தென் கொரியா

(தென்கொரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும். பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.

கொரியக் குடியரசு
  • 대한민국
  • 大韓民國
  • Daehan Minguk
Centered taegeuk on a white rectangle inclusive of four black trigrams
கொடி
Centered taegeuk on a hibiscus syriacus surrounded by five stylized petals and a ribbon
சின்னம்
குறிக்கோள்: "홍익인간"(கொரிய மொழி) (நடைமுறைப்படி)[1]
"Benefit Broadly the Human World"
நாட்டுப்பண்: "애국가"(கொரிய மொழி) (சட்டப்படி)
"Patriotic Song"
Projection of Asia with South Korea in green
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சியோல்
37°33′N 126°58′E / 37.550°N 126.967°E / 37.550; 126.967
ஆட்சி மொழி(கள்)கொரிய மொழி
Official scriptsஅங்குல்
இனக் குழுகள்
(2019)[2]
சமயம்
(2015)[3][4]
மக்கள்
அரசாங்கம்Unitary presidential
குடியரசு (அரசு)
• குடியரசு தலைவர்
யூன் சுக்-யோல்
• பிரதமர்
ஹான் டக்-சூ
• சபாநாயகர்
கிம் ஜின்-பியோ
• தலைமை நீதியரசர்
கிம் மியோங்-சூ
சட்டமன்றம்தேசிய சட்டமன்றம்
விடுதலை 
ஆகத்து 15, 1945
சூலை 17, 1948
ஆகத்து 15, 1948
பரப்பு
• மொத்தம்
100,363 km2 (38,750 sq mi) (107th)
• நீர் (%)
0.3 (301 km2 / 116 mi2)
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
51,844,834[5] (28th)
• அடர்த்தி
507/km2 (1,313.1/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
Increase $2.735 டிரில்லியன்[6] (14th)
• தலைவிகிதம்
Increase $53,051[6] (28th)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
Increase $1.804 டிரில்லியன்[6] (12th)
• தலைவிகிதம்
Increase $34,994[6] (32nd)
ஜினி (2018)positive decrease 34.5[7]
மத்திமம்
மமேசு (2021)Increase 0.925[8]
அதியுயர் · 19th
நாணயம்தென் கொரிய வான் (₩) (KRW)
நேர வலயம்ஒ.அ.நே+9 (கொரியா சீர் நேரம்)
திகதி அமைப்பு
  • yyyy년 mm월 dd일
  • yyyy/mm/dd (CE)
வாகனம் செலுத்தல்right
அழைப்புக்குறி+82
ஐ.எசு.ஓ 3166 குறியீடுKR
இணையக் குறி

இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர். ஹங்குல் மொழி கிங் செஜோங் என்ற அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றிலே மிகச்சிறந்த அரசராக போற்றப்படுபவர் கிங் செஜோங்.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
வரைபடம் பெயர்a அங்குல் ஹன்ஜா மக்கள்தொகைc
விசேட நகரம் (Teugbyeolsi)a
  செயோவுல் 서울특별시 서울特別市b 10,143,645
பெருநகரங்கள் (Gwangyeogsi)a
  புசன் 부산광역시 釜山廣域市 3,527,635
  டேகு 대구광역시 大邱廣域市 2,501,588
  இஞ்சியோன் 인천광역시 仁川廣域市 2,879,782
  குவாங்யு 광주광역시 光州廣域市 1,472,910
  டேஜியோன் 대전광역시 大田廣域市 1,532,811
  அல்சன் 울산광역시 蔚山廣域市 1,156,480
விசேட சுய ஆட்சி நகரம் (Teugbyeol-jachisi)a
  செஜோங் 세종특별자치시 世宗特別自治市 122,153
மாகாணங்கள் (Do)a
  கியொங்கி 경기도 京畿道 12,234,630
  கங்வொன் 강원도 江原道 1,542,263
  வட சுங்சியோங் 충청북도 忠淸北道 1,572,732
  தென் சுங்சியோங் 충청남도 忠淸南道 2,047,631
  வட ஜெவொல்லா 전라북도 全羅北道 1,872,965
  தென் ஜெவொல்லா 전라남도 全羅南道 1,907,172
  வட கியொங்சாங் 경상북도 慶尙北道 2,699,440
  தென் கியொங்சாங் 경상남도 慶尙南道 3,333,820
விசேட சுய ஆட்சி மாகாணம் (Teugbyeoljachi-do)a
  ஜெஜு 제주특별자치도 濟州特別自治道 593,806

a Revised Romanisation; b See Names of Seoul; c As of 2013 year-end.


