பொட்டு தெற்கு ஆசியா, (குறிப்பாக இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மொரிசியசு)[1] மற்றும் தென்கிழக்காசியாவில் நெற்றியில் அணியும் அலங்காரமாகும். வழமையாக பெண்களால் முன்நெற்றியில் புருவங்களுக்கிடையே சிவப்பு வண்ணத்தில் வட்ட வடிவில் இது வைத்துக் கொள்ளப்படுகின்றது. இருப்பினும் மற்ற வண்ணங்களிலும் மற்ற வடிவமைப்புகளிலும் சின்னங்களுடனோ இல்லாமலோ நகையுடனோ இது அணிந்து கொள்ளப்படுகிறது. திருமணமான பெண்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக் கொள்வதும் விதவைகள் வெறும் நெற்றியுடன் இருப்பதும் பண்டைய பண்பாடாக இருந்தது; தற்போது உடைக்கு ஏற்பவே அணிந்து கொள்ளப்படுகின்றது.

அலங்காரப் பொட்டு

வெவ்வேறு இந்திய மொழிகளில் தொகு

இந்தியாவின் பிற பகுதிகளில் "ஓர் துளி, சிறு துகள், புள்ளி" எனப் பொருள்படும் சமசுகிருதச் சொல்லான பிந்து விலிருந்து பெறப்பட்ட பிந்தி (இந்தி: बिंदी) என அழைக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் அணியத் தயாரானநிலையில் பசையுடன் கூடிய ஒட்டுப் பொட்டுக்கள் (பொது வழக்கில் இசுடிக்கர் பொட்டுக்கள்) விற்கப்படுகின்றன.[2]

காட்சிக்கூடம் தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. Das, Subhamoy. "Bindi: The Great Indian Forehead Art". http://hinduism.about.com/od/bindis/a/bindi.htm. பார்த்த நாள்: 2009-02-16. 
  2. "Dazzling bindis". MSN India. 10 October 2011 இம் மூலத்தில் இருந்து 2011-10-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111012051854/http://lifestyle.in.msn.com/gallery/Photoviewer.aspx?cp-documentid=4248259. பார்த்த நாள்: 2011-10-20. 

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பொட்டு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டு&oldid=3565517" இருந்து மீள்விக்கப்பட்டது