விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோள்/நோக்கம்

தொகு
எளிய தமிழில், தரமான, கட்டற்ற கலைக் களஞ்சியத்தை ஆக்குவதே நமது முதன்மைக் குறிக்கோள்.

தமிழ் விக்கிப்பீடியா இக்குறிக்கோளுக்கான வழிமுறையும் செயல்வடிவும் ஆகும்.

முக்கியக் கொள்கைகள்

தொகு

அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்தான் பங்களிக்கவேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் முக்கியமான கொள்கைகளை அறிந்துகொள்வது, உங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளுடன் இணைந்து இசைவாகப் பங்களிப்பதை விரைவுபடுத்தும்.

  1. நடுநிலை நோக்கு: கட்டுரைகளில் ஒரு பக்கச்சார்பு வாதங்களை மட்டும் எடுத்துக்கூறுவதைத் தவிர்த்துத் தகுந்த மாற்றுக் கருத்துக்களுக்கும், பார்வைகளுக்கும் மதிப்பளித்து உரிய இடம் தாருங்கள்.
  2. பதிப்புரிமைகளை மீறாதீர்கள்: விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். இதில் பதிப்புரிமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களைச் சேர்க்காமல் இருப்பது எமது குறிக்கோளுக்கு இன்றியமையாதது. பதிப்புரிமைகளை மீறாதிருப்பது சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும்.
  3. எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம். இதுவே எமது முக்கிய நோக்கம். இதைத்தவிர எமக்கு எந்தவித அரசியல், பண்பாட்டு, பக்கச்சார்பு நோக்கங்களும் இல்லை. தனிப்பட்ட விக்கிப்பீடியர்களின் கொள்கைகளுக்கும், அவர்களின் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பற்ற கருத்துகளுக்கும், செயற்பாடுகளுக்கும் விக்கிப்பீடியா எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. மேலும் தகவல்களுக்கு: Wikipedia:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று.
  4. உடன் பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளியுங்கள். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கூட்டு மதிநுட்ப ஆக்கம் ஆகும். பிறரின் ஆக்கங்களுக்கு மதிப்பளிப்பது இத்திட்டத்துக்கு இன்றியமையாது. மேலும் தகவல்களுக்கு: Wikipedia:ஒழுங்குப் பிறழ்வுகள், Wikipedia:விக்கி நற்பழக்கவழக்கங்கள், en:Wikipedia:Resolving disputes.

கொள்கைகள் ஏன் தேவை?

தொகு

எமது குறிக்கோள் எமக்கு முக்கியமானது. தமிழ் விக்கிப்பீடியா உருப்பெற ஓர் ஒருமித்த தொலைநோக்கு திட்டக்கண்ணுடன் செயல்படுவது இன்றியமையாதது. எமது செயல்திட்டங்களை நெறிப்படுத்த எமது விழுமியங்களிலும், பண்பாட்டு சூழலும், நோக்கத்திலும் இருந்து எழும் தெளிவான கொள்கைகளும் வழிகாட்டல்களும் புரிந்துணர்வுகளும் எமக்கு தேவையாகின்றது.

வழிமுறை கேள்விகள்

தொகு

கொள்கைகள் எப்படி முடிவு செய்யப்படுகின்றன?

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டு முக்கிய கொள்கைத் தொகுதிகள் உண்டு. அவை

  • விக்கிப்பீடியாவின் முக்கிய கொள்கைகள்
  • தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள்

விக்கிப்பீடியா, குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவின் எமக்குரிய கொள்கைகளை நாம் கவனத்தில் கொண்டும் மதித்தும் செயற்படுகின்றோம். எனினும் தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோள்களுக்கென அவ்வப்பொழுது கொள்கைகள் வகுத்து நடைமுறைப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் அனைத்தும் உடனடியாக வடிவம் பெறுவதில்லை. பல கொள்கைகள் பயனர்களின் புரிந்துணர்வுடன் எழுதப்படாமல் இருக்கின்றன. எனினும் வடிவு பெற்ற கொள்கைகள் எப்படி உருவாக்கம் பெற்று எழுதப்பட்டன என்பது கீழே விளக்கப்படுகின்றது.

