விக்கிப்பீடியா:பாதுகாப்புக் கொள்கை
இப்பக்கம் சுருக்கமாக: பக்கங்களை தொகுப்பதும் நகர்த்துவதும் விக்கிப்பீடியா நிர்வாகிகளால் தடை செய்யப்படலாம். விக்கிப்பீடியா எவராலும் தொகுக்கப்படவேண்டும் என்னும் கொள்கையை அடிப்படையாக கொண்டமையால் இவ்வகைத் தடைகள் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். |
நிர்வாகிகள் ஓர் பக்கத்தினை தொகுப்பதையும் நகர்த்துவதையும் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாக்கவும் பின்னர் அந்த பாதுகாப்பை விலக்கவும் முடியும். பாதுகாப்பு காலக்கெடுவின்றியோ அல்லது குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விலகுமாறோ வழங்கப்படலாம்.
- முழுமையான பாதுகாப்பு நிர்வாகிகள் தவிர எவராலும் தொகுக்கவியலாது . முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஊடக கோப்புகள் புதிய தரவேற்றங்களால் மேலெழுதப் படவியலாது.
- குறை-பாதுகாப்பு பதிகை செய்யாத பங்களிப்பாளர்கள் மற்றும் தானுறுதி செய்யப்படாத பயனர்கள் தொகுப்பதை தடை செய்யும்.
- உருவாக்கல் பாதுகாப்புமுன்னர் நீக்கப்பட்ட பக்கங்களை மீண்டும் உருவாக்குவதை தடுக்கிறது.
- நகர்த்தல் பாதுகாப்புபக்கங்களை நகர்த்துவதை தடுக்கிறது.
எந்தவகையான பாதுகாப்பையும் கொடுக்கவோ விலக்கவோ விக்கிப்பீடியா:பக்கக் காப்புக்கான வேண்டுகோள்கள் பக்கத்தில் வேண்டலாம். பக்கப் பாதுகாப்பை விலக்கக் கோரும் வேண்டுகோள்கள் அப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் தகுந்த காரணங்களுடன் எழுப்பப்படவேண்டும்;அவை சர்ச்சைகுறியதாக இல்லாதிருந்தாலோ அல்லது இணக்கம் இருந்தாலோ பாதுகாப்பு விலக்கப்படும்.
அலுவல் செயல்களுக்காக செய்யப்பட்டிருந்தால் தவிர, (பார்க்ககீழே), நிருவாகிகள் பாதுகாப்பிற்கான காரணம் தற்சமயம் இல்லாதிருந்தாலோ, கணிசமான காலம் கடந்திருந்தாலோ, தொடர்ந்த பாதுகாத்தலுக்கு இணக்கம் இல்லாதிருந்தாலோ பாதுகாப்பை விலக்குவார்கள். தெளிவான சூழல் புரியாத நிலையில் முதலில் அப்பக்கத்தை பாதுகாத்த நிருவாகியை தொடர்பு கொள்ள அறிவுரைக்கப் படுகிறது. பாதுகாவலை கொடுத்த/விலக்கிய செயல்கள் இங்கு பதியப்படுகின்றன:Special:Log/protect.