முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் அல்லது ஆதாரம் இல்லாது உருவாக்கப்படும் ஒரே மாதிரியான எண்ணற்ற கட்டுரைகளின் சீரமைப்பு தொடர்பாக ஒரு கொள்கையை முன்மொழிய விரும்புகிறேன்:

இந்தக் கொள்கை முன்மொழிவு தொடர்பாக அனைவரின் கருத்துகளையும் அறிய விரும்புகிறேன். நன்றி.

கொள்கை:

ஒரு கலைக்களஞ்சியத்தில் முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் இல்லாத கட்டுரைகளையும் முறையான ஆதாரம் இல்லாத கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளின் அடிப்படையில் இவை நீக்கப்படும். எனினும், ஒரே துறை குறித்த எண்ணற்ற கட்டுரைகள் இவ்வாறு பதிவேற்றப்படும் போது, நீக்கலுக்கான பொதுக்கருத்து இல்லாத நிலையில், பங்களிப்பாளரின் உழைப்பையும் கட்டுரைத் தகவலையும் சேமிக்கும் பொருட்டு, அவற்றை ஒன்றிணைத்து ஒரே கட்டுரையின் கீழ் தரவுகளைப் பட்டியலாகத் தரலாம். தேவைப்படும் ஆதாரம் அல்லது தகவல் குறித்து தகுந்த வார்ப்புருகளை இடலாம். வேண்டிய ஆதாரம், கூடுதல் தகவல் கிடைக்கப்பெற்ற பின் குறிப்பிட்ட தரவை மட்டும் மீண்டும் தனிக்கட்டுரையாக மாற்றலாம்.

முறைமை:

 • கட்டுரைகளை இவ்வாறு ஒருங்கிணைக்கும் முன் தேவைப்படும் கூடுதல் ஆதாரம் அல்லது தகவல் குறித்து அவற்றின் பகுப்புப் பக்கத்தில் உரையாட வேண்டும். கட்டுரைகளை நீக்குவதற்கான பொதுக்கருத்து இருந்தால் நீக்கலாம்.
 • கட்டுரைகளை நீக்காமல் ஒன்றிணைக்கலாம் என்ற பொதுக்கருத்து இருக்கும் நிலையில், வார்ப்புரு:merge-speed-delete-on இட்டு, கட்டுரைகளை மேம்படுத்த ஒரு மாத காலம் தர வேண்டும்.
 • கோரப்பட்ட தகவல் / ஆதாரம் சேர்க்கப்படாத நிலையில், கட்டுரைகளை ஒரு மாதம் கழித்து ஒன்றிணைக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்

விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில் இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் கட்டுரைகள் பற்றிய உரையாடல்--இரவி (பேச்சு) 14:47, 1 மே 2012 (UTC)Reply

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

 • பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் கீழ் வரும் கட்டுரைகள்.
 • சங்க இலக்கியத்தில் கதை மாந்தர்களைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் இல்லாமல் அவை இடம்பெறும் இலக்கியத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டுக் கட்டுரைகள் இருந்தால் ஒன்றிணைக்கலாம்.
 • குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் உயிரினங்களின் பெயர்களை மட்டும் கொண்டு வேறு தகவல்கள் இல்லாமல் தனித்தனியாகக் கட்டுரை எழுதுவதைக் காட்டிலும் ஒன்றிணைக்கலாம்.

பிற விக்கிப்பீடியாக்களில் இதற்கு இணையான கொள்கைகள்

பயனர் கருத்துகள்

தொகு

இவ்வாறான கொள்கையைச் செயற்படுத்துவதே நல்லது. --மதனாகரன் (பேச்சு) 12:55, 3 மே 2012 (UTC)Reply

இக்கொள்கை உருவாக்கம் தற்போது தேவையில்லை

தொகு

இரவி, நீங்கள் முன்மொழிகின்ற கொள்கை உருவாக்கத்திற்கு முன்னதாக ஒரு சில தெளிவுகள் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

 • //ஒரு கலைக்களஞ்சியத்தில் முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் இல்லாத கட்டுரைகளையும் முறையான ஆதாரம் இல்லாத கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை.//
  இந்த ஒரு சொற்றொடரில் உள்ள உட்சிக்கல்கள் இவை:

- "முதன்மைக் கட்டுரை" என்றால் என்ன? அதன் அளவீடுகள் (standards, criteria) யாவை? அந்த அளவீடுகள் விக்கிப்பீடியாவினால் வரையறுக்கப்பட்டுள்ளனவா? அப்படி என்றால் அவற்றை எங்கே காணலாம்?
- பிற பொதுக் கலைக்களஞ்சியங்களுக்கும் (எ.டு: Encyclopedia Britannica), சிறப்புக் கலைக்களஞ்சியக்களுக்கும் (எ.டு: Encyclopedia of Insects) விக்கிப்பீடியாவுக்கும் என்ன ஒற்றுமை, என்ன வேற்றுமை?
- விக்கிப்பீடியா "கட்டற்ற கலைக்களஞ்சியம்" என்பதன் நடைமுறை விளைவுகள் யாவை? அதை "யாரும்" தொகுக்கலாம் என்பதன் பொருள் என்ன?
- "போதுமான தகவல்" என்பதை எவ்வாறு அளவிடுவது? யார் அளவிடுவது? அதைப் பொது முடிவுக்கு விட வேண்டுமா?
- "முறையான ஆதாரம்" என்றால் என்ன? அதற்கான அளவீடு(கள்) என்ன?
- "தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை" என்றால் பிற விக்கிப்பீடியாக்கள் (ஆங்கிலம் உட்பட) "ஏற்கின்றனவா", "ஏற்கவில்லையா"? ஏன்?

மேற்கூறியவை என் மனத்தில் எழுகின்ற கேள்விகள். இது என்ன, பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு அதற்கான தீர்வுகளைக் குறிப்பிடாமல் போகிறாரே என்று நினைக்க வேண்டாம்! இரவி கொணர்ந்த சிக்கல் குறித்து ஒரு விரிவான உரையாடல் தேவை என்பதை வலியுறுத்தவே விரும்புகின்றேன்.

மேலும், இரவி இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் கட்டுரைகள் பற்றிய உரையாடல் என்பதைப் பார்க்கச் சொன்னார். அதைப் பார்த்தேன். அங்கு நடந்த உரையாடலும் இப்பொருள் சிக்கல் நிறைந்தது என்பதையே காட்டுகிறது.

எனவே, எனது முன்மொழிவு இது:
கட்டுரைகளை நீக்குவது, ஒருங்கிணைப்பது போன்ற செயல்பாட்டினை ஒரு நீண்டகாலத் திட்டமாக வைத்துக்கொண்டு, ஏற்கெனவே இருக்கின்ற 46,000 கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் எழுத்துப்பிழை திருத்தம், இலக்கணப் பிழை திருத்தம் ஆகியவற்றைச் செய்து, தகவல் உண்மை கணிப்பு (fact check) நடத்தும்படி தமிழ் விக்கி சமூகத்துக்கு வேண்டுகோள் விடுப்போம். இதையே முதன்மைப் பணியாக மேற்கொள்வோம்.

மேற்கூறிய பணியை ஆற்றும்போது ஏதாவது ஒரு கட்டுரை மற்றொரு கட்டுரையின் "மறுபதிப்பு" (duplicate) போல் தெரிந்தால், அதைத் திருத்தி நேரத்தை வீணாக்குவதற்கு மாறாக, அவற்றை ஒருங்கிணைப்பது நல்லதே. அது பற்றிப் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பு இட்டுச் செல்லலாம். --பவுல்-Paul (பேச்சு) 14:42, 3 மே 2012 (UTC)   விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:31, 4 மே 2012 (UTC)   விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 13:05, 4 மே 2012 (UTC)Reply

பவுல்,

 • http://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability உடைய எந்தத் தலைப்புக்கும் முதன்மை கட்டுரை ஆக்கலாம்.
 • தாளில் அச்சிடுவதால் வரக்கூடிய சிக்கல்கள், கட்டுப்பாடுகள் இல்லை என்பதைத் தவிர விக்கிப்பீடியாவுக்கும் பிற கலைக்களஞ்சியங்களின் குறிப்பிடத்தக்கமை கொள்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றே கருதுகிறேன். கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் போதே அதன் தரம் வரையறுக்கப்பட்டு விடுகிறது. அச்சில் வரும் கலைக்களஞ்சியங்களின் தரம் இறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இணையத்தில் படிப்படியாக எழுதுவதால், இறுதியாகத் தரமாக வருவதற்கு உரிய வாய்ப்பு உள்ளதா என்று மட்டும் காண்கிறோம்.
 • கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டற்ற என்ற சொற் பயன்பாடு கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் இருந்து வருகிறது. கட்டற்ற என்பதன் பொருள் அறிய http://www.gnu.org/philosophy/free-sw.html காண்க. கட்டற்ற மென்பொருள் பின்வரும் உரிமைகளை வழங்குகிறது.
  • The freedom to run the program, for any purpose (freedom 0).
  • The freedom to study how the program works, and change it so it does your computing as you wish (freedom 1). Access to the source code is a precondition for this.
  • The freedom to redistribute copies so you can help your neighbor (freedom 2).
  • The freedom to distribute copies of your modified versions to others (freedom 3). By doing this you can give the whole community a chance to benefit from your changes. Access to the source code is a precondition for this.