வரலாறு

தொகு

பிரிவுக்கு முன்

தொகு

கொரிய புராணங்களின் படி, கி.மு 2333 ல் இருந்து கொரியா வரலாறு தொடங்குகிறது. அதாவது 'Joseon' 'Dangun' ஆல் உருவாக்கப்பட்ட காலகட்டதில் இருந்து தொடங்குகிறது. (மற்றொரு வம்சத்தின் குழப்பத்தைத் தடுக்க "Gojoseon" எனவும் அழைக்கப்படுகிறது. Go என்றால் 'முன் அல்லது பழைய' என்று பொருள்).

வட கொரிய தீபகற்பம் மற்றும் சில மஞ்சூரியா பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட வரை Gojoseon விரிவடைந்தது. கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் Gija Joseon நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது மற்றும் அதன் இருப்பு மற்றும் பங்கு நவீன சகாப்தத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாகும்.

2 வது நூற்றாண்டின் இறுதியில், Wiman Joseon, ஹான் சீனாவிடம் வீழ்ச்சி கண்டது. பின்னர் கி.மு. 108ல் ஹான் வம்சம், Wiman Joseon ஐ தோற்கடிது, ஹான் நான்கு Commanderies ஐ அமைத்தார். அங்கு அடுத்த நூற்றாண்டில் கொரிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க பகுதிகள், ஹான் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. Lelang படைத் தலைமையகம், Goguryeo வால் கைப்பற்றப்படும் வரை சுமார் 400 ஆண்டுகள் அது தொடர்ந்தன. சீனாவின் ஹானுடனான பல மோதல்களுக்கு பிறகு, Gojoseon மூன்று கொரிய ராஜ்ஜியங்களாக (Proto–Three Kingdoms of Korea period) சிதைந்தது.

கி.பி. இன் ஆரம்ப நூற்றாண்டுகளில், Buyeo, Oko, Dongye, மற்றும் Samhan ஆகியவைகளின் கூட்டமைப்பு வளைகுடா மற்றும் தெற்கு மஞ்சூரியா பகுதிகளை ஆக்கிரமித்தது. பல்வேறு மாநிலங்களில், Goguryeo, Baekje, மற்றும் சில்லா மாநிலங்கள் வளைகுடா பகுதிகளை கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்தது. இவைகளே மூன்று கொரிய ராஜ்ஜியங்கள் என்று அழைக்கப்பட்டன. 676 இல் சில்லா மூலம் மூன்று ராஜ்ஜியங்கள் ஒருங்கிணைந்தது, இது வட தென் அரசுகளின் காலகட்டத்திற்கு வழிவகுத்தது, அதே சமயத்தில் Balhae, Goguryeo வின் மேற்குப் பகுதிகளில் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொண்டது.

ஒன்றுபட்ட சில்லா வில், கவிதை மற்றும் கலைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. புத்த கலாச்சாரம் செழித்தோங்கியது. கொரியா மற்றும் சீனா இடையேயான உறவு இந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது. எனினும், ஒருங்கிணைந்த சில்லா உள்நாட்டு கலவரத்தால் பலவீனமடைந்து. பின் 935 இல் தனது வட பகுதி அண்டை நாடாடன Balhae விடம் சரணடைந்தனர் . Goguryeo ஒரு வாரிசு மாநிலமாக உருவாக்கப்பட்டது. Balhae இன் மிக உயர்வான காலகட்டதில், மஞ்சூரியா மற்றும் ரஷியன் தூர கிழக்கு பகுதிகளில் பெரும்பாலானவை இதன் கட்டுப்பாட்டில் இருந்தது. Sunjong, பேரரசர் யுங் ஹுய் தான் Joseon வம்சம் மற்றும் கொரிய பேரரசின் கடைசி பேரரசர் ஆவார்.

