எரிமலை (Volcano) என்பது புவி போன்ற திண்மக் கோள்களின்உட்புறத்திலுள்ள பாரைக்குழம்பு அரையிலி இருந்து சூடான அனற்குழம்பு, சாம்பல், வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துளை அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக அனற்குழம்பை வெளியுமிழும் நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை தொடர்புள்ளது. "வால்கனோ" (volcano) என்ற சொல் இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக் கடவுளான வல்கன் (தொன்மம்) என்னும் பெயரிலிருந்து பெற்றதாகும்.[1]

அலாஸ்காவின் அலூஷியன் தீவுகளில் உள்ள கிளிவலாந்ந்து எரிமலை. பன்னாட்டு விண்வெளி மையத்தால் படம்பிடிக்கப்பட்டுள்ளது

சுழல்வடிவ எரிமலையின் குறுக்குவெட்டு தோற்றம் (நெடுகிடை அளவுகோல் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது) :
1. பெரிய மாக்மா அறை
2. அடிநிலப்பாறை
3. கால்வாய் (குழாய்)
4. அடித்தளம்
5. சில்
6. அகழி
7. எரிமலையால் உமிழப்படும் சாம்பல் அடுக்குகள்
[8.]() பக்கவாட்டுப் பகுதி
9. எரிமலையால் உமிழப்படும் எரிமலைக்குழம்பு அடுக்குகள்
10. கழுத்துப்பகுதி
11. சுற்றுப்புறக் கூம்பு
12. எரிமலைக்குழம்பு ஓட்டம்
13. வெளியேறும் பகுதி
14. எரிமலைவாய்
15. சாம்பல் மேகம்

பொதுவாக கண்டத்திட்டு அடுக்குகள் விரிகின்ற அல்லது குவிகின்ற இடங்களில் எரிமலைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,கடல் நடுவண் முகடு. அட்லாண்டிக் நடுவண் முகடு, கண்டத்திட்டு அடுக்குகள் விரிவதால் ஏற்பட்ட எரிமலைகளுக்கு சான்றாக உள்ளது; பசிபிக் நெருப்பு வளையம்|] கண்டத்திட்டு அடுக்குகள் குவிவதால் உருவாகியதற்கான சான்றாக உள்ளது. முரண்பாடாக, கண்டத்திட்டு அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று படர்ந்திருக்கும் நிலையில் வழக்கமாக எரிமலைகள் உருவாவதில்லை. புவியோடு நீள்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் எரிமலைகள் உருவாகின்றன. இவை வெப்பப் பகுதி சாராத கண்டத்திட்டிடையிலான எரிமலை நிகழ்வுகள் எனப்படுகின்றன. இவை ஆப்பிரிக்கப் பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ள "வெல்ஸ்-கிரே கிளியர்வாட்டர் எரிமலைப் பகுதி", வட அமெரிக்காவில் உள்ள ரியோ பெரும்பிளவிலும் ஐரோப்பாவில் ஈஃபிள் எரிமலைகளிலும் உள்ள ரைன் கிரேபன் ஆகிய பகுதிகளைப் போன்றவையாகும்.

வெப்பப்பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உருவாகின்றன. இத்தகைய வெப்பப்பகுதிகள் எனப்படுபவை, உதாரணத்திற்கு ஹவாயில் உள்ளவை, அடுக்கு எல்லையின் அப்பாலிருந்து உருவாகக்கூடியவை. வெப்பப்பகுதி எரிமலைகள் சூரியமண்டலத்தில் உள்ள அனைத்து வான்பொருள்களிலும் காணப்படுகின்றன, குறிப்பாக பாறைக் கோள்களிலும் நிலவுகளிலும் இது காணப்படுகிறது.

கண்டத்திட்டு அடுக்குகளும் வெப்பப் பகுதிகளும்

தொகு
 
கடல் பரவல் முகடுகளையும், அண்மைக்காலப் புவி மேற்பரப்பு எரிமலைகளையும் வரைபடம் காட்டுகிறது
 
பசிபிக்கில் ஹவாயிலுள்ள பெரிய தீவில் எரிமலைக்குழம்பு நுழைகிறது
 
இந்தோனேசியா - லோம்பக்:மவுண்ட் ரிஞ்சனி - 1994 ஆம் ஆண்டில் வெடித்தது

விரிவுறும் கண்டத்திட்டு எல்லைகள்

தொகு

கடல் நடுவண் முகடுகளில் இரண்டு கண்டதிட்டு அடுக்குகள் விரிவுறும்போது, வெப்பமான உருகிய பாறையால் ஏற்படுகின்ற புதிய கடல் மேல்ஓடு மெதுவாக குளிர்ந்து கெட்டிப்படுகிறது. கண்டத்திட்டு அடுக்குகள் இழுப்பால் கடல் நடுவண் முகடுகளில் உள்ள மேல்அடுக்கு மிகவும் மெலிதாக இருக்கிறது. மேல்அடுக்கு மெலிதாக இருக்கும் காரணமாக, வெளிப்படும் அழுத்தம் வெப்பநிலை மாறாத நீட்டிப்பிற்கு வழிவகுக்கிறது, புவியின் அகட்டுக்கு மேலே அமைந்த மென்திரி அடுக்கின் ஒரு பகுதி உருகுவதும் மேலெழுவதும் கூட எரிமலை நிகழ்விற்கும் புதிய கடல் மேல்அடுக்கு உருவாவதற்கும் காரணமாகிறது.

பெரும்பாலான விரிவுறும் கண்டத்திட்டு எல்லைகள் கடலின் அடிப்பகுதியில் இருக்கின்றன. எனவே பெரும்பாலான இத்தகைய எரிமலை நிகழ்வுகளும் கடலுக்கு கீழ்ப்புறம், புதிய கடல்தளத்தை உருவாக்குவதாகவே அமைகின்றன. அதிவெப்ப துளைகள் அல்லது ஆழ்கடல் துளைகள் என்பவை இவ்வகையான எரிமலை நிகழ்விற்கான எடுத்துகாட்டாகும். கடல் நடுவண் முகடு கடல்மட்டத்திற்கு மேல்பகுதி வரை எழும்போது ல் எரிமலைத் தீவுகள் உருவாகின்றன. எடுத்துகாட்டு: ஐஸ்லாந்து.

குவியும் கண்டத்திட்டு எல்லைகள்

தொகு

ஒன்றின்மேல் ஒன்றுள்ள அடுக்குகள் என்பவை இரண்டு அடுக்குகள், வழக்கமாக கடல் அடுக்கு மற்றும் கண்டத்துக்குரிய அடுக்குகள் மோதிக்கொள்ளும் இடங்களாகும். இந்த நிகழ்வில், கடல் அடுக்கு ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்படுவது அல்லது கண்டத்துக்குரிய அடுக்கிற்கு கீழே ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதால் கடற்கரைக்கு அருகாமையில் ஆழ்கடல் அகழி ஒன்றை உருவாக்கிவிடுகின்றன.

ஒன்றின்மேல் ஒன்றுள்ள அடுக்கால் வெளியேற்றப்படும் தண்ணீர் மேல்பகுதியில் இருக்கும் மெல்லிய குறுக்கு அடுக்கின் உருகும் வெப்பநிலையைக் குறைத்து கற்குழம்புகளை (மாக்மா) உருவாக்குகிறது.

இந்த கற்குழம்பானது அதனுடைய உச்ச அளவு சிலிக்கான் காரணமாக தொடர்ந்து மிகவும் பி்சுபிசுப்பாகவே இருப்பதால் மேல்பகுதியை எட்டாமலும் அடிப்பகுதியை குளிர்விக்காமலும் இருந்துவிடுகிறது. இது மேல்பகுதியை எட்டும்போது எரிமலையாக உருவாக்கப்படுகிறது.

இந்தவகையான எரிமலைக்கு எட்னா எரிமலை மற்றும் பசிபிக் நெருப்பு வளையத்தில் உள்ள எரிமலைகள் ஏற்ற உதாரணங்களாகும்.

வெப்பப் பகுதிகள்

தொகு

வழக்கமாக வெப்பப் பகுதிகள் கண்டத்திட்டு அடுக்குகளில் காணப்படுவதில்லை, ஆனால், பூமியின் இதர பகுதிகளைவிட மெலிதாகும் விதமாக மேல்அடுக்குப் பகுதியை எட்டும்வரை பூமியின் மெல்லிய அடுக்கினுடைய வெப்பச் சலனம் உருவாக்குகின்ற ஒரு வெப்பமான தூண் மேல்நோக்கி வரும் இடத்தில் காணப்படுகிறது.

