மீயொலி நோட்டம்
புறவொலி அலகீடு (இலங்கை வழக்கு: கழியொலி) அல்லது மீயொலி அலகீடு (Ultra Sound Scan) என்பது எர்ட்சு முதல் எர்ட்சு அலைவெண்ணுக்கு மேற்பட்ட புறவொலிகளைப் பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளை படிம மாக்கும் கருவியாகும்.
மருத்துவ புறவொலி வரைவியல் Medical ultrasonography | |
---|---|
குழந்தையின் எதிரொலி இதய வரைவியல் | |
ICD-10-PCS | B?4 |
ICD-9-CM | 88.7 |
MeSH | D014463 |
OPS-301 code | 3-03...3-05 |
மருத்துவ புறவொலி வரைவியல் (Medical ultrasound) (அல்லது நோய்நாடல் புறவொலி வரைவியல் (diagnostic sonography) அல்லது எளிமையாக, புறவொலி வரைவியல்) என்பது புறவொலி அல்லது கேளா ஒலியைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவப் படிமவியல் நுட்பமாகும், இது உடலகக் கட்டமைப்புகளாகிய தசைநாண்கள், தசைகள், மூட்டிகள், குருதிக்குழல்கள், பிற உள்ளுறுப்புகளைப் படிம ம்க்க உதவுகிறது. இதன் நோக்கம் நோயறிதலும் அதை நீக்கலும் ஆகும். கருதரித்த பெண்களின் கருவைப் புறவொலியால் ஆயும் நடைமுறை கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.
புறவொலிகள் அல்லது கேளா ஒலிகள் என்பவை 20,000 அலைவெண்ணுக்கும் மேலான அலைவெண்கள் வாய்ந்த ஒலி அலைகளாகும். ஒலிவரைகள் எனப்படும் புறவொலிப் படிமங்கள் புறவொலித் துடிப்புகளைப் புறவொலி ஆய்கோல்களைப் பயன்படுத்தி இழையங்களுக்குள் அனுப்ப்ப்படுகின்றன. இழையங்கள் தம் தன்மையைச் சார்ந்து இந்த புறவொலியைப் பல்வேறு அளவுகளில் எதிரொலிக்கின்றன. இந்த எதிரொலிகளை ஆய்கோல்கள் பதிவுசெய்து கணினிக் காட்சித்திரையில் படிமங்களாகக் காட்டுகிறது.
இந்த ஒலிவரைவுக் கருவிகளால் பலவகைப் படிமங்களை உருவாக்கலாம், இவற்றில் மிகவும் பரவலாக எடுக்கப்படும் படிமம் பி-முறைமைப் படிமம் (B-mode image ) ஆகும். இது இழையத்தின் இருபருமான வெட்டுமுகத்தின் ஒலியியல் மறிப்பைக் (acoustic impedance) காட்டுகிறது. பிறவகைப் படிமம், குருதிப் பாய்வையோ நேரஞ்சார்ந்த இழைய இயக்கத்தையோ குருதிபடிந்த இடத்தையோ குறிப்பிட்ட மூலக்கூறுகள் உள்ளமையையோ இழைய விறைப்பையோ உறுப்பு அல்லது உடற்பகுதியின் முப்பருமான உடற்கூற்றியலையோ காட்டும்.
இம்முறை மற்ற மருத்துவப் படிம முறைகளைவிட பல மேம்படுகளைக் கொண்டுள்ளது. இது நடப்பு நேரப் படிமங்களைத் தருகிறது; இதை எங்கும் கொண்டு செல்லலாம். ஒப்பீட்டளவில் குறைவான செலவுடையது. இது தீங்குதரும் மின்னணுவாக்க்க் கதிர்வீச்சுகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு தேவைப்படும்; இதன் காட்சிப்புல வரம்பு குறுகியதாகும்; காற்று, எலும்புக்குப் பின்னுள்ள கட்டமைப்புகளைக் காண முடியாது; இதற்குப் பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த மருத்துவர்கள் அல்லது தொழில்நுட்பர்கள் தேவைப்படுகின்றனர்.