விக்கிப்பீடியாவின் உரிமமும் இந்த இயக்கத்தின், மெய்யியலின் அடிப்படையில் உள்ளதால், இதே போன்ற உரிமைகளை கலைக்களஞ்சியப் பணிக்கு வழங்குவதாக ஏற்கலாம். கட்டற்ற முறைமை அனைவருக்கும் தொகுப்பதற்கான உரிமைகளை வழங்கும் அதே நேரம், உருவாக்கப்படுவது ஒரு கலைக்களஞ்சியம் என்பதையும் வரையறுக்கிறது. எனவே, ஒவ்வொரு தொகுப்பும் இந்த வரையறைக்கு உட்பட்டே இருக்க வேண்டும். பார்க்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று கட்டற்ற காற்பந்துத் திடலில் யார் வேண்டுமானாலும் இணைந்து விளையாடலாம். ஆனால், விளையாடுவது காற்பந்தாக இருக்க வேண்டும். கட்டற்ற என்ற பெயரில் அதைக் கூடைப்பந்தாகவோ கைப்பந்தாகோவ ஆடக்கூடாது :)

 • போதுமான தகவல் எது என்பது பொது முடிவு தான். இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் கட்டுரையிலும் இதனைப் பொதுமுடிவாகத் தான் உரையாடினோம். ஒரு கட்டுரை மூன்று வரி அளவாவது இருக்க வேண்டும் என்று வரையறுத்திருக்கிறோம். ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரைக்கான குறைந்த அளவு தகவலை இம்மூன்று வரிகளில் தரலாமே என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பிடத்தக்க தகவல் இல்லாமலேயே பத்துப் பதினைந்து வரிகளை எழுத முடியும் என்பதால், மூன்று வரிகளைத் தாண்டி விட்டதாலேயே போதுமான தகவல் இருப்பதாகவும் பொருள்படாது. எடுத்துக்காட்டு: ஒரு எழுத்தாளர் என்ன எழுதினார் என்றே குறிப்பிடாமல் பக்கம் பக்கமாக அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதுவது ஏற்புடையதாகாது. போதுமான தகவல் எது என்பதனை ஒவ்வொரு கட்டுரையாகத் தான் ஆய வேண்டும்.
 • சில விக்கிப்பீடியாக்களில் ஒருவரிக்கட்டுரைகளை ஏற்கிறார்கள். நாம் ஏற்பதில்லை. இது போன்ற தர அளவீடுகள் ஒவ்வொரு விக்கிப்பீடியாவுக்கும் மாறும். ஆனால், ஒரு கலைக்களஞ்சியத்தில் எத்தகைய தலைப்புகள் இடம்பெறலாம் என்பது குறித்த புரிதல் பொதுவானதே.

//கட்டுரைகளை நீக்குவது, ஒருங்கிணைப்பது போன்ற செயல்பாட்டினை ஒரு நீண்டகாலத் திட்டமாக வைத்துக்கொண்டு//

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி ஒன்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. இப்போது செய்வதே மிகத் தாமதமான துப்புரவு முயற்சி தான். தவிர, பிறகு இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் போது, "ஏன் முன்பே சொல்லவில்லை" என்ற கேள்வியும் வருகிறது. அதற்குள் இதே போன்ற இன்னும் எத்தனை ஆயிரம் கட்டுரைகள் வரும் என்று சொல்ல முடியாது.

//46,000 கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் எழுத்துப்பிழை திருத்தம், இலக்கணப் பிழை திருத்தம் ஆகியவற்றைச் செய்து//

46,000 கட்டுரைகளில் இந்த 150+ கட்டுரைகளும் அடங்கும் அல்லவா? ஒவ்வொரு கட்டுரையும் பிழை இன்றி இருப்பது மட்டும் முக்கியம் அல்ல, ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ஒரு கலைக்களஞ்சியம் என்பதன் வரையறையையும் நீர்த்துப் போக விடாமல் இருப்பதும் முக்கியம்.

//தகவல் உண்மை கணிப்பு (fact check) நடத்தும்படி தமிழ் விக்கி சமூகத்துக்கு வேண்டுகோள் விடுப்போம்.//

அத்தனை கட்டுரைகளிலும் இந்த எழுத்தாளர்கள் இந்த ஊரில் இந்தத் தெருவில் வசிக்கிறார் என்ற தகவல் இருக்கிறது. ஆதார நூல் வெளியான பிறகு இவர் வீட்டு முகவரியை மாற்றினாரா இல்லையா என்று எப்படி சரி பார்ப்பது :) ? இப்படி சரி பார்க்க முடியாத தகவல்களை நீக்கினால் கட்டுரையில் ஒன்றுமே மிஞ்சாது. எனவே தான், ஒன்றுக்கு மேற்பட்ட முறையான ஆதாரங்களும் போதுமான அடிப்படைத் தகவலும் தேவை என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.--இரவி (பேச்சு) 07:31, 11 மே 2012 (UTC)Reply

@இரவி, எழுத்தாளர்கள் இந்த ஊரில் இந்தத் தெருவில் வசிக்கிறார் என்ற தகவல் தேவையற்றதென்றாலும், அவர் இந்தந்த விருதுகள் பெற்றிருக்கிறார், இந்த புத்தகத்திற்காக, இவரால் வழங்கப்பட்டது என்ற தகவலை தெரிவிக்கும் போது, அதற்கான அடிப்படை ஆதாரமும் அவசியமாகிறது. ஆதாரமற்ற ஆயிரம் கட்டுரைகளை விட தகுந்த ஆதாரங்கள், மேற்கோள்கள், நம்பத்தகுந்த தகவல்களை கொண்ட நூறு கட்டுரைகள் சிறந்ததே! ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆதாரமற்ற ஒரு வரித்தகவலை சேர்க்கப்படுமாயின், அன்றே அத்தகவல் அழிக்கப்படுமென்பது நீங்கள் அறிந்த ஒன்றே! நம்முடைய தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தவொரு ஆதாரமுமின்றி, மேற்கோள்களின்றி எண்ணற்ற கட்டுரைகள் உள்ளது :-( , அதனை விரைந்து துப்புரவு செய்தல், அவசியமாகிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:48, 11 மே 2012 (UTC)Reply

 • இரவி, நான் எழுப்பிய சில கேள்விகளுக்கு மிக விரிவாக பதில் அளித்துள்ளீர்கள். நன்றி! உங்கள் விளக்கத்தின் அடிப்படையில் கொள்கை உருவாக்கிட எனக்கு உடன்பாடே. அதில் கட்டுரை திருத்தம், ஆதாரம் சேர்த்தல் போன்றவற்றையும் உள்ளடக்குவது சிறப்பு. --பவுல்-Paul (பேச்சு) 04:52, 12 மே 2012 (UTC)Reply
பவுல், ஒப்புதலுக்கு நன்றி. தகுந்த கட்டுரைகளை கலைக்களஞ்சிய முறைக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான உதவிக் குறிப்புகளையும் கொள்கைப் பக்கத்தில் இணைக்க முயல்வேன். --இரவி (பேச்சு) 18:37, 14 மே 2012 (UTC)Reply

மாற்றம் தேவை

தொகு

இக் கொள்கையை சுட்டிக் காட்டி, ஏகப்பட்ட குறுங்கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன. இது தமிழ் விக்கிக்கு ஆரோக்கியமானது இல்லை. தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் முக்கியமானவை. அவை ஏன் முக்கியம்:

