மருத்துவர்

மருத்துவத் தொழிலை செய்பவர்கள் மருத்துவர் ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர் (Physicians) என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் சில நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.

மருத்துவர்
The Doctor Luke Fildes crop
தொழில்
பெயர்கள் மருத்துவர்
வகை தொழில்
செயற்பாட்டுத் துறை மருந்து, உடல்நலம்
விவரம்
தகுதிகள் நீதிநெறி, மருத்துவம், பகுப்பாய்வு திறன், தெளிந்த சிந்தனை, நோயறிதல் திறன்.
தேவையான கல்வித்தகைமை மருத்துவக் கல்வி
தொழிற்புலம் ஆய்வு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி, தொழில்துறை, பொது நலம்
தொடர்புடைய தொழில்கள் அறுவை மருத்துவர், குடும்பநல மருத்துவர், பல் மருத்துவர், பொதுநல மருத்துவர்

முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்தப் பட்டறிவை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப்படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், ஓமியோபதி மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மருத்துவக் கல்விதொகு

ஆங்கில மருத்துவர்தொகு

ஆங்கில மருத்துவம் படிக்க இந்தியாவில் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இதில் நான்கரையாண்டுகள் பல்வேறு மருத்துவ கல்வியும் நேரடியாக நோயாளிகளை பயன்படுத்தியும் படித்து முடித்த பின்னால் ஒரு வருடம் பயிற்சி மருத்துவமும் முடித்ததும், இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் (MBBS)ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியவர்களாவர்.[1]

இந்தியாவில் இளங்கலை சித்த மருத்துவம் (B.S.M.S) பயின்றவர்கள் சித்த மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.

ஆயுர்வேத மருத்துவர்தொகு

வடமொழி (சமசுகிருதம்) மருத்துவ முறைமை ஆயுர்வேதம் எனப்பட்டது. ஆயுர்வேத வைத்தியர்கள் இந்தியாவின் தக்காணப் பகுதியில் அதிகம் காணப்பட்டனர்.

இந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.A.M.S) முடித்தவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.

ஓமியோபதி மருத்துவர்தொகு

இனமுறை அல்லது மாற்று முறை அல்லது ஒத்த மருத்துவம் என ஆங்கில மருத்துவத்திற்கு இணையான சாமுவேல் ஹேனிமேன் என்பவரால் கண்டறியப்பட்ட மேற்கத்திய மருத்துவ முறை ஓமியோபதி மருத்துவம் ஆகும்.

இந்தியாவில் இளங்கலை ஓமியோபதி (B.H.M.S) முடித்தவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.

மருத்துவர் வகைகள்தொகு

உடல் சார்ந்த சிகிச்சை மருத்துவர்கள்தொகு

தலைப்பகுதிதொகு

செவித்திறன் சிகிச்சை மருத்துவர்கள்தொகு

(Audiologists) என்பவர்கள் காது பிரச்சினைகள் மற்றும் செவிடு அல்லது ஊமையாக உள்ள குழந்தை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களாவர். இவர்கள் செவிடு மற்றும் ஊமைகளுக்கு முறையே செவித்திறன் மற்றும் வாய்மொழிப் பயிற்சிகளை மேம்படுத்துபவர்களாவர்.[2]

காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள்தொகு

காது, மூக்கு, தொண்டை ஆகிய மூன்றும் ஒன்றனுக்கொன்று தொடர்புள்ளது. இதன் அன்றாட செயல் பாட்டில் ஏற்படும் மாறுதல்கள் அல்லது நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்களாவர் (ENT specialists).[3]

கண் மருத்துவர்தொகு

கண்கள் சம்பந்தமான கண்புரை, பார்வை இழப்பு, பார்வை மங்குதல், பார்வைக்கோளாறு போன்ற கண் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு கண் அறுவை சிகிச்சைகள் புரிகிற மருத்துவர்கள் கண் மருத்துவர்களாவர்.[4]

