வீதக் குறி
வீதக் குறி (At Sign) என்பது நிறுத்தக்குறிகளில் ஒன்றாகும்.
பயன்பாடுகள்
தொகுவணிகம்
தொகுஆங்கிலத்தில் வீதத்தில் என்பதைக் குறிப்பதற்காக வீதக் குறி பயன்படுத்தப்படுகின்றது.
இணையம்
தொகுஇணையத்தில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும்போது பயனர் பெயரையும் ஆள்களப் பெயரையும் பிரித்துக் காட்டுவதற்கு வீதக் குறி பயன்படுத்தப்படுகின்றது (எ-டு: user@domain.com). இந்த முறையை முதன்முதலில் 1971ஆம் ஆண்டு இரே இட்டாம்லின்சன் அறிமுகப்படுத்தினார்.[1]
இணையத்தளங்களில் உள்ள மின்னஞ்சல் இணைப்புகளுக்கு எரிதங்கள் அனுப்பப்படுவதைத் தவிர்க்கும் முகமாக, மின்னஞ்சல் முகவரிகளில் உள்ள வீதக் குறி தட்டச்சிடப்படாமல் படமாகவும் உள்ளிடப்படுவதுண்டு.
வீதக் குறியானது ஒருவருக்குப் பதில் சொல்லும்போதும் பயன்படுத்தப்படுகின்றது. முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் வீதக் குறியைப் பயன்படுத்தி (எ-டு: @விக்கிப்பீடியா) யாருக்குப் பதில் சொல்லப்படுகிறது எனக் குறிப்பிடப்படுகிறது.[2]
கணினியியல்
தொகுவிளக்கம் | வரியுரு | ஒருங்குறி |
---|---|---|
வணிக வீதக் குறி | @ | U+0040 |
சிறு வணிக வீதக் குறி | ﹫ | U+FE6B |
முழுநீள வணிக வீதக் குறி | @ | U+FF20 |
மேற்கோள்கள்
தொகு- ↑ ["யார் முதல் மின்னஞ்சலை அனுப்பினார் (ஆங்கில மொழியில்)?". Archived from the original on 2009-12-23. பார்க்கப்பட்ட நாள் 2012-05-21. யார் முதல் மின்னஞ்சலை அனுப்பினார் (ஆங்கில மொழியில்)?]
- ↑ உங்கள் நிலையிலும் உங்கள் பதிவுகளிலும் நண்பர்களைக் குறியிடுங்கள் (ஆங்கில மொழியில்)