சிம்பாப்வே

சிம்பாப்வே முன்னர் ரொடீசியக் குடியரசு என அறியப்பட்ட சிம்பாப்வே குடியரசானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும். சிம்பாப்வேயின் தெற்கில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கில் போட்சுவானாவும் கிழக்கில் மொசாம்பிக்கும் வடக்கில் சாம்பியாவும் உள்ளன. சிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் "ட்சிம்பா ட்சிமாப்வே" என்ற சோனா மொழிப் பதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.[1] மேலும், "பெரும் சிம்பாப்வே" என்றழைக்கப்டும் நாட்டின் முன்னைய இராச்சியம் ஒன்றின் இடிப்பாடுகளின் பெயர் இப்பெயர் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது அவ்விடிபாடுகளுக்கு காட்டும் மரியாதையாக கருதப்படுகிறது.

சிம்பாப்வே குடியரசு
கொடி சின்னம்
குறிக்கோள்: ஒற்றுமை,விடுதலை,கடமை
நாட்டுப்பண்: சிம்பாப்வே நாடு ஆசீர்வதிக்கப்படக்கடவது
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அராரே
17°50′S 31°03′E / 17.833°S 31.050°E / -17.833; 31.050
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், சோனா மற்றும் சிந்தெபெலெ
Government
 •  அதிபர் Emmerson Mnangagwa
விடுதலை
 •  ரொடிசியா நவம்பர் 11, 1965 
 •  சிம்பாப்வே ஏப்ரல் 18, 1980 
பரப்பு
 •  மொத்தம் 3,90,757 கிமீ2 (60வது)
1,50,871 சதுர மைல்
 •  நீர் (%) 1
மக்கள் தொகை
 •  யூலை 2005 கணக்கெடுப்பு 13,010,000* (68வது)
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $30.581 பில்லியம் (94வது)
 •  தலைவிகிதம் $2,607 (129வது)
மமேசு (2003)0.505
தாழ் · 145வது
நாணயம் சிம்பாப்வே டொலர் (ZWD)
நேர வலயம் (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 263
இணையக் குறி .zw
* Note: estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS.

பழைய நாகரிகங்கள்தொகு

தொல்பொருள் ஆய்வாளர்கள் கற்கால ஆயுதங்களை சிம்பாப்வேயின் பல இடங்களிலும் அகழ்ந்தெடுத்துள்ளார்கள், இது மனிதன் பல நூற்றாண்டுகளாக இப்பிரதேசங்களில் வசித்து வந்துள்ளமைக்கு சான்றாகும். "பெரும் சிம்பாப்வே" இடிபாடுகளானது முன்னைய நாகரிகம் ஒன்றை நன்கு விளக்குகின்றது. இங்கு காணப்படும் கட்டிடங்கள் கிபி 9 மற்றும் கிபி 13 ஆம் நூற்றாண்டுக்குமிடையில், ஆப்பிரிக்கர்களால் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்க வணிக மையங்களுடன் வணிக தொடர்புகளையும் கொண்டிருந்தனர். இவற்றையும் விட பல நாகரிகங்கள் இங்கு காணப்பட்டன.

பண்டு மொழி பேசிய கொகொமெரே மக்கள் முன்பிருந்த கொயிசா மக்களை புறந்தள்ளிவிட்டு கிபி 500 அளவில் இப்பிரதேசங்களில் குடியேறினார்கள். 1000 ஆண்டிலிருந்து கோட்டைகள் உருப்பெறத்தொடங்கி 15 ஆம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை கண்டது. இவர்கள் இன்று சிம்பாப்வேயில் 80% மக்களான சோனா மக்களின் முன்னோர்களாவர்.

 
"பெருஞ் சிம்பாப்வே"

போர்த்துக்கேயர் வருகைதொகு

கிபி 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கேயர் வருகையுடன் பல யுத்தங்கள் வெடித்தன. வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டில் இந்நாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 1690 ஆம் ஆண்டில் சில சிற்றரசுகள் சேர்ந்து ரொசுவி என்ற ஆட்சியை அமைத்து போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்து அவர்களைப் பின்வாங்கச் செய்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் இவ்வாட்சி செழித்தோங்கியது, இறுதியில் 19-ஆம் நூற்றாண்டின் போது ரொசுவி ஆட்சியும் வீழ்ச்சியடைந்தது.

இந்டெபெலே ஆக்கிரமிப்புதொகு

இந்டெபெலே மக்கள் 1834 ஆம் ஆண்டில் தெற்கிலிருந்து வந்து இப்பகுதியை ஆக்கிரமித்து மடபெலேலாந்து என்ற ஆட்சியை நிறுவினார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிதொகு

1890 ஆம் ஆண்டுகளில் சிசிலி ரொடெஃச் என்பவரின் தலைமையின் கீழ் பிரித்தானிய ஆட்சி ஆரம்பித்தது. இவரது பெயரை வைத்து இப்பிரதேசம் ரொடிசியா எனப் பெயரிடப்பட்டது. 1888 ஆம் ஆண்டு பிரித்தானிய தெற்கு ஆப்பிரிக்க கம்பனியுடன் மடபெலேலாந்து அரசு செய்த உடன்படிக்கை மூலமாக தங்கம் அகழ்வதற்கான உரிமை பிரித்தானியருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிகளவான பிரித்தானியர் நாட்டுக்குள் வருவதை மன்னர் விரும்பாத காரணத்தால் 1896-97 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயருடன் யுத்தமொன்று மூண்டது. இதில் மடபெலேலாந்து அரசு வீழ்ச்சியடைந்தது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சி ஆரம்பித்தது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் ஆங்கிலேயர் காலனிகளாக இருந்த போதிலும், அங்கே ஆங்கிலேயர் நிரந்தரமாக குடியேற நினைக்கவில்லை . தென் ஆபிரிக்காவிலும், சிம்பாபுவேயிலும் அவர்கள் நிரந்தரமாக குடியேறி, பெருமளவு காணி நிலங்களை தமது சொத்துகளாக வைத்திருந்தனர். இந்த நிலங்கள் யாவும் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நியர்கள் (வெள்ளயினத்தவர்) நிலவுடமையாளர்களாக விவசாயம் செய்த நிலத்தில், உள்ளூர் மக்கள் (கறுப்பினத்தவர்) விவசாயக் கூலிகளாக வேலை செய்தனர். வெள்ளையரின ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். அன்றைய நிறவெறி பிடித்த ஆங்கிலேய சனாதிபதி, கறுப்பர்களுக்கு தம்மை தாமே ஆளும் பக்குவம் இன்னும் வரவில்லை, என்று கூறி வந்தார்.

ஆட்சிக்கு வந்த முதலாவது கறுப்பின சனாதிபதியும், சனு-பிஃப் (ZANU-PF) தலைவருமான ராபர்ட் முகாபே, தனது அரசியல் நலன் கருதி நடந்தாலும் வெள்ளையின விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்த செயலை, பல ஆப்பிரிக்கர்கள் வரவேற்கின்றனர். ஒரு காலத்தில், சிம்பாப்வே விடுதலை அடைந்த பின்பும், அந்நாட்டு பொருளாதாரம் வெள்ளையரின் கைகளில் தான் இருந்தது.

ஆதாரங்கள்தொகு

  1. "சிம்பாப்வே வரலாறு". 2006-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-08-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பாப்வே&oldid=3554085" இருந்து மீள்விக்கப்பட்டது