பல் மருத்துவர்கள்தொகு

பல் மருத்துவர்கள் (Dentist)[5], சொத்தைப் பல் பிடுங்குதல், பல் சுத்தம் செய்தல், பற்கள், துவாரங்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக் கசிவு போன்ற பல் பிரச்சினைகள், பல் வேர்க்கால்கள் முதலியன முன்னெடுத்தல், மற்றும் பற்களை நேராக்குதல் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களாவர்.[6]

உள்ளுறுப்புகள் பகுதிதொகு

இதயநோய் மருத்துவர்கள்தொகு

இதயநோய் மருத்துவர்கள் (Cardiologist),[7] இதய மாற்று, இதய அடைப்பு, போன்ற இருதய நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்களாவர்.

நுரையீரல்நோய் சிகிச்சை வல்லுநர்கள்தொகு

நுரையீரல் சம்பந்த சுவாச நோய்களுக்கு சிகிச்சை மருத்துவர்கள் (Pulmonologist).[8]

இரைப்பைக் குடலியல் மருத்துவர்கள்தொகு

உணவுச்செரிமான அமைப்பு நோய்கள், இரைப்பை, குடல் தொடர்பான சிகிச்சை கொடுக்கிற மருத்துவர்கள் இரைப்பைக் குடலியல் மருத்துவர்கள் (Gastroenterologists) எனப்படுவர் .

கல்லீரலியல் மருத்துவர்கள்தொகு

கல்லீரலியல் மருத்துவர்கள் (Hepatologists), கால்சியப்படிவு, மஞ்சள் காமலைப் போன்ற கல்லீரல் சம்பந்த நோய்களைக் குணப்படுத்துபவர்களாவர்.

சிறுநீரக மருத்துவர்கள்தொகு
 • சிறுநீரக சிக்கல்களைத் தீர்க்கும் மருத்துவர்கள் (Nephrologist) எனப்படுவர்.[9]
 • சிறுநீரக நோயியல் மருத்துவர்கள்[10] (Urologists), சிறுநீரகம், சிறுநீர் அமைப்பு, மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுதலை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பவர்களாவர்.

உடற்செயலியல் வல்லுநர்கள்தொகு

உடற்கூறு செயற்பாடு மற்றும் அதன் உள்ளார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து உடலியல் நோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.

நரம்பியல் மருத்துவர்கள்தொகு
 • நரம்பியல் மருத்துவர்கள் (Neurologist) மூளை உள்ளிட்ட நரம்புத்தொகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். இவர்கள் வலிப்பு, பக்கவாதம், பார்க்கின்சன், அல்சைமர் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள்
 • நரம்பு அறுவை மருத்துவர்கள் (Neuro-Surgeon) - அறுவை சிகிச்சை மூலம் மத்திய, புற நரம்பு மண்டல நோய்களைக் குணப்படுத்தும் வல்லுநர்கள் நரம்பியல் அறுவை மருத்துவர்களாவர்.
எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்தொகு

மனித உடலிலுள்ள எலும்பு அமைப்புகளின் கோளாறுகளை சரி செய்யும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள், எலும்பு முறிவு அல்லது மூட்டு நகர்வு போன்ற எலும்பு சம்பந்த பிரச்சனைகளை சரி செய்கின்றனர்.

இரத்தவியல் மருத்துவர்கள்தொகு

இரத்தவியல் மருத்துவர்கள் (Hematologists), குருதி நோய்கள், வெள்ளை அல்லது சிவப்பு இரத்தணுக்கள் அதிகம்/குறைவு, அரிவாள்செல் சோகை முதலிய இரத்த சோகைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்களாவர்.

அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள்தொகு

நாளமில்லாசுரப்பு அல்லது அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள் (Endocrinologists), அகச்சுரப்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். சான்றாக, தைராய்டு பிரச்சினைகள், ஆர்மோன் சமநிலையின்மை, அதிக/குறைந்த ஆர்மோன்கள் சுரத்தல், போன்ற நாளமில்லா அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்பவர்களாவர்.