 • வரையறைகள், சிறிய அறிமுகங்கள் மிகவும் பெறுமதி வாய்தவை. அதனை மூன்று வரிகளில் செய்ய முடியும்.
 • கட்டுரையை தொடர்பாக மேலும் மேலும் இறுக்கமான வரையறைகளை உருவாக்குவது பயனர் பங்களிப்புக்கு தடை, ஊக்கத்துக்கு தடை.
 • தனிப்பக்கத்தைக் உருவாக்குவதன் மூலம் கூகிள் தேடலில் இலகுவாகக் கிட்டும்.
 • தனிக்கட்டுரைகளாக இருக்கும் போது, அவற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு தடை நீக்கப்படுகிறது. பல புதிய பயனர்களுக்கு புதுக் கட்டுரை உருவாக்கத் தெரியாது.
 • தனிக் கட்டுரைகளை உள் இணைப்புக்கள் கொடுக்கலாம், வெளியில் பகிரலாம், பகுப்பில் இடலாம், பட்டியலில் இடலாம்.
 • விக்கியின் தன்மையே அது என்று முழுமையானது இல்லை, அதற்கு என்று இறுதித் திகதி இல்லை, அதை யாரும் மேம்படுத்தலாம் என்பதுவே. ஆகவே "முழுமையானதா" என்று பார்ப்பது கடைமட்டும் ஒரு கட்டுரை விக்கியில் இருப்பதற்க்கு தடையாக அமையக் கூடாது.
 • புதுப்பயனர்களுக்கு இது ஒரு பெருந்தடையாக இருக்கும்.
 • மேலே குறிப்பிட்ட புள்ளிவிபரங்களைப் பெரும்பாலான பயனர்கள் குறுங்கட்டுரைகள உருவாக்க விரும்புகிறார்கள் என்று கூட எடுத்துக்கொள்லலாம்.
 • ஊடங்களின் மதிப்பீட்டுக்கும் எதோ ஒரு வகையில் குறுங்கட்டுரைகள் உதவுகின்றன.

ஆக, பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். "ஒரு கலைக்களஞ்சியத்தில் முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் இல்லாத கட்டுரைகளையும் முறையான ஆதாரம் இல்லாத கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை"

 • முதன்மையான கட்டுரை என்றால் என்ன?
 • யார் தீர்மானிப்பது, அதகான வரையறை எங்கே உள்ளது?
 • போதுமான தகவல் என்றால் என்ன?
 • அதை யார் தீர்மானிப்பது

இக் கொள்கையைப் பயன்படுத்தி, எல்லாக் குறுங்கட்டுரைகளையும் ஒன்றிணைக்க முடியுமா? அப்படி ஆயின், தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் எதுவும் இருக்கும் நிலையா, இக் கொள்கையின் நோக்கு. --Natkeeran (பேச்சு) 20:43, 13 ஏப்ரல் 2014 (UTC)

//ஏகப்பட்ட குறுங்கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன//

இக்கொள்கை மூலம் தகவல் இழப்பு ஏதும் இல்லை. குறுங்கட்டுரைகளில் உள்ள தகவல் உரிய பக்கங்களில் சேர்க்கப்படுகிறது.

//இது தமிழ் விக்கிக்கு ஆரோக்கியமானது இல்லை. //

புதுப்பயனர்களை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 3 வரிக்கட்டுரை பரிந்துரை, தொடர்ந்து நெடுநாள் பயனர்கள் கூட 3 வரிக் கட்டுரைகளை மட்டும் உருவாக்கி ஆண்டுக் கணக்கில் விரிவாக்காமல் விடும் போக்குக்கே இட்டுச் செல்கிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆழமும் தரமும் குறைவதே நலமற்ற போக்கு. கட்டுரைகளின் ஆழமும் தரத்தையும் பின்னுக்குத் தள்ளி ஒட்டு மொத்தத் திட்டத்தின் மொத்தக் கட்டுரைகளின் எண்ணிக்கையும் தனிப்பட்ட பயனர்களின் ஆயிரவர், ஈராயிவர் சாதனைகளும் முன்வைக்கப்படும் நலமற்ற போக்கு தென்படுவதே தமிழ் விக்கிப்பீடியாவின் தொலைநோக்கு நலத்துக்குப் பாதகமானது.

//தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் முக்கியமானவை. //

எல்லா விக்கிப்பீடியாக்களிலும் குறுங்கட்டுரைகள் முக்கியமானவை தாம். அதில் மாற்றுக் கருத்தில்லை. குறுங்கட்டுரைகளின் குறைந்தபட்ச அளவு என்ன, அது எத்தகைய தரமுடையதாக இருக்க வேண்டும் என்பதே கேள்வி. எளிதாக ஒரு பட்டியலில் இடக்கூடிய உள்ளடக்கத்தை மூன்று வரிகளுக்கு இட்டுக் கட்டி எழுதுவது நலமற்ற போக்கு.

//வரையறைகள், சிறிய அறிமுகங்கள் மிகவும் பெறுமதி வாய்தவை. அதனை மூன்று வரிகளில் செய்ய முடியும்.//

வரையறைகளைச் செய்வதற்கான இடம் விக்சனரி,

கட்டிடக் கலைஞர், கால்நடை மருத்துவக் கல்லூரி போன்ற ஆழமற்ற வரையறைக் கட்டுரைகளும் தென்படுகின்றன.

//கட்டுரையை தொடர்பாக மேலும் மேலும் இறுக்கமான வரையறைகளை உருவாக்குவது பயனர் பங்களிப்புக்கு தடை, ஊக்கத்துக்கு தடை.//

ஏற்கனவே உள்ள கட்டுரைகளை, ஏற்கனவே உள்ள கொள்கையைக் கொண்டு ஒருங்கிணைப்பது எப்படி ஊக்கத்துக்குத் தடையாகும்? கட்டுரைகளைத் தங்கள் "சொந்தப் படைப்பாக" எண்ணும் போக்கில் இருந்து விலகி விக்கிப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

//தனிப்பக்கத்தைக் உருவாக்குவதன் மூலம் கூகிள் தேடலில் இலகுவாகக் கிட்டும்.//

பட்டியல் பக்கத்தில் இருந்தாலும் கிட்டும். ஆழமற்ற பக்கங்களைக் காட்டிலும் ஆழம் கூடிய பக்கங்களைத் தேடு பொறிகள் விரும்பும். சிறந்த உள்ளடக்கம் எது என்று கண்டுகொள்வது தேடுபொறிகளின் வேலை. அவற்றுக்காக, கலைக்களஞ்சிய நடைமுறைகளைத் தளர்த்தத் தேவையில்லை.

//தனிக்கட்டுரைகளாக இருக்கும் போது, அவற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு தடை நீக்கப்படுகிறது. பல புதிய பயனர்களுக்கு புதுக் கட்டுரை உருவாக்கத் தெரியாது.//

பிறகு ஏன் ஆண்டுக்கணக்கில் குறுங்கட்டுரைகள் விரிவாகாமல் தேங்கிக் கிடக்கின்றன? குறுங்கட்டுரைகளை விரிவாக்க எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு நெடுநாள் பயனர்களிடம் இருந்து கூட போதிய அளவு ஆதரவு இல்லை. எனவே, புதுப்பயனர்களுக்காக குறுங்கட்டுரைகளை உருவாக்குகிறோம் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.

//தனிக் கட்டுரைகளை உள் இணைப்புக்கள் கொடுக்கலாம், வெளியில் பகிரலாம், பகுப்பில் இடலாம், பட்டியலில் இடலாம்.//

நீண்ட கட்டுரைகளின் துணைத் தலைப்புகளுக்கும் இணைப்புகள் கொடுக்கலாம். வெளியில் பகிரலாம். பகுப்பில் இடலாம், பட்டியலில் இடலாம்.

//விக்கியின் தன்மையே அது என்று முழுமையானது இல்லை, அதற்கு என்று இறுதித் திகதி இல்லை, அதை யாரும் மேம்படுத்தலாம் என்பதுவே. ஆகவே "முழுமையானதா" என்று பார்ப்பது கடைமட்டும் ஒரு கட்டுரை விக்கியில் இருப்பதற்க்கு தடையாக அமையக் கூடாது.//

கட்டுரைகளை ஒன்றிணைப்பதும் மேம்பாடு கருதியே. இங்கு கட்டுரைகள் முழுமையானவையா என்று பார்க்கவில்லை. ஒரு முதன்மை / தனிக் கட்டுரையாக இருப்பதற்கான குறைந்தபட்ச தரம், உள்ளடக்கம் இருக்கிறதா என்றே பார்க்கப்படுகிறது.

