பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள்

இப்பகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பொருத்தமானவற்றை இந்தியத் தமிழ் இதழ்கள் என்ற கட்டுரையில் ஒன்றிணைக்குமாறு கோருகிறேன்.

காரணங்கள்:

  • தனிக்கட்டுரையாக இருக்கும் அளவுக்கும் குறிப்பிடத்தக்கமையைச் சுட்டும் வகையிலும் போதிய உள்ளடக்கம் இல்லை.
  • பெரும்பாலான கட்டுரைகளுக்கு ஆதாரங்கள் / மேற்கோள்கள் ஏதும் தரப்படவில்லை.

எடுத்துக்காட்டுகள்:

மேற்கண்ட காரணங்களினால், கட்டுரைகள் வளராமல் தொடர்ந்து குறுங்கட்டுரைகளாகவே தேங்கி இருக்கவே கூடுதல் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான கட்டுரைகளின் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை கேள்விக்குரியது. ஆனால், இந்த கேள்விக்குள் இப்போது நான் புக விரும்பவில்லை. தற்போதைக்கு, விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கை அடிப்படையில் இவற்றை ஒன்றிணைக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:02, 13 ஏப்ரல் 2014 (UTC)

மேற்கண்ட வேண்டுகோளின் தொடர்பாக, குறித்த கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கம் எவ்வாறு தனிக்கட்டுரையாக இருக்கப் போதுமானது என்ற அடிப்படையில் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகள் ஏதும் வரா நிலையில், மே 1, 2014 முதல் பொருத்தமான கட்டுரைகளில் உள்ள தகவலை ஒரே பக்கத்தில் தொகுக்கும் பணி தொடங்கும். நன்றி.--இரவி (பேச்சு) 13:39, 17 ஏப்ரல் 2014 (UTC)
இது தொடர்பாக எனது கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்துள்ளேன். உங்களைத் தவிர, இப்படிச் செய்ய வேண்டும் என்று விக்கிச் சமூகத்தில் ஒரு பெரிய வேட்கை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் உங்கள் போக்கில் தொடர்வது வேதனை தருகிறது. --Natkeeran (பேச்சு) 13:44, 2 மே 2014 (UTC)Reply
நற்கீரன், என்ன காரணத்தினால் இவற்றை இணைக்க கோருகிறேன் என்று தெளிவாக இப்பக்கத்தில் கூறியுள்ளேன். மாற்றுக் கருத்துகளுக்கான தகுந்த காலமும் தந்துள்ளேன். தாங்கள் வேறு சில பக்கங்களில் கூறிய கருத்துகள், பொதுவாக கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கை குறித்தனவே தவிர, இங்கு இப்பகுப்பில் உள்ள கட்டுரைகள் குறித்து நான் குறிப்பிட்ட சிக்கல்களுக்குப் பதில் இல்லை. துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள விக்கிச்சமூகத்தின் வேட்கை தேவையா, அதனை எப்படிக் கணிப்பது என்பது குறித்து தெளிவுபடுத்துங்கள். அண்மையில், பல முக்கிய உரையாடல்களுக்கும் பலரும் கலந்து கொள்ளாமல் இருக்கும் போகே இருக்கிறது. இதனை முன்னிட்டு, எதையுமே முன்னெடுக்காமல் இருந்தால் தேங்கிப் போவோம். நன்றி. --இரவி (பேச்சு) 14:18, 2 மே 2014 (UTC)Reply
பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு#ஏன் பிரித்துவைத்துருக்க வேண்டும் - விக்கி தத்துவம் . குறுங்கட்டுரைகள் தனித்துவிடுவது தொடர்பான எனது வலுவான வாதங்களை கருத்தில் எடுத்து தகுந்த ஒன்றிணைப்பு வழிகாட்டலில் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 03:48, 3 மே 2014 (UTC)Reply

ஒரே விடயப்பரப்புக்குள் வரும் தலைப்புக்கள் குறுங்கட்டுரைகளாக இருக்கும் நிலையில் அவற்றினை ஒன்றாக்குவது பொருத்தமானது. ஆனால்