முடவியல் (அ) முடக்குவியல் மருத்துவர்தொகு

முடவியல் மருத்துவர்கள் (Rheumatologsists), உடல் ஒவ்வாமை நிலைகளுக்கு மற்றும் உடற் தாங்குதிறன் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள்.

தோல்பகுதிதொகு

தோல்நோய் மருத்துவர்கள்தொகு

தோல்நோய் மருத்துவர்கள் (Dermatologists), தோல் கட்டமைப்பு, செயல்பாடுகள், மற்றும் நோய்கள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பவர்கள். அத்துடன் இணைந்த உறுப்புகள் (நகங்கள், முடி, வியர்வை சுரப்பிகள்) தொடர்புடைய நோய்களுக்கும் ஆராய்ந்து ஆலோசனை வழங்குபவர்கள்.

தோல்மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர்கள்தொகு

தோல்மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர்கள் (Plastic Surgeon) தீ மற்றும் விபத்தினால் புறவமைப்பில் ஏற்படும் ஒவ்வாத மாற்றங்களை தோல்மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றமேற்படுத்தும் அறுவை மருத்துவர்கள். தோல் மற்றும் தோல் கட்டமைப்பு பிரச்சினைகளை சரிசெய்து அழகுக்கான அறுவை சிகிச்சை முறையிலும் இவர்கள் தேர்ந்தவர்கள். இதன் மூலம் இம்மருத்துவர்களால் நோயளியின் புற ஆளுமையில் மாற்றம் கொணர இயலும்.

ஒவ்வாமை மருத்துவர்தொகு

ஒவ்வாமைக்கு சிகிச்சை அளிப்பவர்கள் ஒவ்வாமை மருத்துவர்களாவர் (Allergist). சான்றாக இவர்கள் தும்மல் காய்ச்சல், இளைப்பு, தோல் ஒவ்வாமை, விலங்கு ஒவ்வாமை, போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்.

அடிக்கால் மருத்துவர்தொகு

அடிக்கால் மருத்துவர் (Podiatrists), கால் மற்றும் கணுக்கால் கோளாறுகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர் .

மனம்சார்ந்த சிகிச்சை மருத்துவர்கள்தொகு

மனநல மருத்துவர்கள்தொகு

மனநலம் சார்ந்த நோயுள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவம் மூலம் புனர்வாழ்வு வழங்கும் மருத்துவர்களாவர்.

உளவியல் நிபுணர்கள்தொகு

உளவியல் நிபுணர்கள் (Psychiatrists) மன நோய், நடத்தை கோளாறுகள், கவலை, தன்னம்பிக்கை இழத்தல், தற்கொலை முயற்சி, போன்ற உளப்பிரச்சனைகள் உள்ளவர்களை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குபவர்களாவர்.

பாலியல் மருத்துவர்கள்தொகு

பாலியல் சம்பந்தமான சந்தேகங்களைக் களைந்து ஆலோசனை வழங்குதல் மற்றும், பாலியல் நோய்களுக்கான சிகிச்சை அளிப்பவர்கள் பாலியல் மருத்துவர்களாவர் (Sexologist).

ஆடவர் நோயியல் மருத்துவர்தொகு

ஆடவர் நோயியல் மருத்துவர் (Andrologist) எனப்படும் மருத்துவர்கள், ஆண் இனப்பெருக்கத் தொகுதி தொடர்பான பாலியல் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.

