தொகுப்பு

தொகுப்புகள்


1 2

குநோம்

தொகு

இதனை லினக்ஸ் என்பதன் கீழ் பகுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கட்டற்ற மென்பொருட்கள் என வகைப் படுத்தி அதன் கீழ் தொகுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். லினக்ஸ் என்பது கெர்னல் மட்டுமே. பி. எஸ். டி போன்ற வெளியீடுகளிலும் குநோம் மேசைத் தளம் உண்டாகையால் லினக்ஸ் என்ற பகுப்பு பொருத்தமானதாக இருக்காது என்பது எமது தாழ்மையானக் கருத்து.

Amachu 01:55, 22 மார்ச் 2007 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. கோபி 17:12, 22 மார்ச் 2007 (UTC)

இலக்கண விளக்கம்

தொகு
  • நல்லதமிழ் -> நற்றமிழ்
  • நீச்சல் குளம் -> நீச்சற் குளம்
  • கடல் தொழில் -> கடற்றொழில்
  • காற்று ஓட்டம் -> காற்றோட்டம்

இலக்கண விளக்கம் தந்தால் நன்று. அறிந்து கொள்ளவே, விமர்சனமாக எடுத்துவிடாதீர்கள். --Natkeeran 18:02, 21 மார்ச் 2007 (UTC)

நற்கீரன், நான் இலக்கணம் கற்றவனல்லன். எனது தமிழ் பெரிதும் வாசிப்பிலிருந்து பெற்றுக் கொண்டதே. அதனாற்றான் (அதனால் தான், அதனாற் தான்) பல இடங்களிலும் கருத்துத் தெரிவிக்கையில் நினைக்கிறேன் என்று கருத்தை நிறைவு செய்கிறேன். நீச்சற் குளம் சரியானது என்று பேச்சு:நீச்சற் குளம் பக்கத்தில் செல்வா விளக்கியுள்ளார். நல்ல+தமிழ்=நற்றமிழ் என்பது எவ்வாறு என்பதையும் செல்வாவே விளக்கினால் உதவியாயிருக்கும். நன்றி. --கோபி 18:06, 21 மார்ச் 2007 (UTC)

நற்கீரனின் பக்கத்தில் விளக்கி இருக்கிறேன். புணர்ச்சி விதி எளியது தான் :)--ரவி 18:16, 21 மார்ச் 2007 (UTC)

நன்றி

தொகு

வாழ்த்துக்கும் உற்சாகத்திற்கும் நன்றி, எதாவது framework அல்லது portal/project இருந்தால் தெரிவிக்கவும், பங்கு கொள்ள மிகுந்த விருப்பம் உள்ளது. :)--விக்னேஷ்.சு 09:28, 18 நவம்பர் 2007 (UTC)Reply

நன்றி - ஆறுகள் பகுப்புகள்

தொகு

கோபி, ஆறுகள் பகுப்புகளை மாற்றியதற்கு நன்றி. --செல்வா 16:04, 24 மார்ச் 2007 (UTC)

நன்றி

தொகு

பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி, கோபி :) --யோகேஸ் 17:42, 4 ஏப்ரல் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

GUITARஇன் தமிழ் சொல்

தொகு

FABRICIUS அகராதியில் GUITAR என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு "கலம்" என தமிழ் மொழிப்பெயர்ப்பு தரப்பட்டுள்ளது; காண்க : http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=fabricius&page=79&display=utf8 கலமர் என்கிற சொல் guitar வாசிப்பவர் என்பதாகவும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. - ராஜ் (தொழில்நுட்பம் இணையம்/geocities.com/tamildictionary/)

பேச்சுப் பக்க உரையாடல்கள்

தொகு

தனிப்பட்ட காரணங்களுக்காக பேச்சுப் பக்கங்களில் உரையாடுவதை முடிந்தளவு தவிர்க்க விரும்புகிறேன். உடன் பதில் தேவையெனின் மின்னஞ்சலிடவும். நன்றி. --கோபி 17:46, 9 மே 2007 (UTC)Reply

இக்காரணங்கள் த.வி தொடர்பற்றவையாக இருக்கும் என்று நம்புகின்றேன். பொதுவாக உங்கள் கருத்துக்கள் த.வி ஒழுங்கான வளர்ச்சிக்கு உதவியே இருக்கின்றன. எனவே ஆக்கபூர்வமான கருத்துக்களை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகின்றேன். --Natkeeran 15:37, 12 மே 2007 (UTC)Reply

அண்மைய மாற்றங்களை தொடர்ந்து அவதானித்தே வருகிறேன். அவசியமெனின் நிச்சயம் கலத்துரையாடல்களிற் பங்கேற்பேன். நன்றி. --கோபி 16:38, 13 மே 2007 (UTC)Reply

நன்றி

தொகு

கருத்துகளுக்கு நன்றி, கோபி. என்னால் இயன்றளவு முடுக்கத்துடன் தொடருகின்றேன். ஒரு 50-60 தமிழர்கள் கூட சற்று முனைப்பாக பங்களிக்க வராமல் இருப்பது வியப்பாக உள்ளது. ஆனால் கட்டாயம் 200-300 தமிழர்கள் பங்களிக்க வருவார்கள் என்று நம்புகிறேன். இன்றில்லை என்றாலும் விரைவில் வருவார்கள்! எத்தனை தமிழ் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கற்றவர்கள் இருகின்றார்கள்! இது தன்னார்வலர் பணி என்பதையும், பலரும் பல காரணங்களுக்காகவும் விரும்பியவாறு பங்களிக்க இயலாமல் இருக்கும் என்பதையும் அறிவேன். சற்று அதிகம் தொய்வுற்று இருப்பது போல் உணர்ந்தேன் எனவே என் கருத்துப் பகிர்வு.--செல்வா 18:56, 6 ஜூலை 2007 (UTC)

மிக்க நன்றி.

தொகு

மிகவும் பயனுள்ள இணைப்பு. --Natkeeran 16:00, 5 ஆகஸ்ட் 2007 (UTC)

அக்கறைக்கும் கவனப்படுதல்களுக்கும் நன்றி

தொகு

கோபி, நீங்கள் த.வி தரம் பற்றி கொண்டிருக்கும் அக்கறைக்கு பாராட்டுக்கள். இப்படி பூண்டுகளை புடுங்காவிடின் தோட்டம் பாழ் பட்டு விடும். இயன்றவரை உதவ பார்க்கின்றேன். நன்றி. --Natkeeran 15:17, 3 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆம் கோபி. அண்மையில் நீங்கள் ஆழ்ந்த முனைப்புடன் குறிப்பில்வழி சென்று கட்டுரைகளைத் துப்புரவு செய்து வருவதை கவனித்தேன் (அவதானித்தேன்). பாராட்டுக்கள். நான் விரைவில் புதுக்கட்டுரைகளை எழுதத் துவங்குகிறேன். நேரம் கிடைக்கும்போது துப்புரவிலும் உங்களுக்குக் கைகொடுக்கிறேன். -- Sundar \பேச்சு 07:16, 7 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கண்டிப்பாக செய்கிறேன், கோபி. தரமான புதிய கட்டுரைகளை உருவாக்குதல் ஒருபுறம் கட்டுரை தரநடுக்கோட்டை (?) (quality median) மேம்படுத்தும். இருக்கும் கட்டுரைகளைத் துப்புரவு செய்தல் சராசரி தரத்தை பெரிதும் மேம்படுத்தும். இரண்டுமே தேவைதான். -- Sundar \பேச்சு 09:34, 7 செப்டெம்பர் 2007 (UTC)Reply

கோபி, முதலில் நான் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தால் மன்னிக்கவும். நீங்கள் ஐரோப்பியத் தமிழ் வானொலிக் கட்டுரையை கேட்டுக் கேள்வியில்லாமல் நீக்கியதனால் சிறிது எரிச்சலடைந்தது உண்மைதான். அக்கட்டுரையில் இருந்த பல தகவல்கள் ஒரு விக்கிக் கட்டுரைக்கு ஏற்புடவையே. தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு நீங்களே ஒரிரு நிமிடத்தில் அதனை ஒரு விக்கி கட்டுரையாக்கியிருக்கலாம். பரவாயில்லை. கட்டுரைகளை நீக்கும் போது போதியளவு கால அவகாசம் தாருங்கள். ஒரு வருட அவகாசம் தந்தாலும் பிழையில்லை என்றே நான் நினைக்கிறேன். நீக்கும் போதும் மேலும் ஒரு வாரம் எச்சரிக்கை தந்து நீக்குவது நல்லது. திடீரென்று நீக்குவது நல்லதல்ல. தொழுகை கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றிகள்:).--Kanags 09:14, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

கோபி, போதிய இடைநேரம் தராமல், அருள்கூர்ந்து கட்டுரைகளை நீக்காதீர்கள். அது ஒரு வரிகட்டுரையாக இருந்தாலும், வளர வாய்புள்ள கட்டுரைகளை, அப்படி ஒரு தலைப்பு இருக்கின்றது என்றாவது அறிய இருக்கும் கட்டுரைத் துவக்கங்களை நீக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன். அண்மையில் நீங்கள் நீக்கிய மூலிகைக் கட்டுரைகள் இரண்டொன்றை நேற்றுதான் பார்த்தேன்; அதற்கான ஆங்கில விக்கியையும் பார்த்தேன் (அங்கும் அது ஒருவரிக் கட்டுரையாகத்தான் உள்ளது, USDA வலைத்தளத்தையும் பார்த்தேன், அங்கும் செய்திகள் 2-வரிக்குள்ளேயே இருந்தன. MEDLine கட்டுரைகளில் மேற்கோள் உள்ளனவா என்றும் பார்த்தேன், அங்கும் ஏதும் இல்லை). செய்திகள் சேர்பதற்கு சற்று நேரம் தேவைப்படும். இப்படி விரைவாக நீக்க எத்தேவையும் இல்லை. ஒருசில கட்டுரைகள் ஒரு வரி இரண்டு வரியாக இருப்பதால் ஏதும் தவறு இல்லை. பெரிய கட்டுரைகள் நிறைய வரும் பொழுது விகிதத்தில் இவை சிறிதாகிவிடும். மேலும் இவ்வகையான ஒ1-2 வரிக்கட்டுரைகள் களை என்பதெல்லாம் சரியான கருத்து இல்லை. தரும் செய்தி சிறிதாக இருக்கலாம், ஆனால் அவை களை இல்லை. இப்படிக் கட்டுரைகளை (சிறியவைதான்) நீக்குவது "தரத்தை" எவ்வகையிலும் கூட்டுவதல்ல. தரத்தைக் கூட்ட நினைத்தால், இரண்டொரு வரிகள் சேருங்கள், அல்லது பிறருக்கு சேர்க்க வாய்ப்பு தாருங்கள். நீங்கள் கட்டுரைகளை நீக்கியது மனவருத்தத்தை அளிக்கின்றது. இக்கட்டுரைகள் நான் இட்டதல்ல. இப்பணி சற்று பொறுமையாக செய்யவேண்டியது. --செல்வா 12:14, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

செல்வா, உங்கள் பேச்சுப் பக்க்தில் மறுமொழி இட்டுள்ளேன். நன்றி. கோபி 12:59, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply

