விக்கிப்பீடியா பேச்சு:சான்று சேர்க்கும் திட்டம்

மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்

விக்கிப்பீடியா கட்டுரைகளில் சான்றுகள் சேர்த்து நம்பகத்தன்மையைக் கூட்டுவது குறித்த திட்டத்துக்கான பேச்சுப் பக்கம். இத்திட்டத்தைச் சீராகவும், படிப்படியாகவும் செயற்படுத்துவதற்கான பயனர் கருத்துகளை இங்கு இடலாம். --இரவி (பேச்சு) 14:20, 29 மே 2012 (UTC)Reply

ஒரே நூல் பல மேற்கோள்கள்

தொகு
ஒரே நூலிலிருந்து குறிப்பிட்ட ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே எடுத்த கட்டுரைகளுக்கு உசாத்துணையாக அந்நூலைக் குறிப்பிட்ட பிறகு மீண்டும் எவ்வாறு சான்று, மேற்கோள், குறிப்புகள் சேர்ப்பது? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:29, 29 மே 2012 (UTC)Reply
மேற்கோளுக்கு ஒரு பெயரைக் கொடுத்து (<ref name = "பெயர்"> </ref >) அதே பெயரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். --மணியன் (பேச்சு) 15:07, 29 மே 2012 (UTC)Reply

கட்டுரையின் இறுதியில் பின்வரும் நிரல்துண்டை இணைக்க வேண்டும்:


==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references />

பார்வதி, பொதுவாக மணியன் கூறும் முறையை இங்கு பின்பற்றுவதில்லை. உசாத்துணை என்பது மேலதிக வாசிப்புக்கான நூல்கள் மட்டுமே. நீங்கள் கூறும்படி பார்த்தால் நூலின் மொத்த தகவலை மூல நூல்கள் பகுதியிலும், மேற்கோள்களை நூலாசிரியர், நூலின் வருடம் மற்றும் பக்கம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். உதாரணம் en:Bodhidharma கட்டுரையை பாருங்கள் அதில்,
Sources பகுதியில்
  • நூலின் மொத்த தகவலும் - Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press, ISBN 0-520-21972-4
References பகுதியில்
  • Broughton 1999:54–55
  • Broughton 1999:8
  • a b Broughton 1999:9

என்றும் உள்ளது இதுவே பொதுவான வரலாற்று நூல்களிலும் பின்பற்றப்படுவதை பார்த்துள்ளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:17, 30 மே 2012 (UTC)Reply

நூல் ஆதாரம் என்றால் மேலே தென்காசி சுப்பிரமணியன் சொன்னதுபோலச் செய்யலாம். குறிப்புகள் எனும் பகுதியில் மழைக்காலமும் குயிலோசையும், பக். 36 என்பது போலத் தனித்தனியாகத் தந்துவிட்டு நூல்கள் பகுதியில் அந்நூலைப் பற்றிய முழுத் தகவலைத் தரலாம். en:Help:References and page numbers#Shortened footnotes - இங்கு விளக்கம் உள்ளது. நூல்களல்லாத சான்றுகளுக்கு மணியன் சொன்னதுபோலவே செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 14:48, 20 அக்டோபர் 2012 (UTC)Reply

