விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது
(விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலைத் தரவுதளம். இதில் முதல்நிலை ஆய்வுகளைப் பதிவு செய்ய இயலாது. ஒரு விசயத்தைக் குறித்து பிறர் பதிவு செய்துள்ளதை மட்டும் மேற்கோள் சுட்டி தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒருவர் தனக்குப் புதிதாகத் தோன்றிய கருத்துகள், தான் செய்த ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்ய இயலாது. அவ்வாறு பதிவு செய்வதற்கான தளம் விக்கிப்பீடியா அன்று. நூல்கள், ஆய்விதழ்கள் போன்றவையே அதற்கு சரியான இடமாகும்.