936 இல் வளைகுடாபகுதிகளை Goryeo வின் அரசர் Taejo ஒருங்கிணைத்தார். சில்லா போலவே Goryeo வும் மிகவும் கலாச்சாரம் மிக்க அரசாக இருந்தது மற்றும் உலகின் பழமையான அசையும் உலோக வகை அச்சகம் பயன்படுத்தி, 1377 ல் Jikji உருவாக்கப்பட்டது. பிறகு 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய படையெடுப்புகள் Goryeo வை பெரிதும் வலுவிழக்கச்செய்தது. போர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. போருக்குப்பின் Goryeo வின் ஆட்சி தொடர்ந்தது என்றாலும், மங்கோலியர்களுக்கு கப்பம் கட்டும் அரசாகவே இருந்தது. மங்கோலியன் பேரரசு சரிந்த பின், கடுமையான அரசியல் பூசல் மற்றும் General Yi Seong-gye இன் கிளர்ச்சியினாலும், Goryeo வம்சத்தின் ஆட்சியை 1392 ல் Joseon வம்சம் கைப்பற்றியது.

அரசர் Taejo, Gojoseon ஐ குறிக்கும் வகையில் "Joseon" ஐ கொரியாவின் புதிய பெயராக அறிவித்தார், மற்றும் Hanseong ஐ (Seoul இன் பழைய பெயர்) தலைநகராக அறிவித்தார். Joseon வம்சத்தின் ஆட்சியில் முதல் 200 ஆண்டுகள் அமைதி நிலவியது. 15 ஆம் நூற்றாண்டில், சிறந்த அரசர் Sejong, Hangul ஐ தோற்றுவிதார். மேலும் அக்காலகட்டதில், நாட்டில் மெய்விளக்கியத்தின் (Confucianism) செல்வாக்கு எழுச்சி கண்டது. 1592 மற்றும் 1598 க்கு இடையில், ஜப்பான் கொரியா மீது படையெடுத்தது. தலைவன் Toyotomi Hideyoshi ஜப்பானிய படைகளை வழிநடத்தினார், ஆனால் அவரது படைகள், கொரிய படைகளால்(மிகவும் குறிப்பாக Joseon கடற்படையால்) தடுத்து நிறுத்தப்பட்டன. அப்படைகள், கொரிய பொதுமக்கள் மற்றும் சீன மிங் வம்சம் உருவாக்கிய மிகச் சரியான இராணுவம் ஆகும்.தொடர் வெற்றிகரமான போர்களின் மூலம், ஜப்பானிய படைகள் இறுதியில் திரும்பப்பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது, மற்றும் அனைத்து கட்சிகள் இடையேயான தொடர்புகள் சீரானது. இந்த போர் கடற் படை தளபதி Yi Sun-sin மற்றும் அவரது புகழ்பெற்ற "ஆமை கப்பல் (turtle ship)" எழுச்சியைக் கண்டது. 1620s மற்றும் 1630s இல், Joseon, Manchu வின் படையெடுத்துகலளால் அவதிப்பட்டது.

பல தொடர் மஞ்சூரியா வுக்கு எதிரான போர்களுக்குப் பிறகு, Joseon இல் கிட்டத்தட்ட 200 ஆண்டு காலம் அமைதி நிலவியது. குறிப்பாக Joseon வம்சத்தின் அரசர் Yeongjo மற்றும் அரசர் Jeongjo வின் ஆட்சி காலம், ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட வழிவகுத்தது.