மகப்பேறு மற்றும் பெண்பாலுறுப்பு மருத்துவர்கள்தொகு

 • மகப்பேறு மற்றும் பெண்பாலுறுப்பு மருத்துவர் (Obstetrician and Gynecologist), மகப்பேறு மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலம் சம்பந்த பிரச்சனைகளை ஆரய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர்.
 • மகப்பேறு நோயியல் மருத்துவர்கள் - மகப்பேறு மருத்துவத்தின் ஒரு பகுதியான சுகப்பிரசவம், அறுவைப் பிரசவம் (Caesarean section), கருப்பை , கருப்பைக் கட்டிகளின் அறுவை சிகிச்சை, இடுப்பு பகுதிப் பரிசோதனை, கருப்பைக்கழுத்து புற்றுநோய்க் கண்டறிதல் (PAP smear), மகளிர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் (Gynaecologist) ஆவர்.

குழந்தைநல மருத்துவர்கள்தொகு

Perinatologistதொகு

கரு பிரசவிக்கும் காலத்தில், கருவை ஆபத்தான சூழலிலிருந்து இலகுவாக பிரசவித்து பராமரிக்கும் சிகிச்சை வல்லுனர்கள் (Perinatologists) ஆவர் .

குழந்தை நோயியல் மருத்துவர்கள்தொகு

புதிதாக பிறந்த குழந்தைகளுக்குண்டான மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் (Neonatologist) எனப்படுவர்.

குழந்தைநல மருத்துவர்கள்தொகு

குழந்தைநல மருத்துவர்கள் (Pediatricians), கைக்குழந்தைகள், குழந்தைகள், மற்றும் இளம் பருவத்தினர் போன்றோரின் மருத்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் மருத்துவர்களாவர்.

Internistதொகு

வயது வந்தோருக்கான நோய்கள் தடுப்பு, ஆய்வு, சிகிச்சைப் பிரிவில் உள்ள வல்லுநர்கள் Internists எனப்படுவர்.

பொதுதொகு

குடும்ப நலமருத்துவர்கள்தொகு

குடும்ப நலமருத்துவர்கள் (Family Practician), சிறிய ஆரம்ப சுகாதார மனைகளிலும், குடும்பத்திலுள்ள அனைத்து வயதினருக்கும் அவர்களது நோய் வரலாற்றை நன்குணர்ந்த பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் நோயாளிகளைத் தங்களின் நட்பு வட்டத்துள் வைத்திருப்பர்.

அவசர சிகிச்சை மருத்துவர்கள்தொகு

அவசர சிகிச்சை மருத்துவர்கள் (Emergency Doctors), எந்நிலையிலும் தயாராக இருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர்கள். இவர்கள் தம் சேவை வழங்க 24/7 கால அளவில் எப்போதும் மாற்றுவேளைப் பணிகள் தயாராக இருக்கும். இவர்கள் நச்சுக்கடி, தீ விபத்து, சாலை/ஆலை விபத்துகள், போன்ற பல்வேறு அவசர நேரங்களில் சிகிச்சை அளிப்பர். பெரும்பாலும் உடைந்த எலும்புகளை இணைத்தல், தீக்காயங்கள், மாரடைப்பு சிகிச்சை, நச்சு முறிவு அளித்தல் போன்றவை தலையானதாகும்.

மயக்கவியல் மருத்துவர்கள்தொகு

மயக்கவியல் மருத்துவர்கள் (Anesthesiologists) மயக்க மருந்து அளித்தல், மயக்க ஊசி குத்துதல் போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். சிறிய மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முன் மயக்க ஊசியின் வலியைத்தவிர மற்ற வலியை உணரச்செய்யாது மயக்கமளிக்கும் வல்லுநர்களாவர்.

அறுவை சிகிச்சை மருத்துவர்கள்தொகு

அறுவை சிகிச்சையின் மூலம் உடலிலுள்ள நலப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லுநர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (Surgeons) ஆவர். இவர்கள் மருத்துவத்தின் பல்வேறு துணைப்பிரிவுகள் தொடர்பான அறுவை சிகிச்சைகளான நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை , முக அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை, வாய்வழி அறுவை சிகிச்சை, மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, முதலிய பொது அறுவை சிகிச்சைகளைச் சிறப்பாக செய்பவர்களாவர்.

