கட்டடக் கலைஞர்

கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை செய்பவர்
(கட்டிடக் கலைஞர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி (Architect) என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் பிரிட்ஸ்கெர் பரிசு (Pritzker Prize)[1] ஆகும்.

ஒரு கட்டடக் கலைஞர் வேலை செய்கிறார்,1893

முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள்.

பல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொழில் முறையில், கட்டிடக் கலைஞர் ஒருவரின் தீர்மானங்கள் பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியவை. அதனால், உயர்நிலைக் கல்வியையும், செய்முறை அனுபவத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் ஒருவருக்கே கட்டிடக்கலைத் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி, பொதுச் சட்டவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பொன்றினாலோ அல்லது கட்டிடக்கலைஞர் நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்றது. நாட்டுக்கு நாடு இந்த அனுமதிபெறுவதற்கான, வழிமுறைகளும், பயிற்சிகளும், சிற்றளவில் வேறுபடுகின்றன. பல நாடுகளில் "கட்டிடக்கலைஞர்" என்னும் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இந்நாடுகளில், உரிய பயிற்சி பெறாமல் கட்டிடக்கலைஞர் என்று அழைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம்.

குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள்

தொகு
 
21ஆம் நூற்றாண்டில் கட்டடக் கலைஞரும் கட்டிடங்களும்,(1910)

இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது.

கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டடக்_கலைஞர்&oldid=3522416" இலிருந்து மீள்விக்கப்பட்டது