எனினும், Joseon வம்சம் பிந்தைய ஆண்டுகளில், வெளி உலகில் இருந்து தனிமை படுத்திக்கொண்டது. 19 ம் நூற்றாண்டில், கொரியாவின் தனிமைவாதிகள் கொள்கை, "துறவி இராச்சியம்(Hermit Kingdom)" ஏன்று பெயர் பெற்றது. Joseon வம்சம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தன்னை பாதுகாக்க முயற்சி செய்தது, ஆனால் இறுதியில் வர்த்தகத்தை திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. முதல் சீன-ஜப்பனீஸ் போர் மற்றும் ரஷ்ய-ஜப்பனீஸ் போருக்குப் பின்னர், கொரியாவை ஜப்பான் (1910-45) ஆக்கிரமித்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ஜப்பான் முறையே சோவியத் மற்றும் அமெரிக்க படைகளிடம் சரணடைந்து, பிறகு, கொரியாவின் வடக்கு பகுதியை சோவியத் மற்றும் தெற்கு பகுதியை அமெரிக்க படைகளும் ஆக்கிரமித்துக்கொண்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்

தொகு

1943 இல் Cairo பிரகடனத்தில் ஓர் ஒன்றுபட்ட கொரியா அமைவதற்கான ஆரம்ப திட்டம் இருந்தாலும், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையேயான பனிப்போர் காரணமாக, இறுதியில் 1948 ல் கொரியா இரண்டு தனி அரசாங்கங்களாக உருவாயின. அவைகள் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகும்.

தென் கொரியாவில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக, அமெரிக்காவின் ஆதரவுடன், கம்யூனிச எதிர்ப்பாளரான Syngman Rhee, புதிதாக அறிவிக்கப்பட்ட குடியரசின் முதல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். வட கொரியாவில், முன்னாள் ஜப்பனீஸ் கொரில்லா எதிர்ப்பாளுரும் மற்றும் கம்யூனிச ஆர்வலருமான, Kim Il-sung, செப்டம்பர் மாதத்தில், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு பிரதமராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் மாதம், Kim Il-sung இன் அரசு தான் இரண்டு பாகங்கள் மீதும் அதிகாரம் உள்ள அரசு என்று சோவியத் ஒன்றியம் அறிவித்தது. Syngman Rhee இன் அரசை, சட்டப்பூர்வமான அரசாங்கம் என்று ஐ.நா அறிவித்தது. இரு தலைவர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொரியாவை ஒருங்கிணைக்க முற்பட்டனர். தென் கொரியாவின் இராணுவ ஆதரவு கோரிக்கையை, அமெரிக்கா மறுத்தது. அதே சமயத்தில், வட கொரியாவின் இராணுவத்தை சோவியத் ஒன்றியம் வலுப்படுத்தியது.

ஜூன் 25, 1950-ல் வட கொரியா, தென் கொரியா மீது படையெடுத்தது. அந்த கொரிய போர் தான் முதல் பெரிய மோதல். அப்போர், 1953 வரை தொடர்ந்தது. அச்சமயத்தில், சோவியத் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) கூட்டத்தை புறக்கணித்தது. அது ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்ய அனுமதித்தது.வட கொரியாவின் சக்தி வாய்ந்த படைகள், கொரியாவை ஒன்றுபடுத்தி விடுவார்கள் என்பது தெரிந்ததும், ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்தது. சோவியத் யூனியன் மற்றும் சீனா வட கொரியாவை ஆதரித்தது. வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் கொரிய பொதுமக்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டனர். போர் இறுதியில் இக்கட்டான நிலையை அடைந்து. 1953 ல் போர் நிறுத்த ஒப்பந்ததில் ஒருபோதும் தென் கொரியா கையெழுத்திட்டதில்லை. அதன் பிறகு , அசல் எல்லைக்கோடடின் அருகே படைகளகற்றிய பகுதியில் இருந்து வளைகுடாநாடு பிரிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததால், தொழில்நுட்பரீதியாக அங்கு இன்னும் போர் நிறுத்தம் அமலில் இல்லை. கொரியப் போரின் போது, சுமார் 12 இலட்ச கொரிய மக்கள் இறந்தனர்.

