கேள்விக்குறி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.

‌?
கேள்விக்குறி (தமிழ் நடை)
நிறுத்தக்குறிகள்
தனி மேற்கோள் குறி ( ’ ' )
அடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )
முக்காற்புள்ளி ( : )
காற்புள்ளி ( , )
இணைப்புக்கோடு ( , –, —, ― )
முப்புள்ளி ( …, ..., . . . )
உணர்ச்சிக்குறி ( ! )
முற்றுப்புள்ளி ( . )
கில்லெமெட்டு ( « » )
இணைப்புச் சிறு கோடு ( )
கழித்தல் குறி ( - )
கேள்விக்குறி ( ? )
மேற்கோட்குறிகள் ( ‘ ’, “ ”, ' ', " " )
அரைப்புள்ளி ( ; )
சாய்கோடு ( /,  ⁄  )
சொற்பிரிப்புகள்
வெளி ( ) ( ) ( )
மையப் புள்ளி ( · )
பொது அச்சுக்கலை
உம்மைக் குறி ( & )
வீதக் குறி ( @ )
உடுக்குறி ( * )
இடம் சாய்கோடு ( \ )
பொட்டு ( )
கூரைக் குறி ( ^ )
கூரச்சுக் குறி ( †, ‡ )
பாகைக் குறி ( ° )
மேற்படிக்குறி ( )
தலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )
தலைகீழ் கேள்விக் குறி ( ¿ )
எண் குறியீடு ( # )
இலக்கக் குறியீடு ( )
வகுத்தல் குறி ( ÷ )
வரிசையெண் காட்டி ( º, ª )
விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, )
பத்திக் குறியீடு ( )
அளவுக் குறி ( ′, ″, ‴ )
பிரிவுக் குறி ( § )
தலை பெய் குறி ( ~ )
அடிக்கோடு ( _ )
குத்துக் கோடு ( ¦, | )
அறிவுசார் சொத்துரிமை
பதிப்புரிமைக் குறி ( © )
பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )
ஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( )
சேவைக் குறி ( )
வர்த்தகச் சின்னம் ( )
Currency
நாணயம் (பொது) ( ¤ )
நாணயம் (குறிப்பிட்ட)
( ฿ ¢ $ ƒ £ ¥ )
பிரபல்யமற்ற அச்சுக்கலை
மூவிண்மீன் குறி ( )
டி குறி ( )
செங்குத்துக் குறியீடு ( )
சுட்டுக் குறி ( )
ஆகவே குறி ( )
ஆனால் குறி ( )
கேள்வி-வியப்புக் குறி ( )
வஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )
வைர வடிவம் ( )
உசாத்துணைக் குறி ( )
மேல்வளைவுக் குறி ( )
சம்பந்தப்பட்டவை
இரட்டைத் திறனாய்வுக் குறிகள்
வெள்ளை இடைவெளி வரியுரு
ஏனைய வரி வடிவங்கள்
சீன நிறுத்தக்குறி
கேள்விக்குறி

இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.[1][2][3]

நிறுத்தக்குறிகளுள் ஒன்று கேள்விக்குறி ஆகும். இதை வினாக்குறி என்றும் கூறுவர்.

கேள்விக்குறி (?) இடும் இடங்கள்

தொகு

ஒரு பொருள் குறித்து மேலும் அறியவோ ஐயம், வியப்பு போன்ற உணர்வுகளைத் தயக்கத்தோடு வெளிப்படுத்தவோ கேள்விக்குறி பயன்படுகிறது.

கேள்விக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:

1) வினா வாக்கியத்தின் முடிவில் கேள்விக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
மதுரைக்குப் போய் வந்துவிட்டீர்களா?
2) ஐயம், நம்பிக்கையின்மை தொனிக்கும் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
இன்னும் இரு நாட்களில் பருவமழை பெய்யும்?
கடையில் பற்றிய தீ அருகிலிருந்த வீட்டிலும் பரவியது. எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். படுக்கையாய்க் கிடந்த கண்ணன் கதி?
3) ஒரு செய்தி உறுதியாகத் தெரியாத நிலையில் ஐயப்பாடு எழுப்ப கேள்விக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
கலிங்கத்துப் போர் (கி.மு. 265?) அசோகரின் வாழ்க்கையை வேரோடு மாற்றியமைத்தது.
4) வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும் உணர்ச்சிக்குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு:
உங்களால் இவ்வளவு சீக்கிரம் எப்படி வர முடிந்தது?!

கேள்விக்குறி தேவை இல்லாத இடங்கள்

தொகு
1) அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் கேள்விக்குறி இடுவதில்லை. இறுதி வினாவில் மட்டும் இட்டால் போதும்.
எடுத்துக்காட்டு:
மும்பைக்கு எப்படிப் போவீர்கள், விமானத்திலா, பேருந்திலா?
2) என, என்று, என்ற, என்பது ஆகிய சொற்களுக்கு முன் மேற்கோள்குறி இல்லாமல் வரும் வினாவை அடுத்து கேள்விக்குறி இடுவதில்லை.
எடுத்துக்காட்டுகள்:
இதைச் செய்யலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கு இடமே இல்லை.
அயல்நாட்டுப் பயணத்தை அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போடலாமா என்று அவர் கேட்டதும் கண்ணனுக்கு எரிச்சல்தான் வந்தது.

சான்றுகள்

தொகு

1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.

மேற்கோள்கள்

தொகு
  1. "The riddle of the Syriac double dot: it's the world's earliest question mark". University of Cambridge. 2011-07-21. Archived from the original on 2022-11-01. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  2. "Symbol in Syriac may be world's first question mark". Reuters. 2011-07-21. Archived from the original on 2022-11-01. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  3. "The Grammarphobia Blog: Who invented the question mark?". www.grammarphobia.com. 2022-02-28. Archived from the original on 2022-11-01. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேள்விக்குறி_(தமிழ்_நடை)&oldid=3893654" இலிருந்து மீள்விக்கப்பட்டது