//புதுப்பயனர்களுக்கு இது ஒரு பெருந்தடையாக இருக்கும்.//

http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm#editdistribution பாருங்கள்.

ஆயிரம் தொகுப்புகளுக்கு மேல் செய்த வெறும் 82 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் 84.9% வீதம் தொகுப்புகளைச் செய்துள்ளார்கள். இவர்கள் மொத்த விக்கிப்பீடியரில் 1.5% மட்டுமே. புதுப்பயனர்களுக்குத் தடை என்ற பெயரில் நாம் இளக்கும் கொள்கைகள் கூடுதல் தொகுப்புகளைச் செய்யும் நெடுநாள் பயனர்களாலேயே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, புதுப்பயனர்களுக்குத் தடையாக இருக்கும் என்ற வாதம் செல்லாது. குறிப்பாக, இந்தக் கொள்கைக்கும் புதுப்பயனருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

//மேலே குறிப்பிட்ட புள்ளிவிபரங்களைப் பெரும்பாலான பயனர்கள் குறுங்கட்டுரைகள உருவாக்க விரும்புகிறார்கள் என்று கூட எடுத்துக்கொள்லலாம்.//

குறுங்கட்டுரைகளை உருவாக்கத் தடை இல்லை. குறுங்கட்டுரைகளின் குறைந்தபட்ச அளவு என்ன, அது எத்தகைய தரமுடையதாக இருக்க வேண்டும் என்பதே கேள்வி. எளிதாக ஒரு பட்டியலில் இடக்கூடிய உள்ளடக்கத்தை மூன்று வரிகளுக்கு இட்டுக் கட்டி எழுதுவது நலமற்ற போக்கு.

//ஊடங்களின் மதிப்பீட்டுக்கும் எதோ ஒரு வகையில் குறுங்கட்டுரைகள் உதவுகின்றன.//

கட்டுரை எண்ணிக்கை ஒரு புறம் பெரிதாகத் தெரிந்தாலும் (இந்திக்கு அடுத்த இடம், இந்தியாவில் இரண்டாம் இடம்), ஏன் பல கட்டுரைகள் மூன்று வரிக் கட்டுரைகளாக உள்ளன என்பதே நான் ஊடகங்களிடம் இருந்து அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று. எனவே, இது ஊடக மதிப்பீட்டுக்கு உதவுவதாகத் தெரியவில்லை. ஆங்கில விக்கிப்பீடியா விரிவான தகவலைத் தருகிறது என்பதற்காக நாடுகிறோமா இல்லை குறுங்கட்டுரைகளைத் தருகிறது என்பதற்காக நாடுகிறோமா?

// முதன்மையான கட்டுரை என்றால் என்ன?

      யார் தீர்மானிப்பது, அதகான வரையறை எங்கே உள்ளது?
      போதுமான தகவல் என்றால் என்ன?
      அதை யார் தீர்மானிப்பது

//

வழக்கம் போல் பேச்சுப் பக்க உரையாடல், இணக்க முடிவு, தேவைப்பட்டால் வாக்கெடுப்பு தான். இதில் என்ன ஐயம்?--இரவி (பேச்சு) 21:14, 13 ஏப்ரல் 2014 (UTC)

பதில்களுக்குப் பதில்கள்

தொகு
 • தனிக் கட்டுரைகளாக இருப்பதில் உங்களுக்கு என்ன பெரிய சிக்கல்? தரவுத்தள அளவுச் சிக்கலா?
 • "புதுப்பயனர்களை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 3 வரிக்கட்டுரை பரிந்துரை" அப்படியா. இது எனக்குச் செய்தி. ஒரு கட்டுரையின் அடிப்படைத் தகுதியாகவே இது முன்வைக்கப்பட்டது.
 • "எளிதாக ஒரு பட்டியலில் இடக்கூடிய உள்ளடக்கத்தை மூன்று வரிகளுக்கு இட்டுக் கட்டி எழுதுவது நலமற்ற போக்கு." ஏன் இது நலமற்ற போக்கு? இதனால் என்ன பாதகம்?
 • வரையறை, சிறிய அறிமுகம் என்று கூறும் போது, விரிவுபடுத்தப்பட வேண்டியவற்றின் வரையறைகளையே குறிக்கின்றேன். எ.கா லென்சு விதி என்பது. ஆழமற்ற வரையறைகளை நீங்கள் விரிவுபடுத்தலாம். ஆனால், ஏற்கனவே ஒரு தொடக்கம் இருந்தால், அது பெரும்பாலும் உதவியாக இருக்கும்.
 • ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கூகிகில் தேடி, அக் கட்டுரைத் தலைப்பில் விக்கிக் கட்டுரை இருந்தால் அது கூகிளில் கூடிய இலகுவாகக் கிடைக்கும். இது SEO தொடர்பாக அடிப்படை தெரிந்த அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு விடயம்.
 • ஒருவர் ஆக்கிய ஒரு கட்டுரையை நீக்கும் போது, அது ஊக்கத்துக்கு தடையாகும்.
 • "பிறகு ஏன் ஆண்டுக்கணக்கில் குறுங்கட்டுரைகள் விரிவாகாமல் தேங்கிக் கிடக்கின்றன" இதையே ஒரு பிரச்சினையாக அணுகுகிறீர்கள். ஒரு குறுங்கட்டுரை ஏன் எரிச்சலுக்கு உரிய விடயம் ஆக அமைகிறது?
 • குறுங்கட்டுரைகள் விரிவுபட வேண்டும் என்று நீங்கள் கருதினால், ஏன் ஒரு சிறிய நேரத்தையாவாது அவற்றை மேம்படுத்தும் பணியில் செலவிடக் கூடாது?

--Natkeeran (பேச்சு) 21:40, 13 ஏப்ரல் 2014 (UTC)

பதில்களின் பதில்களுக்குப் பதில்கள்

தொகு

//தனிக் கட்டுரைகளாக இருப்பதில் உங்களுக்கு என்ன பெரிய சிக்கல்?//

கட்டுரைகளை ஒன்றிணைப்பதால் உங்களுக்கு என்ன சிக்கல் :)

பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள் - இவற்றில் பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் / உசாத்துணை இல்லை. அப்படி இருக்ககூடிய ஒரு தரவு வெளியிணைப்பாக இருக்கிறது. இந்த மாற்றங்களைக் கோரி 4000+ கட்டுரைகளில் வார்ப்புரு இடுவதும் திருத்துவதும் தேவையற்ற பங்களிப்புச் சுமை.

தரவுத்தளத்தின் தரவுகளை சொற்களாக விரித்திருக்கும் இக்கட்டுரைகளில் வேறு உள்ளடக்கம் ஏதும் இல்லை. இதையே ஒரு வரிசையப்படுத்தக்கூடிய பட்டியல் பக்கமாக இட்டால்

 • ஆட்டக்காரர்களின் பெயர்கள்
 • பிறந்த ஆண்டு / வயது / விளையாடிய ஆண்டுகள்
 • விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கை
 • பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை

என்று பல்வேறு வகைகளில் வரிசைப்படுத்திப் பார்த்து ஒரு புரிதலுக்கு வரலாம். தற்போது இப்புரிதலைப் பெற 4000+ கட்டுரைகளைச் சொடுக்கித் திறக்கவும் முடியாது. புரிதலுக்கு வரவும் முடியாது. எப்படித் தனிக்கட்டுரைகளால் சில பயன்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதே போல் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுரைகளாலும் சில பயன்கள் உண்டு.

பகுப்பு:இந்தியத் தமிழ் இதழ்கள் பார்த்தால், சான்றில்லாத 300+ கட்டுரைகள் என்றிருப்பதை விட சான்றில்லாத ஒரு கட்டுரை என்பது துப்புரவுக்கும் தரக் கணிப்புக்கும் நல்லது. இவற்றில் சில இதழ்கள் நாள் ஒரு நூல் திட்டத்தை சான்றாக காட்டுகின்றன. ஒரே சொற்றொடரைத் தேவையின்றி பல கட்டுரைகளில் சேர்ப்பதை விட ஒரே ஆதாரமாகத் தந்து விட்டுப் போகலாம்.

