உதவி:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி

உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகவும் பயன்படுத்தவும் மிகவும் இலகுவான ஒன்று ஆகும்.

பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்பாடு பற்றிய விளக்கப்படம்

நிறுவுதல்

  1. உங்கள் பக்கத்தின் மேலுள்ள பீட்டா என்ற அமைப்பைச் சொடுக்கவும்.
  2. அதில் உங்களுக்கு உதவும் சில கருவிகள் நீங்கள் நிறுவிக்கொள்ளத் தரப்பட்டிருக்கும்.
  3. அதில் கீழேயுள்ள மொழிபெயர்ப்பு என்பதனைத் தேர்ந்தெடுத்து சேமித்துக் கொள்ளவும்.

அல்லது, ஒரே சொடுக்கில் நிறுவிட இங்கு செல்லுங்கள்.

பயன்படுத்துதல்

  1. இப்பொழுது, தளத்தில் வலது மேல் மூலை அருகே பங்களிப்புகள் என்ற இணைப்பருகில் உங்கள் சுட்டியைக் கொண்டு செல்லும் போதே அதில் மொழிபெயர்ப்பு என்ற விருப்பம் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதைச் சொடுக்கினால் புதிய மொழிபெயர்ப்புப் பக்கம் ஒன்று திறக்கும்
  3. ஆங்கில விக்கியில் மொழிபெயர்க்கப்படவுள்ள கட்டுரைகள் பரிந்துரைக்கப்படும்.
  4. அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய தலைப்பினைத் தட்டச்சு செய்தும் தேர்ந்தெடுக்கலாம்.
  5. ஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்ப்பு செய்ய அப்பத்திக்கு வலப்புறம் உள்ள வெற்றிடத்தில் சொடுக்கினால் மொழிபெயர்க்கலாம்.

காண்க: தமிழ் விக்கிப்பீடியாவுக்குத்த தேவைப்படும் முக்கியத் தலைப்புகளின் பட்டியல்

குறிப்பு

இக்கருவியில் தானியக்கக் கருவி மொழிபெயர்ப்பு தரமானதாக இல்லாததால் நீங்களாகவே மொழிபெயர்ப்பு செய்யவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். இக்கருவியைச் சிறப்பாகப் பயன்படுத்திப் பல கட்டுரைகளையும் உருவாக்கிக்கொள்ளலாம்.