  1. Wikipedia:ஆலமரத்தடி மற்றும் பிற உரையாடல் பக்கங்களில் கொள்கைகள் திறந்த முறையில் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்பட்டு அலசப்படுகின்றன (பரிந்துரைத்தல் (Recommendations or Proposal) -> கருத்துவேண்டல்/கலந்துரையாடல் (Request for Comments/Consultations) -> திருந்திய கொள்கைகள் அல்லது சீர்திருத்தப்பட்ட பரிந்துரைகள் (Refined Policies)). இச்செயற்பாடு திறந்தமுறையில் ஒளிவுமறைவின்றி (open and transparent), பொறுப்புணர்வுடன், பற்பல பயனர்களின் கருத்துகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மதிப்பளித்து மேற்கொள்ளப்படவேண்டும்.
  2. மிகப்பல கொள்கைகளுக்கு ஒரு இணக்க முடிவு எட்டப்பட்டு எழுதப்படுகின்றது. இணக்க முடிவே விரும்பப்படுகின்றது, எனினும் தேவையேற்படின் வாக்குபதிவும் மேற்கொள்ளப்படலாம். (Consensus or Democratic Agreement)
  3. பற்பல கொள்கைகள் இறுதியான இறுக்கமான வடிவு கொள்வதில்லை. பயனர்கள் எதிர்ப்பு மறுப்பு தெரிவிக்கும் பொழுது மீள்பரிசீலனைக்கு கொள்கைகள் ஈடுபடுத்தப்படும்.

மேலும் தகவல்களுக்கு: en:Wikipedia:How to create policy

கொள்கைகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன?

தொகு

தமிழ் விக்கிப்பீடியா அதன் பயனர்களால் ஆக்கப்படுகின்றது. எனவே கொள்கைகளை ஆக்குவதும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் பயனர்களையே சாரும். தமிழ் விக்கிப்பீடியா சமூகம் கூட்டாக கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது. மேலும் தகவல்களுக்கு:

கொள்கைகளின் வகைகள்

தொகு
கையேடுகள்
உள்ளடக்கம்

வாழ்க்கை வரலாறு எழுதல்
சமயக் கட்டுரைகள் எழுதல்
திறனாய்வு

தொகுத்தல்

பக்க வடிவமைப்பு
பெயரிடல் மரபு
கட்டுரைகள் ஒன்றிணைத்தல்
வகைப்படுத்தல்

தமிழ் மொழி

தமிழ் இலக்கணம்
கலைச்சொற்கள்
கட்டுரை மெய்பார்த்தல்
மொழிபெயர்ப்பு


See also policies

  • அலுவல்முறையான கொள்கைகள் (Official policies)
  • பரிந்துரையிலிருக்கும் கொள்கைகள் (Semi-policies or Proposed policies)
  • வழிகாட்டல்கள்

மேலதிக தகவல்களுக்கு: en:Wikipedia:List of policies

கையேடுகள், வழிகாட்டுக்கள், உதவிகள் பட்டியல்களுக்கு Wikipedia:சமுதாய வலைவாசல் பக்கத்தைப் பார்க்கவும்.

விதிமுறைகளின் வகைகள்

தொகு
  • பழக்கவழக்க விதிமுறைகள் - Behavioral: விக்கியின் சீர்தரம் தொடர்பானவை.
  • உள்ளடக்க விதிமுறைகள் - Content
  • நடைமுறைப்படுத்தல் விதிமுறைகள் - Enforcement
  • கட்டுரைகளை நீக்குதல் தொடர்பான விதிமுறைகள் - Deletion
  • சட்டம், பதிப்புரிமை தொடர்பான விதிமுறைகள் - Legal and copyright

இவற்றையும் பார்க்க

தொகு