உம்மைக் குறி
உம்மைக் குறி (Ampersand) என்பது ஆங்கிலத்தில் இணைப்பிடைச் சொல்லான And என்பதைக் குறிக்கும் குறியீடாகும்.[1]
சொற்பிறப்பியல்தொகு
இரண்டு சொற்களை இணைப்பதற்கு இக்குறியீடு பயன்படுத்தப்படுவதால், இது உம்மைக் குறி என அழைக்கப்படுகிறது. And Per Se And என்ற சொற்றொடரிலிருந்தே உம்மைக் குறி என்பதன் ஆங்கிலச் சொல்லான Ampersand எனுஞ்சொல் உருவாகியது.[2]
பயன்பாடுதொகு
திருமணம் புரிந்த கணவரையும் மனைவியையும் விளிக்கும்போது உம்மைக் குறி பயன்படுத்தப்படுகிறது (எ-டு: திரு. & திருமதி காந்தி).
ஆங்கிலத்தில் Andஇற்குப் பதிலாக உம்மைக் குறி பயன்படுத்தப்படுவதும் உண்டு (எ-டு: Dog & Cat).[3]
கணினியியல்தொகு
விளக்கம் | வரியுரு | ஒருங்குறி | மீப்பாடக் குறிமொழி |
---|---|---|---|
சிறு உம்மைக் குறி | ﹠ | U+FE60 | ﹠ |
முழுநீள உம்மைக் குறி | & | U+FF06 | & |
தலைகீழ் உம்மைக் குறி | ⅋ | U+214B | ⅋ |
பெரும்பாலான விசைப்பலகைகளில் மாற்று விசையுடன் 7ஐ அழுத்துவதன் மூலம் உம்மைக் குறியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ உம்மைக் குறி (ஆங்கில மொழியில்)
- ↑ உம்மைக் குறி (ஆங்கில மொழியில்)
- ↑ "உம்மைக் குறி (ஆங்கில மொழியில்)". 2012-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-20 அன்று பார்க்கப்பட்டது.