மேல்நோக்கி வரும் பாறைகள் மேல்ஓடு உருகுவதற்கு காரணமாக இருப்பதோடு மாக்மா வெளியேறும் துவாரங்களையும் ஏற்படுத்துகின்றன.

டெக்டோனிக் அடுக்குகள் நகரும்போது மேல்நோக்கி வரும் பாறைகள் அதே இடத்தில் இருக்கும் நிலையில், அதன்பிறகு ஒவ்வொரு எரிமலையும் அப்படியே இருந்துவிடுகிறது, பின்னர் வெப்பப் பகுதிக்கு மேலாக அந்த அடுக்கு நகர நகர புதிய எரிமலை உருவாகிறது.

இவ் வகையிலேயே ஹவாய் தீவுகள் உருவானதாக கருதப்படுகிறது, அதேபோல் தற்போது யெல்லோஸ்டோன் கால்டிராவுடன் உள்ள பாம்பு ஆற்றுப்படுக்கை வெப்பப் பகுதிக்கு மேல்புறமாக உள்ள தென் அமெரிக்க அடுக்கின் பகுதியாக உள்ளது.

எரிமலையின் அம்சங்கள்

தொகு

எரிமலைகள் பொதுவாக கூம்புவடிவமுள்ள மலையாகவும், அதனுடைய சிகரத்திலுள்ள எரிமலை வாயிலிலிருந்து எரிமலைக்குழம்பு மற்றும் நச்சு வாயுக்களை உமிழ்வதாகவும் அறியப்படுகிறது. பலவகை எரிமலைகளுள் ஒன்றினை இது விவரிக்கிறது, எரிமலையின் அம்சங்கள் இன்னும் மிகச் சிக்கலானதாக இருக்கிறது. எரிமலைகளினுடைய அமைப்பும் செயல்பாடும் பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கின்றன. சில எரிமலைகள் சிகர எரிமலை வாயிலைவிட எரிமலைக்குழம்பு குவிமாடத்தினால் உருவாக்கப்பட்ட படுக்கைவடிவ உச்சியைக் கொண்டதாக அமைந்துள்ளன, அதேசமயம் மற்றவை பரந்த பீடபூமி போன்ற நிலவெளி அம்சங்களைக் கொண்டுள்ளவையாக இருக்கின்றன. எரிமலை பொருட்களை (எரிமலைக்குழம்பு, இது மேல்தளத்தையும், சாம்பலையும் விட்டு விலகிவிடுவதால் மாக்மா எனப்படுகிறது) மற்றும் வாயுக்கள் (முக்கியமாக நீராவி மற்றும் காந்தப்புல வாயுக்கள்) வெளியிடுகின்ற துளைகள் நிலவடிமெங்கும் காணப்படுகின்றன. இத்தகைய பல துளைகள், ஹவாயின் கேலாயினுடைய பக்கவாட்டில் உள்ள [[பூயூ|புவார்ப்புரு:ஒகினாயுவார்ப்புரு:ஒகினாஓவார்ப்புரு:ஒகினாஒ]] போன்ற சிறிய கூம்புகள் உருவாவதற்கு வழிச் செய்கின்றன.

கிரையோ எரிமலைகள் (அல்லது ஐஸ் எரிமலைகள்), குறி்ப்பாக ஜூபிடர் சனி மற்றும் நெப்டியூன் கிரகங்களின் நிலவுகளில் உள்ளவை; மற்றும் புதைசேற்று எரிமலைகள் ஆகியவை பிற எரிமலை வகைகளாகும், இவற்றின் உருவாக்கம் தெரியவராத காந்தப்புல செயல்பாட்டோடு சமப்ந்தப்பட்டவையாகவே உள்ளன. புதைசேற்று எரிமலை உண்மையில் நெருப்புள்ள எரிமலையின் துவாரமாக இருப்பது தவிர்த்து, உமிழும் புதைசேற்று எரிமலைகள் நெருப்புள்ள ழ வெப்பநிலைகளைவிட குறைவானதாகவே உள்ளன.

 
சௌபிரீடர், ஒரு கவச எரிமலையான இதன் பொருள் "அகன்ற கவசம்" என்பதாகும்.

பிளவுற்ற துளைகள்

தொகு

எரிமலைக்குரிய பிளவுற்ற துளைகள் என்பது தட்டையான, நேர்க்கோட்டு வெடிப்புகளாகும் இவற்றின்மூலம் எரிமலைக்குழம்பு வெளியேறுகிறது

கவச எரிமலைகள்

தொகு

கவச எரிமலைகள், பரந்த கவசம் போன்ற அம்சங்களுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள இவை, துளையிலிருந்து வெகு தூரத்திற்கு ஓடக்கூடிய குறைவான-பிசுபிசுப்புத் தன்மையுள்ள எரிமலைக்குழம்பினால் உருவாகின்றன. ஆனால் பொதுவாக இவை பயங்கரமான முறையில் வெடிப்பதில்லை. குறைவான பிசுபிசுப்புத் தன்மையுள்ள சிலிக்கானை குறைவான அளவில் பெற்றுள்ளதால், கவச எரிமலைகள் கண்ட அமைப்புளைவிட கடல் அமைப்புகளில் பெரும்பாலும் பரவலாக காணப்படுகின்றன. ஹவாய் எரிமலை தொடர் என்பது கவச கூம்புகளின் வரிசை என்பதோடு அவை ஐசுலாந்தில் பரவலாக இருக்கின்றன.

எரிமலைக்குழம்பு குவிமாடங்கள்

தொகு

எரிமலைக்குழம்பு குவிமாடங்கள் அதிக பிசுபிசுப்புள்ள எரிமலைக்குழம்பு மெதுவாக உமிழப்படுவதால் உருவாகின்றன. இவை சிலநேரங்களில் முந்தைய எரிமலை உமிழ்வினால் உருவான எரிமலை வாயிளுக்குள்ளாக உருவாகின்றன (மவுண்ட் செயிண்ட் ஹெலனில் உள்ளதுபோல்), ஆனால் லாஸன் சிகரத்தில் உள்ளதுபோல் தனி்த்தும் உருவாகக்கூடியதாக இருக்கிறது. ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டுள்ள எரிமலைகளைப்போல், அவை மோசமான, எரிமலை வெடிப்பை உண்டாக்கக்கூடியவை, ஆனால் சாதாரணமாக அவற்றின் எரிமலைக்குழம்புகள் அவை உருவான துளையிலிருந்து வெகுதூரத்திற்கு ஓடுவதில்லை.

எரிமலைக் கூம்புகள் (தழல் கூம்புகள்)

தொகு
 
உடாஹ், வியோ அருகில் மாகாண நெடுஞ்சாலை 18 க்கு அருகாமையில் ஹெலோசின் சிண்டர் கூம்பு எரிமலை அமைந்துள்ளது.

எரிமலைக் கூம்புகள் அல்லது தழல் கூம்புகள் எனப்படுபவை, துளையைச் சுற்றி உருவாகியுள்ள ஸ்கோரியா மற்றும் பைரோகிளாஸ்டிக்ஸ் (இவை இரண்டும் எரிமலை வகைகள் என்பதால் தழல்களை ஒத்திருக்கின்றன) ஆகியவற்றின் மிகச்சிறிய துண்டுகள் உமிழப்படுவதன் காரணமாக உருவாகின்றன. 30 முதல் 400 மீட்டர்கள் வரையிலான கூம்பு வடிவ மலையை உருவாக்கக்கூடிய இவை குறுகிய காலமே நீடிக்கக்கூடியவை. பெரும்பாலான தழல் கூம்புகள் ஒரேயொரு முறை மட்டுமே உமிழும். தழல் கூம்புகள் பெரிய எரிமலைகளில் பக்கவாட்டு துவாரங்களாக உருவாகலாம் அல்லது அவற்றின் மீதே உருவாகலாம். மெக்சிகோவிலுள்ள பரீகுட்டீன் மற்றும் அரிஸோனாவிலுள்ள சன்செட் கிரேட்டர் ஆகியவை தழல் கூம்புகளுக்கான உதாரணங்களாகும்.