தமிழில் பகுப்பு

தொகு

கோபி பகுப்பு மாற்றங்களை AWB பாவித்து ஒரே தடவையில் செய்து விடுகிறேன் இப்போதைக்கு அப்படியே விடுங்கள்.--டெரன்ஸ் \பேச்சு 16:03, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

பகுப்பு:கொடி வார்ப்புருக்கள் என்பதைத்தான்.--டெரன்ஸ் \பேச்சு 16:06, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply
முடியும் அதை நாளை அதை செய்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 16:11, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆண்டுகள்

தொகு

நூற்றாண்டுகள் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. 15ம் நூற்றாண்டு என்பதை தமிழ் தெரிந்த எவரும் பதினைந்தாம் என்றே வாசிப்பார்கள். பதினைந்தும் என்று சொல் தமிழில் இல்லை. நான் பல தமிழ் நூல்களில் 15ம் என்று கண்டிருக்கிறேன். 20th என்பதை twentith என்று வாசிப்பார்களா அல்லது twentieth என்று வாசிப்பார்களா? 15ஆம் நூற்றாண்டு(களுக்கு) வழிமாற்றம் கொடுக்கலாம்.--Kanags 21:29, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

உச்சரிப்புத் தொடர்பில் ஆங்கிலத்துடன் தமிழை ஒப்புநோக்குவதும் பொருத்தமில்லை. ஆங்கிலத்தில் meat,meet இரண்டும் உச்சரிப்பு ஒன்றுதான். தமிழில் வெவ்வேறுமாதிரி எழுதி ஒருவிதமாக உச்சரிப்பதில்லை. இது தொடர்பில் என்னிடம் உறுதியான கருத்து இல்லை. உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. --கோபி 04:31, 15 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இசை வகை எதிர் வடிவம்

தொகு

வகை என்றால் Category வடிவம் என்றால் form. Music Genere என்றே ஆங்கிலத்தில் குறிப்பர். தமிழில் இந்த விடயத்தில் மொழிபெயர்ப்பு தேவையில்லை என்றும் தோன்றுகின்றது. ஆனால் வகை என்றால் சற்று பெரிய பிரிவுகளையும், வடிவம் என்றால் ஓரளவு சிறிய வேறுபாடுகளையும் அல்லது தனித்துவங்களையும் குறிக்க பயன்படுத்தலாம். திரைப்படங்கள், இசை, ஓவியம் என்று ஒரே சீராக அடையாளப்படுத்தினால் நன்று. இதைப் பற்றி உங்களின் மற்றும் பிறரின் கருத்து அறிய ஆவல். நன்றி. --Natkeeran 12:41, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நற்கீரன், எனக்கு இதில் தெளிவில்லை. ஆனால் வகையும் வடிவமும் வேறுபடும்தான். ஆனால் குறித்த பகுப்பில் ஒரேயொரு கட்டுரை இருந்ததால் பகுப்பை மாற்றினேன். கட்டுரைகள் அதிகமாக தாமாகப் பொருத்தமான பகுப்புக்கள் உருவாகும் என்ற நம்பிக்கைதான். இதேபோல பாடகர்கள் பகுப்பை இசைக்கலைஞர்கள் பகுப்புடன் இணைக்கலாமா என்று தோன்றுகின்றது. கட்டுரைகள் அதிகரிக்கப் பொருத்தமான பகுப்புக்கள் உருவாகும். இசையுடன் அதிக பரிச்சயம் உள்ளவர்களின் பங்களிப்புப் பயனுள்ளது. --கோபி 12:47, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply
பாடகர்கள் பற்றி தனியே ஒரு பகுப்பு இருப்பதுதான் சரி. ஏன் என்றால் வானொலி அறிவித்தலின் போது அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்துவர். இசையமைப்பாளர்கள் என்றும் ஒரு பிரிவு இருத்தல் சரி. இசைக்கருவி அல்லது வாத்தியக் கலைஞர்கள் என்று பிறரை குறிக்கலாமா. இவர்கள் எல்லோரையும் ஒரு சேரே இசைக்கலைஞர்கள் எனலாமா?
மேலும் கலைகள் | சமயம் | நலவியல் அல்லது மருத்துவம் | கல்வி போன்றவற்றை தாய்ப்பகுப்பு ஆக்குவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இங்கு ஒரு சாதாரண மனிதருக்கு என்ன மிக முக்கியம் என்பதுவே தாய்ப்பகுப்பு ஒரு தகுதி. சமயங்கள் என்பதில் இருந்து சமயம் என்று மாற்றுவது பொருந்துமா?
இன்னுமொரு பக்கத்தில் முதல் இருபது முக்கிய பகுப்புக்கள் என்று வகைப்படுத்தலாம என்றும் தோன்றுகின்றது? அதில் இயற்கை அல்லது சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசியல், சட்டம் போன்ற துறைகளையும் முன்னிறுத்தலாம்? வெவ்வேறு வகைப்படுத்தல் முறைகளைப் பற்றி தொடர்ந்து அலசி வருகின்றேன். வகைப்படுத்தலும் மீள் வகைப்படுத்தலும் ஒரு தொடர் பணியாக இருக்கும்? ஆனால் அடிக்கடி மாற்ற முடியாது? சீரான முறைமையும் தேவை. மேலும் பின்னர்...
--Natkeeran 13:45, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நற்கீரன், இணைய உள்ளடக்க உருவாக்கத்தில் நாம் மிகப் பின்தங்கியிருக்கிறோம். நாளாந்த வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் தமிழில் இணையத்தில் போதியளவு இல்லை. அந்த வகையில் மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு முக்கியத்துவமளிப்பது பொருத்தமானது. அவற்றைத் தாய்ப்பகுப்புக்கள் ஆக்க வேண்டியதில்லை. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது பொருத்தமாயிருக்கும். வகைப்படுத்தல்களை அடிக்கடி மாற்றியமைப்பது சிக்கலாயிருக்கும். கோபி 13:57, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நாளந்த வாழ்வியல் எதிர் தினசரி வாழ்வியல்? இதில் எது நல்ல தமிழ்? --Natkeeran 14:00, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நாளாந்த, தினசரி - இரண்டுமே நன்றாகத்தான் தெரிகின்றன. நாளாந்த என்பதை அதிகம் நான் பயன்படுத்துகிறேன். செல்வாவிடம் கேட்கலாம். --கோபி 14:08, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நாளாந்தம் இலங்கையில் அதிகம் உள்ள சொல். தினசரி தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள சொல். ஆனால், தினம் தமிழ் இல்லை என்பதால் தினசரியும் தமிழ் இல்லை. அன்றாடம், அன்றாட என்று சொன்னால் தமிழாகவும் இருக்கும். அனைவருக்கும் புரிவதாகவும் இருக்கும். --Ravishankar 22:04, 16 செப்டெம்பர் 2007 (UTC)Reply


தெளியவும்!

தொகு

றோசா பாக்ஸ்? அல்லது ரோசா பாக்ஸ்? சற்று தெளியவும்! -நரசிம்மவர்மன்10 07:17, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ரோசா என்பதை ஈழத்தவர் tosa என்பதற்கு அண்மித்து உச்சரிக்க வாய்ப்புண்டு. Rosa - றோசா என்பது சரியென்றே நினைக்கிறேன். --கோபி 07:22, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபி இது மீண்டும் மீண்டும் வந்து உறுத்துவது! ரோசா என்பதை tosa என்று பலுக்குவது தமிழ் ஒலிப்பு முறையில் பிழையான வழக்கு (இதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று நன்கு உணர்வேன்). யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுபான்மையர் பிறமொழித் தாக்கத்தால் இப்படிப்பலுக்குகிறார்கள் என்பது என் கணிப்பு. இதனை மாற்றச்சொல்ல எனக்கு உரிமை இல்லை, ஆனால் பொது வழக்கு ஒட்டி வலியுறுத்தாமல் இருக்கலாம் என்பது என் நினைப்பு. றோசா என்று எழுதினால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் RRROsa என்று ஒலிப்பார்கள் அது மிகவும் வன்மையானது. பொதுவாக தமிழகத் தமிழில் வல்லின றகரம் முதலில் வருவது மிகவும் கொடூரமாக உணரப்படுவது (மொழிப் பண்புக்கு மிக முரணானது. ரகரம், லகரம் முதலானவையும் மொழி முதல் வருவதில்லை என்றாலும், அவை இடையினம், ஆகையால் கடுமையற்றதாகக் கருதப்படுகின்றது.)--செல்வா 01:51, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply

செல்வா, தமிழகம்தான் பிறமொழித்தாக்கத்தால் றகர, ரகர வேறுபாட்டை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன். இது தொடர்பில் தொடர்ந்து உரையாடுவதற்கான மொழியலறிவோ உசாத்துணைகளோ என்னிடமில்லை. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் என் நிலைப்பாட்டை மறுபரிசீலிப்பதற்கான அவகாசம் கிடைக்கும். அப்பொழுது என் கருத்தைத் திருத்திக் கொள்ள அல்லது அதனை நியாயப்படுத்த முடியும். மீண்டும் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. --கோபி 15:42, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply

Copyright, Patent

தொகு

கோபி, இரண்டுமே "உரிமம்" Copyright படியுரிமை (படியெடுக்க, மீள் பதிவு செய்ய, பதிப்பிக்க). இதனை எழுத்துரிமை என்று சொல்வதும் பொருந்து என நினைக்கிறேன் (எல்லாமே எழுத்தும் அல்லதான்). Patent என்பது பயன்தரும் புத்தாக்கத்தை (செய்முறை பற்றியது, அறிவியல்-பொறியியல்-மருத்துவ இயல் முதலான தொழில் அடிப்படையானது) பயன்படுத்தத் தரும் செய் தனியுரிமை--செல்வா 01:51, 24 செப்டெம்பர் 2007 (UTC).Reply

Please keep providing your objective feedback...

தொகு
I'll translate the essence, once I get home.
Kobi, I think you are very frank, and you are mostly right in your statements. Even if I thought like you I would not bring it up, because I am not prepared to be seem in the critical or "authoritarian" light. It is hard to be critical than many people realize. You have to have guts. The way I view this situation is, I think he is a bit naive to do a write about himself. But, we can engage him, and maybe evaluate.
It is difficult process. Because, people will question our judements, and "authority". Also, we have to look at this from the open source, inclusive, and Tamil context as well.

