விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு

(விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


ஒரு கலைக்களஞ்சியத்தில் முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் இல்லாத கட்டுரைகளையும் முறையான ஆதாரம் இல்லாத கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளின் அடிப்படையில் இவை நீக்கப்படும். எனினும், ஒரே துறை குறித்த எண்ணற்ற கட்டுரைகள் இவ்வாறு பதிவேற்றப்படும் போது, நீக்கலுக்கான பொதுக்கருத்து இல்லாத நிலையில், பங்களிப்பாளரின் உழைப்பையும் கட்டுரைத் தகவலையும் சேமிக்கும் பொருட்டு, அவற்றை ஒன்றிணைத்து ஒரே கட்டுரையின் கீழ் தரவுகளைப் பட்டியலாகத் தரலாம். தேவைப்படும் ஆதாரம் அல்லது தகவல் குறித்து தகுந்த வார்ப்புருகளை இடலாம். வேண்டிய ஆதாரம், கூடுதல் தகவல் கிடைக்கப்பெற்ற பின் குறிப்பிட்ட தரவை மட்டும் மீண்டும் தனிக்கட்டுரையாக மாற்றலாம்.

முறைமை:

  • கட்டுரைகளை இவ்வாறு ஒருங்கிணைக்கும் முன் தேவைப்படும் கூடுதல் ஆதாரம் அல்லது தகவல் குறித்து அவற்றின் பகுப்புப் பக்கத்தில் உரையாட வேண்டும். கட்டுரைகளை நீக்குவதற்கான பொதுக்கருத்து இருந்தால் நீக்கலாம்.
  • கட்டுரைகளை நீக்காமல் ஒன்றிணைக்கலாம் என்ற பொதுக்கருத்து இருக்கும் நிலையில், வார்ப்புரு:merge-speed-delete-on இட்டு, கட்டுரைகளை மேம்படுத்த ஒரு மாத காலம் தர வேண்டும்.
  • கோரப்பட்ட தகவல் / ஆதாரம் சேர்க்கப்படாத நிலையில், கட்டுரைகளை ஒரு மாதம் கழித்து ஒன்றிணைக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்

  • பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் கீழ் வரும் கட்டுரைகள்.
  • சங்க இலக்கியத்தில் கதை மாந்தர்களைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் இல்லாமல் அவை இடம்பெறும் இலக்கியத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டுக் கட்டுரைகள் இருந்தால் ஒன்றிணைக்கலாம்.
  • குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் உயிரினங்களின் பெயர்களை மட்டும் கொண்டு வேறு தகவல்கள் இல்லாமல் தனித்தனியாகக் கட்டுரை எழுதுவதைக் காட்டிலும் ஒன்றிணைக்கலாம்.

பிற விக்கிப்பீடியாக்களில் இதற்கு இணையான கொள்கைகள்

ஏன் இணைக்க வேண்டும்? தொகு

கட்டுரைகளை ஒன்றிணைக்கும்போது அவற்றின் வரலாறுகள் முழுமையாகப் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தாவிட்டால் பழைய கட்டுரைகளை எழுதிய பயனர்களின் பங்களிப்பு விபரம் அழிக்கப்பட்டுவிடும். விக்கிப்பீடியாவுக்குச் செய்யப்படும் எந்த ஒரு பங்களிப்பும் பேணப்பட வேண்டும் என்பதாலேயே வரலாறுகள் இணைக்கப்பட வேண்டும்.

இரு வேறு கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் பெரும்பாலும் ஒத்ததாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒரே கட்டுரைப் பக்கத்தின் கீழ் ஒன்றிணைப்பது அவசியமாகும். கட்டுரைகளை ஒன்றிணைப்பதற்கான சூழ்நிலைகள் கீழ் வருமாறு:

  1. பல்வேறு தலைப்புகளில் ஒரே பொருள் குறித்த கட்டுரைகள் அமையும் போது, அவற்றின் உள்ளடக்கங்களை ஒரு தலைப்பின் கீழ் மட்டும் ஒன்றிணைக்கலாம். இத்தலைப்பு வேறுபாடுகள் வெவ்வேறு கலைச்சொல் வேறுபாட்டின் காரணமாகவோ, பல சரியான எழுத்துக்கூட்டல்கள் காரணமாகவோ இருக்கலாம்.
  2. ஒரு கட்டுரையின் துணைத் தலைப்பின் கீழ் வரக்கூடிய சிறு குறிப்புகள் தனிக்கட்டுரையாக எழுதப்படும் போது அவற்றை முதன்மைக் கட்டுரையுடன் இணைக்கலாம்.