நியூ மெக்சிகோவிலுள்ள, கயா டெல் ரியோ 60 தழல் கூம்புகளுக்கும் அதிகமாக உள்ள எரிமலைப் பகுதியாகும்.

 
மயோன் எரிமலை ஒரு சுழல்வடிவ எரிமலை

சுழல்வடிவ எரிமலைகள் (கலப்பு எரிமலைகள்)

தொகு

சுழல்வடிவ எரிமலைகள் அல்லது கலப்பு எரிமலைகள் என்பது எரிமலைக்குழம்பு வெளியேற்றமும், மாற்று அடுக்குகளில் உள்ள பிற உமிழ்வுகளும் கலந்த உயரமான கூம்புவடிவ மலைகளாகும், இதற்கு ஸ்ட்ராட்டா(strata) என்று பெயரிடப்பட்டுள்ளது. கலப்பு எரிமலைகள் என்றும் அறியப்படும் சுழல்வடிவ எரிமலைகள், வெவ்வேறுவிதமான உமிழ்வுகளின்போது பல்வேறு அமைப்புகளிலிருந்து உருவாகின்றன. சுழல்வடிவ/கலப்பு எரிமலைகள் தழல்கள், சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்பினால் உருவானவை. தழல்களும் சாம்பலும் உச்சியில் ஒன்றின்மேல் ஒன்று குவிகின்றன, அவை குளிர்ந்து கெட்டிப்படுகின்ற இடத்தில், எரிமலைக்குழம்பு சாம்பலுக்கு மேல் வழிகிறது, பின்னர் இந்த நிகழ்முறை மீண்டும் தொடங்குகிறது. ஜப்பானிலுள்ள மவுண்ட்.ஃபுயி, ஃபிலடெல்பியாவிலுள்ள மவுண்ட் மயன், மற்றும் இத்தாலியிலுள்ள மவுண்ட் வெசுவியஸ் மற்றும் ஸ்ட்ரோம்போலி ஆகியவை முதல்தர உதாரணங்களாகும்.

பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில், சுழல்வடிவ எரிமலைகளால் ஏற்பட்ட உமிழ்வுகள் நாகரிகங்களிடத்தில் பேரளவு அபாயத்தை விளைவித்துள்ளன.[சான்று தேவை]

 
டோபா ஏரி எரிமலை பத்து கிலோமீட்டர் நீளத்திற்கு கால்டிராவை உருவாக்கியுள்ளது

ராட்சத எரிமலை என்பது பெரிய அளவிலான கால்டிராவைக் கொண்டிருப்பவை என்பதோடு, பெரிய அளவில், சில நேரங்களில் கண்டங்கள் அளவுக்கு சூறையாடக்கூடிய திறனுள்ளவை.

மிகப்பெரும் அளவில் சல்ஃபர் மற்றும் சாம்பலை உமிழக்கூடியது என்பதால் இதுபோன்ற உமிழ்வுகள் அதன்பிறகு உலக அளவிலான வெப்பநிலையை தீவிரமாக குளிரச்செய்யும் திறனுள்ளவை. இவை மிக அபாயகரமான எரிமலை வகைகளாகும். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள யெல்லோஸ்டோன் கால்டிரா, நியூ மெக்சிகோவிலுள்ள வால்ஸ் கால்டிரா (இரண்டும் மேற்கத்திய ஐக்கிய நாடுகள்), நியூசிலாந்தில் உள்ள டாபோ ஏரி மற்றும் இந்தோனேசியா சுமத்ராவில் உள்ள டோபா ஏரி ஆகியவை இதற்கான உதாரணங்களாகும். சூப்பர் எரிமலைகள் எண்ணிலடங்கா பகுதிகளை ஆக்கிரமித்துவிடுவதால் பல நூற்றாண்டுகள் கழித்து அவற்றை அடையாளம் காண்பது சிரமம். பெரிய அளவிலான நெருப்புப் பிரதேசங்களும் சூப்பர் எரிமலைகளாக கருதப்படுகின்றன, ஏனென்றால் இவை பெருமளவிற்கு கருங்கல் குழம்பை வெளியிடக்கூடியவையாக இருக்கன்றன, ஆனால் இவை வெடிக்கக்கூடியவையாக இருப்பதில்லை.

 
பெருத்த எரிமலைக்குழம்பு (NOAA)

ஆழ்கடல் எரிமலைகள்

தொகு

ஆழ்கடல் எரிமலைகள் கடல்தளத்தில் உள்ள பொதுவான அம்சங்களாகும். சில உமிழ்கின்றவையாக, ஆழமில்லாத தண்ணீரி்ல் கடல்மட்டத்திற்கு வெளியே நீராவியையும், பாறைத் துகள்களையும் வெளியிட்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளும். அதிக ஆழத்தில் இருக்கின்ற மற்ற பலவற்றிற்கும் மேலுள்ள தண்ணீரின் எடை காரணமாக நீராவி மற்றும் வாயுக்கள் வெடித்துச் சிதறுவது தடுக்கப்படுகிறது, இருப்பினும் அவற்றின் எரிமலை வாயுக்கள் காரணமாக ஒலியலைக் கருவிகள் மற்றும் தண்ணீரை நிறம் மாற்றம் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். படிகக்கல் தொகுதிகளும் ஏற்படலாம்.

பெரிய அளவிலான ஆழ்கடல் உமிழ்வுகள்கூட கடல் மேல்தளத்தை பாதிக்காமல் இருக்கலாம். காற்றோடு ஒப்பிடுகையில் தண்ணீர் விரைவாக குளிர்ச்சியடைவது மற்றும் மிதக்கும்தன்மை அதிகரிப்பதன் காரணமாக, ஆழ்கடல் எரிமலைகள், மேல்தள எரிமலைகளோடு ஒப்பிடும்போது அவற்றின் எரிமலை துவாரங்களின் மீது செங்குத்தான தூண்களை உருவாக்குகின்றன எனலாம். அவை கடல் மேல்தளத்தைப் பிளந்து புதிய தீவுகளை உருவாக்குமளவிற்கு மிகப்பெரியதாக மாற்றமடையலாம். பருமனான எரிமலைக்குழம்பு ஆழ்கடல் எரிமலைகளின் பொதுவான உமிழ்வு உருவாக்கமாகும்.

உயர்வெப்ப துளைகள் இந்த எரிமலைகளுக்கு அருகாமையில் பொதுவாக காணப்படக்கூடியவை மேலும் இவற்றில் சில கரைந்துருகும் கனிமப்பொருளைச் சார்ந்து சில தனிச்சிறப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவுகின்றன.

 
ஹர்டபிரீட், ஐஸ்லேண்டில் இருக்கும் டுயாக்களுள் ஒன்று

உறைபனி கீழுள்ள எரிமலைகள்

தொகு

உறைபனி கீழுள்ள எரிமலைகள் உறைபனிக் கட்டிகளுக்கு கீழே உருவாகின்றன. அவை உச்சியிலிருந்து ஓடும் விரிந்த பருமனான எரிமலைக்குழம்பு மற்றும் பலோகனைட்டினால் உருவாகின்றன.

உறைபனிக்கட்டி உருகும்போது, உச்சியிலுள்ள எரிமலைக்குழம்பு குலைவுற்று தட்டையான உச்சிப்பகுதியுள்ள மலையை வி்ட்டுச்செல்கிறது. பின்னர், பருமனான எரிமலைக்குழம்பும் குலைந்து 37.5 டிகிரி கோணத்தைக் காட்டுகிறது. இந்த எரிமலைகள் டேபிள் மலைகள், டுயாக்கள் அல்லது (வழக்கத்திற்கு மாறாக) மொபர்க் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ் வகையான எரிமலைக்கான மிகச்சிறந்த உதாரணத்தை ஐசுலாந்தில் காணமுடியும், இருப்பினும், பிரித்தானிய கொலம்பியாவிலும் டுயாக்கள் இருக்கின்றன. இந்தச் சொல்லின் மூலவேர், டுயா ஆற்றின் பகுதியில் உள்ள சில டுயாக்களின் காரணமாகவும், வட பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள டுயா பிரதேசத்தின் காரணமாகவும் டுயா பியூட்டிலிருந்து வந்துள்ளது. டுயா பியூட்தான் முதலாவதாக பகுப்பாய்வு செய்யப்பட்ட நிலவமைப்ப், எனவேதான் அதன் பெயர் இவ் வகையான எரிமலை அமைப்புக்கான புவியியல் இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டது. டுயா மலைகள் மாகாண பூங்காவானது, டுயா ஏரியின் வடக்குப் பகுதியிலும், யுகோன் பகுதி எல்லைக்கு அருகாமையில் உள்ள ஜென்னிங்ஸ் ஆற்றின் அருகாமையிலும் அமைந்துள்ள இதன் வழக்கத்திற்கு மாறான நிலவெளியை பாதுகாக்கும் விதமாக நிறுவப்பட்டுள்ளது.

