விக்கிப்பீடியா:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி

விக்கிப்பீடியாவில் பயன்பாட்டில் இருக்கும் உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கான பக்கம்.

வழிகாட்டல்

தொகு

கட்டுரை உருவாக்கும் முறை:

மொழிபெயர்ப்பு செய்பவர் கவனிக்க வேண்டியவை

தொகு

பொதுவானவை

தொகு
  1. கூடுதல் கவனம் செலுத்தி, உடனடியாக மேம்படுத்த வேண்டும். ஒன்றை நிறைவு செய்த பிறகு, அடுத்த கட்டுரையை மொழிபெயர்க்க வேண்டும்.
  2. கவனத்துடன் கட்டுரைத் தலைப்பினை தீர்மானிக்க வேண்டும்.

வடிவமைப்பு: மேலும் பார்க்கவும்

தொகு

ஆங்கிலக் கட்டுரையில் 'மேலும் பார்க்கவும்' துணைத் தலைப்பின் கீழ், விக்கி உள்ளிணைப்புடன் பட்டியலிட்டுள்ளார்கள். அதனையும் மொழிபெயர்த்து, உள்ளிணைப்பு இல்லாது இங்கு பட்டியலிடுவது வாசகர்களுக்கு உதவாது (தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் உள்ளிணைப்பு தந்து பட்டியலிடலாம்).

வடிவமைப்பு: பகுப்புகள்

தொகு
  1. உரிய பகுப்புகளை இடுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக - பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு, வாழும் நபர்கள் என்பவை மட்டும் போதாது, குறிப்பிட்ட துறைக்குரிய பகுப்பு இட வேண்டும்.
  2. பொருத்தமற்ற பகுப்புகளை நீக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, காணொளிக் கோப்பு எதுவும் கடத்தப்படாத நிலையில் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் எனும் பகுப்பினை நீக்க வேண்டும்.

எழுதும் முறை

தொகு
  1. சொற்றொடர் அமைப்புகளை தமிழ் மொழிக்கு ஏற்ற வகையில் திருத்த வேண்டும்.
  2. அவர் என எழுதாமல் இவர் என எழுதுவது நன்று. எடுத்துக்காட்டாக he is a great cricketer. அவர் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரர் என எழுதாது இவர் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரர் என எழுத வேண்டும். இவர் எனும் சொல்லையும் ஒரே பத்தியில் பல முறை வராது எழுதினால் நன்று.
  3. selected filmography என்பதை 'தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள்' என எழுதாது, 'நடித்த சில திரைப்படங்கள்' என எழுத வேண்டும்.

ஏற்கனவே ஒரு கட்டுரை இருந்தால் (கட்டுரையைப் பிரதியிடல்)

தொகு
 
ஏற்கனவே உள்ள கட்டுரையினை பிரசுரிக்கும் போது வரும் எச்சரிக்கை

நீங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து, விக்கித் தரவிலும் சேர்க்கப்பட்டிருந்தால் ஏற்கனவே இந்தப் பெயரில் கட்டுரை உள்ளது என அறிவிப்பு உங்களுக்கு வரும். அதனையும் மீறி நீங்கள் தகவல்களை இற்றை செய்துவிட்டு பதிப்பிக்க முயன்றால் இந்தப் படிமத்தில் காண்பது போன்றான (தற்போதுள்ள பக்கத்தை அழித்துவிட்டு பிரசுரிக்கவும்) எச்சரிக்கை வரும், இதனையும் மீறி நீங்கள் அந்தப் பக்கத்தைப் பதிப்பிப்பது தவறானது. அதனைச் செய்ய வேண்டாம்.

இதனையும் காண்க

தொகு