//"புதுப்பயனர்களை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 3 வரிக்கட்டுரை பரிந்துரை" அப்படியா. இது எனக்குச் செய்தி. ஒரு கட்டுரையின் அடிப்படைத் தகுதியாகவே இது முன்வைக்கப்பட்டது.//

ஒரு கட்டுரையின் அடிப்படைத் தகுதியைக் கூட்டுவதால் புதுப்பயனர் ஊக்கம் இழப்பார் என்றால், அதே ஏரணத்தின் அடிப்படையில் இது புதுப்பயனர்களை ஊக்குவிக்கும் ஒரு வழிகாட்டலாகவும் காணலாம். பல்வேறு பரப்புரை நிகழ்வுகளில் 3 வரி எழுதினால் கூட போதும் என்று கூறியே புதுப்பயனர்களை ஊக்குவிக்கிறோம்.

//ஆழமற்ற வரையறைகளை நீங்கள் விரிவுபடுத்தலாம். ஆனால், ஏற்கனவே ஒரு தொடக்கம் இருந்தால், அது பெரும்பாலும் உதவியாக இருக்கும்.//

குறுங்கட்டுரைகள் அப்படியே தேங்குவதையே காண முடிகிறது. எனவே, ஏற்கனவே ஒரு குறுங்கட்டுரை இருப்பது உதவுவதாக எண்ண இயலாது. அண்மைய கட்டுரைப் போட்டியில் கூட, பரிசுப் பணம் கொடுத்தும், முக்கியமான கட்டுரைகளைக் கூட பெருமளவில் விரிவாக்க முடியவில்லை. இதற்கு முந்தைய குறுங்கட்டுரை விரிவாக்க முயற்சிகளும் இதே நிலையையே சந்தித்தன.

//ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கூகிகில் தேடி, அக் கட்டுரைத் தலைப்பில் விக்கிக் கட்டுரை இருந்தால் அது கூகிளில் கூடிய இலகுவாகக் கிடைக்கும். இது SEO தொடர்பாக அடிப்படை தெரிந்த அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு விடயம்.//

http://www.google.com/webmasters/docs/search-engine-optimization-starter-guide.pdf பார்க்கலாம். ஒரு பக்கம் எப்படி தேடல் முடிவுகளில் முந்துகிறது என்பதற்கு 200+ காரணிகள் உள்ளன. அதில் இரண்டு தான் தலைப்பிலும் முகவரியிலும் குறிச்சொற்கள் இருப்பது. பிற தளங்களில் இருந்து கூடுதல் இணைப்புகளைப் பெறும் ஆழமான கட்டுரைகள் இருப்பதும் கூட கூகுள் தேடலில் முந்துவதற்கான ஒரு முக்கிய காரணி தான்.

//ஒருவர் ஆக்கிய ஒரு கட்டுரையை நீக்கும் போது, அது ஊக்கத்துக்கு தடையாகும்.//

இக்கொள்கை கட்டுரைகளை ஒன்றிணைப்பது பற்றியே பேசுகிறது. கட்டுரைகளை முற்றிலும் நீக்குவது வேறு. கட்டுரைகளைத் திருத்துவது, ஒன்றிணைப்பது முதலியன வழமையான விக்கிப் பணிகள். இதில் பயனர் ஊக்கம் இழக்க ஒன்றும் இல்லை.

//"பிறகு ஏன் ஆண்டுக்கணக்கில் குறுங்கட்டுரைகள் விரிவாகாமல் தேங்கிக் கிடக்கின்றன" இதையே ஒரு பிரச்சினையாக அணுகுகிறீர்கள். ஒரு குறுங்கட்டுரை ஏன் எரிச்சலுக்கு உரிய விடயம் ஆக அமைகிறது?//

ஏதாவது ஒரு கட்டுரை பொத்தானை அழுத்தி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள முனைந்து பாருங்கள். பிரச்சினைக்குரிய பல கட்டுரைகள் ஒருங்கிணைந்த கட்டுரைகளாக இருந்தால் தரமும் கூடும். துப்புரவுச் சுமையும் குறையும்.

//குறுங்கட்டுரைகள் விரிவுபட வேண்டும் என்று நீங்கள் கருதினால், ஏன் ஒரு சிறிய நேரத்தையாவாது அவற்றை மேம்படுத்தும் பணியில் செலவிடக் கூடாது?//

நற்கீரன், துப்புரவுப் பணி என்பது வெறும் அழித்தல் / நீக்கல் பணி இல்லை. பல கட்டுரைகளில் துப்புரவாளர்கள் விக்கியாக்கம் செய்கிறார்கள். மேற்கோள்களைச் சேர்க்கிறார்கள். ஆனால், குறிப்பிடத்தக்கமை கேள்விக்குரியதாகவும் போதிய ஆதாரங்கள் இல்லாமலும் இருக்கும் கட்டுரைகளை எல்லாராலும் விரிவுபடுத்த முடியாது. எனவே தான், அவற்றை விரிவாக்கும் பொறுப்பை உருவாக்கியவரிடம் கோருகிறோம்.

அண்மைய மாற்றங்களில் குறுங்கட்டுரைத் தூண்டல் இடுவது, பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் கட்டுரைகளை மேம்படுத்தக் கோருவது, முக்கியமான குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது தொடர்பான கட்டுரைப் போட்டி என்று ஆக்கப் பணிகளும் ஒரு புறம் நடந்தவாறே உள்ளன.

தவிர, விக்கியில் அவரவர் ஈடுபாடு சேர்ந்தே பங்களிக்க முடியும், யாரையும் எதையும் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியாது என்று இன்னொரு இடத்தில் கூறியிருந்தீர்கள். அதே அடிப்படையில், துப்புரவுப் பணியில் ஈடுபடும் விருப்பமுள்ளோருக்கு தக்க ஒத்துழைப்பைத் தருமாறு வேண்டுகிறேன். தற்போது சிக்கலுக்குரிய கட்டுரைகளை ஒன்றிணைக்கக் கூடாது என்று விரும்பினால், நீங்கள் கூட அவற்றை மேம்படுத்த முனையலாமே? நன்றி.--இரவி (பேச்சு) 07:15, 14 ஏப்ரல் 2014 (UTC)

பராமரிப்புப் பணிச் சிக்கல் இல்லாத குறுங்கட்டுரைகள்

தொகு

இணைக்கப் பயன்படும் ஒரே ஒரு தகுந்த காரணம் பராமரிப்புப் பணிச் சிக்கல். தரவுகள் இற்றைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளுக்கு இச் சிக்கல் இருக்கின்றது. அக் கட்டுரைகளும் தரவுகள் இற்றைப்படுத்த வேண்டாத படி எழுதப்படலாம். ஆனால் அப்படி இல்லாத கட்டுரைகளுக்கு இந்த இணைப்பு வார்ப்புரு முற்றிலும் பொருந்தாது. --Natkeeran (பேச்சு) 16:28, 17 ஏப்ரல் 2014 (UTC)

இணைப்பு

தொகு

குறுங்கட்டுரைகளை ஒரு பெரும் கட்டுரையுடன் இணைப்பதாக முடிவெடுக்கப்பட்டால், குறுங்கட்டுரையின் வரலாறும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும். அது குறித்து கொள்கைப் பக்கத்தில் எதுவும் கூறப்படவில்லை.--Kanags \உரையாடுக 23:08, 2 மே 2014 (UTC)Reply

Kanags, கடந்த முறை இக்கொள்கையை நடைமுறைப்படுத்திய போது நூற்றுக் கணக்கான கட்டுரைகளை வழிமாற்றி விட்டு ஒன்றாக்கிறோம். வழிமாற்றுகள் இல்லாவிட்டால் பழைய உள்ளிணைப்புகள் முறிய வாய்ப்புண்டு. வழிமாற்றுகள் தேவையில்லை, அதே வேளையில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை வரலாற்றுடன் ஒன்றிணைப்பது நுட்ப அடிப்படையில் இயலும் என்றால், அவ்வாறு செய்வதில் சிக்கல் இல்லை.--இரவி (பேச்சு) 15:10, 6 மே 2014 (UTC)Reply
நுட்பத்திற்காகவோ அல்லது சிக்கலுக்காகவோ இதனை நான் குறிப்பிடவில்லை. ஆனால், பயனர்களின் உழைப்புக் காட்டப்பட வேண்டும். முறைப்படி வரலாற்றுடன் இவை கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். இல்லையேல் தனிக் கட்டுரைகளாகவே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 20:55, 6 மே 2014 (UTC)Reply