புதைசேற்று எரிமலைகள்

தொகு

புதைசேற்று எரிமலைகள் அல்லது புதைசேற்று குவிமாடங்கள் என்பவை புவிக் கழிவு நீர்மங்கள் மற்றும் வாயுக்களின் உருவாக்கமாகும், இருப்பினும் இதுபோன்ற செயல்பாட்டிற்கு காரணமாக இருக்கக்கூடிய வேறுசில நிகழ்முறைகளும் இருக்கின்றன. 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கும் 700 மீட்டர் உயரத்திற்கும் உள்ளவை மிகப்பெரிய அமைப்புக்களாகும்.

உமிழப்படும் மூலப்பொருள்

தொகு

எரிமலைக்குழம்பு கலவை

தொகு
 
பஹோஹோய் எரிமலைக்குழம்பு ஹவாயில் ஓடுகிறது (தீவு). முக்கிய எரிமலைக் கால்வாயின் ஒருசில ஓட்டங்களை படம் காட்டுகிறது.
 
சிசிலி கடற்கரையிலிருந்து தள்ளியிருக்கும் ஸ்ட்ராம்போலி எரிமலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உமிழ்ந்து, எரிமலை வெடிப்புகளை வெளித்தள்ளும் ஸ்ட்ராம்போலியன் உமிழ்விற்கான சொல்லைத் தந்துள்ளது

எரிமலைகளை வகைப்படுத்துவதற்கான மற்றொரு முறை உமிழ்ந்த மூலப்பொருள்களின் கலவையின் (எரிமலைக்குழம்பு) மூலமாகும், ஏனெனில் இது எரிமலையின் வடிவத்தை மாற்றியமைக்கிறது. எரிமலைக்குழம்பை நான்கு வெவ்வேறு வகை கலவைகளாக விரிவாக பிரிக்கலாம் (காஸ் & ரைட், 1987):

உமிழப்பட்ட எரிமலைக்குழம்பு அதிக விகிதத்தில் (>63%) சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு ஃபெல்சிக் எனப்படுகிறது.

ஃபெல்சிக் எரிமலைக்குழம்புகள் (டேசைட் அல்லது ரையோலைட்கள்) அதிக பிசுபிசுப்புத்தன்மை உள்ளவையாக இருக்கின்றன (மிகுந்த நீர்மமாக அல்லாமல்) குவிமாடங்களாகவோ அல்லது குறுகிய, தடித்த ஓட்டங்களாகவோ உமிழப்படுகின்றன. பிசுபிசுப்புள்ள எரிமலைக்குழம்பு சுழல்வடிவ எரிமலைகளையோ அல்லது எரிமலைக்குழம்பு குவிமாடங்களையோ உருவாக்குவனவாக இருக்கின்றன. கலிபோர்னியாவிலுள்ள லாஸன் சிகரம் ஃபெல்சிக் எரிமலைக்குழம்பிலிருந்து உருவானதற்கான ஒரு உதாரணமாகும், இது உண்மையிலேயே ஒரு பெரிய குவிமாடமாகும்.

சிலிக்கான் உள்ள மாக்மாக்கள் மிகவும் பிசுபிசுப்பாக இருப்பதால், அச்சமயத்தில் இருக்கின்ற ஆவியாதலை படிகமாக மாற்றக்கூடியவையாக இருக்கின்றன, அவை மாக்மா பயங்கரமாக வெடிப்பதற்கும், முடிவில் சுழல்வடிவ எரிமலைகளை உருவாக்குவதற்கும் காரணமாகின்றன. பைரோகிளாஸ்டிக் ஓட்ட இக்னிம்பிரைட்கள் இத்தகைய எரிமலைகளின் அதிக அபாயமுள்ள உருவாக்கங்களாகும், இவை உருகிய எரிமலைச் சாம்பலின் கலவை என்பதால் காற்றுமண்டலத்திற்குள் செல்ல மிக கனமானவையாக இருக்கிறது, இதனால் அவை எரிமலையின் சரிவுகளை தழுவியபடி பெரிய உமிழ்வுகளின்போது அவற்றின் துளைகளிலிருந்து வெகுதொலைவிற்கு பயணிக்கின்றன.

1,200 °Cக்கும் அதிகமாக உள்ள வெப்பநிலை பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தில் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது, அது அதன் தடத்திலுள்ள அனைத்தையும் எரித்து சாம்பலாக்குவதோடு சேகாரமாகியிருக்கும் வெப்பமான பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தின் அடுக்குகளை பல மீட்டர்களுக்கு கெட்டியாக்குகிறது. அலாஸ்காவின் பத்தாயிரம் புகைபோக்கிகள் உள்ள பள்ளத்தாக்கு, 1912 ஆம் ஆண்டில் காத்மைக்கு அருகாமையில் உள்ள நோவாரப்தாவின் உமிழ்வால் உருவானது, இது கெட்டியான பைரோகிளாஸ்டிக் ஓட்டம் அல்லது இக்னிம்பிரைட் சேகாரத்தின் உதாரணமாகும். போதுமான அளவிற்கு லேசானதாக உள்ள எரிமலைச் சாம்பல் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் உயர சென்று உமிழப்படுவது பல கிலோமீட்டர்களுக்கு பயணித்து சாம்பல்பாறையாக தரையில் விழுகிறது.

உமிழப்பட்ட மாக்மா 52–63% சிலிக்காவைக் கொண்டிருந்தால், அந்த எரிமலைக்குழம்பு இடைநிலை கலவை எனப்படுகிறது.

இத்தகைய "ஆண்டெசிடிக்" எரிமலைகள் சாதாரணமாக ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு மேல் மட்டுமே ஏற்படுகின்றன (எ.கா: இந்தோனேஷியாவில் உள்ள மவுண்ட் மெராபி).

உமிழப்பட்ட மாக்மா 52% குறைவாக மற்றும் 45% க்கு கூடுதலாக சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு மாஃபிக் எனப்படுகிறது (ஏனெனில் இது அதிக அளவிலான மாக்னீசியத்தைக் கொண்டுள்ளது(Mg)) மற்றும் இரும்பு (Fe) அல்லது கருங்கல் வகை. இந்த எரிமலைக்குழம்புகள் சாதாரணமாக ரையோலிட்டிக் எரிமலைக்குழம்பைவிட மிகக்குறைந்த பிசுபிசுப்புத் தன்மையுடனே இருக்கும், அவற்றின் உமிழ்வு வெப்பநிலையைப் பொறுத்து ஃபெல்சி்க் எரிமலைக் குழம்புகளைவிட வெப்பமாகவும் இருக்கும். பரந்த அளவிலான அமைப்புக்களில் மாஃபிக் எரிமலைக் குழம்புகள் ஏற்படுகின்றன.

இரண்டு கடல் அடுக்கு தனி்த்தனி துண்டுகளாக பிரியும் மத்திய கடல் முகட்டில் அந்த இடைவெளியை நிரப்ப பஸால்டிக் எரிமலைக் குழம்பு பெருத்த துண்டுகளாக உமிழப்படுகிறது;

கடல் மற்றும் கண்ட மேல்ஓடு ஆகிய இரண்டிலும் உள்ள கவச எரிமலைகளில் (எ.கா: மானா லோவா மற்றும் கிலாயூ உள்ளிட்ட ஹவாய் தீவுகள்).

கண்ட கருங்கல் வெள்ளமாக உள்ள இடத்தில்.

சில உமிழப்பட்ட மாக்மாக்கள் <=45% சிலிக்காவைக் கொண்டிருப்பதோடு அல்ட்ராசல்ஃபூரிக் எரிமலைக்குழம்பையும் உருவாக்குகிறது. கொமேடியாட் என்றும் அறியப்படுகிற அல்ட்ராசல்ஃபூரிக் ஓட்டங்கள் மிகவும் அரிதானவை; உண்மையில், கிரகத்தின் வெப்ப ஓட்டம் அதிகமாக இருக்கும்போது பூமி உருவான துவக்க காலத்திலிருந்து அதன் மேற்பரப்பில் மிகச்சிலவே உமிழ்ந்துள்ளன.