கட்டுரைகளை அடையாளம் காண்பது

தொகு

//மேற்கோள், உசாத்துணை, குறிப்புகள், வெளி இணைப்புகள் போன்றவை இல்லாத கட்டுரைகளை அடையாளம் காணுதல்// இவ்வாறு இத்திட்டப் பக்கத்தில் உள்ளது. கட்டுரைகளை எவ்வாறு அடையாளம் காண்கிறோம் என தெளிவு படுத்தினால் நல்லது, அல்லது அனைத்து சான்றில்லா கட்டுரைகளுக்கும் வார்ப்புரு சேர்க்கிறோமா?, அப்படியெனில் பேச்சு:நிறுவனம்_(வணிகம்) இப்பக்கத்தில் உள்ள உரையாடலைப் போல பொதுக் கருத்து கொண்ட கட்டுரைகளுக்கு வார்ப்புரு சேர்ப்பது சரியா என அனைவரும் முடிவு செய்தால் நலம். மேலும் புதுப் பயனர்களுக்கு உடனடியாக {{வார்ப்புரு:சான்று சேர்க்கும் திட்டம்}} இடுவதை சிறிது காலம் தள்ளிப் போடலாம் (ஏனெனில் அவர்களுக்கு அயர்வோ அல்லது அச்சமோ ஏற்படலாம் அல்லவா?) என்பது எனது கருத்து. மற்றபடி இத்திட்டத்தின் படி சான்று சேர்ப்பதில் என்னால் இயன்ற அளவு முயல்கிறேன்.--சண்முகம் (பேச்சு) 05:48, 30 மே 2012 (UTC)Reply

வணக்கம் சண்முகம், உங்களுடைய கருத்துகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி!

கட்டுரைகளை அடையாளம் காணுதல்:

  • இதனை (RandomTesting) என்னும் சீரற்ற சோதனை முறையிலேயே செய்து வருகிறேன், ஏதாவது ஒரு கட்டுரை இணைப்பை சுட்டுவதன் மூலமாக, வெவ்வேறு கட்டுரைகளை காணலாம். தற்போது, அதிக மேற்கோள், உசாத்துணை, குறிப்புகள், வெளி இணைப்புகள் போன்றவை இல்லாத கட்டுரைகள் அடிக்கடிதோன்றுகிறது. புதிதாக வருபவர்களுக்கு இதனை ஒரு பயிற்சியாகக் கொடுத்தால், ஏற்கனவே உள்ள பயனர்களும் பின்பற்றினால், இத்திட்டம் விரைவில் வெற்றி பெற்றுவிடும் என்பது என்னுடைய கணிப்பு. ஆரம்பகாலத்தில் என்னால், வலது கையால் எழுதுகோலை பிடித்து எழுத முடியவில்லை, என்னுடைய தாய் அப்போதிலிருந்து எனக்கு பயிற்சியும், முறையான விளக்கமும், ஆர்வமும் ஊட்டியதால் தற்போது நிமிடத்திற்கு குறைந்தது 25 வார்த்தைகள் எழுதிவருகிறேன். கண்டிப்பாக மற்றவர்களும் என்னைப் போல, பழகிக் கொள்வார்கள் என்ற தீராத நம்பிக்கை உள்ளது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:31, 30 மே 2012 (UTC)Reply
  • வார்ப்புரு:Refimprove மட்டும் பயன்படுத்தலாம். வார்ப்புரு:சான்றில்லை இடும் எச்சரிக்கை தேவையற்று நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது.
  • புதிய பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் (குறைந்தது 50 கட்டுரைகளாவது எழுதாதவர்கள்) சான்று சேர்ப்பது குறித்த வேண்டுகோள்களை இட வேண்டாம். இதற்கான வார்ப்புருவையும் தனியே உருவாக்கி சீராக்க வேண்டும்.
  • உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்ற விக்சனரி இணைப்புகளை இடாமல், முறையான உதவிப் பக்கங்களுக்கு இணைப்பு தர வேண்டும். இந்த உதவிப் பக்கங்களைத் தமிழில் விரிவு செய்ய வேண்டும்.
  • குறுங்கட்டுரைகளைத் தவிர்த்து ஓரளவு பெரிய கட்டுரைகளை முதலில் அடையாளம் காணலாம்.
  • பல பக்கங்களில் தேவையற்று இவ்வார்ப்புரு தேங்கியிராமல் இருக்கவும் துப்புரவுப் பணியை விரைவாக்கவும் பகுப்பு:சான்றுகோள் இல்லாக் கட்டுரைகள் பக்கத்தில் 200 கட்டுரைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்கு மிகும் போது வார்ப்புரு இடும் பணியை நிறுத்திவிட்டு சான்று கோள் சேர்ப்பதில் மும்முரம் காட்டலாம்.
  • இப்பணியைத் தானியக்கமாகச் செய்ய முடியுமா என்று பார்க்கலாம். முன்பு சுந்தர் இது குறித்து ஆர்வம் தெரிவித்து இருந்தார். --இரவி (பேச்சு) 06:23, 30 மே 2012 (UTC)Reply
வணக்கம் இரவி,
//தேவையற்று நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது// இனிவரும் காலங்களில் வார்ப்புரு:Refimprove மட்டும் பயன்படுத்துகிறேன்.
//வார்ப்புரு இடும் பணியை நிறுத்திவிட்டு சான்று கோள் சேர்ப்பதில் மும்முரம் காட்டலாம்// ஏற்கனவே வார்ப்புரு:சான்றில்லை இட்ட கட்டுரைகளிலும், அதனை நீக்கியுள்ளேன் (மே 26,27 திகதிகளில் இட்ட வார்ப்புருக்களை மேற்கோள், உசாத்துணை, குறிப்புகள், வெளி இணைப்புகள் போன்றவற்றில் ஏதேனும் சேர்த்த பிறகு).
// 200 கட்டுரைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது// நீங்கள் எண்ணிக்கையில் 200 என்று குறிப்பிட்டுள்ளீர்கள் நான் அன்றைய தினம் வார்ப்புரு இட்டவற்றிற்கு அடுத்த நாள் நீக்கியுள்ளேன்.
// புதிய பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் (குறைந்தது 50 கட்டுரைகளாவது எழுதாதவர்கள்) சான்று சேர்ப்பது குறித்த வேண்டுகோள்களை இட வேண்டாம் // இதில் எனக்கு மாற்றுக்கருத்தே நிலவுகிறது. ஒரு விசயத்தினைக் கற்றுக்கொள்ளும் போதே, அதில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகளையும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். விக்கிப்பீடியாவின் புகழ் அதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையால் மட்டுமல்ல, அதனுடைய நம்பகத்தன்மையின் காரணமாகவே என்பது நீங்கள் அறிந்ததே! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:42, 30 மே 2012 (UTC)Reply

