விக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம்

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு,

  1. மேற்கோள், உசாத்துணை, குறிப்புகள், வெளி இணைப்புகள் போன்றவை இல்லாத கட்டுரைகளை அடையாளம் காணுதல்
  2. அடையாளம் காணப்பெற்ற கட்டுரைகளுக்கு {{வார்ப்புரு:சான்றில்லை}} அல்லது {{வார்ப்புரு:Refimprove}} சேர்த்தல்
  3. அக்கட்டுரையினை தொடங்கியவர் அல்லது அதிகம் பங்களித்தவர்களின் பேச்சு பக்கத்தில் முறையான குறிப்பு, {{வார்ப்புரு:சான்று சேர்க்கும் திட்டம்}} இடுதல்
  4. இக்கட்டுரை ஆசிரியருக்கும் உதவும் பொருட்டு பிறகு அதற்கான போதிய அளவிலான ஆதாரம் திரட்டுதல்
  5. மேற்கோள், உசாத்துணை, குறிப்புகள், வெளி இணைப்புகள் போன்றவை மற்றும் விக்கியிடையிணைப்பு சேர்த்தல்

இத்திட்டம் பற்றிய உங்களின் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். சந்தேகம் எழுந்தால் பிற பயனர்களிடம் உரையாடவும்.

சான்று சேர்க்கப்பட வேண்டிய கட்டுரைகள்

தொகு

சான்றுகள் குறித்து அ. கே. கே

தொகு

எவ்வாறு சான்று சேர்ப்பது?

தொகு
  • சான்றுகளை தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்க இரண்டு கருவிகள் உள்ளன.
    • மேற்கோளை உள்ளிடு
    • புரூவ் இட்

மேற்கோளை உள்ளிடு

தொகு

தொகுக்கும் பெட்டியில் உள்ள புத்தகம் போன்ற பொத்தானை (கீழுள்ள படிமத்தில் சிவப்பு நிற கட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது) அழுத்தும் போது கீழுள்ள படிமத்தில் குறிக்கப்பட்டுள்ளதைப் போல புதிய பெட்டி வரும். மேற்கோளை அப்பெட்டியில் இட்டுவிட்டு உள்ளிடு பொத்தானை அழுத்தவும்.

 
மேற்கோளை உள்ளிடு

புரூவ் இட்

தொகு
 
ப்ரூவிட் கட்டுரையை தொகுக்கும் போது, ப்ரூவிட் கருவி சிறிதாக்கப்பட்ட அளவில்
 
புரூவ் இட்
  1. முதலில் உங்களுடைய கணக்கில் புகுபதிகை செய்யவும்.
  2. உங்களுடைய விருப்பத்தேர்வு பக்கத்தில் உள்ள | தொகுப்புதவிக் கருவிகளுக்குச் செல்லவும்.
  3. அங்குள்ள ProveIt! (ப்ரூவ் இட்) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி என்பதை தேர்வு செய்யவும்.
  4. பிறகு பக்கத்தின் கீழுள்ள சேமி பொத்தானை அழுத்தவும்.

முடிந்தது! வெற்றிகரமாக நீங்கள் புரூவ் இட் கருவியை உங்களுடைய பயனர் பக்கத்தோடு இணைத்துவிட்டீர்கள், நீங்கள் இனி இக்கருவையினை பயன்படுத்தத் தொடங்கலாம். ஏதேனும் ஒரு பக்கத்தில் நீங்கள் இப்போது தொகு பொத்தானை சொடுக்கவும். பிறகு ப்ரூவ் இட் கருவியில் உள்ள "மேற்கோள்கள்" அல்லது "ஒரு மேற்கோளைச் சேர்க்கவும்" பொத்தானை சொடுக்கினால் புரூவ் இட் கருவி பெரிதாக்கப்படும்.


மேலதிக தகவல் பெற இங்கு செல்லவும்.

எத்தகைய சான்று சேர்ப்பது?

தொகு

நம்பத்தகுந்த சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். வலைத்தளங்களின் இணைப்புகளை முடிந்தவரை தவிர்க்கவும். அவரவருடைய சொந்த தளத்திற்கோ, வலைத்தளங்களுக்கோ இணைப்பு கொடுப்பது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு புறம்பானது.

செய்திகளை வழங்கும் த இந்து, தினமலர், தினத்தந்தி, தினகரன், மாலை மலர், தமிழ் முரசு, புதிய தலைமுறை போன்ற தளங்களை ஆதாரமாக தரலாம். நூல்களின் மூலங்களை ஆதாரமாக தரலாம். திரைப்படங்களுக்கு ஐஎம்டிபி தளத்தை ஆதாரமாக அளிக்கலாம், ஒரு சுவரொட்டி அல்லது திரைக்காட்சியை இணைக்கலாம்.

சான்று குறித்த மேலதிக தகவலுக்கு, விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தினை பார்க்கவும்.

ஆங்கில விக்கியின் சான்றுகளை அப்படியே நகலெடுக்கலாமா?

தொகு

மொழிமாற்றுக்கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியின் சான்றுகளை பயன்படுத்தலாம். ஏனைய கட்டுரைகளில் அவசியாக உள்ளபோது மட்டும் பயன்படுத்தவும். தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புலமை இருக்க வாய்ப்பிலை. ஆகையினால் குறைந்த அளவு பிற மொழி இணைப்புகளை இடவும்.

நான் எழுதிய நூல்களை ஆதாரமாக இணைக்கலாமா ?

தொகு

சொந்த கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எவ்வாறு எழுத முடியாதோ அதே போல் உங்களுடைய நூல்களை நீங்களே உசாத்துணையாக தர இயலாது.

என்னிடம் வேறு கேள்விகள் உள்ளன, யாரை கேட்பது?

தொகு

விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் இங்கு கேட்கலாம். பிற பயனரின் பேச்சுப் பக்கத்திலும் கேட்கலாம்.

முன்னெடுப்பு

தொகு

விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்