அவை வெப்பமான எரிமலைக்குழம்புகள் என்பதுடன், சாதாரணமான மாஃபிக் எரிமலைக்குழம்புகளைவிட மிகவும் நீர்மத்தன்மை வாய்ந்தவையாக இருந்திருக்கக்கூடும்.

எரிமலைக்குழம்பு கட்டமைப்பு

தொகு

மேல்தள கட்டமைப்பின் அடிப்படையில் இரண்டு வகையான எரிமலைக்குழம்பிற்கு பெயரிடப்பட்டுள்ளது: ʻ[19]ஆʻ[20] ஒலிப்பு [ˈʔaʔa]([21]) மற்றும் பஹோய்ஹோய்IPA[paːˈho.eˈho.e]([22]), இவை இரண்டும் ஹவாய் வேர்ச்சொல்லிருந்து வந்தவையாகும். ʻ[23]ஆʻ[24] கரடுமுரடான சாம்பல் கட்டி மேல்தள பண்புகொண்டது, இது பிசுபிசுப்பான எரிமலைக்குழம்பு ஓட்டத்திற்கு வகைமாதிரி கட்டமைப்பு.

இருப்பினும், கருங்கல் வகை அல்லது மாஃபிக் ஓட்டங்கள் ʻ[25]ஆʻ[26] ஓட்டங்களாக உமிழப்படலாம், குறிப்பாக உமிழப்படும் விகிதம் அதிகமாகவும், சரிவு செங்குத்தாகவும் இருந்தால் அவ்வாறு ஏற்படும். பஹோய்ஹோய் மென்மையான, கயிறுபோன்ற அல்லது சுருள் மேல்தள பண்பு கொண்டது, இது பொதுவாக அதிக நீர்மமான எரிமலைக்குழம்பு ஓட்டத்திலிருந்து உருவாகிறது. சாதாரணமாக, மாஃபிக் ஓட்டங்கள் மட்டுமே, உயர் வெப்பநிலையில் உமிழப்படுபவை அல்லது ஓடுவதற்கு பெருமளவில் நீர்மமாக இருப்பதற்கு முறையான வேதியியல் அம்சங்களைக் கொண்டுள்ளதால் பஹோய்ஹோய் ஆக உமிழப்படுகின்றன.

எரிமலைச் செயல்பாடு

தொகு
 
எரிமலைப் பிளவு மற்றும் எரிமலைக்குழம்பு கால்வாய்
 
1980 ஆம் ஆண்டு மே 18 உமிழ்வு ஏற்பட்டபோது மவுண்ட் செயிண்ட் ஹெலன்ஸ்
 
ஷிப்ராக், அழிந்துபட்ட எரிமலையின் கழுத்துப்பகுதியில் உள்ள அரிக்கப்பட்ட மீதம்.
 
எரிமலைகளின் வரைபடம்

உயிர்த்துடிப்புடையவை

தொகு

மாக்மாடிக் எரிமலைகளை வகைப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான முறை அவற்றின் உமிழ்வுத் தொடர்ச்சியை வைத்து பிரிப்பதாகும், அவற்றில் தொடர்நது உமிழ்பவை உயிர்த்துடிப்புடையவை என்றும், வரலாற்றுக் காலங்களில் உமிழ்ந்து தற்போது அமைதியாய் இருப்பவை உறங்குபவை என்றும், வரலாற்றுக் காலங்களிலும் உமிழாமல் இருப்பவை அழிந்தவை என்றும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தப் பிரபல வகைப்படுத்தல் - குறிப்பாக அழிந்தவை - அறிவியலாளர்களுக்கு நடைமுறையில் அர்த்தமற்றவையே. அவர்கள் மேலே குறிப்பிட்டபடி குறிப்பிட்ட எரிமலைகளின் உருவாக்கம், உமிழ்வு நிகழ்முறை மற்றும் அதன் காரணமாக ஏற்படும் வடிவங்களை வைத்தே வகைப்படுத்துகிறார்கள்.

எரிமலை ஆராய்ச்சியாளர்களிடையே "உயிர்த்துடிப்புடைய" எரிமலையை வரையறுப்பதில் ஒருமித்த கருத்து இல்லை. எரிமலையின் ஆயுட்காலம் சில மாதங்களிலிருந்து சில மில்லியன் ஆண்டுகள் வரை வேறுபடுபடுகிறது, இதுபோன்று வேறுபடுத்திப் பார்ப்பது சிலநேரங்களில் மனித இனத்தின் ஆயுள் அல்லது நாகரீகங்களோடு ஒப்பிடுகையில் அர்த்தமற்றதாகிறது. உதாரணத்திற்கு, பல எரிமலைகளும் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் டசன் கணக்கான முறைகள் உமிழ்ந்திருக்கின்றன ஆனால் அவை தற்போது உமிழ்வதறாகான அறிகுறிகளைக் காட்டுவதி்ல்லை. இதுபோன்ற எரிமலைகளின் நீண்ட ஆயுட்காலத்தில் அவை மிகவும் செயலாற்றுவதாக இருக்கின்றன. இருப்பினும் மனித ஆயுட்காலத்தில் அவை அவ்வாறு இல்லை.

ஒரு எரிமலை செயலாற்று வதை, வழக்கத்திற்கு மாறான பூகம்பம் அல்லது குறிப்பிடத்தகுந்த புதிய வாயு வெளியேற்றம் போன்று, தற்போது உமிழ்கிறதா அல்லது செயலற்றிருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கொண்டே வழக்கமாக அறிவியலாளர்கள் பரிசீலனை செய்கின்றனர். ஒரு எரிமலை வரலாற்றுக் காலத்தில் உமிழ்ந்திருந்தாலே அதை உயிர்த்துடிப்புடைய எரிமலையாக பல அறிவியலாளர்களும் கருதுகின்றனர். பதிவுசெய்யப்பட்ட வரலாற்றுக் கால வரையறை பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமாகும்; மெடிட்டெரேனியனில் பதிவுசெய்யப்பட்ட வரலாறு 3,000 வருடங்களை எட்டுகிறது, ஆனால் ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவின் பசிபிக் வடகிழக்கு வரலாறு 300 ஆண்டுகளுக்கும் குறைவானதாக இருக்கிறது, ஹவாய் மற்றும் நியூசிலாந்தின் வரலாறு 200 ஆண்டுகளே ஆகும்.

ஸ்மித்ஸோனியன் குளோபல் எரிமலை திட்டத்தின் வரையறைப்படி 10,000 ஆண்டுகளுக்குள் ஒரு எரிமலை உமிழ்ந்திருந்தால் அது உயிர்த்துடுப்புடைய எரிமலை.

அழிந்தவை

தொகு

அழிந்துவிட்ட எரிமலைகள் என்பவை, எரிமலையிடம் எரிமலைக்குழம்பு வரத்து இல்லாததால் மீண்டும் உமிழ வாய்ப்பில்லாதது என்று அறிவியலாளர்களால் கருதப்படுவையாகும். ஐக்கிய நாடுகளின் ஹவாய் தீவுகளில் உள்ள பல எரிமலைகள் (ஹவாய் வெப்பப்பகுதி பெரிய தீவுக்கு அருகில் மையம் கொள்வதால் அழிந்துவிட்டவை) மற்றும் மோனோஜெனடிக்காக உள்ள பரீகுட்டீன். மற்றபடி, ஒரு எரிமலை உண்மையிலேயே அழிந்துவிட்டதா என்பதைத் தீர்மானிப்பது சிக்கலாகவே இருக்கிறது.