  • இந்தியத் தமிழ் இதழ்கள் எனும் வகைக்குள் வரும் இதழ்கள் பகுப்பு அடிப்படையில் ஒன்றாக உள்ளன என்றாலும் அவற்றின் விடயப்பரப்பு வேறுவேறானது.
  • இதழ்கள் தனியாள் செயற்பாடுகளல்ல. திரைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கட்டுரைகள் இருப்பதுபோல இதழ்களுக்குத் தனித்தனிக் கட்டுரைகள் இருப்பது பொருத்தமானதே. நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமைக் கட்டுப்பாடுகளை தமிழ் இதழ்களுக்குப் பிரயோகிக்க வேண்டியதில்லை. ஒருவர் தன் பெயரை முன்வைத்துச் செய்யும் நூல் வெளியீடுகளிலிருந்து பலரது பங்களிப்பினைப் பெறும் இதழ் வெளியீடுகளை வேறுபடுத்தியே பார்க்க வேண்டும்.
  • தமிழ்ச் சூழலில் அறிவுச்செயற்பாடுகளை முன்னெடுத்ததில் இதழ்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் அவற்றுக்குத் தனித்தனிக் கட்டுரைகள் இருப்பது பொருத்தமானதே.
  • ஆதாரமின்மை ஒரு சிக்கல் தான். ஆனால் இது எமது மொழிச்சூழல் சார்ந்த தேவை. துடுப்பாட்டக்காரர் கட்டுரைகளை அணுகுவது போல அணுக முடியாது. இத்தகைய தலைப்புக்கள் பட்டியலாக்கப்பட்டால் மீண்டும் தனிக்கட்டுரையாகுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஆதாரமின்மை வார்ப்புருவுடன் இவற்றினைத் தனிக்கட்டுரைகளாகப் பேணுவது ஆதாரங்களை உள்ளீர்க்கலாம்.

நன்றி. கோபி (பேச்சு) 10:12, 3 மே 2014 (UTC)Reply

கோபி, பல தமிழ் இதழ்களுக்கு ஏற்கனவே தனிக்கட்டுரைகள் உள்ளன. பார்க்க: ஆனந்த விகடன், சுதேசமித்திரன், குடியரசு. எனவே, தமிழ் இதழ்களுக்கு தனிப்பக்கங்கள் இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்க இதழ்களைப் பற்றிய அடிப்படை தகவலையாவது கொண்டிருக்க வேண்டும். தமிழ் இதழ்களின் குறிப்பிடத்தக்கமையை மதிப்பதற்கான பரிந்துரைகளைத் தர இயலுமா? ஒரு தமிழ் இதழ் குறித்த தனிக்கட்டுரையில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தனித்துவமான தரவுகள் என்று நீங்கள் கருதுவன எவை?
பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் from November 2012 பகுப்பில் மட்டும் இதழ்கள் தொடர்பான 124 கட்டுரைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு மேற்கோள் கூட சேர்க்க முடியாமல் தேங்கி உள்ளன. எனவே, தனிக்கட்டுரையாக இருந்தால் மேம்பட வாய்ப்புண்டு என்ற எண்ண இயலவில்லை.

ஒரு எடுத்துக்காட்டுக்கு, இரண்டு கட்டுரைகளில் உள்ள தரவுகளைப் பட்டியல் இட்டிருக்கிறேன்.

எண் இதழ் காலம் தொடக்கம் ஊர் துறை ஆசிரியர் உள்ளடக்கம்
1 சாந்தி உலகம் (சிற்றிதழ்) மாத இதழ் 1936 கூத்தாநல்லூர் இசுலாம் முகமத் மொகிதீன் இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.
2 திப்பு (இதழ்) வார இதழ் 1972 வேலூர் பொது வேலூர் ஹபிபுல்லா செய்தி, செய்தி ஆய்வுகள், இலக்கிய ஆக்கங்கள், கேள்வி பதில் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு பட்டியலாக இடுவதன் மூலம் பல வகையிலும் வரிசைப்படுத்திப் பார்க்க முடியும். இவ்வாறு ஒரு பட்டியலின் தரவாக மட்டுமே இடும் அளவு உள்ள உள்ளடக்கக்கங்கள் தனித்தனிக்கட்டுரைகளாக இடப்பட்டுள்ளதாகவே காண முடிகிறது. --இரவி (பேச்சு) 15:05, 6 மே 2014 (UTC)Reply

நற்கீரன், சிற்றிதழ்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெறலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திராவிடநாடு (இதழ்), குயில் (இதழ்) ஆகிய சிற்றிதழ்களின் முக்கியத்துவத்தை உணர்வதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், மற்ற பல இதழ்களின் குறிப்பிடத்தக்கமையைப் புரிந்து கொள்வதற்கான போதுமான தகவல் கட்டுரைகளில் இல்லை. மேலே கோபியிடம் கேட்ட கேள்விகளையே மீண்டும் உங்கள் முன்வைக்கிறேன். ஒரு சிற்றிதழின் குறிப்பிடத்தக்கமையை எவ்வாறு வரையறுக்கிறீர்கள்? ஒரு சிற்றிதழ் குறித்த கட்டுரையில் இருக்க வேண்டிய அடிப்படை தகவல் என்ன? இதற்கான பரிந்துரைகள் தெளிவாக இருந்தால், துப்புரவுப் பணியாற்றுவோருக்கு உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 15:46, 11 மே 2014 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பான இணக்க முடிவை எட்டுவதற்கான உரையாடல் நிகழும் சூழல் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்பதால் தற்காலிகமாக இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறையை எட்டுவதற்கான முயற்சியைக் கை விடுகிறேன். தகுந்த இடங்களில் https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability அல்லது https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28books%29 வரையறையை முன்வைத்து உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:49, 15 சூன் 2014 (UTC)Reply

Return to "இந்தியத் தமிழ் இதழ்கள்" page.