வெளி
வெளி (Space) என்பது எழுத்துகளையோ சொற்களையோ இலக்கங்களையோ நிறுத்தக்குறிகளையோ பிரிப்பதற்காக வழங்கப்படும் வெற்றுப்பரப்பு ஆகும்.[1]
பண்டைய காலத்தில், சொற்களைப் பிரிப்பதற்காக இலத்தீன் மொழியில் மையப் புள்ளி பயன்படுத்தப்பட்டது.[2] பின்னர், கி. பி. 200 அளவில் தொடருரையின் தாக்கத்தினால் சொற்பிரிப்புகளேயின்றிச் சொற்கள் எழுதப்பட்டன. அதன் பின்னர், கி. பி. 600-800 காலப்பகுதியில் சொற்களைப் பிரிப்பதற்காக வெற்று வெளிகள் பயன்படுத்தப்படத் தொடங்கின. அதிலிருந்து இலத்தீன் நெடுங்கணக்கை அடிப்படையாகக் கொண்ட மொழிகளிலும் வெளிகள் பயன்படுத்தப்பட்டன.
பயன்பாடுகள்
தொகுசொற்களுக்கிடையிலான வெளி
தொகுதமிழ் மொழியிலும் புதிய ஆங்கிலத்திலும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இது தமிழ் விக்கிப்பீடியா.
This is Tamil Wikipedia.
ஆனால், எல்லா மொழிகளும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகளைப் பயன்படுத்துவதில்லை (எ-டு: நவீன சீனம், சப்பானியம்).
சொற்றொடர்களுக்கிடையிலான வெளி
தொகுபொதுவாக, சொற்றொடர்களுக்கிடையில் விடப்படும் வெளிகள் மூன்று வகைகளில் விடப்படும். சொற்றொடர்களுக்கிடையில் ஒரு வெளியோ இரு வெளியோ ஓரகல வெளியோ விடப்படுவதுண்டு. சொற்றொடர்களுக்கிடையில் வெளிகளை விடாதும் எழுதுவதுண்டு.
வெளிகளும் அலகுக் குறியீடுகளும்
தொகுஆங்கிலத்தில் குறியீடுகளை எழுதும்போது முன்னொட்டுக் குறியீடுகளுக்கும் அலகுக் குறியீடுகளுக்கும் இடையே வெளி விடப்படுவதில்லை.
15 cm
13 kPa
235 ml
அளவுக்கும் எழுத்தை முதலாகக் கொண்ட குறியீட்டுக்கும் இடையே ஒரு வெளி விடப்பட வேண்டும்.
அதாவது,
45kg-தவறு
45 kg-சரி
குறியீட்டில் முதலில் எழுத்தில்லாவிடின், அளவுக்கும் குறியீட்டுக்கும் வெளி விடாமலும் எழுதலாம்.
32° C-தவறு
32°C-சரி
32 °C-சரி
ஆனாலும் கோணங்களின் பெறுமானத்தைக் குறிக்கும்போது வெளி விடக்கூடாது.
90 °-தவறு
90°-சரி
மேற்கோள்கள்
தொகு- ↑ வெளி (ஆங்கில மொழியில்)
- ↑ ["மையப் புள்ளி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-05. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26. மையப் புள்ளி (ஆங்கில மொழியில்)]