"சூப்பர் எரிமலை" கால்டிராக்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு உமிழ்வு ஆயுள்சுழற்சி உள்ளவை என்று அளவிடப்படுவதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒருமுறைக்கூட உமிழ்ந்திருக்கவில்லை என்றால் அவை அழிந்துவிட்டவை என்பதற்குப் பதிலாக உறங்குவை என்று கருதப்படலாம். உதாரணத்திற்கு, யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள யெல்லோஸ்டோன் கால்டிரா 2 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்பதோடு ஏறத்தாழ 640,000 ஆண்டுகளுக்கு மோசமான முறையில் உமிழ்ந்ததில்லை, இருப்பினும் சமீபத்தில் ஒரு சிறிய அளவிற்கான செயலாற்றல் இருந்தது, அதில் உயர்வெப்ப உமிழ்வு கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளுக்கு குறைவாகவும், எரிமலைக்குழம்பு ஓட்டம் ஏறத்தாழ எழுபதாயிரம் ஆண்டுகளாவும் இருந்தது. இந்தக் காரணத்தினால், யெல்லோஸ்டோன் கால்டிராவை அறிவியலாளர்கள் அழிந்துவிட்டதாக கருதுவதில்லை. உண்மையில், கால்டிரா தொடர்ச்சியான பூகம்பத்தையும், அதிக செயலாற்றுகிற புவிவெப்ப அமைப்பையும் (எ.கா: யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் முழுமையான புவிவெப்பச் செயல்பாடு கண்டுபிடிக்கப்பட்டது) மற்றும் தரைத்தளம் விரைவாக மேல்நோக்கி வருவதாலும் பல விஞ்ஞானிகள் இதை செயலாற்று எரிமலையாகவே கருதுகின்றனர்.

உறங்கும் எரிமலை யிலிருந்து அழிந்துவிட்ட எரிமலையை வேறுபடுத்திப் பார்ப்பது சிரமம். அதன் செயலாற்றுத்தன்மைகள் குறித்து எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் இருந்தால் அந்த எரிமலைகள் அழிந்துவிட்டவை என்றே கருதப்படுகின்றன. இருந்தபோதிலும், எரிமலைகள் நீண்ட காலத்திற்கு உறங்குகின்றவையாகவே இருக்கலாம், இது "அழிந்தவை" என்று அழைக்கப்படும் எரிமலை மீண்டும் உமிழலாம் என்பதற்கு பொதுவான பண்பு இல்லாமல் இல்லை. ஹெராகுலேனியம் மற்றும் பாம்பி நகரங்களை அழித்த வசூவியஸின் புகழ்பெற்ற 79 ஆம் ஆண்டு உமிழ்வுக்கு முன்னர் அது அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டிருந்தது.

மிகச் சமீபத்தில் மாண்ட்சரேட் தீவிலுள்ள நீண்டநாள் உறக்கத்திலிருந்த சாஃபிரியர் மலைகள் எரிமலை 1995 ஆம் ஆண்டில் செயலாற்றத் தொடங்குவதற்கு முன்னர் அழிந்ததாகவே கருதப்பட்டிருந்தது. மற்றொரு சமீபத்திய உதாரணம், அலாஸ்காவி்ல் உள்ள ஃபோர்பீக்டு மலை கி.மு. 8000 முன்பிருந்து உமிழாதிருந்த இது செப்டம்பர் 2006 ஆம் ஆண்டில் உமிழ்வதற்கு முன்னர்வரை நெடுங்காலமாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டிருந்தது.

குறிப்பிடத்தக்க எரிமலைகள்

தொகு

தற்போதுள்ள 16 பத்தாண்டு எரிமலைகள்:

எரிமலையின் விளைவுகள்

தொகு
 
எரிமலைத் "தூண்டல்"
 
சூரிய கதிரியக்கம் எரிமலை உமிழ்வைக் குறைக்கிறது
 
எரிமலைகள் வெளியேற்றிய சல்பர் டையாக்ஸைடு.
 
2005 ஆம் ஆண்டு அக்டோபர் 23 முதல் நவம்பர் 1, வரை சியரா நீக்ரா எரிமலை (கலாபகஸ் தீவுகள்) மீது சராசரி செறிவுள்ள சல்பர் டையாக்ஸைடு இருக்கிறது.

வெவ்வேறு விதமான எரிமலை உமிழ்வு வகைகளும் அதுசார்ந்த செயல்பாடுகளும் உள்ளன: ப (நீராவியால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகள்), உயர் அளவிலான சிலிக்கா எரிமலைக்குழம்பு வெடித்து உமிழ்தல் (எ.கா: ரையோலைட்), குறைவான சிலிக்கா எரிமலைக்குழம்பு பீறிட்டு உமிழப்படுதல் (எ.கா: கருங்கல் வகை), பைரோகிளாஸ்டிக் ஓட்டங்கள், லகர்கள் (கூளங்களாக ஓடுதல்) மற்றும் கரியமில வாயு வெளிப்பாடு. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் மனிதர்களுக்கு தீங்கானவையாக இருக்கின்றன. பூகம்பங்கள், வெப்ப ஊற்றுக்கள், நீராவிகள், புதைசேற்று ஊற்று மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் எரிமலைச் செயல்பாட்டோடு இணைந்திருப்பவை.

வெவ்வேறு எரிமலை வாயுக்களின் செறிவுகளும் ஒரு எரிமலையிலிருந்து மற்றொன்றுக்கு குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுகிறது. நீர் ஆவியாதல் என்பது கரியமிலவாயு மற்றும் சல்பர் டையாக்ஸைடு ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் மிதமிஞ்சி இருக்கின்ற எரிமலை வாயு வகைமாதிரியாகும். ஹைட்ரஜன் சல்பைட், ஹைட்ரஜன் குளோரைடு மற்றும் ஹைட்ரஜன் ஃப்ளோரைடு ஆகியவை பிற முதன்மை எரிமலை வாயுக்கள். பெரிய அளவிலான சிறிய மற்றும் பீறிடும் வாயுக்கள் எரிமலை உமிழ்வுகளின்போது காணப்படுகின்றன, உதாரணத்திற்கு ஹைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு, ஹாலோகார்பன்கள், ஆர்கானிக் கலவைகள் மற்றும் ஆவியாகும் இயல்புள்ள உலோக குளோரைடுகள்.

பெரிய, வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் நீராவி (H2O), கார்பன் டையாக்ஸைடு (CO2), சல்ஃபர் டையாக்ஸைடு (SO2), ஹைட்ரஜன் குளோரைடு (HC1), ஹைட்ரஜன் ஃப்ளோரைடு (HF) மற்றும் சாம்பல் (தூளான மற்றும் மென்மையான பாறைகள்) ஆகியவற்றை வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் பூமியின் தளத்திற்கும் மேலே 16–32 கிலோமீட்டருக்கு (10–20 மைல்கள்) வீசியெறிகிறது. இவ்வாறு வீசப்படுவதிலிருந்து வரும் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள், செறிவான சல்பேட் சாரல்களை உருவாக்குகின்ற வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் விரைவாக கெட்டிப்படுத்துகின்ற சல்பர் டையாக்ஸைடு சல்பூரிக் அமிலமாக (H2SO4) மாற்றப்படுவதிலிருந்து வருகிறது. இந்தச் சாரல்கள் பூமியின் அல்பிடோவை - சூரியனிலிருந்து வரும் இதன் கதிரியக்க பிரதிபலிப்பு விண்வெளிக்கு திரும்புகிறது - அதிகரிக்கச் செய்கிறது, ஆகவே இது பூமியின் தாழ்வான காற்றுமண்டலம் அல்லது அடிவெளிப்பகுதியைக் குளிர்விக்கிறது; இருப்பினும், அவை பூமியிலிருந்து மேல்நோக்கிப் பரவும் வெப்பத்தை உறி்ஞ்சவும் செய்கின்றன, அவ்விடத்தில் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியை வெப்பப்படுத்துகிறது. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பல்வேறு உமிழ்வுகள், ஒன்றிலிருந்து இரண்டு வருட காலகட்டத்தில் அரை டிகிரி வரை (பாரன்ஹீட் அளவுகோலில்) பூமியின் மேல்தளத்தில் உள்ள சராசரி வெப்பநிலையின் வீழ்ச்சிக்கு காரணமானது - அநேகமாக ஹூவாய்நெப்பூட்டினாவின் உமிழ்விலிருந்து வந்த சல்பர் டையாக்ஸைடு 1601 - 1603 ஆம் ஆண்டின் ரஷ்ய பஞ்சத்திற்கு காரணமாக இருக்கலாம்.