--Natkeeran 15:49, 24 செப்டெம்பர் 2007 (UTC)Reply

கிண்ணம்-கோப்பை

தொகு

கோப்பை ஈழத்திலும் பயன்படும் சொல்தான். ஆனால் plate போன்றவையும் கோப்பை எனப்படுகின்றன. கிண்ணம் நல்ல தமிழ்ச் சொல்தானே. அது தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லையா? கோபி 05:55, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

:-) இருக்கின்றது, ஆனால் அஃது சிறிய அளவிலான பாத்திரத்தை (கோப்பையை) குறிக்கும். மேலும், இங்கே வழக்கில் "உலகக்கோப்பை" என்றுதான் மொழிபெயர்கிறார்கள்
-நரசிம்மவர்மன்10 06:06, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

பொருள் இலக்கணம் விரிவாக்குவது பற்றி

தொகு

கோபி, நீங்கள் வெகு நாட்களுக்கு முன் விடுத்திருந்த வேண்டுகோளை நான் ஒரு போதும் மறக்கவில்லை. அது பற்றி நன்றாகவே, விருப்புடனே நான் எழுதுவேன். என்றாலும் அண்மையில் வருகை தந்திருக்கும் இரண்டு அரிய தமிழறிஞர்கள் என்னைவிட அழகாக எழுத வல்லவர்கள். பயனர்:ஹரிகிருஷ்ணன் , பயனர்:perichandra ஆகிய இருவரும் தேர்ந்த தமிழறிஞர்கள். அவர்களில் ஒருவர் எழுதுவது சிறப்பாக அமையும். மேலும், பொருள் இலக்கணம் பற்றி 4-5 வரிகள் இருந்து, 2 கிலோ பைட் தாண்டி இருப்பது என்னைப்பொருத்த அளவிலே ஒரு குறிக்கோள் இல்லை. பொருள் இலக்கணம் என்பது தமிழின் தலையாய பெருஞ்சிறப்பு வாய்த ஒன்று. உலக மொழிகள் எவற்றினும் இல்லாததது (சமசுகிருதத்தில் இருக்கிறது என்று Scharf என்னும் மேனாட்டு அறிஞர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார், ஆனால் அது எத்தனையும் வலிய செயற்கையாக வருவித்தும், தமிழ் மரபை அறியாமலும் எழுதியது என்பது வெள்ளிடை மலை). எனவே சற்று பொருத்து இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். அதே போல பேயாழ்வார், பெரியாழ்வார், அதியமான் போன்ற பல குறுங்கட்டுரைகள் உள்ளன, அவற்றையெல்லாம் நன்றாக அழகாக விரித்து எழுதலாம். ஒரு சிறிதாவது விரித்து எழுத எண்ணியும் உள்ளேன். என் கணிப்பில் "செய்யவேண்டியன" என்று ஆயிரக்கணக்கில் உள்ளத்துள் வந்து முந்துறுகின்றது. சிறுகச் சிறுக பிரித்தும் வகுத்தும் வரிசைப் படுத்தியும்தான் செய்ய வேண்டியுள்ளது. எனவே சற்று பொருத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். உங்கள் களப்பணிகளை மிகவும் போற்றி மகிழ்பவர்களில் நானும் ஒருவன். நம் எல்லோருடைய குறிக்கோளும், த.வி. நல்ல ஒரு பயனுடய, வலுவான அடிப்படை பொருந்திய உண்மைகளுள்ள, தரம் மிக்க ஒரு கலைக்களஞ்சியமாக இருக்க வேண்டும் என்பதே. நம் எல்லோருடைய அரிய உழைப்பும் அதற்காகவே. --செல்வா 13:34, 28 செப்டெம்பர் 2007 (UTC)Reply

மக்கள் தொ.கா

தொகு
  • http://www.makkal.tv/
  • ம.தொ.கா வலைப்பக்கம் வடிவமைப்பு நன்றாக உள்ளது. எதுவும் துள்ளி பாயாமல் நன்றாக செய்துள்ளார்கள்.

--Natkeeran 17:59, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

சில பகுதிகள் துள்ளிப் பாய்வதாகவே தெரிகின்றன. IE இல் சரியாகத் தெரியும் என்றே நினைக்கிறேன். வடிவமைப்பு நன்றாகத்தான் உள்ளது. நன்றி.--கோபி 18:04, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இணைய மேல்நிலைப் பகுப்புப்பெயர்கள்

தொகு

கோபி, என் நண்பர் ஒருவர் (பேரா பொன்னம்பலம்) இது பற்றி குறிப்பு விடுத்திருந்தார். பின்னர், உங்கள் குறிப்பைப் பார்த்தவுடன், உடனே சென்று சில மாற்றங்கள் செய்தேன். பெருமைப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வு இது! முதல் 11 மொழி எழுத்துக்களில் தமிழும் ஒன்றாக இருப்பது அருமை! நீங்கள் கூறியவாறு நல்ல தமிழில் அமையாது இருந்துவிட்டது வருந்தத்தக்கதுதான், ஆனால் செய்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த தமிழில் எழுதியுள்ளார்கள். அவர்களைப் பாராட்டுவோம். நான் பயர் பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டிலும் சொடுக்கிப் பார்த்தேன், வெட்டி ஒட்டியும் பார்த்தேன், மிக அருமையாக வேலை செய்கின்றது!--செல்வா 19:52, 16 அக்டோபர் 2007 (UTC)Reply

The IDNwiki

தொகு

Thank you ever so much for all your help! --Cary

பஞ்சமர் இலக்கியம்

தொகு

--Natkeeran 00:08, 31 அக்டோபர் 2007 (UTC)Reply

பாசிசம்

தொகு

பாசிசம் என்றால் ஒரு அமைப்பு அல்லது அரசு ஒரு சமூகத்தில் எல்லா முனைகளையும் தமது அதிகாரத்தின் அல்லது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதை அல்லது வைத்திருக்க முயற்சிப்பதைக் குறிக்கும். இது புலிகள் மீதி அதிக பட்சமாக முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம். அதை விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் என்ற கட்டுரையில் இருந்தே விலத்தியிருப்பது அவ்வளவு பொருந்தவில்லை. --Natkeeran 19:51, 10 நவம்பர் 2007 (UTC)Reply

பாசிசம் என்றால் Fascism என்ற ஆங்கல சொல்லின் தமிழாக்கமே. அச்சொல்லுக்கு ஜனநாயம் போன்று ஒரு குறிப்பிட்ட வரையறை ஒன்றை தரமுடியும். 3-8 கூறுகள் பாசிசம் என்ற செல்லாடலுடன் தொடர்புற்றாலும், அவற்றை பாசிசம் என்று சொன்னால் அவற்றின் தனிப்பட்ட கனம் அடங்கி பாசிசம் என்று கொச்சைப்படுத்து போன்று ஆகிவிடும். பாசிசம் முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம். அவ்வளவே. அது புலிகளுக்கு பொருந்துமா என்ற மதிப்பீட்டை இங்கு நாம் தரவில்லை என்பது இங்கு குறிக்கத்தக்கது. மற்றய சில விமர்சனங்கள் நோக்கி மதிப்பீடுகளும் முன்வைக்கப் பட்டிருப்பதும் இங்கு குறிக்கத்தக்கது. நன்றி. --Natkeeran 20:07, 10 நவம்பர் 2007 (UTC)Reply

தெளிவக்கம்

தொகு

ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது போல். Diambiguation என்பதை ஒட்டியே தமிழிலும் 'தெளிவக்கம்' என இயற்றினேன். எனவே தயவு செய்து அதை புத்தர்(தெளிவக்கம்) என்றே இருக்குமாறு. கேட்டுகோள்கிறேன் Vinodh.vinodh 13:34, 16 நவம்பர் 2007 (UTC)Reply

:)

தொகு
:)   --ரவி 19:12, 16 நவம்பர் 2007 (UTC)Reply

இறகனா

தொகு

கோபி, என் கருத்தை பேச்சு:இறகனா எழுத்து பக்கத்தில் இட்டுள்ளேன். பார்க்கவும். --செல்வா 13:33, 17 நவம்பர் 2007 (UTC)Reply

கோபி, தங்களது பாராடுக்கு நன்றி. கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டை பொறுத்த வரையில், வேற்று மொழி சொற்களை தமிழ் ஆளும் போது பயன்படுத்துதல் தகும். ஹ,ஜ(மகன்,நகம்,முகம், காஞ்சி முதலிய சொற்கள்) போன்ற ஒலிப்புகள் தமிழிலேயே உள்ளபோது கிரந்தத்தை ஏன் வெறுக்கின்றீர்கள். எனவே தமிழ் சொற்களில் வேண்டுமென்றால் கிரந்த்தத்தை தவிர்க்கலாம். பிறமொழி சொற்களை மொழிபெயர்க்கயில் கிரந்த்ததின் தெளிவிற்காக கிரந்த்ததின் பயன்பாடு அவசியாமாந்து. உதாரனமாக யப்பான் என எழுதுவதை விட, ஜப்பான் என எழுதுதலே தகும். படிப்பவர்கள் ஜப்பான் என்ற சொல்லையே சுலபமாக அறிந்துகொள்வர். யப்பான் கேள்விப்படாத ஒரு சொல்லாக இருககும்(எனக்கு யப்பான் என்ற சொல்லை பார்த்தவுடன் சிறிது குழப்பாமாக இருந்தது)வினோத் 14:34, 17 நவம்பர் 2007 (UTC)Reply

கிரந்தத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமென்பதே எனது வேண்டுகோள். வெறுப்பல்ல. யப்பான் என்பது ஈழத்தில் பரவலாகப் பயன்படுவதால் அவ்வாறு ஈழத்தவர் எழுதுகிறார்கள். பரவலாகப் பயன்படுத்தினால் கிரந்தம் தவிர்த்த சொற்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடியனவாக இருக்கும்தானே. அவசியமான இடங்களில் கிரந்தம் பயன்படுத்துவது சரிதான். கோபி 14:39, 17 நவம்பர் 2007 (UTC)Reply

உண்மைதான் உங்கள் கருத்தை ஏற்கிறேன். இருந்தாலும் தமிழ் தன்வயப்படுத்திய வடமொழி சொற்களில் கிரந்தம் இருக்கையில் அதை அவ்வாறே பயன்படுத்துதல் நலம்.அல்லது பழக்கத்தில் இருக்கும் அதற்கு ஈடான ஒரு தமிழ்ச்சொல்லை கையாளலாம். இதை விடுத்து, கிரந்தை நீக்கி எழுதுவதும், வழக்கத்தில் இல்லாது புதுச்சொற்களின் பயன்பாடும ஒரு வித செயற்கையான மொழி நடையை தோற்றுவிக்க்கும். தமிழ் விக்கிபீடியாவில் வழக்கில் இல்லாத பல வினோதமான சொற்கள் பயன்பாடு காணப்படுகிறது. பிற மொழி சொற்களாக இருப்பினும் அவை சாதாரண மக்களின் வழக்கத்தில் இருந்தால் அவற்றை அப்படியே உபயோகிக்கலாம்.உதாரணமாக விசேடம்(நான் என் வாழ்நாளில் கேளிப்படாத சொல்) என்பதை விசேஷம் என எழுதலாம். முடிந்தால் சிறப்பு என்ற பயன்பாகு மிக்க நன்று. மேலும் புகைப்படம் போன்ற தமிழ் சொற்கள் வழக்கில் இருக்கும் போது, அதற்கு மாறாக இன்ன்னொரு சொல் பயன்படுத்துதல் மொழியின் இயற்கை நடை குலைத்து விடுகிறது. வினோத் 14:47, 17 நவம்பர் 2007 (UTC)Reply

