விக்கிப்பீடியா:தானியங்கித் தமிழாக்கம்

குறுக்கு வழி:
WP:AT
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில், பிழையற்ற, படிப்பதற்குத் தெளிவாக உள்ள, தரமான கட்டுரைகளை இடுவதையே வரவேற்கிறோம்.

தற்போது கிடைப்பில் உள்ள தானியங்கித் தமிழாக்கக் கருவி எதுவும் இத்தரத்தைக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, கூகுளின் தானியங்கித் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு முதல் நிலைச் சோதனைத் தரமே உடையது. இம்மொழிபெயர்ப்பு, ஒரு கலைக்களஞ்சியத்தில் இடும் தரத்தில் பிழைகள் அற்றோ புரிந்து கொள்ளக்கூடிய தெளிவுடனோ காணப்படுவதில்லை. எனவே, கூகுள் தமிழாக்க உரையை அப்படியே கட்டுரைகளில் இடுவதைத் தவிர்க்கவும்.

இந்த அடிப்படையில் தானியங்கித் தமிழாக்க உரைகள் சேர்க்கப்படும் கட்டுரையோ, கட்டுரைப் பகுதியோ உடனுக்குடன் நீக்கப்படும்.

வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய விரும்பினால் - தமிழ்த் தூதரகத்தில் உங்கள் கோரிக்கைகளை இடுங்கள். (For translation requests please approach the Tamil Embassy)

இதனையும் காண்க

தொகு