விக்கிப்பீடியா:பயனர் அணுக்க நிலைகள்

"பயனர் அணுக்க நிலைகள்" என்பது ஒரு பங்களிப்பாளர் எவ்வகையான செயல்களை விக்கிப்பீடியாவில் செய்ய முடியும் என்பதை தீர்மானிக்கிறது. இது பயனர் புகுபதிகை செய்து, கணக்கின் போதுமான காலம், தொகுப்புக்களின் எண்ணிக்கை, மேலதிக அணுக்கங்கள் தானியக்கமற்று வழங்கப்பட்டு இருத்தல் என்பவற்றால் வரையறுக்கப்படுகிறது.

எல்லோராலும் விக்கிப்பீடியாவை வாசிக்க முடியும். தடை செய்யப்படாதவிடத்து, ஒருவரால் புகுபதிகை செய்யாமலே பல பக்கங்களைத் தொகுக்க முடியும். புகுபதிகை செய்தல் பல அனுகூலங்களை வழங்குகிறது. கணக்கு உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் கடந்தால் தானாகவே அது "தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்" என்ற தன்மையை அடைகிறது. மேலதிக அணுக்க நிலை(கள்) தக்க அணுக்கம் உள்ள வேறு ஒரு பயனரால் வழங்கப்படுகிறது. முதிர்ச்சியான அனுபவம், நல்ல நிலைப்பாடு என்பன உள்ள ஒருவர் நிர்வாகியாகலாம்.

பயனர் குழுக்கள்

தொகு
  • கணக்கு உருவாக்காத பயனர்கள்
  • புதிய பயனர்கள்

தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்

தொகு

கணக்கு உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் கடந்திருத்தல், குறிப்பிட்ட தொகுப்பு எண்ணிக்கை என்பவற்றைக் கொண்டிருந்தால் "தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்" குழுமத்தில் இணைவார்கள். இது தானியங்கி மூலம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இதன் கட்டுப்பாடுகள் நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

நிர்வாகிகள், அதிகாரிகள்

தொகு

நிர்வாகிகள்

தொகு

நிர்வாக அணுக்கம் உள்ள விக்கிபீடியர்களாவர். சில காலம் விக்கிபீடியாவில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பு வழங்கப்படுகிறது.

அதிகாரிகள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல விக்கிமீடியா திட்டங்களிலும் சில சிறப்பு நுட்ப அணுக்கங்களைக் கொண்ட பயனர்களை அதிகாரிகள் என்பர்.

சிறப்பு செயற்பாடுகளுக்கான ஏனைய அணுக்கங்கள்

தொகு

சுற்றுக்காவல்

தொகு

சுற்றுக்காவல் அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக தாமாகவே குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள், கட்டுரை ஆக்கம் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.

முன்னிலையாக்கர்

தொகு

முன்னிலையாக்கர் அணுக்கம் விக்கிப்பீடியாவில் தொகுக்கப்படும் விசமம், தீக்குறும்பு, தவறுதல் தொகுப்புக்களை இலகுவாக எதிர்கொள்ள பயனர்களுக்கு வழங்கப்படும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.

தற்காவல்

தொகு

தற்காவல் அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக தாமாகவே குறிக்கப்படும். இதன் மூலம் சுற்றுக்காவலர்களின் பணிச்சுமை குறையும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள், கட்டுரை ஆக்கம் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.

கணக்கு உருவாக்குவோர்கள்

தொகு

ஒரே நாளில் நிறைய பயனர் கணக்குகளை உருவாக்க பயனர்களுக்கு வழங்கப்படும்.

ஏனைய அணுக்கங்கள்

தொகு

முடிவிலித் தடைப் பயனர்கள்

தொகு
  • முடிவிலியாக தடை செய்யப்பட்ட பயனர்கள்

உலகலாவிய அணுக்கங்கள்

தொகு

உலகலாவிய அணுக்கம் விக்கிமீடியா திட்டங்களில் உள்ள எல்லா பொது திட்டங்களிலும் செயல்படக் கூடியது. ஆயினும் அது உள்ளக கொள்கைகளினால் வரையறுக்கப்பட்டிருக்கும்.

  • மேலாளர்
  • ஏனைய உலகலாவிய அணுக்கங்கள்

இவற்றையும் பார்க்க

தொகு