இந்த சல்பேட் சாரல்கள், வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் உள்ள குளோரைன் மற்றும் நைட்ரஜன் ரசாயன உயிரினங்களை மாற்றுகின்றன அவற்றின் மேல்தளங்களில் உள்ள சிக்கலான இரசாயன மாற்றங்களை அதிகரிக்கிறது. இந்த விளைவு, குளோரோப்ளோரோகார்பன் மாசுபாட்டிலிருந்து அதிகரித்த வாயுமண்டலத்திற்கு மேலுள்ள குளோரின் உடன் சேர்ந்து, ஓஸோன் O3) பகுதியை அழிக்கின்ற குளோரின் மோனாக்ஸைடை உருவாக்குகிறது.

சாரல்கள் அதிகரித்து கெட்டிப்படுகையில், அவை சுருள் இழை மேகங்களுக்கான பிளவாக செயல்படுகின்ற மேல் அடிவளியில் குடியேறிவிடுகின்றன, அதற்கும் மேல் பூமியின் கதிரியக்கச் சமநிலையை மேம்படுத்துகிறது.

பெரும்பாலான ஹைட்ரஜன் குளோரைடு (HCl) மற்றும் ஹைட்ரஜன் ப்ளோரைடு (HF) ஆகியவை உமிழப்படும் மேகத்திலுள்ள நீர்த்திவலைகளில் கரைந்து அமில மழையாக விரைந்து தரையில் விழுகின்றன. தூண்டப்பட்ட சாம்பலும் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியிலிருந்து விரைவாக விழுகிறது; இவற்றில் பெரும்பாலானவை சில நாட்களிலிருந்து சில வாரங்களுக்குள்ளாக நீக்கப்படுகின்றன. இறுதியில், வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் பசுமையில்ல வாயுவான கார்பன் டையாக்சைடை வெளியிடுகிறது, இது பயோஜியோகெமிக்கல் சுழற்சிக்கான கார்பன் மூலாதாரத்தை வழங்குகிறது.

 
ஹெலிமா உமாவு துளையிலிருந்து வானவில்லும், சல்பர் டையாக்ஸைடுடன் எரிமலை சாம்பலும்

எரிமலைகளிலிருந்து வெளிப்படும் வாயுக்கள் அமில மழைக்கு இயல்பான பங்களிப்பாளராக இருக்கின்றன. எரிமலைச் செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 130 முதல் 230 டெராகிராம்கள் (145 மில்லியன் முதல் 255 மி்ல்லியன் வரையிலான ஷார்ட் டன்கள்) வரையிலான கார்பன் டையைக்ஸைடை வெளியிடுகிறது.[2] எரிமலை உமிழ்வுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள்ளாக சாரல்களை தூண்டக்கூடும். பெரிய தூண்டல்கள் வழக்கத்திற்கு மாறான வண்ண அஸ்தமனம் போன்ற காட்சி அம்சங்களுக்கு காரணமாகலாம் என்பதோடு உலகளாவிய தட்பவெப்பத்தை குளிர்வித்து பாதிக்கச் செய்யலாம். எரிமலை உமிழ்வுகள் எரிமலைப் பாறைகளின் தட்பவெப்பநிலை நிகழ்முறை மூலமாக மண்ணில் புரதங்களை அதிகரிக்கச் செய்யும் பலனை வழங்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. இத்தகைய உரமேற்றப்பட்ட மண் செடிகளும் பல்வேறு பயிர்களும் வளர்வதற்கு உதவுகின்றன. எரிமலை உமிழ்வுகள், மாக்மாக்கள் தண்ணீருடன் சேர்ந்து குளிர்வித்து கெட்டிப்படுத்துகையில் புதிய தீவுகளையும் உருவாக்கக்கூடும்.

பிற கோள் அமைப்புக்களில் உள்ள எரிமலைகள்

தொகு
 
ஒலிம்பஸ் மோன்ஸ் (லத்தீன், "மவுண்ட் ஒலிம்பஸ்"), மார்ஸ் கோளில் காணப்படுகின்ற சூரிய மண்டலத்தில் இதுவரை தெரியவந்துள்ளதிலேயே உயரமான மலை.

பூமியின் நிலவில் பெரிய எரிமலைகள் எதுவுமில்லை என்பதுடன் தற்போது எந்த எரிமலை நிகழ்வும் இல்லை, இருப்பினும் சமீபத்திய ஆதாரங்கள் அதில் இன்னும் பாதியளவிற்கு உருகிய மையப்பகுதியைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.[3] எப்படியாயினும், நிலவானது மரியா (நிலவில் காணப்படும் கருமையான பாதைகள் )பள்ளத்தாக்குகள் மற்றும் குவிமாடங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கலாம்.

வீனஸ் கோள் 90% கருங்கல் வகையைக் கொண்டிருக்கிறது, எரிமலை நிகழ்வு அதன் மேல்தளத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தக் கோளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய முழு மறுமேல்தளமாக்க நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம்,[4] இதை அறிவியலாளர்கள் மேல்தளத்தில் ஏற்பட்ட எரிமலை வாயு தாக்கத்தின் அடர்த்தி எனபதாகக் கூறுவர். எரிமலைக்குழம்பு ஓட்டங்கள் பரவலானவை என்பதுடன் எரிமலையின் வடிவங்கள் பூமியின் தோற்றத்தில் தற்போது இல்லை. கோளின் வாயுமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மின்னலின் ஆய்வும் நிகழ்ந்துகொண்டிருக்கும் எரிமலை செயலாற்றல்களுக்கு பங்களித்திருக்கலாம், இருந்தபோதிலும் வீனஸ் கோளில் எரிமலை நிகழ்வுகள் இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றனவா இல்லையா என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. மெகல்லன் விசாரணை மூலம் பெறப்பட்ட ரேடார் ஒலி, அதன் சிகரத்திலும் வடக்குப்பகுதி பக்கவாட்டிலும் சாம்பல் ஓட்ட வடிவத்தில் வீனஸின் உயரமான எரிமலையான மாட் மோன்ஸில் ஒப்பீட்டு ரீதியில் சமீபத்திய எரிமலை நிகழ்வு இருப்பதைக் காட்டுகிறது.

மார்ஸ் கோளில் அழிந்துவிட்ட பல்வேறு எரிமலைகள் இருக்கின்றன, அவற்றில் நான்கு பூமியில் இருப்பதைவிட மிகவும் பெரியதான நீண்ட கவச எரிமலைகளாகும். இவை ஆர்ஸியா மோன்ஸ், ஆஸ்கிரேஸ் மோன்ஸ், ஹெகேட்ஸ் தோலஸ், ஒலிம்பஸ் மோன்ஸ் மற்றும் பவோனிஸ் மோன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த எரிமலைகள் பல மில்லியன் ஆண்டுகளாக அழிந்துபட்டவையாக இருந்திருக்கின்றன,[5] ஆனால் ஐரோப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்வெளி ஓடம், மார்ஸில் சமீபத்திய கடந்த சில ஆண்டுகளில் எரிமலை நிகழ்வு ஏற்ப்ட்டதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கின்றன.[5]

 
வாஷ்டர் எரிமலை, ஜூபிடரின் நிலவான ஐயோவின் மேல்தளத்திற்கு மேலாக 330 கி.மீ. (205 மைல்) ப்ளூமை உமிழ்கிறது

ஜூபிடரின் நிலவான இயோ, ஜூபிடருடனான டைடல் ஒருங்கிணைப்பின் காரணமாக சூரிய மண்டலத்திலுள்ள அதிக எரிமலைச் செயல்பாடுள்ள கோளாக இருக்கிறது. இது சல்பர், சல்பர் டையாக்ஸைடு மற்றும் சிலிகேட் ஆகியவற்றை உமிழும் எரிமலைகளைக் கொண்டிருக்கிறது, அதன் காரணமாக இயோ தொடர்ந்து மறுமேல்தளமாக்கல் செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. இதனுடைய எரிமலைக்குழம்பு சூரிய மண்டலத்தில் உள்ளவற்றிலேயே மிகவும் வெப்பமானவை, இதன் வெப்பநிலை 1,800 K (1,500 °C)-ஐத் தாண்டிச் செல்கிறது.