கதிரியக்க வல்லுநர்கள்தொகு

கதிரியக்கம் (ஊடு-கதிர் (X-ray), அகச்சிவப்பு (Infrared) கதிர், புற ஊதாக் (ultraviolet) கதிர்) மூலம் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் கதிரியக்க மருத்துவர்கள் (Radiologists) ஆவர்.

நோயியல் மருத்துவர்கள்தொகு

நோயறி மருத்துவர்கள்தொகு

நோயறி மருத்துவர்கள் (Epidemiologists), நோய்களின் காரணிகளை ஆய்ந்து அதற்கான தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் மற்றும் முறைகளைக் கண்டறிபவர்களாவர்.

நோயெதிர்ப்புசக்திசார் மருத்துவர்கள்தொகு

நோயெதிர்ப்புசக்திசார் மருத்துவர்கள் (Immunologists), அனைத்து உயிரினங்களிலும் நோயெதிர்ப்பு ஆற்றலின் அனைத்து அங்கங்களையும் ஆய்ந்து, நோய் எதிர்ப்பு சிகிச்சை குறைவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர் .

 
மருத்துவர் தைபாய்டு தடுப்பூசியிடல், 1943

தொற்று நோய் நிபுணர்கள்தொகு

தொற்று நோய் நிபுணர்கள் (Infectious Disease Specialists), வைரசுகள், பாக்டீரியங்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படும் நோய்களை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர். இந்த மருத்துவர்கள் கிருமிகளின் திறத்தை ஆய்ந்து அதற்கான சரியான மாற்று நுண்ணுயிர்க் கொல்லியை வழங்குகின்றனர்.

ஒட்டுண்ணியியல் மருத்துவர்தொகு

ஒட்டுண்ணியியல் மருத்துவர்கள் (Parasitologist), வைரசு, பாக்டீரியா, ப்ளாஸ்மோடியம், அமீபா போன்ற ஒருசெல் உயிரிகளின் ஒட்டுண்ணித்திறத்தை ஆய்ந்து ஒட்டுண்ணி நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாவர்.

தடய நோயியல் மருத்துவர்கள்தொகு

நகம், முடி, இரத்தம், அல்லது திசு மாதிரிகளிலிருந்து நோய்கள் மற்றும் நோய்க்காரணிகளைக் கண்டறிபவர்கள் தடய நொயியல் மருத்துவர்களாவர். இவர்கள் குற்றப்புலனாய்வில் குற்றங்கள் (அ) மரணத்திற்கு காரணமான சூழல், மற்றும் காரணிகளைக் கண்டறிதல், பிரேதப் பரிசோதனை, ஆராய்தல் மற்றும் ஆய்வறிக்கை வழங்குதல் போன்ற ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த மருத்துவர்கள் பொதுவாக தங்கள் ஆய்வுப்பணியை நேரடியாக ஆய்வுக்களத்தில் நிகழ்த்துகின்றனர். தடயவியல், நோயியல் நிபுணத்துவம், மற்றும் குற்றப்புலனாய்வு போன்ற அரிய ஆய்வுகளைச் செய்ய உதவுகின்றனர்.

நுண்ணுயிரியியல் வல்லுநர்கள்தொகு

நுண்ணுயிரியியல் வல்லுநர்கள்(Microbiologists) நுண்ணுயிரி சம்பந்த நோய்க் காரணிகளைக் கண்டறிந்து தொற்று நோய் சிகிச்சைக்குப் பரிந்துரை அளிப்பவர்கள்.

உள் மருத்துவ நிபுணர்கள்தொகு

ஆய்வுகள் மற்றும் மேலாண்மை பணிக்காக, அசாதாரண அல்லது தீவிர தொற்று நோய்கள், அறுவை அல்லாத சிகிச்சை அளிக்க பொதுவாக உள் ஆய்வு மருத்துவர்(intensivists) என ஆராய்ச்சி & சிகிச்சை மருத்துவ மையங்களில் இருப்பார்கள்.

