நிலக்கரி

தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள்

நிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும். நிலக்கரி ஓர் அடையற் பாறை வகையைச் சேர்ந்ததாகும். அது வழமையாக ஒரு சதுப்பு நில சூழலில் பாதுகாக்கப்பட்டு திரட்சியடைந்த தாவர உயிர்சுவடுகளினால் உருவாகியதாக காணப்படுகின்றது. இயற்கை வாயு, கனிய எண்ணெய் போன்றவற்றுடன் குறிப்பிடப்படும் முக்கியமான தொல்படிவ எரிபொருட்களுள் ஒன்றாகும். நிலக்கரி மின்உற்பத்தி போன்ற பல்வேறு பரந்த பயன்பாடுடையது. நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1] 1983 லிருந்து உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.[2]

நிலக்கரி
 —  படிவுப் பாறை  —
நிலக்கரி Image
ஆந்திரசைட்டு (Anthracite) வகை நிலக்கரித் துண்டு
கலவை
முதன்மை கார்பன்
இரண்டாம் நிலை சல்ஃபர்,
ஹைட்ரஜன்,
ஆக்ஸிஜன்,
நைட்ரஜன்
ஜெர்மனியின் கார்ஸ்வீலரில் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம். உயர் தெளிவுத்திறன் பனோரமா.

நிலக்கரி வணிகம்

தொகு

நிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.[3] அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும்.[4] நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன.[5]

தோற்றம்

தொகு
 
நிலக்கரியின் வேதிக் கட்டமைப்பின் எடுத்துக்காட்டு

மிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது.[6][7][8]

நிலக்கரியின் வகைகள்

தொகு
 
நோவா ஸ்கோசியாவின் அக்கோனி முனையிலுள்ள நிலக்கரிப் படுகை கடலோரத்தில் வெளிப்பட்டுருத்தல்

நிலக்கரி பூமியில் பல வகைகளில் கிடைக்கிறது.நிலகக்ரியை வகைப்படுத்தலில் நாடுகளுக்கிடையே வேறுபாடு காணப்படுகிரது

  1. முற்றா நிலக்கரி.
  2. பழுப்பு நிலக்கரி.
  3. அந்திரசைட் நிலக்கரி
  4. கிராபைட்
 
நிலக்கரியின் வேதியியல் கட்டமைப்பு உதாரணம்

உலகளாவிய நிலக்கரி இருப்பு

தொகு
2008ஆம் ஆண்டு இறுதியில் மெய்பிக்கப்பட்ட [9] அகழ்ந்தெடுக்கத்தக்க நிலக்கரி இருப்பு (மில்லியன் டன்கள் (டெராகிராம்கள்))[10]
நாடு அந்தராசைட்டு & அசுபால்ட்டு தரம்குறை புகைமலி நிலக்கரி லிக்னைட்டு மொத்தம் மொத்த உலக இருப்பில் விழுக்காடு
  ஐக்கிய அமெரிக்கா 108,501 98,618 30,176 237,295 22.6
  உருசியா 49,088 97,472 10,450 157,010 14.4
  சீனா 62,200 33,700 18,600 114,500 12.6
  ஆத்திரேலியா 37,100 2,100 37,200 76,400 8.9
  இந்தியா 56,100 0 4,500 60,600 7.0
  செருமனி 99 0 40,600 40,699 4.7
  உக்ரைன் 15,351 16,577 1,945 33,873 3.9
  கசக்கஸ்தான் 21,500 0 12,100 33,600 3.9
  தென்னாப்பிரிக்கா 30,156 0 0 30,156 3.5
  செர்பியா 9 361 13,400 13,770 1.6
  கொலம்பியா 6,366 380 0 6,746 0.8
  கனடா 3,474 872 2,236 6,528 0.8
  போலந்து 4,338 0 1,371 5,709 0.7
  இந்தோனேசியா 1,520 2,904 1,105 5,529 0.6
  பிரேசில் 0 4,559 0 4,559 0.5
  கிரேக்க நாடு 0 0 3,020 3,020 0.4
  பொசுனியா எர்செகோவினா 484 0 2,369 2,853 0.3
  மங்கோலியா 1,170 0 1,350 2,520 0.3
  பல்கேரியா 2 190 2,174 2,366 0.3
  பாக்கித்தான் 0 166 1,904 2,070 0.3
  துருக்கி 529 0 1,814 2,343 0.3
  உஸ்பெகிஸ்தான் 47 0 1,853 1,900 0.2
  அங்கேரி 13 439 1,208 1,660 0.2
  தாய்லாந்து 0 0 1,239 1,239 0.1
  மெக்சிக்கோ 860 300 51 1,211 0.1
  ஈரான் 1,203 0 0 1,203 0.1
  செக் குடியரசு 192 0 908 1,100 0.1
  கிர்கிசுத்தான் 0 0 812 812 0.1
  அல்பேனியா 0 0 794 794 0.1
  வட கொரியா 300 300 0 600 0.1
  நியூசிலாந்து 33 205 333-7,000 571–15,000[11] 0.1
  எசுப்பானியா 200 300 30 530 0.1
  லாவோஸ் 4 0 499 503 0.1
  சிம்பாப்வே 502 0 0 502 0.1
  அர்கெந்தீனா 0 0 500 500 0.1
மற்ற நாடுகள் 3,421 1,346 846 5,613 0.7
மொத்த உலக இருப்பு 404,762 260,789 195,387 860,938 100