ஏன் பிரித்துவைத்துருக்க வேண்டும் - விக்கித் தத்துவம்

தொகு
 • பல துறைகளில் பல தகவல்களை ஒரு நீண்ட பட்டியலாக, அல்லது பெருங்க் கட்டுரையாகத் தொகுப்பதிலும் காட்ட, குறுங்கட்டுரைகளாகத் தொகுப்பது இலகு. இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டும் இல்லை, பல விக்கியர்களின் அனுபவமும் ஆகும். ( It is better to have a short, succinct articles rather than having that topic spread out in a larger, related topic)
 • பகுப்பு இடுதல் இலகு (it is easier to allocate categories)
 • இடையிணைப்பு, வெளி இணைப்புக்களைத் தருதல் இலகு ( appropriate internal and external links)
 • குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது இலகு (இதனால்தான் நாம் ஆயிரக் கணக்கில் தமிழ்நாட்டு ஊர் பற்றிய கட்டுரைகளை உருவாக்கினோம்) (it is easier to start with a standalone stub article rather than attempting to extricate information from an existing article with a broad coverage at a later date)
 • தேடலில் முதலில் வரும்
 • இணைப்பதால் தரம் கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 • மேற்கோள் தரப்படவில்லை என்பது இணைப்பதற்கு ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. இணைப்பதால் மேற்கோள் பெறப்படும் என்றும் இல்லை.
 • கட்டுரையின் அளவு அதன் இருப்புக்கான ஒரு கேள்வியை உண்டாக்கக் கூடாது. குறுங்கட்டுரைகளை இருக்க விடுங்கள்.
 • ஆங்கில விக்கியில் எந்த ஒரு obscure தலைப்பில் எழுதினாலு, அதற்கு சான்று காட்ட முடியும். அதற்கான வாதாட ஒரு படை இருக்கும். இங்கு அப்படி இல்லை. ஆகவே நான் இறுக்கமாக செயற்பட வேண்டியதில்லை.
 • ஆகவே, தரவு இற்றைப்படுத்தலே இணைத்தலுக்கான ஒரே ஒரு வலுவான காரணமாகப் பாக்கிறேன். அப்படி இல்லாத பகுப்புக்களை இணைப்பதை எதிர்க்கிறேன்.
 • குறுங்கட்டுரைகள் உருவாக்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல.

மேலும் பார்க்க:

--Natkeeran (பேச்சு) 03:34, 3 மே 2014 (UTC)Reply

  விருப்பம்.--Kanags \உரையாடுக 04:23, 3 மே 2014 (UTC)Reply
நற்கீரன், தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க தலைப்புகள் மீதான குறுங்கட்டுரைகளை அனைவரும் ஏற்கிறோம். குறிப்பிடத்தக்கமை, அடிப்படை தகவல் பற்றிய மாற்றுக் கருத்துகள் தொடர்பாக உரையாடி வருகிறோம். இந்நிலையில்,
 • இக்கொள்கையே வேண்டாம் என்கிறீர்களா? ஒரு தேவையின் அடிப்படையிலேயே இக்கொள்கை உருவானது. வருங்காலத்தில் இத்தேவையை எவ்வாறு அணுகுவது?
 • இக்கொள்கையின் குறித்த பகுதியில் மாற்றம் வேண்டும் என்கிறீர்களா? ஆம் எனில், கொள்கையின் எப்பகுதியில் மாற்றம் வேண்டும் என்பது பற்றி குறிப்பாக விளக்குங்கள்.
 • கொள்கை இருக்கட்டும், ஆனால், தற்போது இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள சில இடங்கள் தவறானவை என்று கருதுகிறீர்களா? ஆம் எனில், குறித்த பகுப்புகளின் பேச்சுப் பக்கங்களிலேயே இது குறித்து உரையாடலாம். கொள்கையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுவதைத் தவிர்க்கலாம்.

நன்றி. --இரவி (பேச்சு) 15:16, 6 மே 2014 (UTC)Reply

 • குறுங்கட்டுரைகள் இருக்கலாம், ஆனால் குறிப்பிடத்தக்கவைதான் சிக்கல் என்றால் ஒட்டுமொத்தமாக பகுப்புகளை இணைக்கவும் என்று கோர வேண்டாம். சிற்றிதழ்கள் தொடர்பான குறிப்பிடத்தக்கவை கொள்கை இன்னும் இல்லை. ஒரு பயனர் பங்களித்ததை retroactive ஆக ஒட்டுமொத்தமாக நீக்குவோம் போன்று செயற்படுவது பண்பல்ல.
 • இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் தொடர்பான அணுகுமுறையால் பல பாதகமான பின் விளைவுகள் நடந்து உள்ளன. ஆகவே அந்த அணுகுமுறை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
 • "ஒரு கலைக்களஞ்சியத்தில் முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் இல்லாத கட்டுரைகளையும் முறையான ஆதாரம் இல்லாத கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை. " என்பது abstract ஆன ஒரு வரையறை. இந்தக் கலைக்களஞ்சியம். அச்சில் வெளிவரும் மரபுவழிக் கலைக்களஞ்சியமா? அல்லது அபிதானகோசம் போன்ற எந்த அறிவியல் தகவல்களும் இடம்பெறாத புராணக் கலைக்களஞ்சியமா? இது எவ்வாறு, யாரால் தீர்மானிக்கப்படும்? " தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளின் அடிப்படையில் இவை நீக்கப்படும்." எந்தக் கொள்கைகள்?
 • ஆக, கொள்கையில் சிக்கல். சிற்றிதழ்கள் இருக்கலாம், இருக்கக் கூடாது என்று கொள்கை இல்லாமல் நடவடிக்கை எடுத்ததும் சிக்கல். --Natkeeran (பேச்சு) 17:02, 9 மே 2014 (UTC)Reply

நற்கீரன், இக்கொள்கையே சிக்கல் என்று உங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளதால், கொள்கை பற்றி மட்டும் இங்கு உரையாடுவோம். சிற்றிதழ்கள் பற்றிய உரையாடலை பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள் பக்கத்தில் தொடர்வோம்.

//குறிப்பிடத்தக்கவைதான் சிக்கல் என்றால் ஒட்டுமொத்தமாக பகுப்புகளை இணைக்கவும் என்று கோர வேண்டாம்.//

சரி, இனி குறிப்பிடத்தக்கமை சிக்கல்கள் எழும்போது அது தொடர்பான உரையாடல்களை அவற்றின் பகுப்புகளில் தொடங்குகிறேன். ஏற்கனவே உள்ள குறிப்பிடத்தக்கமை உரையாடல்களில் உங்கள் குறிப்பிடத்தக்கமை பரிந்துரைகளைத் தருமாறு வேண்டுகிறேன்.

//ஒரு பயனர் பங்களித்ததை retroactive ஆக ஒட்டுமொத்தமாக நீக்குவோம் போன்று செயற்படுவது பண்பல்ல.//

புதுப்பயனர்களை அரவணைக்க அவர்களின் பங்களிப்புகளில் மட்டும் சற்று கொள்கைகளைத் தளர்த்துவது வழக்கம். மற்ற எந்தக் கட்டுரைகளிலும் யார் எழுதியது என்று பார்த்து நடவடிக்கை எடுப்பது வழக்கமன்று. விக்கிப்பீடியாவே ஒரு தொடர் பணி தான் என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். புதிய கட்டுரைகள் வருவது போல் புதிய கொள்கைகளும் வரும், ஏற்கனவே உள்ள கொள்கைகளும் மாறுதலுக்கும் மேம்பாட்டுக்கும் உட்படும். அவை அனைத்துக் கட்டுரைகளுக்கும் சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தானே விக்கி முறை. எனவே, பின்னோக்கிச் செயற்படுத்துவதாவும் பண்பு மீறலாகவும் நீங்கள் கூறுவது பொருந்தாது.

//இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் தொடர்பான அணுகுமுறையால் பல பாதகமான பின் விளைவுகள் நடந்து உள்ளன. //

இது குறித்து விரிவாக கூறினால் என்ன மாற்றம் தேவை என்று பார்க்கலாம்.

