மொசாம்பிக்
மொசாம்பிக் (Mozambique) என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு (போர்த்துகீசம்: República de Moçambique, pron. IPA: [ʁɛ'publikɐ dɨ musɐ̃'bikɨ]), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலும், வடக்கே தன்சானியாவும், வட கிழக்கே சாம்பியா மற்றும் மலாவியும், மேற்கே சிம்பாப்வேயும், வட மேற்கே சுவாசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.
மொசாம்பிக் குடியரசு República de Moçambique | |
---|---|
குறிக்கோள்: இல்லை | |
நாட்டுப்பண்: Pátria Amada (முன்னர் Viva, Viva a FRELIMO) | |
![]() | |
தலைநகரம் | மபூட்டோ |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | போர்த்துகீசம் |
மக்கள் | மொசாம்பிக்கன் |
அரசாங்கம் | குடியரசு |
• குடியரசுத் தலைவர் | அர்மாண்டோ குயெபுசா |
• தலைமை அமைச்சர் | லுயிசா டியொகோ |
விடுதலை | |
• போர்த்துக்கல் இடமிருந்து | ஜூன் 25 1975 |
பரப்பு | |
• மொத்தம் | 801,590 km2 (309,500 sq mi) (35வது) |
• நீர் (%) | 2.2 |
மக்கள் தொகை | |
• 2007 கணக்கெடுப்பு | 21,397,000 (52வது) |
• அடர்த்தி | 25/km2 (64.7/sq mi) (178வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $27.013 பில்லியன் (100வது) |
• தலைவிகிதம் | $1,389 (158வது) |
மமேசு (2004) | ![]() Error: Invalid HDI value · 168வது |
நாணயம் | மொசாம்பிக்க மெடிகால் (Mtn) (MZN) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (CAT) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (கடைப்பிடிப்பதில்லை) |
அழைப்புக்குறி | 258 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | MZ |
இணையக் குறி | .mz |
|
போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. Muça Alebique, என்ற சுல்தானின் பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மொசாம்பிக் 'அருமையான சுற்றுலாத் தளம்' என்று பெயர் பெற்று வருகிறது. மிகுந்த அழகும் குறைந்த செலவுமே இதற்குக் காரணம். மொசம்பிக் நாட்டில் ஒரு புறம் கடல் சூழ்ந்து உள்ளது. இங்கே பாரா குடாவில் கடற்கரைகள் மட்டும் இன்றி கடல் வாழ் மிருகங்களும் உண்டு. கோரோங்கோசா தேசிய பூங்கா மிகுந்த புகழ் வாய்ந்தது. இங்கே புல்வெளி, அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அகன்ற அருவிகள் அமைந்துள்ளன. பெண்பா என்ற ஒரு துறைமுக நகரம் மொசாம்பிக்கில் ஒரு முக்கிய இடமாகும். இங்கே போர்த்துக்கீச கட்டட அமைப்பு மிகவும் அழகானது. மொசாம்பிக் நாட்டில் சுற்றுலா மட்டும் இன்றி தொழிற்சாலைகளும் இந்நாட்டில் அமைந்துள்ளன.
வெளி இணைப்புகள்தொகு
- அதிகாரபூர்வ அரசுத் தளம் பரணிடப்பட்டது 2014-07-19 at the வந்தவழி இயந்திரம்
- Mozambique Country Report பரணிடப்பட்டது 2014-01-19 at the வந்தவழி இயந்திரம்
- Country Profile, பிபிசி
- Niassa Reserve பரணிடப்பட்டது 2011-09-21 at the வந்தவழி இயந்திரம் Niassa National Reserve official website
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |