விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
![]() | இந்த Wikipedia page காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த Wikipedia page தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
வேண்டாம்தொகு
தனிநபர் தாக்குதல்களை விக்கிப்பீடியாவின் எந்தக் கூறிலும் செய்யாதீர். உள்ளடக்கத்தைக் குறை கூறுவீர்,பங்களிப்பாளரை அல்ல. தனிநபர் தாக்குதல்கள் விக்கி சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பன; பயனர்கள் விலகிச்செல்ல காரணமாக அமைபவை. தீஞ்சொற்களை எவரும் விரும்புவதில்லை.
விளைவுகள்தொகு
பெரும்பாலான விக்கிப்பீடியர்கள் தனிநபர் விமரிசனங்களைக் கண்டவுடனேயே அதனை நீக்குவர். இது குறித்த கொள்கை எதுவும் வரையறுக்கப்படாவிடினும் மோசமான தனிநபர் தாக்குதல்களுக்கு இதுவே சரியான எதிர்வினையாகும். திரும்பத் திரும்ப தாக்குதலைத் தொடர்வோரை தடை செய்யப்படுகின்றனர்.தொகுத்தல் சுருக்கத்தில் இடப்படும் விமரிசனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
பேச்சுப் பக்க உரையாடல்கள் உலகெங்கும் இணையம் வழியாக கவனிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. உங்களின் விக்கிப்பீடியா நடத்தை, விக்கிப்பீடியா குறித்தும் உங்கள் பண்பை குறித்தும் பறைசாற்றுகிறது.
நியாயமாக இருங்கள்தொகு
ஒரு கட்டுரைக் குறித்து பல கருத்துகள் எழலாம். எதிரெதிர் கருத்துக் கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை நியாயமான முறையில் வெளிப்படுத்துவர். இவ்வாறான எதிர்கருத்துக்களை ஒரே கட்டுரையில் தொகுப்பது நடுநிலை நோக்கு பேண வழிவகுக்கும். நாம் அனைவரும் ஒரே விக்கிப்பீடியர் குமுகமாக இயங்குவோம்.
ஆகவே, தீஞ்சொற்களைத் தவிருங்கள்!தொகு
பிற பங்களிப்பாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எந்தச் சாக்குப்போக்கும் இல்லை. அவற்றைச் செய்யாதீர்கள்.
எடுத்துக் காட்டுகள்தொகு
சில பொதுவான எடுத்துக்காட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவை முழுமையானவை அல்ல:
- எதிர்மறை தனிநபர் விமரிசனங்கள், "நான் உன்னைவிட சிறந்தவன்/உயர்ந்தவன்" , "உனக்கு வாழ்வே கிடையாது" போன்றவை
- மற்றொரு பங்களிப்பாளர் மீது அவரது நாடு,மண்டலம்,இனம், சாதி, பாலினம், புணர்ச்சிவிருப்பம், சமயம்,மற்றும் உள்ளூர் வழக்குகள் கொண்டு தாக்குதல். விமரிசனத்திற்குரிய சமயக்குழு அல்லது இறைமறுப்புக்குழுவில் இருந்தால் கூட சமயத்தொடர்பான தீஞ்சொற்களுக்கு இடமில்லை.
- அரசியல் சார்புகளை தாக்குதல்.. நாசி என்று அழைத்தல்
- பிற பங்களிப்பாளர்களை ஆபாசமொழியில் திட்டுதல்.
- சட்ட நடவடிக்கை மிரட்டல்கள்
- கொலை மிரட்டல்கள்.
- பிற விக்கிப்பீடியா தொகுப்பாளர்களை அரசு, முதலாளி மற்றும் பிறரால் அரசியல்,சமய அல்லது பிற தண்டனைகளுக்கு உட்படுத்த விடப்படும் மிரட்டல்கள். இத்தகைய மிரட்டல்கள் விடும் பயனர்கள் நிர்வாகிகளால் நீண்டகாலம் தடை செய்யப்படுவார்கள். இவ்வாறு செயலெடுக்கும் நிர்வாகிகள் விக்கிப்பீடியா நடுவர் குழு மற்றும் ஜிம்போ வேல்சுக்கு, காரண காரியங்களை விளக்கி, இரகசியத் தகவல் அனுப்ப வேண்டும்.
மாற்றுகள்தொகு
இவற்றிற்கு மாற்றாக:
- பங்களிப்பாளர் பண்பினை விடுத்து, கட்டுரை விவரங்களை விவாதித்து கட்டுரை மொழிக்கட்டிற்கு மாற்று பரிந்துரைக்கலாம். இதனால் நீங்கள் மற்ற பங்களிப்பாளருடன் உடன்படுகிறீர்கள் என்றல்ல, முரண்கொள்ள உடன்படுகிறீர்கள் என்றே பொருள்.
- பங்களிப்பாளர் யாரென்பதைக் கொண்டு அவரது நோக்கு தவறானது என்று கூறாதீர்கள்.
- பேச்சுப்பக்க உரையாடல் எல்லை மீறுவதாகத் தோன்றினால், பொதுப்பார்வைக்கு உட்படாத மின்னஞ்சல் போன்ற தளங்களில் விவாதத்தைத் தொடரவும்.
- பார்க்க பிணக்குத் தீர்வு.
தீர்வுகள்தொகு
நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டால், அவற்றை நீக்க அல்லது பிணக்குத் தீர்வு வழிமுறையில் தீர்வு காண முயலலாம்.
மிக மோசமான நேரங்களில்,தாக்குபவரை தடை செய்யக் கோரிக்கை விடலாம்.இவ்வழி தீர்வு பயப்பதில்லை என்பது விக்கிப்பீடியர் துய்ப்பறிவாகும். மேலும் பலமுறை இத்தீர்வே சர்ச்சைக்குள்ளாகும்.
தரும அடி கூடாதுதொகு
குறிப்பு: சில பயனர்கள் அவர்களது கடந்த கால நடத்தைக்காக பரவலான விருப்பத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். தவிர, விக்கிப்பீடியா நடுவர்குழு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவர்களை யாரும் விமரிசனம் செய்யலாம் என்ற எண்ணம் எழலாம். இது தவறானது.
குமுக உணர்வுதொகு
விக்கிப்பீடியா குமுகத்தில் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதும் பராமரிப்பதும் உங்கள் கடமையாகும். எந்த பயனர் குறித்தும், அவர் கடந்தகால நடத்தை எப்படியிருந்தாலும், தனிநபர் விமரிசனங்களை வைத்தல் இந்த புரிந்துணர்விற்கு பொருத்தமற்றது.