தினேசு, சான்றினைச் சேர்க்கக் கூடிய எவரும் வார்ப்புரு இடாமல் நேரடியாகவே சான்றினை இட்டு விடுவது நல்லது. ஒரு பயனரால் சான்று காண இயலா நிலையில் மட்டும் வார்ப்புரு இடலாம். ஏனெனில், ஒருவரே முதல் நாள் வார்ப்புரு இட்டு மறுநாள் வார்ப்புரு நீக்குவது தேவையற்றது. கடந்த பல ஆண்டுகளாக பல மொழிகளைச் சேர்ந்த பல வகையான பங்களிப்பாளர்களுடன் அறிமுகமாகி வந்துள்ள பட்டறிவில் கூறுகிறேன்: புதிய பயனர்கள் விக்கியில் எழுத ஏற்கனவே ஏகப்பட்ட உளத் தடை, நுட்பத் தடைகள் உள்ளன. யாரும் உடனே அனைத்து விக்கி நடைமுறைகளையும் கற்றுக் கொள்ள முடியாது. போகப் போக கற்றுக் கொள்வார்கள். அல்லது, தகுந்த நேரத்தில் எடுத்துரைக்கலாம். அருள்கூர்ந்து புதிய பயனர்களுக்கு இவ்வேண்டுகோள் இடுவதைக் கைவிடுங்கள். இது அவர்களை அயர வைக்கவே செய்யும். கட்டுரைகளின் நம்பகத்தன்மையைக் கூட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்தச் சுமையைப் புதிய பயனர்கள் மேல் ஏற்ற வேண்டாமே? இதனை ஒரு திட்டமாக முன்வைக்கும் போதே அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கிச் செயற்படுவது நன்று. தங்கள் கருத்தில் / நம்பிக்கையில் பிடிவாதமாக இருக்க வேண்டாம் :) --இரவி (பேச்சு) 06:59, 30 மே 2012 (UTC)Reply