//அச்சில் வெளிவரும் மரபுவழிக் கலைக்களஞ்சியமா? அல்லது அபிதானகோசம் போன்ற எந்த அறிவியல் தகவல்களும் இடம்பெறாத புராணக் கலைக்களஞ்சியமா?//

அச்சில் வராவிட்டாலும், காகித அளவு போன்ற கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், முதற்கண் இது ஒரு கலைக்களஞ்சியம். அதற்கு என்று மரபார்ந்த சில வரைமுறைகள் உள்ளன. விக்கிப்பீடியா இவை அன்று என வழிகாட்டல்கள் உள்ளன. நிச்சயமாக, விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் இல்லை. எனவே, ஒரு தரவுத்தளத்தில் இடம்பெறும் அளவே உள்ள தகவல்கள் இங்கு எழுதப்படும் போது, அவற்றின் குறிப்பிடத்தக்கமை பற்றிய கேள்வி எழத்தான் செய்யும்.--இரவி (பேச்சு) 15:41, 11 மே 2014 (UTC)Reply

//பல துறைகளில் பல தகவல்களை ஒரு நீண்ட பட்டியலாக, அல்லது பெருங்க் கட்டுரையாகத் தொகுப்பதிலும் காட்ட, குறுங்கட்டுரைகளாகத் தொகுப்பது இலகு. இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டும் இல்லை, பல விக்கியர்களின் அனுபவமும் ஆகும். ( It is better to have a short, succinct articles rather than having that topic spread out in a larger, related topic)//

நற்கீரன், தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க தலைப்புகள் மீதான குறுங்கட்டுரைகளை அனைவரும் ஏற்கிறோம். குறிப்பிடத்தக்கமை, அடிப்படை தகவல் பற்றிய மாற்றுக் கருத்துகள் தொடர்பாக உரையாடி வருகிறோம்.

//பகுப்பு இடுதல் இலகு (it is easier to allocate categories)//

பகுப்பு இடுவது இலகு என்பதற்காக போதிய உள்ளடக்கமும் குறிப்பிடத்தக்கமையும் இல்லாத குறுங்கட்டுரைகளை உருவாக்குதல் கூடாது. பகுப்புகளுக்குப் பதிலாக, தகுந்த இடங்களில் பட்டியல்களை உருவாக்க முடியும்.

//இடையிணைப்பு, வெளி இணைப்புக்களைத் தருதல் இலகு ( appropriate internal and external links)//

இடையிணைப்புகள் தருவதற்கும் குறுங்கட்டுரை / நீண்ட கட்டுரையாக இருப்பதற்கும் தொடர்பில்லை. விக்கியிடை இணைப்புகளைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால், இக்கொள்கையின் வழியாக நடவடிக்கை எடுக்கக் கோரும் கட்டுரைகள் யாவும் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டுமே உள்ள, குறிப்பிடத்தக்கமை கேள்விக்குரிய, கட்டுரைகள். இவை எவற்றுக்கும் வெளியிணைப்புகள் கிடைக்கும் வாய்ப்பும் தெரியவில்லை.

//குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது இலகு (இதனால்தான் நாம் ஆயிரக் கணக்கில் தமிழ்நாட்டு ஊர் பற்றிய கட்டுரைகளை உருவாக்கினோம்) (it is easier to start with a standalone stub article rather than attempting to extricate information from an existing article with a broad coverage at a later date)//

தமிழ்நாட்டு ஊர்களைப் பற்றி கட்டுரைகளை உருவாக்கக் காரணம், அவை கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்க தலைப்புகள் என்பதே. தற்போது கட்டுரை ஒருங்கிணைப்புச் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் பல கட்டுரைகளை விட அவை போதுமான அளவு உள்ளடக்கத்துடன் அடிப்படை தகவல் உள்ளவாறே உருவாக்கப்பட்டன. குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது இலகு என்றால் தமிழ் விக்கிப்பீடியாவில் 18,000 (ஏறத்தாழ 30%) கட்டுரைகள் 2 கிலோ பைட்டு அளவுக்குக் கீழ் இருக்கத் தேவை இல்லை. தொடக்கத்தில் குறுங்கட்டுரைகளை உருவாக்கி வைத்தால் யாராவது வந்து மேம்படுத்துவார்கள் என்று எண்ணித் தேங்கிப் போன ஏராளமாக விக்கிப்பீடியா வரலாறுகள் உள்ளன. தமிழ் சிற்றிதழ்களை பற்றிய கட்டுரைகளைப் பொருத்த மட்டில் இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் எந்த மேம்பாடும் இல்லை. ஆதாரங்கள் கூட சேர்க்கப்படவில்லை.

//தேடலில் முதலில் வரும்//

இதற்கு முன் இவ்வாறு கட்டுரைகளை ஒன்றிணைத்த இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் கட்டுரையில் இருந்து சில குறிச்சொற்களை எடுத்து கூகுளில் தேடிப் பார்த்தால் இலகுவாகச் சிக்குகின்றன. சொல்லப் போனால், தமிழ் விக்கிப்பீடியாவைத் தவிர வேறு எங்கும் பெரும்பாலும் இப்பெயர்கள் அடிபடாத அளவு குறிப்பிடத்தக்கமை கேள்விக் குறியாகவே உள்ளது. பார்க்க: 1, 2, 3. எனவே, கட்டுரைகளை ஒன்றிணைதால் தேடலில் சிக்காது என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.

//இணைப்பதால் தரம் கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.//

தனியாக இருப்பதால் தரம் கூடும் என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால், கட்டுரைகளை இணைப்பதால் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த தரம் கூடும். எடுத்துக்காட்டுக்கு, சராசரி பைட்டு அளவு கூடும். ஆதாரமில்லா கட்டுரைகளின் எண்ணிக்கை குறையும்.

//மேற்கோள் தரப்படவில்லை என்பது இணைப்பதற்கு ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. இணைப்பதால் மேற்கோள் பெறப்படும் என்றும் இல்லை.//

பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் from November 2012 பகுப்பில் மட்டும் இதழ்கள் தொடர்பான 124 கட்டுரைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு மேற்கோள் கூட சேர்க்க முடியாமல் தேங்கி உள்ளன. தனியாக இருந்தாலும் மேற்கோள் பெறுவதற்கான உறுதி இல்லை என்பதையே இது சுட்டுகிறது. கட்டுரைகளை ஒன்றிணைத்தால், மேற்கோள் இல்லாத கட்டுரைகளின் எண்ணிக்கையாவது குறையும். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் கூடும்.

//கட்டுரையின் அளவு அதன் இருப்புக்கான ஒரு கேள்வியை உண்டாக்கக் கூடாது. குறுங்கட்டுரைகளை இருக்க விடுங்கள்.//

தமிழ் விக்கிப்பீடியாவில் ஏராளமான தரமான குறுங்கட்டுரைகளும் மற்ற பல குறுங்குட்டுரைகளும் இருந்து கொண்டு தானே இருக்கின்றன? 18,000 (ஏறத்தாழ 30%) கட்டுரைகள் 2 கிலோ பைட்டு அளவுக்குக் கீழ் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒரே கட்டுரையாக்கவோ நீக்கவோ கோரவில்லை. ஒரே பயனரால் எந்த வித ஆதாரமுமின்றி ஒரே துறை தொடர்பாக போதுமான உள்ளடக்கமும் இல்லாமல் குறிப்பிடத்தக்கமையும் இல்லாமல் எழுதப்பட்ட ஒரே மாதிரியான நூற்றுக் கணக்கான கட்டுரைகள் பற்றியே இங்கு உரையாடுகிறோம்.

//ஆங்கில விக்கியில் எந்த ஒரு obscure தலைப்பில் எழுதினாலு, அதற்கு சான்று காட்ட முடியும். அதற்கான வாதாட ஒரு படை இருக்கும். இங்கு அப்படி இல்லை. ஆகவே நான் இறுக்கமாக செயற்பட வேண்டியதில்லை.//

ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு எல்லா இடங்களிலும் இறுக்கம் தேவையில்லை. ஆனால், சில இடங்களிலாவது குறைந்தபட்ச வரையறைகளாவது இருந்தால் தான் கலைக்களஞ்சியத் தரத்தைப் பேண முடியும்.