எவ்வாறு இணைக்கலாம் தொகு

ஒரு நீக்கப்பட்ட கட்டுரையை மீட்டெடுக்கும்போது முன்னர் அதே தலைப்பில் இருந்து நீக்கப்பட்ட வரலாறுகளும் மீட்கப்படுகின்றன. அவ்வகையில் இரு கட்டுரை வரலாறுகளை இணைக்க இரண்டையும் ஒரே தலைப்பில் வைத்து நீக்கிப் பின்னர் மீட்க வேண்டும். இவ்வாறு நீக்கும்போது திருத்தமான கட்டுரையைக் கடைசியாக நீக்க வேண்டும்

ஒரே தலைப்பில் இருக்க வேண்டிய தகவல்கள் வெவ்வேறு தலைப்புக்களில் இருக்கும்போது முதலாவதாக இரு பக்கங்களையும் ஒப்பிட்டு எந்தத் தகவல்களும் விடுபடாதவாறு ஒரு கட்டுரையை திருத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு திருத்தப்பட்ட பக்கம் முதன்மைத் தலைப்புடையதாக இருந்தால் அதனை இரண்டாவது தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும்போது இரண்டாவது தலைப்பு கொண்ட பக்கம் நீக்கப்படும்) பின்னர் மீண்டும் இரண்டாவது தலைப்புப் பக்கத்தை நீக்கிப் பின்னர் பக்கத்தை முழுமையான வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீட்ட பக்கத்தை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்திவிட வேண்டும்.

திருத்தப்பட்ட பக்கம் இரண்டாவது தலைப்புக் கொண்டதாக இருந்தால் அதனை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும் போது பழைய கட்டுரை நீக்கப்படும்) பின்னர் நீக்கிவிட்டு முழு வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

கட்டுரைகளை வரலாற்றுடன் இணைக்கும் செயல்முறை தொகு

முதன்மைக் கட்டுரைத் தலைப்பின் தெரிவு Wikipedia:பெயரிடல் மரபுக்கு ஏற்ப இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், இது குறித்து கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் பேசி முடிவெடுக்கலாம்.

முதலாவது முறை தொகு

  1. இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைப்பை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள். சரியான தலைப்பைத் தெரிவு செய்யலாம். (கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப் போகின்றோம் என்பதனால், எந்தத் தலைப்பைத் தெரிவு செய்தாலும், அனைவருடைய உழைப்பும் சேர்த்துக் கொள்ளப்படும்.)
  2. அக்கட்டுரையை முதன்மைக் கட்டுரையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, முக்கியமான தகவல் இழப்புக்கள் எதுவும் இல்லாதவாறு, இரண்டாவது கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கத்தினுள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. இப்போது முதன்மைக் கட்டுரையை நீக்குங்கள். (அதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள்.)
  5. முதன்மைக் கட்டுரை நீக்கப்பட்ட பின்னர், இரண்டாவது கட்டுரைத் தலைப்பை, முதன்மைக் கட்டுரைத் தலைப்பிற்கு நகர்த்துங்கள். (பேச்சுப் பக்கத்தையும் நகர்த்துவதா என கேட்கப்படுவீர்கள். தேவையெனில் நகர்த்துங்கள். அத்துடன் வழிமாற்றை விட்டுச் செல்வதா எனவும் கேட்கப்படுவீர்கள். தேவையற்ற வழிமாற்றெனில், அதற்கு வேண்டாம் என்று கொடுக்கலாம்.)
  6. நகர்த்திய பின்னர் நகர்த்தல் வெற்றி என்ற பக்கத்தில் கிடைத்த முதன்மைக் கட்டுரையை மீண்டும் நீக்குங்கள். (அதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள்.)
  7. நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின், செயற்பாடு நிறைவுற்றது என்ற பக்கத்திற்குச் செல்வீர்கள். அங்கே அண்மைய நீக்குதல்களின் பதிவுக்கு நீக்கல் பதிவு ஐப் பார்க்க என்ற தகவல் கிடைக்கும்.
  8. நீக்கல் பதிவுகளின் பக்கத்திற்கான இணைப்பைச் சொடுக்கிச் சென்றால், நீக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் வரிசையாகக் கிடைக்கும். அதில் நீங்கள் நீக்கிய முதன்மைக் கட்டுரையைத் தெரிவுசெய்து, பார்க்க/மீட்டெடு என்ற இணைப்பை அழுத்துங்கள்.
  9. அதில் காரணம் கேட்கப்பட்டிருக்கும். 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுத்த பின்னர், மீட்டெடு அன்பதனை அழுத்துங்கள்.
  10. தற்போது கட்டுரையானது, இரு கட்டுரைகளின் வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.