பிப்ரவரி 2001 ஆம் ஆண்டில், சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை உமிழ்வு இயோவில் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.[6] ஜூபிடரின் கலீலியன் நிலவுகளிலேயே சிறியதான யூரோப்பாவும், அதனுடைய விறைப்பான மேல்தளத்தில் பனிக்கட்டியாக உறையச்செய்கின்ற வகையில் முற்றிலும் தண்ணீரில் நிகழ்பவையாக இருப்பதைத் தவிர்த்து உயிர்த்துடிப்புடைய எரிமலை அமைப்பாகவே காணப்படுகிறது. இந்த நிகழ்முறை கிரையோவால்கோனிஸம் எனப்படுகிறது, அத்துடன் சூரிய மண்டலத்திலுள்ள வெளிப்புற கோள்களின் நிலவுகளில் மிகவும் பொதுவானதாகவும் காணப்படுகிறது.

1989 ஆம் ஆண்டில் வோயேஜர் 2 விண்வெளி ஓடம், நெப்டியூனின் நிலவான டிரைடனில் உள்ள கிரையோ எரிமலைகளை ஆராய்ந்துள்ளது, 2005 ஆம் ஆண்டில் டிரைடனில் கிரையோ எரிமலைகளை (பனிக்கட்டி எரிமலைகள்) கண்டுபிடித்திருக்கிறது, 2005 ஆம் ஆண்டில் காஸினி கயோஜென்ஸ் விசாரணை, சனி கோளின் நிலவான என்சைலடஸிலிருந்து உறைந்த பொருட்களை உமிழ்கின்ற ஊற்றுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.[7] இந்த உமிழ்வு தண்ணீர், நீ்ர்ம நைட்ரஜன், தூசி, அல்லது மெதைன் உட்பொருட்களால் உருவாகியிருக்கிறது.

சனிக்கோள் நிலவான டைட்டனில் உள்ள கிரையோ எரிமலை மெத்தைனை வெளியேற்றுவதற்கான ஆதாரத்தையும் காஸினி கயோஜென்ஸ் கண்டுபிடித்துள்ளது, அது அதன் காற்றுவெளியில் குறிப்பிடத்தக்க அளவு மெத்தைன் மூலாதாரத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.[8] இது கிரையோ எரிமலை கூபியர் பெல்ட் ஆப்ஜெக்டான குவெயரிலும் காணப்படுவதாக கருதப்படுகிறது.

பெயர்வரலாறு

தொகு

வால்கனோ (Volcano) என்ற பெயர் வல்கேனோ அதாவது ரோமானிய புராணத்தி்ல் நெருப்புக் கடவுளின் பெயரான வல்கன் (புராணம்) என்பதிலிருந்து உருவான இத்தாலியின் இயோலியன் தீவுகளில் உள்ள எரிமலைத் தீவிலிருந்து பெறப்பட்டது.

எரிமலைகளைப் பற்றிய ஆய்வு வால்கனோலஜி எனப்படுகிறது, சிலநேரங்களில் "வல்கோனோலஜி"' என்றும் உச்சரிக்கப்படுகிறது.

இந்தத் தீவிற்கான ரோமானியப் பெயரான வல்கேனோ பெரும்பாலான நவீன ஐரோப்பிய மொழிகளில் உள்ள எரிமலை க்கான வார்த்தையை வழங்கியுள்ளது.

கலாச்சாரத்தில்

தொகு

பழம் நம்பிக்கைகள்

தொகு
 
பூமியின் உட்புற நெருப்பிற்கான கிர்ச்சர் உருமாதிரி, முன்டஸ் சப்டெரானியஸிலிருந்து

பெரும்பாலான புராதன பதிவுகள் எரிமலை உமிழ்வுகளை கடவுள் அல்லது கடவுள்தன்மை கொண்டவற்றின் செயல்பாடு போன்ற இயற்கை மீறியவற்றின் விளைவுகளாக குறிப்பிடுகின்றன. பழங்கால ரோமிற்கு, எரிமலைகளின் விருப்பம்போல் மாற்றமடையும் தன்மை கடவுளின் செயல்பாடுகளாக மட்டுமே இருந்து வந்துள்ளது, அதேசமயம் 16/17ஆம் நூற்றாண்டு வானியல் அறிஞர் ஜோகன்ஸ் கெப்லர் அவை பூமியின் கண்ணீர் கசிவு என்று நம்பியுள்ளார்.[9] இதற்கு நேர்மாறாக முதலில் சொல்லப்பட்ட கருத்தாக்கம், மவுண்ட் எட்னா மற்றும் ஸ்ட்ராம்போலி உமிழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தவரான ஜீஸூட்டைச் சேர்ந்த அதானேஸியஸ் கிர்ச்சர் (1602–1680) என்பவரால் முன்மொழியப்பட்டதாகும், இவர் வஸூவியஸ் மேல்ஓட்டைப் பார்வையிட்டு தனது பார்வையை பதிப்பித்துள்ளார், இதில் பூமியானது மையத்திலுள்ள நெருப்புடன் சல்பர், பிடுமன் மற்றும் நிலக்கரி ஆகியவை எரிவதன் காரணமாக பல்வேறுவிதமான இதரவற்றுடன் தொடர்புகொள்வதாக தெரிவித்துள்ளார்.

பூமியின் மெல்லிய அமைப்பு பாதியளவு கெட்டியான பொருளாக மாற்றமடைகிறது என்ற நவீன புரிதலுக்கு முன்னர் எரிமலைச் செயலுக்கான முன்மொழியப்பட்ட விளக்கங்களாக நிறைய இருந்துள்ளன.

பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், அமுக்கமும் கதிரியக்க மூலப்பொருட்களும் வெப்ப மூலாதாரங்களாக இருக்கலாம் என்று தெரியவந்ததும் இவர்களுடைய பங்களிப்புகள் பலவும் குறிப்பிடத்தக்க அளவு தள்ளுபடி செய்யப்பட்டன. எரிமலை நடவடிக்கை வேதியியல் வினைகளுக்கும், மேல்தளத்திற்கு அருகாமையில் மெல்லிய அடுக்கிலான உருகிய பாறைக்குமே வழங்கப்பட்டு வந்துள்ளது.

பாரம்பரியம்

தொகு

எரிமலைகள் பாரம்பரியமான முறையிலேயே தோன்றுகின்றன.

பரந்தவெளி காட்சிகள்

தொகு
 
ஐரசு எரிமலை, கோஸ்டா ரிகா.
 
கருப்புப் பாறை எரிமலை,உடாஹ், ஃபில்மோருக்கு அருகாமையிலுள்ள ஒரு அழிந்துவிட்ட சின்டர் கூம்பு.

கூடுதல் பார்வைக்கு

தொகு

பட்டியல்

குறிப்பிட்ட இடங்கள்

குறிப்புகள்

தொகு
  1. Volcano
  2. "Volcanic Gases and Their Effects" (HTML). U.S. Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 2007-06-16.
  3. M. A. Wieczorek, B. L. Jolliff, A. Khan, M. E. Pritchard, B. P. Weiss, J. G. Williams, L. L. Hood, K. Righter, C. R. Neal, C. K. Shearer, I. S. McCallum, S. Tompkins, B. R. Hawke, C. Peterson, J, J. Gillis, B. Bussey (2006). "The Constitution and Structure of the Lunar Interior". Reviews in Mineralogy and Geochemistry 60 (1): 221–364. doi:10.2138/rmg.2006.60.3. 
  4. D.L. Bindschadler (1995). "Magellan: A new view of Venus' geology and geophysics". American Geophysical Union. பார்க்கப்பட்ட நாள் 2006-09-04.
  5. 5.0 5.1 "Glacial, volcanic and fluvial activity on Mars: latest images". European Space Agency. 2005-02-25. பார்க்கப்பட்ட நாள் 2006-08-17.
  6. ""விதிவிலக்காக இயோ ரைவல்ஸில் உள்ள பிரகாசமான உமிழ்வு சூரிய மண்டலத்திலேயே பெரியது", நவம்பர். 13, 2002". Archived from the original on 2005-04-12. பார்க்கப்பட்ட நாள் 2005-04-12.
  7. "PPARC, சனி கோளின் நிலவான இன்செலடஸில் உள்ள காற்றுமண்டலத்தை காசினி கண்டுபிடித்திருக்கிறது". Archived from the original on 2007-03-10. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  8. "NewScientist, டைட்டனில் ஹைட்ரோகார்பன் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஜூன் 8, 2005". Archived from the original on 2011-08-22. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  9. Micheal Williams (11-2007). "Hearts of fire". Morning Calm (Korean Air Lines Co., Ltd.) (11-2007): 6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலை&oldid=3924730" இலிருந்து மீள்விக்கப்பட்டது