வகைப்படுத்தல்

தொகு
சமூகத்தில் வருவேண்டும்.  இரண்டு நிலை கடந்து தேடுதல் பொருத்தமற்றது.  வேண்டுமானால் சமூக அறிவியலிலும் இருக்கலாம்.  பொதுவாக முக்கியத்துவத்தை பொறுத்தே வகைப்படுத்தல் அமையவேண்டும்.  அரசியல் அறிவியல் வேண்டுமானல் சமூக அறிவியலில் வரலாம்.  ஆனால் அரசியல் சமூகத்தில் இருக்க வேண்டும்.  பிற சில பகுப்புகுகளும் அவ்வாறே.  அவற்றையின் விரைவில் இங்கு இடுகிறேன்.  கல்வி, பொருளியல் போன்றவையும் பல பிற துறைகளிலும் இருக்க வேண்டியவை.  அவற்றை சமூக அறிவியலில் அடக்கினால் பலர் தேடி கவனிக்க தவறுவார்கள்.  எனவே பொருத்தமான பிற துறைகளில் இட வேண்டும்.  நன்றி.  --Natkeeran 21:47, 17 நவம்பர் 2007 (UTC)Reply

செரித்தல்-சமிபாடு

தொகு
கோபி, செமித்தல், செரித்தல் இரண்டுமே ஒரே பொருள்தரும் நல்ல சொற்கள். அற்றல் என்பதும் அருமையான சொல். பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு செமித்தல், செமியாமை (அல்லது சமித்தல் சமிபாடு) என்பன விளங்குமா என அறியேன். செரித்தல், செரியாமை, செரிமானம் என்பன விளங்கும் என நினைக்கிறேன். சமி என்பது க்ஷமி என்னும் வடமொழி வழியதாக இருக்கலாம் என நினைக்கிறேன். செரித்தல் இயக்கம், செரிமான இயக்கம், செரிப்பியக்கம், செமிப்பியக்கம், செமித்தல் இயக்கம், செமிபாடு (சமிபாடு) இயக்கம்/தொகுதி. தொகுதி என்னும் சொல் உறுப்புகளை மட்டும் குறிக்கும், இயக்கம் என்பது உறுப்புகளும், அதன்வழி நடக்கும் இயக்கங்களையும் சுட்டும். சமிபாட்டுத் தொகுதி ஈழத்துப் பாடநூல்களில் இருந்தால், அதனை முதல் பத்தியிலேயே குறிக்கலாம். தமிழ்நாட்டு பாடநூல்களில் செரித்தல், செரிமானம் ஆகிய சொற்கள் ஆள்கின்றனர். உணவுச் செரிமான உறுப்புகள் என்பது 11 ஆம் வகுப்புப் பாடத்தில் உள்ள ஒரு தலைப்பு. செரித்தல் இயக்கம் என்று இருப்பதே தெளிவாக இருக்கும் (தமிழ்நாட்டினருக்கு). செரித்தல் என்னும் சொல் ஈழத்தில் ஆட்சியில் இல்லையா? --செல்வா 14:58, 18 நவம்பர் 2007 (UTC)Reply

கண்டனம் + செய்தி :)

தொகு

அப்பத்தா என்பது தான் சரியான ஒலிப்பு. அதை அப்பாத்தா என்று எழுதியதற்காக என் கண்டனங்கள். அப்புறம், ஜூனியரை யூனியர் என்று எழுதி வினோத்தை இன்னும் குழப்பப் பார்க்கிறீர்கள். அதற்கும் என் கண்டனங்கள் :) அப்புறம், என் தங்கை, அக்காக்கள் பெயரிலும் ஸ்ரீ உண்டு என்பது கூடுதல் ரகசியச் செய்தி :) --ரவி 11:55, 19 நவம்பர் 2007 (UTC)Reply

உங்களை மட்டும் சின்னப் பையன் என்று சொன்னால் பிறகு சுந்தர், சிவா, நாங்கள் எல்லாம் என்ன? இதற்கும் இன்னொரு கண்டனம் :) --ரவி 11:58, 19 நவம்பர் 2007 (UTC)Reply

பார்த்தேன், அதிர்ச்சி

தொகு

நேற்று, நள்ளிரவில் தான் ரெக்கா நொ ஹொனோ கட்டுரை எழுதினேன். இரண்டு திங்களுக்கு முன்புதான் மஞ்சுஸ்ரீ எழுதினேன். நான் இங்கு வந்து உருப்படியாக இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகவில்லை என் நினைக்கிறேன். அதற்குள் என் கட்டுரைகளை முதற்பக்கத்தில் இட்டது நான் எதிர்பார்க்காத ஒன்று. Anyways, கட்டுரைகளை முதற்பக்கத்தில் இட்டமைக்கு என் நன்றிகள் வினோத் 04:59, 20 நவம்பர் 2007 (UTC)Reply

நிச்சயமாக(அது நிதர்சனத்தில் நடக்காத ஒன்றாக இருப்பினும், எனது பெரும்பாலான ஆசைகள் எதுவும் நிதர்சனத்துக்கு உட்பட்டு இருப்பதில்லை. காண்க என் பயனர் பக்கம்). குறைந்த பட்சத்தில் விக்கிபுத்தகித்திலாவ்து இந்த மங்காவை தழுவி தமிழில் எழுத ஆசை(இதை விக்கியில் அனுமதியில்ல்லாமல் அப்படியே மொழிபெயர்த்தால் நொபுயிகி என் மீது Copyright Infringement வழக்கு போட்டுவிடுவார்!!!. ஆகவே தான் தழுவல் என்றேன். அதுசரி, தமிழ் விக்கி புத்தகத்தில் தொடர்கதை எழுத அனுப்பதிப்பார்களா என்ன?! இதுவும் நிதர்சனத்தை மீறிய ஒன்றாக ஆகிவிடுமோ என்னவோ!) ம்ம்ம்ம். வினோத் 05:20, 20 நவம்பர் 2007 (UTC)Reply

உங்கள் ஆலோசனைகளுக்கும், ஊக்குவிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முயற்சித்து பார்க்கலாம், அதில் தவறில்லை தானே?. இந்த மாதம் முடியட்டும். வினோத் 06:20, 20 நவம்பர் 2007 (UTC)Reply

2007 தமிழ் விக்கிபீடியா ஆண்டறிக்கை

தொகு

விரைவில் வரும்...--Natkeeran 00:21, 1 டிசம்பர் 2007 (UTC)

கோபி, நான் இன்றிலிருந்து பயன்படுத்தபோகும் AWT என்ற விக்கி மென்பொருளுக்கு அனுமதி வேண்டுகிறேன். ஆங்கில விக்கியில் அனுமதி வாங்க வேண்டும் என்று இருந்தது இங்கு எப்படி என்று எனக்கு தெரியவில்லை. எனவே இந்த மென்பொருளை இங்கே தொடர்ந்து பயன்படுத்த அனுமதி தரும்படி வேண்டுகிறேன் வினோத் 12:39, 1 டிசம்பர் 2007 (UTC)

மன்னிக்கவும் அது AWB. வினோத் 12:41, 1 டிசம்பர் 2007 (UTC)

எனது கட்டுரையில் ஈழவழக்கு

தொகு

கோபி, மலையாள எழுத்துக்கள் என்ற கட்டுரையில் ஈழத்தமிழ் குறித்த எனது கருத்துக்களை சரிபார்ர்க்கவும். இங்கு எனக்கு கிடைத்த அறிமுகத்தை வைத்து மலையாள எழுத்து பயன்பாட்டையும் ஈழத்தமிழ் எழுத்து பயன்பாட்டையும் ஒப்புநோக்கி எழுதி இருக்கிறேன். எனது கருத்துகளில் பிழை உள்ளதா என தயவு செய்து சரிபார்க்கவும் வினோத் 18:44, 3 டிசம்பர் 2007 (UTC)

அக் கருத்துக்கள் சரிதான். இதில் கண்ட சில விடயங்களை நானும் கவனித்திருக்கிறேன். மேலும் விசாரித்து எழுதுகிறேன். Mayooranathan 18:58, 4 டிசம்பர் 2007 (UTC)

இணைப்பில் தகராறு

தொகு

எனக்கு இணைய இணைப்புச் சரியாக வேலை செய்யவில்லை. சண்டெல் இணைப்பு மாத்திரம் தான் வேலை செய்கின்றது. ஏதோ இணைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் இருப்பது போல் தெரிகின்றது. உங்களுக்கு எப்படி?--உமாபதி 18:43, 7 டிசம்பர் 2007 (UTC)

கோபி, ஏதோ உணர்ச்சி வசப்பட்டு மாற்றிவிட்டேன். மீண்டும அதை revert செய்யுமாறு வேண்டுகிறேன். நான் மாற்றியதை நானே திரும்பவும் மற்றினால் என் Image கொஞ்சம் Spoil ஆகிவிடும் என்பதால்(ஏற்கனவே என்னுடைய Image Total Damage ஆகி விட்டது என நினைக்கிறேன்) தாங்கள் அதை மாற்றிவிடவும்வினோத் 18:38, 8 டிசம்பர் 2007 (UTC)

எனது Imageஐ காப்பாற்றியதற்கு நன்றி வினோத் 18:43, 8 டிசம்பர் 2007 (UTC)

ஆம் கவனித்தேன். என்னால் முடிந்த அளவுக்கு எனது நண்பர்களை பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், எனது பயனர் பக்கத்தையே Blog போல நான் பாவிப்பதால், எனக்கென்று தனியாக ஒரு வலைப்பூவை உருவாக்க விரும்பவில்லை ;-). அது முடியாத காரணத்தினால், Orkut குழுக்களில் இது குறித்து கருத்துகள் எழுத முயல்கிறேன். வினோத் 18:58, 8 டிசம்பர் 2007 (UTC)

கோபி, தாங்கள் கேட்டுக்கொண்டபடி தெலுங்கு மொழிக்கட்டுரையை விரிவாக்கி விட்டேன். அதில் பாதி தெலுங்கு விக்கிபீடியாவில் இருந்து பெற்றது மீதி ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து. தெலுங்கு விக்கிபீடியாவின் நடை சரியில்லாததால்(தெலுங்கு குறித்து அவர்கள் POVஇல் இருந்து எழுதி இருந்தனர். பொதுவான நோக்கோடு எழுதவில்லை) ஆங்கில விக்கிபீடியாவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கில இலக்கணச்சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்கள் எனக்கு தெரியாத காரணத்தினால் இலக்கணம் குறித்த பகுதியை நான் மொழிபெயர்க்கவில்லை வினோத் 12:33, 9 டிசம்பர் 2007 (UTC)

கோபி, செல்வா இக்கட்டுரையை படித்த பிறகு தெலுங்கு எழுத்துக்களை குறித்த கருத்துக்கள் முழுமையாக இல்லை என கருத்து தெரிவித்தார்(பேச்சு பக்கத்தை பார்க்கவும்). தெலுங்கு எழுத்துக்கள் என்ற கட்டுரையை சுருக்கி, இந்த கட்டுரையில் தங்களால் இணைக்க முடியுமா ? வினோத் 15:37, 9 டிசம்பர் 2007 (UTC)

கோபி, துணைப்பக்கங்களை உருவாக்குவது எவ்வாறு ? விக்கித்திட்டம் பௌத்தத்தில் துணைப்பக்கங்கள் உருவாக்கலாம் என்றிருக்கிறேன் வினோத் 12:53, 13 டிசம்பர் 2007 (UTC)

