உயிர்ப்புவியியல்

உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும். இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது.

சிற்றினத்தோற்றம், இனஅழிவு, கண்டப்பெயர்ச்சி, உறைபனியாதல் மற்றும் அது சார்ந்த கடல்மட்ட மாற்றம், நீரீனால் நிலப்பகுதிகள் தனிமைபடல் போன்ற நிகழ்வுகள் ஓர் உயிரினத்தின் உயிர்ப்புவியியலை அமைக்கின்றன.

உயிர்ப்புவியியலின் அறிவியற்கொள்கை முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் ஆல்பிரட் ராசுல் வாலாசு மற்றும் பல படிமலர்ச்சியல் அறிஞர்களால் விளக்கப்பட்டது. ஆல்பிரட் ராசுல் வாலாசுக்கு மலாய தீவுக்கூட்டங்களின் செடியினங்கள் (தாவரங்கள்) மற்றும் விலங்குகளை பற்றி ஆராயும் பொழுது உயிர்ப்புவியியலை பற்றிய எண்ணக்கரு தோன்றியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்ப்புவியியல்&oldid=2224039" இருந்து மீள்விக்கப்பட்டது