பிடிவாதமெல்லாம் ஏதுமில்லை, புதிய பயனர்களுக்கு இவ்வேண்டுகோள் இடுவதைக் கைவிடுகிறேன், ஆனால் அவர்களுக்கு இதனை எவ்வாறு தெரிய வைப்பது? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:16, 30 மே 2012 (UTC)Reply
புதுப் பயனர்களுக்கு பயிற்சியாக கொடுத்தால் திட்டம் வெற்றி பெறும் எனினும், கூடுதல் பணிசுமை அவர்களின் பங்களிப்புகளைச் குன்றச் செய்யுமோ என்று எனக்கொரு அச்சம். மேலும் புதுப் பயனர்களின் கட்டுரைகளிலும் உடனே இவ்வார்ப்புருவை இடுவதை விட மேற்கோளைச் சேர்த்து அவர்களை ஊக்கப்படுத்தலாம் (ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் நமது விக்கியில் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை குறைவு, புதிய பயனர்களை ஈர்ப்பதும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதும் முக்கியமல்லவா?).--சண்முகம் (பேச்சு) 07:03, 30 மே 2012 (UTC)Reply
ஒரு எடுத்துக்காட்டு இக்கட்டுரையில் நேற்று உரைதிருத்தம் செய்தபோது தேவையற்றவற்றை நீக்கிவிட்டு சித்தர்கள் வழிபட்டது என்ற தகவலுக்கு சான்று கேட்டிருந்தேன். அந்தப் பயனர் அதை நீக்கியுள்ளார். அவருக்கு வித்தியாசமாகத் தோன்றியிருக்கலாம் அல்லவா?.. --சண்முகம் (பேச்சு) 07:12, 30 மே 2012 (UTC)Reply
நான் ஆரம்ப காலங்களில் தொகுத்த போதும், இதுபோன்ற ஒரு சூழலில் சிக்கிக்கொண்டேன், நான் செய்யும் திருத்தங்களை யாரோ ஒரு பயனர் திருத்தியிருந்தார் (அழித்திருந்தார் :-( ). அவர் ஏன் அதனைச் செய்தார், யார் அதனை செய்தது, போன்ற தகவல்களை தேடிக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு மாதகாலம் ஆனது. அதுவரையிலும், நான் வேறு எந்த தொகுப்பினையும் செய்யவும் இல்லை :-( (அதனையும் யாராவது அழித்துவிடுவார்களோ என்ற பயம் தான் முக்கிய காரணம்). -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 30 மே 2012 (UTC)Reply
ஆம், புதிய பயனர்கள் புரிந்து கொள்ளச் சிரமப்படலாம். எனினும், இந்த வார்ப்புருவை நீக்குவது தவறு. இது குறித்து முறையான உதவிப் பக்கங்களை உருவாக்கி வழி காட்ட வேண்டும்.--இரவி (பேச்சு) 07:18, 30 மே 2012 (UTC)Reply
// வார்ப்புருவை நீக்குவது தவறு // ஆம் இரவி அப்பயனரிடம் வேண்டுகோள் விடுக்கலாம் என்றிருந்தேன் , அதற்குள் மின்சாரம் போய் விட்டது :)..--சண்முகம் (பேச்சு) 09:57, 30 மே 2012 (UTC)Reply
புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள் என்பதினையுன், சுமை கூடும் என்பதினையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர்களுக்கு இதுகுறித்து எப்போது விளக்குவது? அவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:16, 30 மே 2012 (UTC)Reply
என்னுடைய கருத்து என்னவெனில் சிறிது காலம் (ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கட்டுரைகளை உருவாக்கிய பிறகு) கழித்து புதுப் பயனருக்கு சான்றுகளை இணைக்க வேண்டுகோள் விடுக்கலாம். அல்லது சில பயனர்களிடம் பின்னூட்டம் (feedback) தெரிந்து கொண்டு பிறகு வேண்டுகோள் விடுக்கலாம். அதே நேரத்தில் சான்று தேவைப்படும், முக்கிய, பிரச்சினையுள்ள கருத்துகளுக்கு கண்டிப்பாக சான்று இணைப்பது அவசியம்.--சண்முகம் (பேச்சு) 09:57, 30 மே 2012 (UTC)Reply