சமூக அறிவியல்

தொகு

கோபி, சமூகம் - சமூக அறிவியல் இரண்டையும் வேறுபடுத்துவது ஒரு வகையில் இலகு என்றாலும், த.வி வகைப்படுத்தலில் சற்று சிக்கலானது. பல பகுப்புகளை நீக்கிய பின்னர் தான், அவற்றை அவற்றிகுள் விட்டுவிட்டு சமூகம் என்ற பகுப்புக்குள்ளும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. அப்படிச் இனியும் செய்ய வேண்டும் என்றும் தோன்றுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் அரசியல் சமூக அறிவியல் என்பதை விட சமூகம் என்ற வகைக்குள்தான் வருகின்றது. சமூக அறிவியலுக்கும் அறிவியலுக்கும் ஒரு இடைவெளி இருக்கின்றது. எவை சமூக அறிவியல் என்பதிலும் சிக்கல் இருக்கின்றது. தாய்ப் பகுப்புகளை சுருக்க வேண்டும் என்று செல்வா சுட்டுகின்றார், எனக்கோ விரிவு செய்வதே பொருதம் போல் தெரிகின்றது. மேலும் பார்க்க en:Library classification, en:Colon classification, Wikipedia:வகைபடுத்துதல். எதாவது சற்று தான்தோன்றியாக செய்துவிட்டதாக தோன்றினால் தெரியப்படுத்தவும். நன்றி. --Natkeeran 02:04, 16 டிசம்பர் 2007 (UTC)

நீங்கள் சமூகம் பகுப்பு நகர்த்திய தலைப்புக்கள், பகுப்புக்கள் சமூக அறிவியலுக்குப் பொருந்துவனவாக இருந்தாலும் பகுப்புக்களினூடு நகரும் வாசகருக்கு அவை சமூகம் பகுப்பினுள் இருப்பதே இலகுவானதாகவும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். அவ்வகையில் உங்கள் மாற்றங்கள் பொருத்தமானவை. இப்போதுள்ள பகுப்பு எண்ணிக்கையானது கட்டுரை எண்ணிக்கைக்கு அதிகம்தான். குறைவாக இருந்தால் எழுதப்படவேண்டியவற்றை இலகுவில் இனங்காண முடியும். அவ்வாறு கட்டுரைகள் அதிகரிக்கப் பகுப்புக்கள் தாமாக அதிகரிக்கும். இது என் தனிப்பட்ட எண்ணமே. நன்றி. கோபி 08:20, 16 டிசம்பர் 2007 (UTC)

பேச்சுப் பக்கத்தில் உரையாடல் கோணம்

தொகு

கோபி, அருள்கூர்ந்து பேச்சுப் பக்கத்தில் உரையாடும் பொழுது, பெயர் அறிவிக்காத பயனராக இருப்பினும், அவர் கூறுவது மிகப்பிழையாக இருப்பினும், "முட்டாள்" போன்ற சொல்லாட்சிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன். உங்கள் உணர்வு, சினமும் நான் நன்கு உணர்கின்றேன், ஆனால் ஓர் அத்துக்குள் கருத்தாடல் நமக்குத்தான் நல்லது. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று விட்டுவிட்டு, வேறு பணிகளில் இறங்குவதே மேல். இவையெல்லாம், என் தனிக் கருத்துக்களே. உங்களுடன் என் கருத்துக்களைப் பகிர்வதே என் நோக்கம். அறிவுரை ஏதும் தருவதாக அருள்கூர்ந்து எண்ணவேண்டாம். --செல்வா 22:52, 17 டிசம்பர் 2007 (UTC)

செல்வா, நீங்கள் சுட்டிக்காட்டியதை நானும் உணர்ந்தேன். பயனுள்ளதாகச் செய்யவெனப் பல பணிகள் இருக்க அவற்றைத் திசைதிருப்புவதாக அமைந்த உரையாடலென்பதால் முட்டாள்த்தனமென்று குறிப்பிட்டேன். ஆயினும் அதனை நான் எழுதியது அதிகப்பிரசங்கித்தனமானதும் பொருத்தமற்றதும்தான். நன்றி. கோபி 23:13, 17 டிசம்பர் 2007 (UTC)
ஆம் கோபி. உங்கள் ஆத்திரம் முற்றிலும் நேர்மையானதுதான் என்றாலும், நாம் இதுபோன்றவர்களிடம் வரையறைமீறி நடந்துகொண்டு நமது மற்றும் நமது தளத்தின் மதிப்பைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. -- Sundar \பேச்சு 05:34, 18 டிசம்பர் 2007 (UTC)

Welcome Back

தொகு

Long Time No See!!! Alas! You are back again after a brief Hiatus. Welcome Back. βινόδ  வினோத் 05:10, 14 பெப்ரவரி 2008 (UTC)

). ஒரு மாத காலத்தின் பின்னர் இன்றுதான் என் கணினிக்கு இணைய இணைப்புக் கிடைத்தது. அதுவும் நிரந்தரமோ தெரியவில்லை :( கோபி 05:15, 14 பெப்ரவரி 2008 (UTC)

Information Literacy

தொகு

//Information Literacy என்பதைத் தகவற் பகுத்தறிவு எனத் தமிழில் பயன்படுத்தலாமா? Information Competency, Information Fluency போன்ற சொற்களாலும் Information Literacy குறிப்பிடப்படுவதுண்டு. நல்ல தமிழாக்கத்தைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.//

கோபி, உங்கள் மொழி பெயர்ப்பு நன்றாக உள்ளது. தகவல் தேர்ச்சி, தகவல் தேர்ச்சித் திறன், தகவல் அறிதிறன், தகவல் தேர்திறன் என பல சொற்களையும் கருத்தில் கொள்ளலாம். --செல்வா 13:37, 1 மார்ச் 2008 (UTC)

கட்டுரையற்ற பேச்சுப்பக்கங்கள்

தொகு

கட்டுரையற்ற பேச்சுப்பக்கங்களை நீக்கலாமா ? இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. கட்டுரை நீக்கப்பட்டு எஞ்சியுள்ள பேச்சுப்பக்கங்கள், இன்னொன்று கட்டுரையே இயற்றப்படாமல் உருவாக்கப்பட்டுள்ள பேச்சுப்பக்கங்கள். இரண்டாவது வகையை வைத்திருந்து முதலாவது வகையை நீக்கி விடலாம் என எண்ணுகிறே. தங்களின் கருத்துகளை கூறவும். நன்றி వినోద్  வினோத் 08:52, 9 மார்ச் 2008 (UTC)

பிறகு, பிற பயனர்களின் பயனர் பக்கத்தை தொகுப்பது விக்கி கொள்கைகளுக்கு உட்பட்டதா என அறிய ஆவல் :-)) వినోద్  வினோத் 08:54, 9 மார்ச் 2008 (UTC)


வாழ்த்துக்கள்

தொகு

கோபி, தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையிட்டு எனது வாழ்த்துக்கள். த.வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இதுவரை நீங்கள் செய்த பணிகள் பாராட்டுக்கு உரியவை. எதிர்காலத்திலும் உங்கள் பணி இதே போன்ற உற்சாகத்துடன் தொடரவேண்டும் என்பது எனது விருப்பம். மயூரநாதன் 11:36, 14 மார்ச் 2008 (UTC)

பாராட்டுக்கள் கோபி தொடர்ந்து உங்கள் பங்களிப்பு தொடர எனது வாழ்த்துக்கள்--கலாநிதி 17:55, 16 மார்ச் 2008 (UTC)

கோபி, என்னுடைய பாராட்டுக்களையும் பகிர்கின்றேன். 2 வருடங்களாகத் தொடர்ந்து உற்சாகமாகப் பங்களித்தமைக்கு நன்றிகள். தொடர்ந்தும் பங்களிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.--உமாபதி \பேச்சு 18:10, 16 மார்ச் 2008 (UTC)

வாழ்த்துகள், கோபி. ஏற்கெனவே இச்செய்தியை விடுத்துவிட்ட நினைவில் இருந்து விட்டேன். உங்கள் அரும்பணி தொடர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:48, 17 மார்ச் 2008 (UTC)

அனைவருக்கும் நன்றி. கோபி 04:36, 17 மார்ச் 2008 (UTC)

அபிராமி அந்தாதி

தொகு

கோபி, என் பேச்சில் உங்கள் தொகுப்பை கண்டேன். விக்கிமூலம் பற்றி கூறியதற்கு நன்றி. - நாகபத்மன் (03/14/2008)

பட்டியல்கள்

தொகு

உங்கள் கருத்து புரிகிறது. குறைந்தது 7-10 items, அல்லதூ விரிவாக்க தேவையான தகவல்கள் இல்லாமல் இனி பட்டியல்களை உருவாக்கவில்லை. நன்றி. --Natkeeran 17:55, 21 மார்ச் 2008 (UTC)

சோதிடம் செம்மை படுத்துதல்

தொகு

கோபி, கடந்த வருடம் சோதிடம் கட்டுரையை செம்மை படுத்துமாறு அக்கட்டுரையில் குறித்திருந்தீர்கள். அப்பணியை நான் இப்பொழுது தொடங்கியுள்ளேன். இக்கட்டுரையின் வரலாற்றில் இருந்து, மயூரநாதன் இக்கட்டுரையை தொடங்கியதாக தெரிகின்றது. அவரையும் நான் தொடர்பு கொண்டுள்ளேன். பத்மன் 02:47, 7 ஏப்ரல் 2008 (UTC)

மீண்டும் வருக

தொகு

கோபி, நீண்ட கால விக்கி விடுமுறைக்கு பிறகு மீண்டும் மீள் வருகை புரிந்தமைக்கு நன்றிகள் வினோத்ラージャン 07:47, 16 ஜூன் 2008 (UTC)

மீண்டும் பழையபடி முழுவீச்சுடன் பங்களிக்கத் துவங்கி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி கோபி.--சிவக்குமார் \பேச்சு 15:19, 29 ஆகஸ்ட் 2008 (UTC)

கட்டுரை அளவு

தொகு

கோபி, அண்மையில் எழுதிய இயக்குநர்கள் பற்றிய குறிப்பு ஆங்கில விக்கியிலும் குறைவாகவே உள்ளது. கலைச்சேவை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கப்படும் :) --ரவி 15:20, 19 ஜூலை 2008 (UTC)

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்

தொகு

வணக்கம் கோபி:

அவ்வப்போது த.வி வந்து போங்கோ. நேரம் கிடைச்சா பங்களியுங்கள்.