உறுப்பு அல்லது அமைப்பு ஆய்வு
தொகுஒலிவரைவியல் (புறவொலி வரைவியல்) மருத்த்வத்தில் பரவலாகப் பயன்படுகிறது. புறவொலியின் வழிகாட்டலைக் கொன்டு நோய்நாடலும் மருத்துவ இடையீட்டுச் செயல்முறைகளையும் உயிர்நுள் பிரிப்பு, தேங்கிய பாய்ம வடிப்பு போன்ற இடையீடு வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். புறவொலி வரவாளர்கள் ம்ருத்துவ வல்லுனர்கள் ஆவர். இவர்கள் அலகீட்டைச் செய்து அலகீட்டுப் படிமங்களைத் தாமே விளக்குகின்றனர். இப்படிமங்களைக் கதிரியலாளர் அல்லது மருத்துவப் படிமவியலில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களோ அல்லது இதயவியலாளரோ (எதிரொலி இதயவரைவுப் படிமங்களை) விளக்குவர்ரொலிவரைவியலாளர்கள் வழக்கமாக ஆற்றல்மாற்றி (transducer) எனப்படும் ஆய்கோலை நோயாளி மீது வைத்து அலகீடு செய்வர். மேலும் கூடுதலாக மருத்துவமனையாளரும் உடல்நலத் தொழில் வல்லுனர்களும் புறவொலி வரைவியல் முறையைதங்கள் மருத்துவகங்களிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்துகின்றனர்.
உடலின் மென்னிழையங்களுக்கு ஒலிவரைவியல் ஏற்றதாகும். 7 முதல் 16 மெகாஎர்ட்சுகள் வரையிலான உயர் அலைவெண்களில் தசைகள், தசைநாண்கள், விரைகள், மார்பகங்கள், கேடய, இணைகேடயச் சுரப்புகள், புதுக்குழவியின் மூளை ஆகிய மேலீடான உடல் உறுப்புகளை புறவொலியால் அலகிடலாம்; உயர் அலைவெண்களில் செய்யும் அலகீடு உயர்ந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைப் பெற்றுள்ளது. கணையம், சிறுநீரகம் போன்ற ஆழ் உரூப்புகளை 1 முதல் 6மெகாஎர்ட்சு வரையிலான தாழ் அலைவெண்களில் அலகீடு செய்யலாம்; தாழ் அலைவெண்களில் செய்யும் அலகீடு குறைந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைத் தந்தாலும் ஆழமாக ஊடுருகின்றன.
பெரும்பாலான படிமங்களுக்கு பொதுப்பயன் புறவொலி அலகீட்டுக் கருவியே போதுமானதாகும். சிறப்புப் பயன்பாடுகளுக்குச் சிறப்பு ஆற்றல்மாற்றிகள் (ஆய்கோல்கள்) பய்ன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான புறவொலி அலகீடுகள் உடலின் மேற்பரப்பிலே செய்யப்படுகின்றன; ஆனால், ஆய்கோலை உடலின் உள்ளே வைத்து அலகீடு செய்வது கூடுதலான தன்னம்பிக்கையைத் தரும். இதற்காக, பிறப்பு உறுப்பக, மலக்குடலக, உணவுக் குழலகச் சிறப்பு ஆய்கோல்கள் பயன்படுகின்றன இதைவிட மிக நுட்பமான குருதிக்குழல் அலகீட்டிற்கு மிகச் சிறிய வட்ட ஆய்கோல்கள் குழலில் பொறுத்தி குருதிக்குழல்களில் உள்ளே அனுப்பப்படுகின்றன. இவை குருதிக்குழல் சுவர்களையும் நோய் அறிகுறிகளையும் படிமம் எடுக்கின்றன.
உணர்வு மரக்கடிப்பியல்
தொகுகுழல் ஓர்வு (குருதிக் குழல்)
தொகுஇதயவியல்
தொகுமுதன்மைக் கட்டுரை; எதிரொலி இதயவரைவியல்