பெருமளவு நிலக்கரி உற்பத்தியாளர்கள்

தொகு

இங்கு இருப்புக் காலம் என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு வாரியாகவும் ஆண்டு வாரியாகவும் நிலக்கரி உற்பத்தி (மில்லியன் டன்கள்)[3]
நாடு 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 பங்கு இருப்புக் காலம் (ஆண்டுகள்)
  சீனா 1834.9 2122.6 2349.5 2528.6 2691.6 2802.0 2973.0 3235.0 3520.0 49.5% 35
  ஐக்கிய அமெரிக்கா 972.3 1008.9 1026.5 1054.8 1040.2 1063.0 975.2 983.7 992.8 14.1% 239
  இந்தியா 375.4 407.7 428.4 449.2 478.4 515.9 556.0 573.8 588.5 5.6% 103
  ஐரோப்பிய ஒன்றியம் 637.2 627.6 607.4 595.1 592.3 563.6 538.4 535.7 576.1 4.2% 97
  ஆத்திரேலியா 350.4 364.3 375.4 382.2 392.7 399.2 413.2 424.0 415.5 5.8% 184
  உருசியா 276.7 281.7 298.3 309.9 313.5 328.6 301.3 321.6 333.5 4.0% 471
  இந்தோனேசியா 114.3 132.4 152.7 193.8 216.9 240.2 256.2 275.2 324.9 5.1% 17
  தென்னாப்பிரிக்கா 237.9 243.4 244.4 244.8 247.7 252.6 250.6 254.3 255.1 3.6% 118
  செருமனி 204.9 207.8 202.8 197.1 201.9 192.4 183.7 182.3 188.6 1.1% 216
  போலந்து 163.8 162.4 159.5 156.1 145.9 144.0 135.2 133.2 139.2 1.4% 41
  கசக்கஸ்தான் 84.9 86.9 86.6 96.2 97.8 111.1 100.9 110.9 115.9 1.5% 290
உலக மொத்தம் 5,301.3 5,716.0 6,035.3 6,342.0 6,573.3 6,795.0 6,880.8 7,254.6 7,695.4 100% 112

பெருமளவு நிலக்கரி நுகர்வாளர்கள்

தொகு

குறிப்பிட்ட மில்லியன் டன்களை விட கூடுதலாக ஆண்டு நுகர்வுள்ள நாடுகள் காட்டப்பட்டுள்ளன.

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி நுகர்வு (மில்லியன் அமெரிக்க டன்கள்)[12]
நாடு 2008 2009 2010 2011 பங்கு
  சீனா 2,966 3,188 3,695 4,053 50.7%
  ஐக்கிய அமெரிக்கா 1,121 997 1,048 1,003 12.5%
  இந்தியா 641 705 722 788 9.9%
  உருசியா 250 204 256 262 3.3%
  செருமனி 268 248 256 256 3.3%
  தென்னாப்பிரிக்கா 215 204 206 210 2.6%
  சப்பான் 204 181 206 202 2.5%
  போலந்து 149 151 149 162 2.0%
உலக மொத்தம் 7,327 7,318 7,994 பொருந்தாது 100%

பெருமளவு நிலக்கரி ஏற்றுமதியாளர்கள்

தொகு

ஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும்.