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

வணக்கம் நற்கீரன்
தினமும் த.வி.க்கு வருகிறேன்; அண்மைய மாற்றங்களைப் பார்க்கிறேன்; சில கட்டுரைகளை வாசிக்கிறேன். ஆயினும் பங்களிப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. முடியும் போதெல்லாம் பங்களிக்கிறேன். நன்றி. கோபி 16:32, 25 டிசம்பர் 2008 (UTC)
நன்றி கோபி. உங்கட கருத்துக்களை நிச்சியம் பகிருங்கோ. --Natkeeran 16:34, 25 டிசம்பர் 2008 (UTC)

சலாதீன்

தொகு

கோபி, சலாதீன் கட்டுரையை பழைய வரலாற்றுடன் மீண்டும் இணைத்தது குறித்து நன்றி. எப்படி இதனைச் செய்தீர்கள்? விளக்குவீர்களா?--Kanags \பேச்சு 11:22, 28 ஜனவரி 2009 (UTC)

வருக

தொகு

கோபி, மீண்டும் முனைப்புடன் பங்களிக்கத் துவங்கியுள்ளீர்கள். வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:22, 1 மார்ச் 2009 (UTC)

தமிழ் வேர் சொற்கள்

தொகு

தமிழ் வேர் சொற்கள் பற்றிய ஒரு சுட்டியை முன்னர் ஒரு முறை தந்தீர்கள். அதை மீண்டு ஒருமுறை சுட்ட முடியுமா? நன்றி. --Natkeeran 17:09, 5 ஏப்ரல் 2009 (UTC)

நீங்கள் குறிப்பிடும் சுட்டி எதுவென நினைவிலில்லை. ஏதாவது மின்னூலா? கோபி 05:32, 7 ஏப்ரல் 2009 (UTC)

வணக்கம் ஆஸ்திரேலியா

தொகு

கோபி, வருக வருகவென வரவேற்கிறேன்.--Kanags \பேச்சு 05:58, 18 ஜூலை 2009 (UTC)

வரவேற்புக்கு மிக்க நன்றி அண்ணா. வந்து சில காலமாகி விட்டது. மாணவனாகத்தான். கல்வி முடித்ததும் தங்கிவிடவே உத்தேசம் :) கோபி 07:08, 18 ஜூலை 2009 (UTC)

2010 செயற்திட்டம்

தொகு

எப்பவும் ஒரு நிதர்சன பார்வை கொண்ட உங்களிடம் இருந்து, 2010 த.வி தொடர்பான எண்ணக்கருக்களை எதிர்பாத்து இருக்கிறோம். நன்றி.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:29, 19 டிசம்பர் 2009 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:53, 18 பெப்ரவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்

தொகு

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கு

தொகு

கோபி, கூகுள் திட்டம் குறித்த வாக்கையும் செலுத்தினால் நன்று--ரவி 03:59, 22 ஏப்ரல் 2010 (UTC)

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் கோபி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கோபி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:57, 25 மே 2010 (UTC)Reply

கோபி, உங்களைப் பற்றிய அறிமுகத்தை உடனடியாகத் தராவிட்டால்... :) --இரவி (பேச்சு) 13:09, 9 மார்ச் 2012 (UTC)
இரவி, கோபியை அறிமுகம் செய்வதற்குப் போதிய தகவல்கள் இல்லை :) சில மாதங்களின் பின்னர் தரக் கூடியதாக இருக்கலாம். நன்றி. கோபி (பேச்சு) 13:35, 9 மார்ச் 2012 (UTC)
கோபி, தமிழ் விக்கியில் உள்ள உங்கள் பங்களிப்பைச் சுட்டினாலே மிக நீளும்... சரி, சில மாதங்கள் கழித்து மீண்டும் நினைவூட்டுவேன் :)--இரவி (பேச்சு) 13:59, 9 மார்ச் 2012 (UTC)
கோபி, இத்தோடு இந்த விளையாட்டை முடிப்போமே :) தள அறிவிப்பில் பங்களிப்பாளர் அறிமுகங்களை இட்டு வரும் இந்த வேளையில், உங்களைப் பற்றிய அறிமுகம் மிகவும் உதவும். ஒத்த நிலை பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவும். பொதுக்குழுவைக் கூட்டி முடிவு செய்து உடனடியாக அறிமுகத்தைத் தரவும் :) மீண்டும் உங்கள் பங்களிப்புகளையும் எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 16:53, 28 சனவரி 2013 (UTC)Reply

முயற்சிக்குப் பாராட்டு

தொகு

"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று! உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம்! அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை! அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்!
இயலவில்லை எனில் நாம் (விக்கியர்) அனைவரும் இணைந்து திட்டமான, தரமான பெயர்களைத் தயாரித்து அரசுக்களிப்போம்! தமிழ் விக்கியில் கிட்டத்தட்ட 10000 பயனர்கள் பதிந்துள்ளதாக அறிந்தேன். இருப்பதோ 118 தனிமங்கள் (அடையாளம் காணப்பட்டவை) மட்டுமே! 84 பேருக்கு ஒரு தனிமம் மட்டுமே! அவ்வெண்பத்துநால்வரும் (முடிந்தால்) அல்லது குறைந்தபட்சம் 10 பேராவது இணையம் மூலம் குழுவாகச் செயல்பட்டு குறிப்பிட்ட தனிமங்குறித்து விரிவாக ஆய்ந்து ஒரு தூய்தமிழ்ப் பெயரிட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
இது குறித்து நிர்வாகி அவர்கள் கட்டுரைப்போட்டி வலைவாசல் பக்கத்திற்குச் செல்ல ஓர் அறிவிப்பை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டது போல, இக்குழுவாக்கத்திற்கு ஓர் அறிவிப்பு தேவை!
--சூர்ய பிரகாசு.ச.அ. 15:11, 25 ஜூன் 2010 (UTC)

விக்கி மாரத்தான்

தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:19, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

நூலக இணைப்பு

தொகு

கோபி, நூலகத் தொடுப்புகள் சில எழுத்தாளர்களுக்கு அறுந்துள்ளது. உ+ம்: அன்ரன் பாலசிங்கம். பாருங்கள்.--Kanags \உரையாடுக 20:37, 25 திசம்பர் 2010 (UTC)Reply

அன்ரன் பாலசிங்கம் பக்க இணைப்பு இயங்குகிறதே. ஒருமுறை பாருங்கள். ஆனால் முன்னர் கொடுத்த வேறு சில தொடுப்புக்கள் அறுந்துள்ளன. காரணம் URL வடிவம் மாறியமை. அதனாலேயே ஒரு வார்ப்புருகொண்டு கட்டுப்படுத்த எண்ணிப் புதிய வார்ப்புருவை இட்டேன். கோபி 00:31, 26 திசம்பர் 2010 (UTC)Reply
IE உலாவியில் சில நேரம் இயங்கிகுதில்லை. இப்போது சரியாக உள்ளது. நன்றி கோபி.--Kanags \உரையாடுக 00:39, 26 திசம்பர் 2010 (UTC)Reply

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

தொகு

வணக்கம் கோபி. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:18, 2 மே 2011 (UTC)Reply

வணக்கம் இரவி, அண்மைய மாற்றங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தே வருகிறேன். த.வி.யின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. முடிந்தால் நிச்சயம் பங்களிப்பேன். நன்றி. கோபி 13:57, 2 மே 2011 (UTC)Reply
வாருங்கள் கோபி. :) உங்களை மீண்டும் விக்கிப்பீடியாவில் பார்ப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:37, 9 சூன் 2011 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா இறுவட்டில் இலங்கை குறித்த தலைப்புகள்

தொகு

விக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் தொகுப்பில் இலங்கை குறித்த தலைப்புகள் குறைவாகவே உள்ளன. பொருத்தமான தலைப்புகளைச் சேர்த்து உதவ முடியுமா? நன்றி--இரவி 11:10, 12 சூலை 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi கோபி,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு




உங்களுக்குத் தெரியுமா திட்டம்

தொகு




நினைவுக்கெனச் சில குறிப்புக்கள்

தொகு

பலகாலத்தின் பின்னர் த.வி. உரையாடலொன்றில் கருத்துத் தெரிவித்தேன் :) [1]

மூன்று, நான்கு வரிகளேனும் ஒரே மாதிரியான அமைப்பில் 100 பறவைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதப்பட்டால் என எண்ணிப் பார்த்தேன். என்னென்ன பறவைகள் பற்றிய கட்டுரைகள் த.வி.யில் உள்ளன என அலசினேன். பழம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரை பற்றி ஏதும் கட்டுரை உண்டோ எனத் தேடினால் செங்கால் நாரை எனும் பறவை எதுவென்றே தெரியவில்லை. சலீம் அலியின் நூல் [2] பிளமிங்கோவைச் செங்கால் நாரை என்கிறது. த.வி.யில் பூநாரை எனும் கட்டுரை உள்ளது. செங்கால் நாரை பற்றிய தகவலேதுமில்லை. சத்திமுற்றப்புலவர் பற்றிய கட்டுரை த.வி.யில் இன்னும் இல்லை. பனங்கிழங்கு கட்டுரை அவரைச் சங்கப்புலவர் என்கிறது. சரிதானா? தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியத்திலும் [3] அவரைப் பற்றிய கட்டுரை இல்லை. சத்திமுற்றப் புலவரும் வேண்டாம், செங்கால் நாரையும் வேண்டாம். பிளமிங்கோ கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தல் போதும் எனும் ஆடை இன்றி வாடையின் மெலிந்து கை அது கொண்டு மெய் அது பொத்திக் கால் அது கொண்டு மேல் அது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பு என உயிர்க்கும் நிலையிலேயே தமிழ் அறிவுச் சூழலில் இருக்கிறோமா? கோபி 16:47, 26 சனவரி 2012 (UTC)Reply


வணக்கம் கோபி. தாங்கள் விரும்பிய கட்டுரை சத்திமுத்தப் புலவர் பார்க்க.
மேலும் தாங்கள் எதிர் பார்க்கும் கட்டுரைகள் அல்லது விக்கியில் இல்லா தமிழ் குறித்த கட்டுரைகள் இருப்பின் நான் முயற்சி செய்கிறேன். எனக்கும் தொகுப்பதற்குத் தலைப்புகள் கிடைக்கும் .நன்றி--Parvathisri 17:58, 26 சனவரி 2012 (UTC)Reply
பிளமிங்கோவிற்கு பிரதியாக en.White Stork தான் செங்கால் நாரை என நினைக்கிறேன்.

