நிலநடுக்கப் பதிவுக் கருவி

நிலநடுக்கப் பதிவுக் கருவி (Seismometer, சீஸ்மோகிராப்) பூமியின் நகர்வுகளை அளக்க பயன்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள், எரிமலை வெடிப்புகளாளும் மற்ற அதிர்வு மூலங்களாலும் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவற்றை அளக்க நிலநடுக்கப் பதிவுக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் அதிர்வலைப் பதிவுகள் நிலநடுக்க ஆய்வாளர்கள் பூமியின் உள்பகுதியை வரைபடமாக்கவும், மற்றும் இந்த வெவ்வேறு மூலங்களினை கண்டறிந்து அளவிடவும் பயன்படுகிறது.

பழங்கால சீன நிலநடுக்கப் பதிவுக் கருவியின் நகல்

நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ரிக்டர் அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. இதன் அலகு 0 முதல் 9 ரிக்டர் அளவை வரை ஆகும். ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவிற்கு மேல் குறிக்கப்படும் நிலநடுக்கங்கள் ஆபத்தானவை[1].

மேற்கோள்கள்

தொகு
  1. சீஸ்மோகிராப்.