தர அளவிலும், விக்கி குறியீடு அளவிலும் களை எடுக்கின்றனர். செல்வா, கனகர், மற்றும் பல புதிய பயனர்களும் சிறப்புத் திறன்கள் பெற்று உரமிட்டு வருகின்றனர். தவிர இங்கு கணேசால் இயக்கப்படும் தானுந்துக் கலப்பையைப் பயன்படுத்தலாமா கூடாதா என்பது பற்றிய கலந்துரையாடல் நடந்து வருகிறது. இந்த கூட்டு வேளாண்மையின் விளைச்சலை ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பெற வேண்டும்.

 
விக்கி கூட்டம் ஒன்றில் ஜிம்போ வேல்ஸும் நானும்

[மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தவிர மேலும் பல பயனர்கள் சீரிய பங்களிப்புக்களையளித்து வருகிறார்கள். அவர்கள் பெயர்கள் இங்கு இல்லாதது இற்றைப்படுத்த முடியாததால் மட்டுமே, அவர்கள் இங்குள்ளவர்களுக்குச் சளைத்தவர்களல்ல.]

தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும் பற்றி புவியறியும் வகையில் ஆங்கிலத்தில் ஆவணப்படுத்துவதும் இன்ன பிறவற்றைப் பற்றி தமிழில் இங்கு ஆவணப்படுத்துவதும் எனது வழக்கம். தமிழரைப் பற்றி தமிழில் எழுதக் கூடாது அல்லது தேவை இல்லை என்றில்லை, அவற்றைப் பலர் ஏற்கெனவே செவ்வனே செய்து வருகின்றனர்.

முதற்பக்கத்தில் வந்த சில கட்டுரைகள்

தொகு











2004-இல் நான் உருவாக்க விரும்பிய கட்டுரைகள்

தொகு

மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் பதினோராம் வகுப்பிற்கான அறிவியல் தமிழ் பாடப் புத்தகம்.

  1. அதிர்வெண் - en:Frequency
  2. அண்டம் - en:Universe
  3. அணு ஆற்றல் - en:Atomic energy
  4. அணு எரிபொருள் - en:Atomic fuel
  5. அறுவை சிகிச்சை- en:Surgery
  6. இங்கிலாந்து அரசவை சான்றோன் - en:Fellow of Royal Society of England
  7. இயற்கை உரம் - en:Manure
  8. இயற்கை வாயு - en:Natural gas
  9. இரத்த உறைதல் - en:Blood clotting/en:Coagulation
  10. இரத்தம் உறையாமை - en:Hemophilia
  11. இரத்தச் சிவப்பணு - Red blood corpuscles
  12. இரத்தத் தட்டு - en:Platelets
  13. இரத்த வெள்ளையணு - en:White blood corpuscles
  14. இன்சாட் செயற்கைக் கோள் - INSAT en:Satellite
  15. ஈர்ப்பு விசை - en:Gravitational force
  16. ஈரப்பசை - en:Moisture
  17. உயிர்ப்புவியியல் - en:Biogeography
  18. உயிரினம் - en:Organism
  19. உலோக உப்புக்கள் - en:Metallic salts
  20. உள் உற்றுநோக்கும் கருவி - en:Endoscopy
  21. உற்பத்தி வாயு - en:Producer gas
  22. எக்ஸ் கதிர்கள்/ஊடுகதிர் - en: X ray
  23. எரிபொருள் - en:Fuel
  24. எரிபொருள் கலம் - en:Fuel cell
  25. ஐன்ஸ்டீன் போஸ் கோட்பாடு - en:Einstein Bose hypothesis
  26. ஒளிச்சேர்க்கை - en:Photosynthesis
  27. ஒளி மின் விளைவு - en:Photoelectric effect
  28. ஒளியின் திசைவேகம் - en:Velocity of light
  29. ஓராண்டுத் தாவரம் - en:Annual
  30. கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் - en:Computed tomography scan
  31. கால நீட்டிப்பு - en:Time dilation
  32. கூழ்ம வேதியியல் - en:Colloidal Chemistry
  33. கொழுப்பு - en:Fat
  34. சந்திரசேகர் வரையரை - en:Chandrasekhar limit
  35. சாண வாயு - en:Gobar gas
  36. சிறப்புச் சார்பியல் கொள்கை - en:Special theory of relativity
  37. சிறுசெடி - en:Herb
  38. மூச்சு - en:Breathing
  39. தசைப்பிடிப்பு - en:Muscular dystrophy
  40. தடுப்பூசி - en:Vaccine/en:Immunization
  41. தண்டு - en:Stem
  42. தண்டு வடம் - en:Spine
  43. தாது உப்புக்கள் - en:Mineral
  44. தொல்லுயிர் எச்சங்கள் - en:Fossil
  45. நிலக்கரி - en:Coal
  46. நிலநடுக்கம் - en:Earthquake
  47. நிலநடுக்கப் பதிவுக் கருவி - en:Seismograph
  48. நிறக்குருடு - en:Color blindness
  49. நுண்ணுயிர் - en:Microorganism
  50. நுரையீரல் - en:Lungs
  51. பச்சையம் - en:Chlorophyll
  52. படிம எரிபொருள் - en:Fossil fuel
  53. பாறை - en:Rock
  54. பாறைத்திட்டு - en:Rock plate
  55. பிரௌனியன் இயக்கம் - en:Brownian movement
  56. புரதம் - en:Protein
  57. பூச்சிக்கொல்லி - en:Insecticide
  58. பெருவெடிக் கொள்கை - en:Big bang theory
  59. பொதுச் சார்பியல் கொள்கை - en:General relativity theory (http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/02/050207_einstein.shtml)
  60. போஸ் புள்ளியியல் - en:Bose statistics
  61. போஸான் - en:Boson
  62. மஞ்சள் காமாலை - en:Jaundice
  63. மரபியல் - en:Genetics
  64. மரபியல் கலந்தாய்வு - en:Genetic counseling
  65. மரபியல் நோய் - en:Genetic disease
  66. மின்கல அடுக்கு - en:Battery
  67. மீயொலி வரிக் கண்ணோட்டம் - en:Ultra sound scan
  68. முன்கழுத்துக் கழலை - en:Goitre
  69. முப்பரிமாணம் - en:Three dimensions
  70. மூளைக் கழலை - en:Brain tumour
  71. மூளையில் நீர்க்கோர்வை - en:Hydrocephalus
  72. விண்மீன் - en:Star
  73. வினைவேக மாற்றி - en:Catalyst
  74. வெளி - en:Space
  75. வேதிப்பொருள் - en:Chemical

அடிக்குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sundar&oldid=3771977" இலிருந்து மீள்விக்கப்பட்டது