சத்திமுத்தப் புலவர் கட்டுரை கண்டேன். மிக்க நன்றி. கோபி 14:25, 27 சனவரி 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு



வல்லினம் மிகும், மிகா இடங்கள்

தொகு

நீங்கள் கூறுவது போல் இங்குப் பார்த்தேன், அங்குச் சென்றேன் என்பது போல் தற்கால எழுத்தில் பார்ப்பதற்கு அரிதாகும் அளவுக்கும் மிக அதிகமாகப் பிழைகள் மலிந்து விட்டன. இதே போலத்தான் முயற்சித்தல், முயற்சிக்கிறேன் என்பதும். முயல், முயல்தல் முயற்சி (முயற்சி என்பது பெயர்ச்சொல்) என்பது நன்கு அறிந்த ஒன்று. தளர்-தளர்ச்சி, வளர்-வளர்ச்சி, உணர்-உணர்ச்சி. நாம் யாரும் வளர்ச்சிக்கிறேன், உணர்ச்சிக்கிறேன், தளர்ச்சிக்கிறேன் என்று சொல்வதில்லை. ஆனால் மிகவும் மலிந்து வரும் பிழையான வழக்காகிய முயற்சிக்கிறேன் என்பது இன்று இயல்பு போல் ஆகிவிட்டது. அங்கு சென்றேன் என்று ச் இல்லாமல் எழுதுவதற்கும் ஒலிப்பதற்கும் காரணம் இப்பொழுது (ச்)சென்றேன் என்று முதலெழுத்தை வல்லினமாகச் சொல்லாமல், ஃசென்றேன் என்று காற்றொலி கலந்து ஒலிக்கப் பழகி வருவதாலும் இருக்கலாம். அங்கு, இங்கு, எங்கு முதலானவற்றுக்கு அடுத்து வரும் சொற்களில் வல்லின உயிர்மெயில் தொடங்கினால் வல்லினம் மிகுவது, சில இடங்களில் இசை குன்றுவதாகவும் சிலர் கருதுகின்றனர். சொல், சென்றான், சேர்ந்தேன் முதலான பல சொற்களில் முதல் சகர உயுர்மெய் எழுத்து காற்றொலி கலந்து வருகின்றது இன்னாளில். சிலர் ஷொன்னான் (சொன்னான்) என்றும் இப்பொழுது ஒலிக்கின்றார்கள். ஆனால் "எச்சொல்லும் கேளான்" என்னும் பொழுது வல்லின சகரம் தெளிவாகக் கேட்கும். ஆங்கிலத்திலே RP என்பார்கள் (Received Pronunciation) அதாவது திருத்தமாக ஒலிப்பதை, முறையாகக் கற்றுத்தருவர். நாம் தமிழில் அப்படி அக்கறை எடுத்துக் கற்றுத் தருவதில்லை. இக்காலத்தில் ழகர, ளகர, லகர வேறுபாடுகளோ, ணகர, னகர, நகர வேறுபாடுகளோ, ரகர, றகர வேறுபாடுகளோ அறியாமல் பலர் இருக்கின்றனர். தமிழை தமில் என்கிறார்கள். அவர்கள் என்பதை அவர்கல் என்கிறார்கள். --செல்வா 16:02, 1 பெப்ரவரி 2012 (UTC)


வணக்கம் கோபி. பிடியுங்கள், படியுங்கள்செங்கால் நாரையை.மேலதிகத் தகவல் இருப்பின் சேர்த்து விடுங்கள். சலீம் அலி குறிப்பிடும் மற்ற பறவைகளையும் தொகுக்கலாம் என உள்ளேன்.--Parvathisri 16:47, 2 பெப்ரவரி 2012 (UTC)

உதவி

தொகு

கோபி, ”பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு வேலைகளின் போதும் அவை அச்சுவாகனமேறியபோதும் சீர்திருத்தக் கண்ணோட்டத்தால் இழந்தவை ஏராளம்”

என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததப் படித்தேன். இது பற்றி யாரிடமாவது கேட்க வேண்டுமென்று வெகு நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தென். அச்சுத் துறையில் ஆதிக்கம் செலுத்திய சைவ ஆதீனங்கள் / கிறித்தவ பாதிரிமார்கள் நிறைய மாற்றிவிட்டதாகவும், செய்யுள் உரை நூலகளின் மாற்றி விட்டதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். இது குறித்து மேலும் படித்தறிய நூற்கள் இருந்தால் பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:04, 16 பெப்ரவரி 2012 (UTC)

நீங்கள் கேட்டிருப்பவை தொடர்பில் நூல்கள் பரிந்துரைக்குமளவு என்னிடம் தகவல்கள் இல்லை; மன்னிக்க. பதிப்பு வரலாறு தொடர்பான பல்வேறு கட்டுரைகளிலும் பதிப்பு அரசியல் தொடர்பில் பல்வேறு குறிப்புக்கள் உள்ளன. சி.வை.தா. அவரது கலித்தொகைப் பதிப்பில் பதினொரு இடங்களில் ‘அல்குல்’ என்பதனை நீக்கி வேறு சொற்களைப் போட்டிருக்கிறார்; மலையருவி எனும் நாட்டார் பாடல் நூற்பதிப்பில் இடக்கரானதாகக் கருதப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன போன்றவை சில எடுத்துக்காட்டுக்கள். இவைபோல பல சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மூல ஏடுகள் அழிந்தமையால் தெரியாமலேயே போய்விட்ட மாற்றங்களுடன் பல பனுவல்களை நாம் இப்பொழுது வாசிக்கிறோம் என்று ஊகிக்கலாம். தமிழ்ப் பதிப்புலகம், தமிழ் நூல் தொகுப்பு வரலாறு, அறியப்படாத தமிழ் உலகம் என மூன்று தொகுப்பு நூல்கள் பாரதி புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. அவை தமிழ்ப் பதிப்பு வரலாறு தொடர்பான பல்வேறு உசாத்துணைத் தகவல்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நூல்கள் உங்களுக்குத் தொடக்கமாக இருக்கலாம். நன்றி. கோபி 13:26, 16 பெப்ரவரி 2012 (UTC)

பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்

தொகு

வணக்கம், கோபி! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி 23:04, 19 பெப்ரவரி 2012 (UTC)

இந்திய நோக்கு

தொகு

கோபி, உங்கள் திருத்தத்தைப் பார்த்தேன். எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில வேளைகளில் அவ்வாறு நேர்ந்துவிடுகிறது. ஆங்கில விக்கியில்கூட அவ்வப்போது அமெரிக்க நோக்கு தென்படும், ஆனால் அங்கு விரைந்து திருத்துவதற்குப் பல நாட்டு பயனர்கள் இருப்பதால் திருத்தப்படுகிறது. -- சுந்தர் \பேச்சு 14:50, 23 பெப்ரவரி 2012 (UTC)

கட்டுரைகளை இணைத்தல் உதவி

தொகு

உமர்-உமறு இப்னு அல்-கத்தாப் உள்ளடக்கங்களை ஒன்றினைத்து விட்டேன் எவ்வாற்று இணைப்பது? எனத் தெரியவில்லை. அவற்றைத் தாங்கள் இணைக்க முடியுமா?--பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:31, 14 மார்ச் 2012 (UTC)

ஒரு வேண்டுகோள்

தொகு

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:54, 29 மே 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

தொகு



விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

தொகு
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், கோபி!

 
தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

தங்களுடைய மேலான பங்களிப்பினையும், வழிகாட்டுதல்களையும் விக்கித்திட்டம் சைவத்திற்கு தர அன்புடன் அழைக்கிறேன், நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:38, 5 மே 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 06:08, 28 சூன் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் கட்டுரைகளை விக்கிப்பீடியாவிற்கு தந்தமைக்கு விக்கித்திட்டம் சைவம் சார்பாக நன்றிகள் பல. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:09, 10 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தங்களைப் பற்றிய குறிப்புகள் தேவை

தொகு

தமிழ் விக்கிப்பீடியா தொடர்புடைய கட்டுரை ஒன்றைத் தமிழ்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் வெளியிடுவதற்காகத் தங்களைப் பற்றிய குறிப்புகளுடன் தங்கள் புகைப்படம் ஒன்றும் என்னுடைய msmuthukamalam@gmail.com msmuthukamalam@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:16, 22 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம்

தொகு

வணக்கம், நீங்கள் இந்த கட்டுரையை மேம்படுத்த உதவ முடியும், நன்றி: காண்டெலேரியா லேடி பசிலிக்கா.--83.41.94.194 12:42, 9 பெப்ரவரி 2014 (UTC)

செங்கை ஆழியான் பகுப்பு

தொகு

செங்கை ஆழியான் ஆங்கிலக் கட்டுரையில் Tamil activists என்றொரு பகுப்பு இருக்கிறது. இதனை நான் தமிழ்ச் சமூகப் போராளிகள் என்று தமிழ்ப்படுத்தியுள்ளேன். இது சரியானதுதானா?. தாங்கள் இதற்குப் பதிலாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் போன்று வேறு மொழிப்பெயர்ப்பினை பரிந்துரை செய்வீர்களா என்று தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:07, 3 மார்ச் 2014 (UTC)

ஆங்கிலக் கட்டுரையில் ஏன் அவ்வாறு பகுப்பிட்டிருக்கிறார்களோ அறியேன். அவர் ஓர் எழுத்தாளர், கல்வியாளர், பதிப்பாளர், வரலாற்றாசிரியர். ஆனால் செயற்பாட்டாளர் எனும் பகுப்பு அவருக்குப் பொருத்தமில்லை என்பதால் நீக்கினேன். நன்றி. கோபி (பேச்சு) 17:11, 3 மார்ச் 2014 (UTC)
கோபியின் கருத்துடன் உடன்படுகிறேன்.--Kanags \உரையாடுக 20:05, 3 மார்ச் 2014 (UTC)

சர்வதேச இசை வகைகள்

தொகு

கோபி, இக்கட்டுரையை நீக்கும் படி கேட்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் காரணம் தெரிவிக்கவில்லை. அதனை முடிந்த அளவு திருத்தியிருக்கிறேன். கட்டுரையை நீக்கும் அளவுக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நீக்கல் வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:48, 4 மே 2014 (UTC)Reply

வணக்கம். அக்கட்டுரையில் இசை அவ்வாறு பிரிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளதற்கு இணையான ஆங்கில உள்ளடக்கமெதனையும் காண முடியவில்லை. இலங்கை இசைக்கல்வியில் அவ்வாறு குறிப்பிடப்படுகிறதென நினைக்கிறேன். ஆனால் அவ்வாறான வகைப்படுத்தல் இருக்கின்றமைக்கு ஆதாரம் தெரியவில்லை. நன்றி கோபி (பேச்சு) 05:44, 4 மே 2014 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

தொகு
 

வணக்கம் கோபி! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:28, 17 மே 2014 (UTC)Reply

Your admin status

தொகு

Hello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawikisource, where you are an administrator / a bureaucrat / a bureaucrat and administrator. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights.

We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard.

