இந்து

இந்து மதம் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய மதமாகும்.

இந்து (About this soundஒலிப்பு ) (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்[1]). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.

சொல்வரலாறுதொகு

செங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மருவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[2][3]

பிரகாஸ்பதி ஆகமத்தில்

மேற்கத்திய அரபு மொழியில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க அல்-ஹிந் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.[6] மற்றும் ஈரான் நாட்டிலும் ஹந்து என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப் பயன்பட்டது. 13ம் நூற்றாண்டின் போதுதான் ஹிந்துஸ்தான் என்பது இந்தியாவைக் குறிக்க பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.[7] ஆரம்பத்தில் ஹிந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாக குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. 16-18ம் நூற்றாண்டு வங்காள மொழி நூல்களிலும், காஷ்மீர், தென்னிந்திய நூல்களிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தன.[8][9] பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் இந்திய சமயத்தை பின்பற்றுபவர்களை குறிக்க ஹிந்து என்கிற சொல் புழக்கத்தில் வந்தது.

இவற்றையும் பார்க்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. இந்திய அரசியலமைப்பு:சமய உரிமை கட்டுரை 25:"Explanation II: In sub-Clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion"
  2. "ரிக்வேதம்: Rig-Veda, Book 10: HYMN LXXV. The Rivers". Sacred-texts.com. பார்த்த நாள் 2012-01-21.
  3. "India", Oxford English Dictionary, second edition, 2100a.d. Oxford University Press.
  4. "Download Attachment". Sites.google.com. பார்த்த நாள் 2012-01-21.
  5. Sharma, Jai Narain (2008-01-01). jMpEC&pg=PA59&dq=%22Brihaspati+Agama%22#v=onepage&q=%22Brihaspati%20Agama%22&f=false Encyclopaedia of eminent thinkers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180695001. http://books.google.com/?id=Dz-5B8 jMpEC&pg=PA59&dq=%22Brihaspati+Agama%22#v=onepage&q=%22Brihaspati%20Agama%22&f=false. 
  6. Thapar, R. 1993. Interpreting Early India. Delhi: Oxford University Press. p. 77
  7. Thompson Platts, John. A dictionary of Urdu , classical Hindī, and English. W.H. Allen & Co., Oxford University 1884 
  8. O'Conell, Joseph T. (1973). "The Word 'Hindu' in Gauḍīya Vaiṣṇava Texts". Journal of the American Oriental Society 93 (3): pp. 340–344. 
  9. David Lorenzen, Who Invented Hinduism? New Delhi 2006, pp. 24-33; Rajatarangini of Yonaraja : "Hinduka"
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து&oldid=2891666" இருந்து மீள்விக்கப்பட்டது