மரபியல் மருத்துவர்கள்தொகு

மரபியல் மருத்துவர்கள் (Medical Geneticist)மரபியல் சார்ந்த மரபணு நோய்களை ஆய்வுகள், சோதனைகள், மூலம் கண்டறிந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கும் மருத்துவர்கள்.

புற்றுநோய் மருத்துவர்கள்தொகு

புற்று நோயாளிகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிப்பவர்கள், புற்று நோய் மருத்துவர்களாவர் (Oncologist).

தொன்மநோயியல் மருத்துவர்தொகு

தொன்மநோயியல் மருத்துவர்கள் (அ) பேலியோபேதாலஜிஸ்ட்(Paleopathologist) பண்டைய நோய்களைப் பற்றி ஆய்ந்து சிகிச்சை அளிப்பவர்கள்.

கால்நடை மருத்துவர்கள்தொகு

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து துறைகளும் மனிதநலனில் அக்கறை கொண்ட மருத்துவ துறைகள். மனிதன் அல்லாத ஏனைய விலங்குகளின் மருத்துவ சேவை வழங்குபவர்கள் கால்நடை மருத்துவர்களாவர். இவர்கள் விலங்கினங்களின் பல்வேறு நோய்கள், நோய்ப்பரவல், மற்றும் காரணிகளை ஆய்ந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

மருத்துவர் நலம்தொகு

மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நல முன்மாதிரியாக விளங்க வேண்டும். சான்றாக புகை மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல்.[11] இதன் மூலம் பெறப்படும் சுவாசக் கோளாறுகள், கல்லீரல் பழுதடைதல், உணவு செரிமான பிணிகள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் தங்களைத் தற்காத்துக் கொள்வதாகும். உடல் மற்றும் உள்ளத்தை நலமாக வைத்திருப்பதன் மூலம் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 70.8 வருடங்கள் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் உள்ளன.[12] இருந்த போதும் வேலைப்பளுவால் சரிவர உடல் நலத்தைப்பேணாது, மருத்துவர்களே மோசமான நோயாளிகள் எனக் குறிப்பிடப்படுவதுமுண்டு.[13] உடல்நலக் கோளாறு அல்லாது தற்கொலைகள், விபத்துக்கள், இதயநோய்கள் இவர்களது ஆயுட்காலச் சவால்களாக உள்ளன.[12]

மேற்சான்றுகள்தொகு

 1. "சித்த மருத்துவம்". 2012-11-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 மே 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "செவித்திறன் மருத்துவர்கள்" (PDF). 2014-06-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 மே 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 3. "காது மூக்கு தொண்டை வல்லுநர்கள்". 2014-08-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 மே 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. "ஆப்தமாலஜி மற்றும் கண் மருத்துவர்கள்" (PDF). 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 5. "பல் மருத்துவர்கள்". 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. "பல் மருத்துவக்கல்வி". 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. "இதயநோய் மருத்துவர்கள்". 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 8. "நுரையீரல்நோய் சிகிச்சை வல்லுநர்கள்". 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 9. "சிறுநீரகவியல் மருத்துவர்கள்". 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 10. "சிறுநீரக நோயியல் மருத்துவர்கள்". 21 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 11. Appel JM (2009). "Smoke and mirrors: one case for ethical obligations of the physician as public role model". Camb Q Healthc Ethics 18 (1): 95–100. doi:10.1017/S0963180108090142. பப்மெட்:19149049. 
 12. 12.0 12.1 Frank E, Biola H, Burnett CA (October 2000). "Mortality rates and causes among U.S. physicians". Am J Prev Med 19 (3): 155–9. doi:10.1016/S0749-3797(00)00201-4. பப்மெட்:11020591. 
 13. Schneck SA (December 1998). "'Doctoring' doctors and their families". JAMA 280 (23): 2039–42. doi:10.1001/jama.280.23.2039. பப்மெட்:9863860. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Physicians
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவர்&oldid=3408211" இருந்து மீள்விக்கப்பட்டது