Best regards, Rschen7754 22:00, 18 சூலை 2014 (UTC)Reply

Hello! Could you translate an article about boycott of Russian goods in Ukraine for the Tamil Wikipedia? Thanks for the help.--Trydence (பேச்சு) 20:43, 23 நவம்பர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் கோபி!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--User:aathavan jaffna 07:48, 30 திசம்பர் 2014 (UTC)Reply

எதிர்க்குரல்

தொகு

திரு கோபி, எதிர்க்குரல் என்ற தலைப்பில் இரு ஆண்டுகளுக்கு முன்பாக நான் உருவாக்கிய பக்கம் ஒன்றை, விளம்பரம் என்ற காரணம் கூறி தாங்கள் நீக்கியுள்ளீர்கள். அப்படி விளம்பரம் என்றால், மற்ற நிர்வாகிகள் அனுமதித்த அதனை இரு ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்தது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது. ஒரு வலைத்தளம் குறித்த தகவல்களை கொடுப்பது எப்படி விளம்பரமாகும் என்பதையும் அறிய விரும்புகின்றேன். ஒரு தளம் குறித்த தகவல்களை பதிவது விளம்பரம் என்றால் அதுப்போன்ற பல்வேறு தளங்களை விக்கியில் இருந்து என்னால் காட்ட முடியும். வினவு தளம் இதற்கு ஒரு உதாரணம். என்னுடைய கட்டுரையில், ஆட்சேபத்திற்குறிய தகவலோ அல்லது சொற்றோடரோ இருந்தால் அதனை நீக்க அல்லது மாற்றியமைப்பதே சரியாகும். மாறாக இவ்வளவு காலம் இருந்த பக்கத்தை நீக்குவது மிகுந்த மன உளைச்சலுக்கும் மேற்கொண்டு விக்கியில் பங்களிப்பதற்கு சோர்வையும் உண்டாக்குகின்றது. தாங்கள் உங்கள் நிலையில் உறுதியாக இருந்தால், விக்கியில் உள்ள தளங்களை பட்டியலிட உள்ளேன். தாங்கள் அக்கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கும் நான் பதிந்த கட்டுரைக்கும் உள்ள வித்தியாசங்களை கூற கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன். நன்றி. ஆஷிக் அஹமத் அ

வணக்கம் அகமது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது என்பது மட்டும் ஒரு கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரையாகக் கருதப்படப் போதுமானதன்று. குறித்த கட்டுரையின் உள்ளடக்கம் அதற்கான விளம்பரமாகவே உள்ளது. பெருமளவு இணைப்புக்களூடாகவும் விளம்பரமே வழங்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரை குறிப்பிடத்தக்கதல்ல என்று குறிக்கப்பட்டிருந்தது. அது சரியென ஏற்றே அதனை நீக்கியிருந்தேன். ஒரு வலைத்தளம் பற்றி ஒரு கலைக்களஞ்சியக்கட்டுரை உருவாக்குவதென்றால் அது குறிப்பிடத்தக்கதென நிறுவப்பட வேண்டும். சமய வலைத்தளங்களுக்கெல்லாம் கட்டுரைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இதனை உணர்வுபூர்வமாக அணுகாமல் தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்ற வகையில் அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். வினவு தளத்துடனான உங்கள் கொள்கைப் பிரச்சினைகள் உங்கள் தொகுப்புக்களில் தெளிவாகத் தெரிகின்றன. அது பற்றி இங்கே விவாதிப்பதில் பயனில்லை. நன்றி கோபி (பேச்சு) 15:31, 5 சனவரி 2015 (UTC)Reply
மேலும் எதிர்க்குரல் வலைத்தளத்தினைப் பார்வையிட்டதில் அது உங்கள் வலைத்தளம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அக்கட்டுரை ஒரு விளம்பரம் என நிறுவ அதனை விட வேறு சான்று தேவையில்லை. நன்றி. கோபி (பேச்சு) 15:40, 5 சனவரி 2015 (UTC)Reply

திரு கோபி, தங்களின் பதிலுக்கு நன்றி. மன்னிக்கவும், முரண்பாடுகளின் உருவாகவே உங்கள் கருத்து உள்ளது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன். வினவு குறித்து நான் குறிப்பிட்டது ஒரு உதாரணத்திற்கு தானே தவிர அவர்களுடனான கருத்து வேறுபாட்டை இங்கு கொண்டு வருவதற்கு அல்ல (நீங்கள் விரும்பாவிடில் நான் வேறு பக்கங்களை மேற்கோள் காட்டுகின்றேன்). ஆனால் தாங்கள் அக்கேள்வியை கடந்து போகின்றீர்கள். வினவு போன்ற விக்கி பக்கங்கள் இருப்பதற்கும் (அதிலும் நீங்கள் சொல்லும் 'குறிப்பிடத்தக்கவதென நிறுவப்படவில்லை' என்று உள்ளது), நான் உருவாக்கிய பக்கம் இல்லாமல் போவதற்குமான வேறுபாட்டை கேட்கின்றேன். பதில் கூறவும். மேலும், அன்று தவறென்று தெரியாதது இன்று எப்படி தெரிந்தது என்பதே என் கேள்வி. இதற்கும் தாங்கள் பதில் அளிக்கவில்லை. சமய தளங்கள் குறித்த தகவல்களை பதிவதற்கு விக்கியில் அனுமதி இருக்கும் போது (பல தளங்கள் உள்ளன. உதாரணம் https://en.wikipedia.org/wiki/IslamOnline) தாங்கள் அதனை எழுப்புவது எதிர்மறை சந்தேகத்தை உருவாக்குகின்றது. ஒரு தகவல் குறித்து பேசும் போது அதனை நிரூபிக்கும் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டி அக்கட்டுரையில் தரவுகள் கொடுக்கப்பட்டிருந்தது. அது உங்களுக்கு சங்கடமாக தெரிந்தால் கேள்வி கேட்டிருக்கலாம். ஒரு வலைத்தளம் குறித்த விக்கி பக்கத்தில் அப்பக்கத்தில் இருந்து ஆதாரங்களை நிறுவது தான் சரியாக இருக்கும். இதனை ஒட்டியே அக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் வடிவமைத்தது போன்றே உள்ள மற்ற விக்கி பக்கங்களை நான் காட்டமுடியும். அவற்றையும் விளம்பரம் என்று நீங்கள் நீக்குவீர்களா கோபி?

என்னுடைய தளம் என்பதையெல்லாம் ஏன் எழுப்புகின்றீர்கள் என்று புரியவில்லை!! அப்படியானால் வேறொருவர் இதனை பதிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்வி வரும் என்பதை தாங்கள் அறிந்திருக்கவில்லையா? நாம் இதுக்குறித்து தொடர்ந்து விவாதிப்பதில் அர்த்தம் இருப்பதாக தோன்றவில்லை. இதில் உணர்ச்சி பெருக்கிற்கும் இடமில்லை. நான் என் பக்கத்தை உருவாக்குகின்றேன் அல்லது வேறு யாரையேனும் உருவாக்க சொல்லி பணிக்கின்றேன், அதில் எது விளம்பரமாக உங்களுக்கு தோன்றுகின்றதோ அதனை மாற்றி அமைத்து அப்பக்கம் விளம்பரமாக இல்லாத வகையில் உருமாற்றுங்கள். அல்லது ஒரு வலைத்தளத்தின் பெயரில் பக்கம் உருவாக்கப்பட்டாலே அது அத்தளத்திற்கான விளம்பரமாகிவிடும் என்பதையாவது தெரிவியுங்கள். மிக்க நன்றி கோபி -- ஆஷிக்

ஆஷிக், நீங்கள் உங்களுடைய வலைத்தளம் பற்றிக் கட்டுரை உருவாக்கினீர்கள். அது விளம்பரம் ஆகும். விக்கிப்பீடியாவில் விளம்பரத்துக்கு இடமில்லை. மேலும் அது குறிப்பிடத்தக்க வலைத்தளமும் அல்ல. இணையத்திலுள்ள வலைத்தளங்களுக்கெல்லாம் கட்டுரை எழுதுமிடம் ஒரு கலைக்களஞ்சியம் அல்ல. ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை உருவாக்குமளவு முக்கியமான வலைத்தளம் என்று எனக்குப் படவில்லை.
நான் உங்கள் வலைத்தளத்தினைப் பற்றிய உங்கள் கட்டுரையினை நீக்கியபின்னர் மேலும் அத்தகைய பல வலைத்தளங்களுக்கு ”குறிப்பிடத்தக்கவதென நிறுவப்படவில்லை” வார்ப்புருக்களை இட்டிருக்கிறேன். நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமில்லாத பல கட்டுரைகள் பல ஆண்டுகளாக இங்கு உள்ளன. காலப்போக்கில் அக்கட்டுரைகள் நீக்கப்படுவது வழமையே. இதிலெல்லாம் சந்தேகம் வேண்டியதில்லை. எனது பங்களிப்புக்களை இங்கே பாருங்கள். இதனையும் பாருங்கள்.
விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை பக்கம் உங்களுக்குச் சில விளக்கங்களைத் தரக்கூடும். நன்றி. கோபி (பேச்சு) 17:53, 5 சனவரி 2015 (UTC)Reply

திரு.கோபி, தங்களின் அழகான பதிலுக்கு நன்றிகள் உரித்தாவதாக. என்னுடைய முகவரியில் இருந்து பதிவேற்றப்பட்டது விளம்பரம் என்று நீங்கள் கூறுவதால் அவ்விதிக்கு கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்கின்றேன். எதிர்க்குரல் தளம் குறித்த பக்கத்தை வேறொருவர் பதிவேற்றட்டும். அடுத்து, எதிர்க்குரல் விக்கி பக்கத்தை நான் தொடர்ந்து கவனிக்காத படியால் நீங்கள் குறிப்பிடும் "குறிப்பிடத்தக்கவை" குறித்து நான் அறிந்திருக்கவில்லை. எதிர்க்குரல் பக்கம் மீண்டும் பதிவேற்றப்பட்ட பிறகு, தாங்கள் 'குறிப்பிடத்தக்கவை என நிறுவப்படவில்லை' என்று குறிப்பிடும்பட்சத்தில் என்னுடைய விளக்கத்தை அல்லது கலைக்களஞ்சியத்திற்கு இது அதிகப்படியாக பங்களிக்கக்கூடிய ஒன்றே என்பதற்கான தகுந்த காரணங்களை தருவேன். இம்முடிவு நம் இருவருக்கும் ஏற்புடையதாக அமையும் என்று எண்ணுகின்றேன். நன்றி - ஆஷிக் அஹமத் அ

100 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், கோபி!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 13:45, 31 சனவரி 2015 (UTC)Reply

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:34, 7 மே 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:54, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:04, 8 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:33, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

படிமம் ஏற்றுவதற்கு உதவி/வழிகாட்டல் தேவை

தொகு

முடியுமான பாடசாலை பக்கங்களை மேம்படுத்த முயற்சிகளைமேற்கொண்டு வருகிறேன். அதில் பாடசாலை இலட்சினை பதிவேற்றும் போது காப்புரிமை பிரச்சனை வருகிறது. பதிவேற்றபட்டவை நீக்கபட்டுள்ளது. நீங்கள் இங்கு எவ்வாறு பதிவேற்றிநீர்கள் என்று கூறினால் நானும் பதிவேற்ற உதவியாக அமையும் நன்றி. -Mafas (பேச்சு) 17:21, 6 செப்டம்பர் 2018

@Mafasdeen7: இடது பக்கத்தில் "கோப்பைப் பதிவேற்று" என்பதைச் சொடுக்குங்கள். அது விக்கிப்பீடியா:File Upload Wizard என்ற பக்கத்துக்குச் செல்லும். அங்குள்ள இணைப்பின் வழியாக காப்புரிமையுள்ள "நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடனான" படிமங்களை தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் மட்டும் பயன்படுத்தக்கூடியவாறு தரவேற்றலாம். மேலதிக விபரங்களுக்கு விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags (பேச்சு) 12:08, 6 செப்டம்பர் 2018 (UTC)
@Kanags: நன்றி, அந்த வழியில் முயற்சி செய்கிறேன். -Mafas (பேச்சு) 18:03, 6 செப்டம்பர் 2018 (05.30)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

Invitation for Wiki Loves Women South Asia 2021

தொகு

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!


 
Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.

We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,
Wiki Loves Women Team HirokBot (பேச்சு) 22:02, 18 ஆகத்து 2021 (UTC)Reply

How we will see unregistered users

தொகு

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

Your advanced permissions on tawiki

தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully.

Stanglavine (பேச்சு) 17:25, 13 சனவரி 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=3372086" இலிருந்து மீள்விக்கப்பட்டது