விக்கிப்பீடியா:தடைக் கொள்கை

பயனர்கள் விக்கிப்பீடியாப் பக்கங்களை விசமத்தனமாகத் தொகுப்பதை தடை செய்ய நிர்வாகிகள் பயனரைத் தடை செய்வர். பயனர் கணக்குகள், ஐபி முகவரிகள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்கோ, நீட்டிக்கப்பட்ட காலத்திற்கோ தடை செய்ய முடியும். தடை செய்யப்பட்ட பயனர்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவை பயன்படுத்த முடியும், ஆனால் தன் சொந்த பேச்சுப் பக்கத்தைத் தவிர்த்து பிற பக்கங்களைத் தொகுக்க முடியாது. பயனர்களைத் தடை செய்வது அவர்களை தண்டிப்பதற்காக அல்ல, விக்கிப்பீடியாவில் விசமத் தொகுப்புகளைத் தடுக்க மட்டுமே! எந்தவொரு பயனரும் விசமத் தொகுப்பு குறித்து தெரிவிக்கவோ, பயனர் கணக்கையோ, ஐபி முகவரியையோ தடுக்கக் கோரி நிர்வாகிகளை வேண்ட முடியும்.

தொகுப்பவர்கள், யாரேனும் தவறான முறையில் தடை செய்யப்பட்டிருந்தால், தடை குறித்து மீள்விசாரணை செய்யலாம். பயனர் தடை தவறானது என்றோ, இனி தடை செய்வது தேவையில்லை என்றோ நினைத்தால், பயனரை தடைப் பதிகையிலிருந்து நீக்கி, பயனரைத் தொகுக்க அனுமதிக்கலாம்.