Syngman Rhee இன் சர்வாதிகார மற்றும் ஊழல் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து, 1960 ஆம் ஆண்டில், ஒரு மாணவர் எழுச்சி ("ஏப்ரல் 19 புரட்சி") போராட்டம் நடத்தியது. அது அவரை ராஜினாமா செய்ய செய்தது. Park Chung-hee அரசியலில் ஒரு ஸ்திரமற்ற பலவீனமான நிலைமை நிலவிய நேரத்தில், மே 16 இல் ஆட்சியை கவிழ்திவிட்டு, ஜனாதிபதியாக பொறுப்பெற்றுக்கொண்டார். அவர் 1979 இல் படுகொலை செய்யப்படும் வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். Park Chung-hee ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விரைவான பொருளாதார வளர்ச்சியை அரசியல் அடக்குமுறையை செயல்படுத்தி, பொருளாதாரத்தை ஏற்றதில் கொண்டு சென்றார். ஒரு இரக்கமற்ற இராணுவ சர்வாதிகாரி என Park விமர்சிக்கப்பட்டார். அவர் 1972 ல், அவரின் ஆட்சி காலத்தை நீட்டிக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கினார். அது அவருக்கு விரிவான அதிகாரங்களை கொண்ட மற்றும் வரம்பற்ற ஆறாண்டு (கிட்டத்தட்ட சர்வாதிகார) ஜனாதிபதி பதவியை தக்க வைத்து கொள்ள வழிவகுத்தது. எனினும், கொரிய பொருளாதாரம் Park காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றது மற்றும் அரசின் நாடு தழுவிய அதிவேக அமைப்பு, சியோல் சுரங்கப்பாதை அமைப்பு உருவாக்கப்பட்டது, மற்றும் அவருடைய 17 வருட ஆட்சிக்காலம் தென் கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

உணவுமுறை

தொகு

கொரிய உணவுமுறையானது அரிசி, னூடுல்ஸ், மாமிசம், மீன், காய்கறிகள் முதலியவற்றை அடிப்படையாக கொண்டது.[10] கொரிய பாரம்பரிய உணவில் அரிசிச் சதாத்துடன் எத்தனை வகையான பக்க உணவுகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொறு உணவு முறையின் போதும் வெவ்வேறு விதமான பக்க உணவுகள் இடம்பெறும். கிம்சி (kimchi), இது முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை காரம் சேர்த்து சில நாட்கள் நொதிக்க வைத்து பரிமாறப்படும் ஒரு பாரம்பரிய உணவு. கொரிய உணவுகளில் வழக்கமாக சுவையூட்ட எள் எண்ணெய், நெரிகட்டிய சோயா பேஸ்ட், சோயா சாஸ், உப்பு, பூண்டு, இஞ்சி, மற்றும் ஒரு மிளகாய் பேஸ்ட் பயன்படுத்தபடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. (PDF) A New Way of Seeing Country Social Responsibility. Alexandru Ioan Cuza University. p. 6. http://www.fssp.uaic.ro/argumentum/Numarul%2010%20%282%29/Articol%20Cozmiuc.pdf. பார்த்த நாள்: September 21, 2013. 
  2. "Foreign population in Korea tops 2.5 million". koreatimes. 24 February 2020.
  3. Kim, Han-soo; Shon, Jin-seok (20 December 2016). Chosun Ilbo. http://news.chosun.com/site/data/html_dir/2016/12/20/2016122000155.html. 
  4. Quinn, Joseph Peter (2019). "South Korea". In Demy, Timothy J.; Shaw, Jeffrey M. (eds.). Religion and Contemporary Politics: A Global Encyclopedia. ABC-CLIO. p. 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4408-3933-7. பார்க்கப்பட்ட நாள் 3 June 2020.
  5. {{{2}}} உலகத் தரவுநூலில் இருந்து
  6. 6.0 6.1 6.2 6.3 "World Economic Outlook Database April 2022". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
  7. "Inequality – Income inequality – OECD Data".. Organisation for Economic Co-operation and Development. 
  8. "Human Development Report 2021/2022" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  9. [1] பரணிடப்பட்டது 2011-03-03 at the வந்தவழி இயந்திரம், Ministry of Security and Public Administration
  10. David Clive Price; Masano Kawana (2002-11-15). Food of Korea. Periplus Editions. pp. 24–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-593-026-4.
  1. 19.7% are சீர்திருத்தத் திருச்சபை, 7.9% are கத்தோலிக்க திருச்சபை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_கொரியா&oldid=3961112" இலிருந்து மீள்விக்கப்பட்டது