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி ஏற்றுமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)[4][13][14]
நாடு 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 பங்கு
  ஆத்திரேலியா 238.1 247.6 255.0 255.0 268.5 278.0 288.5 328.1 27.1%
  இந்தோனேசியா 107.8 131.4 142.0 192.2 221.9 228.2 261.4 316.2 26.1%
  உருசியா 41.0 55.7 98.6 103.4 112.2 115.4 130.9 122.1 10.1%
  ஐக்கிய அமெரிக்கா 43.0 48.0 51.7 51.2 60.6 83.5 60.4 83.2 6.9%
  தென்னாப்பிரிக்கா 78.7 74.9 78.8 75.8 72.6 68.2 73.8 76.7 6.3%
  கொலம்பியா 50.4 56.4 59.2 68.3 74.5 74.7 75.7 76.4 6.3%
  கனடா 27.7 28.8 31.2 31.2 33.4 36.5 31.9 36.9 3.0%
  கசக்கஸ்தான் 30.3 27.4 28.3 30.5 32.8 47.6 33.0 36.3 3.0%
  வியட்நாம் 6.9 11.7 19.8 23.5 35.1 21.3 28.2 24.7 2.0%
  சீனா 103.4 95.5 93.1 85.6 75.4 68.8 25.2 22.7 1.9%
  மங்கோலியா 0.5 1.7 2.3 2.5 3.4 4.4 7.7 18.3 1.5%
  போலந்து 28.0 27.5 26.5 25.4 20.1 16.1 14.6 18.1 1.5%
மொத்தம் 713.9 764.0 936.0 1,000.6 1,073.4 1,087.3 1,090.8 1,212.8 100%

பெருமளவு நிலக்கரி இறக்குமதியாளர்கள்

தொகு

20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர்.[15]

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி இறக்குமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)[5]
நாடு 2006 2007 2008 2009 2010 பங்கு
  சப்பான் 199.7 209.0 206.0 182.1 206.7 17.5%
  சீனா 42.0 56.2 44.5 151.9 195.1 16.6%
  தென் கொரியா 84.1 94.1 107.1 109.9 125.8 10.7%
  இந்தியா 52.7 29.6 70.9 76.7 101.6 8.6%
  சீனக் குடியரசு 69.1 72.5 70.9 64.6 71.1 6.0%
  செருமனி 50.6 56.2 55.7 45.9 55.1 4.7%
  துருக்கி 22.9 25.8 21.7 22.7 30.0 2.5%
  ஐக்கிய இராச்சியம் 56.8 48.9 49.2 42.2 29.3 2.5%
  இத்தாலி 27.9 28.0 27.9 20.9 23.7 1.9%
  நெதர்லாந்து 25.7 29.3 23.5 22.1 22.8 1.9%
  உருசியா 28.8 26.3 34.6 26.8 21.8 1.9%
  பிரான்சு 24.1 22.1 24.9 18.3 20.8 1.8%
  ஐக்கிய அமெரிக்கா 40.3 38.8 37.8 23.1 20.6 1.8%
மொத்தம் 991.8 1,056.5 1,063.2 1,039.8 1,178.1 100%

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நிலக்கரி சுரங்கங்கள்". பார்க்கப்பட்ட நாள் சூலை 18, 2013.
  2. "நிலக்கரி". பார்க்கப்பட்ட நாள் சூலை 18, 2013.
  3. 3.0 3.1 "BP Statistical review of world energy 2012" (XLS). British Petroleum. Archived from the original on 19 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. 4.0 4.1 EIA International Energy Annual – Total Coal Exports (Thousand Short Tons) பரணிடப்பட்டது 2017-10-13 at the வந்தவழி இயந்திரம். Tonto.eia.doe.gov. Retrieved on 24 August 2012.
  5. 5.0 5.1 International Energy Annual – Total Coal Imports (Thousand Short Tons) பரணிடப்பட்டது 2016-04-15 at the வந்தவழி இயந்திரம். Tonto.eia.doe.gov. Retrieved on 24 August 2012.
  6. Taylor, Thomas N; Taylor, Edith L; Krings, Michael (2009). Paleobotany: The biology and evolution of fossil plants. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373972-8.
  7. எஆசு:[1293:ACFPUH2.0.CO;2 10.1130/0016-7606(1957)68[1293:ACFPUH]2.0.CO;2]
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  8. எஆசு:10.2113/gsecongeo.76.4.951
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  9. ஆழ்துளைகளிட்டு நிலக்கரி இருப்பதை உறுதி செய்யப்பட்ட இருப்புக்கள் மெய்ப்பிக்கப்பட்ட (proven) எனப்படுகின்றன.
  10. World Energy Council – Survey of Energy Resources 2010. (PDF) . Retrieved on 24 August 2012.
  11. Sherwood, Alan and Phillips, Jock. Coal and coal mining – Coal resources, Te Ara – the Encyclopedia of New Zealand, updated 2009-03-02
  12. EIA International Energy Annual – Total Coal Consumption (Thousand Short Tons). Eia.gov. Retrieved on 2013-05-11.
  13. Table 114. World Metallurgical Coal Flows By Importing Regions and Exporting Countries 1,2/ (million short tons). eia.doe.gov
  14. World Coal Flows by Importing and Exporting Regions. Eia.doe.gov. Retrieved on 24 August 2012.
  15. EIA International Energy Annual: Coal Overview 2010. Eia.gov. Retrieved on 24 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கரி&oldid=4087791" இலிருந்து மீள்விக்கப்பட்டது