//குறுங்கட்டுரைகள் உருவாக்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல.//

துப்புரவுப் பணியில் ஈடுபடுபவர்கள் துரோகிகள் அல்லர் :)--இரவி (பேச்சு) 19:29, 11 மே 2014 (UTC)Reply

விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் பக்க உரையாடல்

தொகு

விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை ஒன்றிணைத்தல் என்பதற்கே இருவேறு பக்கங்கள் உள்ளதுடன், ஒன்றில் விக்கிப்பீடியா கட்டுரை ஒன்றிணைப்பு வார்ப்புரு இடப்பட்டுள்ளது.  
எனவே, இந்தக் கட்டுரைகளை ஒருங்கிணைக்க முன்னர் பேச்சுப் பக்க உரையாடலை இங்கே நகர்த்துகிறேன்.--கலை (பேச்சு) 19:00, 31 சனவரி 2019 (UTC)Reply

Wikipedia:ஒரே உள்ளடக்க கட்டுரைகளை ஒன்றாக்கும் முறை

--Natkeeran 21:43, 16 மே 2006 (UTC)Reply

இரு கட்டுரைகளை ஒன்றாக்குவது குறித்து step by step விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கும். இப்போது உள்ள விளக்கம் எனக்கு புரியவில்லை\போதுமானதாக இல்லை. --குறும்பன் (பேச்சு) 15:13, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம் விரிவாக விளக்குங்கள். எனக்கும் புரியவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:17, 9 ஆகத்து 2014 (UTC)Reply
சுருக்கமான விளக்கம்:

A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம். A கட்டுரையில் உள்ள முக்கிய தகவல்களை B கட்டுரையில் சேருங்கள். பின்னர் அதனை A கட்டுரைக்கு மாற்றுங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி மாற்றுங்கள். பின்னர் A கட்டுரையை நீக்க வேண்டும். பின்னர் அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள். இதனை நிருவாக அணுக்கம் உள்ள ஒருவரே செயற்படுத்த முடியும்:(--Kanags \உரையாடுக 12:18, 10 செப்டம்பர் 2014 (UTC)

எதனை முதன்மைப்படுத்துவது?

தொகு

இங்கு எதனை முதன்மைப்படுத்துவது என்பது தொடர்பில் வழிகாட்டுதல் அவசியம். வழமையாக பழைய கட்டுரை முதன்மையாக்கப்படுகிறது. புதிய கட்டுரை வழிமாற்றாக்கப்படுகிறது.

 • கட்டுரையில் பிற விடயங்கள் [எ.கா 1: அளவு, தலைப்பு, பிற மொழி இணைப்பற்ற கட்டுரை] கருத்திற் கொள்ளப்படுவதில்லை.
 • எ.கா 2: பெருமூங்கில், சிறுமூங்கில் ஆகிய கட்டுரைகள் முறையே வெதிரம், வேரல் பெயர்களில் 27 மார்ச் 2012‎, 24 மார்ச் 2012‎ ஆகிய திகதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையான ஆங்கிலக்கட்டுரைகள் முறையே 2 September 2014‎, 8 October 2009‎ ஆகிய திகதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. முதலாவது கட்டுரை பிறமொழிகளுடன் விக்கித்தரவில் இணைக்கப்பட, கட்டுரை உருவாக்கப்பட்டபோது வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாவது கட்டுரைக்கு வாய்ப்புள்ளது. பிறமொழிகளுடன் இணைக்கப்படாமை, தற்போதைய வழக்கில் அல்லாத பெயர்களில் கட்டுரையை உருவாக்கியமை ஆகிய காரணங்களால் வேறு ஒரு பயனரால் தற்போதைய நடைமுறைப் பெயர்களில் புதிய கட்டுரையை உருவாக்க வாய்ப்புள்ளது.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் எதனை முதன்மைப்படுத்துவது? முதன் முதலின் உருவாக்கிய கட்டுரை என்பதற்காக தலைப்புச் சிக்கல் உள்ள, அளவு குறைவான, பிற மொழி இணைப்பற்ற கட்டுரைகளை முன்மைப்படுத்தக் கூடாது. நான் உருவாக்கிய சில கட்டுரைகள் இவ்வாறு காணாமல் போயுள்ளன. பல சந்தர்ப்பங்களில் பலருடைய கட்டுரைகளையும் ஒன்றிணைத்தல் மூலம் காணாமல் போகச் செய்துள்ளேன். பல சந்தர்ப்பங்களில் 3 வரிக்கட்டுரை ஒன்றிணைப்பு பல வரிக்கட்டுரைகளை இல்லாமல் செய்து 3 வரிக்கட்டுரை உருவாக்கிய பயனர் பெயரில் நல்ல கட்டுரை அமைகிறது. பங்களிப்பாளரின் தொகுப்பு வரலாற்றில் இணைக்கப்படும் என்ற கருத்து இருந்தாலும், அதிகம் உழைத்த பயனர் கட்டுரையை இழக்கிறார். இது நியாயமாகப்படவில்லை.

கட்டுரைகள் எல்வாவற்றுக்கும் வரலாற்றுடன் இணைப்பது (en:Wikipedia:Administrators' guide/Fixing cut-and-paste moves) தேவையற்றது. சில சந்தர்ப்பங்களில் வழிமாற்று போதுமானதாகிறது. இது குறித்து முடிவெடுப்பது அவசியம். --AntanO 09:08, 26 பெப்ரவரி 2017 (UTC)

ஒன்றிணைக்கும் போது எதனை முதன்மைப்படுத்துவது என்பதில் பிரச்சினை எதுவும் தோன்றுவதில்லை. எந்தத் தலைப்பு சரியானது என நீங்கள் நினைக்கிறீர்களோ அதனை முதன்மைப்படுத்தலாம். கட்டாயம் முதலில் உருவாக்கப்பட்ட தலைப்புத் தான் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமென்ற அவசியமில்லை. இரண்டு கட்டுரைகளிலும் உள்ள தகவல்கள், வரலாறுகள் இணைக்கப்படுவதே மிக முக்கியமானது. முதலாவது கட்டுரை அது குறுங்கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம், உதாரணமாக, இரண்டாவதாக எழுதப்பட்ட கட்டுரை ஒரு குறுங்கட்டுரையாக ஒருவர் மட்டுமே எழுதியிருந்தால், அதனை இணைக்கத் தேவையில்லை. ஆனாலும், தேவைப்படும் இடத்து, சம்பந்தப்பட்ட பயனர் விரும்பும் இடத்து அல்லது முறையிடும் இடத்து, இதன் வரலாற்றை பின்னரும் இணைக்கலாம். //நான் உருவாக்கிய சில கட்டுரைகள் இவ்வாறு காணாமல் போயுள்ளன// அன்ரன், முறையாக இணைத்தால் காணாமல் போவதற்கு சந்தர்ப்பம் இல்லை.--Kanags \உரையாடுக 10:57, 26 பெப்ரவரி 2017 (UTC)

கட்டுரை ஒன்றிணைத்தலில் பிரச்சனை?

தொகு

@Kanags:வரலாற்றுடன் கட்டுரைகளை ஒன்றிணைக்க முடியாமல் உள்ளது. முதன்மைக் கட்டுரையை நீக்கிவிட்டு நகர்த்தும்படி சொல்லும்போது பிழை காட்டுகிறது. [XEnw@gpAADgAABTKJKkAAABA] 2019-01-24 17:08:10: Fatal exception of type MWException --கலை (பேச்சு) 17:21, 24 சனவரி 2019 (UTC)Reply

@Kalaiarasy: மேற்படி வழு அனைவருக்கும் வருகிறது. இவ்வழு இல்லாமல் இணைப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. சரியான கட்டுரைத் தலைப்பை நீக்கி விட்டு, பின்னர் அத்தலைப்புக்கு மற்றைய கட்டுரையை (மேம்பட்ட நிலையில்) வழிமாற்றி விட்டு, பின்னர் அதனை தனியே திறந்து அதனை நீக்கிவிட்டு, பின்னர் அக்கட்டுரைத் தலைப்புக்கு புதிய கட்டுரையை மாற்றுங்கள். மீண்டும் முழுமையான வரலாறுகளுடன் அதனை மீள்விக்கலாம்.--Kanags (பேச்சு) 22:28, 24 சனவரி 2019 (UTC)Reply

@Kanags: நேற்று நான் மீண்டும் முயற்சித்த போது தடுமாற்றம் ஏற்பட்டது. பின்பு நீண்ட நேரம் போராடி மீளமைத்தேன். //பின்னர் அதனை தனியே திறந்து அதனை நீக்கிவிட்டு, பின்னர் அக்கட்டுரைத் தலைப்புக்கு புதிய கட்டுரையை மாற்றுங்கள்.// இங்கு கொஞ்சம் புரியவில்லை. எக்கட்டுரையை நீக்கவேண்டும்? உதவுங்கள். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:55, 25 சனவரி 2019 (UTC)Reply

@Parvathisri: இங்கே முடிந்தளவு விளக்கமாக எழுதியுள்ளேன். முதலாவது முறையை முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.--கலை (பேச்சு) 18:40, 31 சனவரி 2019 (UTC)Reply

மேற்படி வழு இப்போது இல்லை.--Kanags (பேச்சு) 22:02, 31 சனவரி 2019 (UTC)Reply
Return to the project page "கட்டுரை ஒன்றிணைப்பு".