இரண்டாவது முறை தொகு

  1. இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைப்பை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள். சரியான தலைப்பைத் தெரிவு செய்யலாம். (கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப் போகின்றோம் என்பதனால், எந்தத் தலைப்பைத் தெரிவு செய்தாலும், அனைவருடைய உழைப்பும் சேர்த்துக் கொள்ளப்படும்.)
  2. அக்கட்டுரையை முதன்மைக் கட்டுரையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, முக்கியமான தகவல் இழப்புக்கள் எதுவும் இல்லாதவாறு, இரண்டாவது கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கத்தினுள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. அவ்வாறு உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்ட இரண்டாவது கட்டுரையை, சரியான தலைப்பிற்கு, அதாவது முதன்மைக் கட்டுரையின் தலைப்பிற்கு நகர்த்துங்கள். (பேச்சுப் பக்கத்தையும் நகர்த்துவதா என கேட்கப்படுவீர்கள். தேவையெனில் நகர்த்துங்கள். அத்துடன் வழிமாற்றை விட்டுச் செல்வதா எனவும் கேட்கப்படுவீர்கள். தேவையற்ற வழிமாற்றெனில், அதற்கு வேண்டாம் என்று கொடுக்கலாம்.)
  5. அவ்வாறு நகர்த்தும்போது, அக்கட்டுரை ஏற்கனவே உள்ளது அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கப்படுவீர்கள்.
  6. அதற்கு ஆம், இப்பக்கத்தை நீக்குக என்பதைக் குறித்துவிட்டு, நீக்கிவிட்டு நகர்த்து என்ற பொத்தானை அழுத்துங்கள்.
  7. நகர்த்தல் வெற்றி என்ற பக்கத்தில் கிடைக்கும் முதன்மைக் கட்டுரையை மீண்டும் நீக்குங்கள். (அதில் 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுங்கள்.)
  8. நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின், செயற்பாடு நிறைவுற்றது என்ற பக்கத்திற்குச் செல்வீர்கள். அங்கே அண்மைய நீக்குதல்களின் பதிவுக்கு நீக்கல் பதிவு ஐப் பார்க்க என்ற தகவல் கிடைக்கும்.
  9. நீக்கல் பதிவுகளின் பக்கத்திற்கான இணைப்பைச் சொடுக்கிச் சென்றால், நீக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் வரிசையாகக் கிடைக்கும். அதில் நீங்கள் நீக்கிய முதன்மைக் கட்டுரையைத் தெரிவுசெய்து, பார்க்க/மீட்டெடு என்ற இணைப்பை அழுத்துங்கள்.
  10. அதில் காரணம் கேட்கப்பட்டிருக்கும். 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுத்த பின்னர், மீட்டெடு அன்பதனை அழுத்துங்கள்.
  11. தற்போது கட்டுரையானது, இரு கட்டுரைகளின் வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.

பயனுள்ள வார்ப்புரு தொகு

  • {{mergeto|title}}
  • {{mergefrom|title}}

உதாரணத்திற்கு 'கட்டுரை 1' என்னும் தலைப்புடைய கட்டுரையை 'கட்டுரை 2' என்னும் தலைப்புடைய கட்டுரையுடன் இணைக்க, இவ்வாறு வார்ப்புரு இடவும். இந்த உதாரணத்தில் 'கட்டுரை 1' என்பது நீக்கப்பட வேண்டிய கட்டுரையின் தலைப்பு. 'கட்டுரை 2' என்பது முதன்மைக் கட்டுரையின் தலைப்பு.

'கட்டுரை 1' என்னும் பக்கத்தை தொகுத்து {{mergeto|கட்டுரை 2}} என்று வார்ப்புரு இடவும்.

'கட்டுரை 2' என்னும் பக்கத்தை தொகுத்து {{mergefrom|கட்டுரை 1}} என்று வார்ப்புரு இடவும்.

அவை இவ்வாறு தோற்றமளிக்கும்.

அந்த கட்டுரை ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் என்ற பகுப்பில் சேர்க்கப்படும். இதன் மூலம் அக்கட்டுரை விரைவில் ஒன்றிணைக்கப்படும்.