தினேசு, தொடக்கக் காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல் மற்ற பயனர்களுக்கும் ஏற்பட்டு விக்கியை விட்டு விலகக் கூடாது என்பதே கவலை. புதிய பயனர்களிடம் சான்று கோரல் வேண்டுகோள் விடுவதைத் தவிர்க்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

//அவர்களுக்கு இதுகுறித்து எப்போது விளக்குவது? அவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்?//

முதற்பக்க அறிமுகத்துக்குப் பங்களிப்பாளர்களைத் தெரிவு செய்யும் போது, குறைந்தது 50 கட்டுரைகளாவது தொடங்கியுள்ளவர்கள் ஓரளவு விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொண்டு விக்கி சமூகத்தில் ஒன்றத் தொடங்குவதைக் காண முடிகிறது. எனவே, 50 கட்டுரைளுக்கு மேல் தொடங்கியவர்களைப் நாட்பட்ட பயனர்களாகக் கருதி இவ்வேண்டுகோளை விடுக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.

//மேலும் புதுப் பயனர்களின் கட்டுரைகளிலும் உடனே இவ்வார்ப்புருவை இடுவதை விட மேற்கோளைச் சேர்த்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்//

என்ற சண்முகத்தின் கருத்தையும் வழிமொழிகிறேன்.

மேற்கோள் சுட்டுதல் குறித்து ஏற்கனவே உள்ள உதவிப் பக்கங்களையே சுட்டலாம். ஆனால், அவற்றை இன்னும் வெகுவாக விரித்து எழுத வேண்டியுள்ளது. இப்போது உள்ள நிலையில் எப்படி சான்று சேர்ப்பது என்பது நாட்பட்ட பயனர்களுக்கே அவ்வப்போது குழப்புவதாக உள்ளது. எனவே, இது குறித்த வழிகாட்டலைத் தெளிவுபடுத்துவது முதற்கட்டப் பணியாக இருக்க வேண்டும்--இரவி (பேச்சு) 09:16, 31 மே 2012 (UTC)Reply

உங்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன். சரியான வழிகாட்டலுக்கு தேவையானவற்றை எப்படி பிற பயனர்களிடம் பகிர்ந்து கொள்வது. பெரும்பாலான பயனர்கள் அனைத்து நேரங்களிலும் ஆலமரத்தடியில் கருத்து தெரிவிப்பதில்லை, சில முக்கியமான தருணங்களில் மட்டுமே தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஆகையினால், ஆர்வமுள்ள சில பயனர்கள் சிலர் சேர்ந்து, சான்றுகள் குறித்து அ. கே. கே பக்கமோ அல்லது சிறிய தொகுப்போ உருவாக்கினால் இச்சிக்கல் குறையும் என்று எண்ணுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:02, 31 மே 2012 (UTC)Reply

வெளி இணைப்புகள் வேறு சான்று வேறு

தொகு

தினேசு, வெளி இணைப்புகள் வேறு சான்றுகள் வேறு. கூடுதல் தகவலைப் பெறுவதற்கும் கூடுதல் வாசிப்புக்கும் வெளி இணைப்புகள் தரப்படுகின்றன. தமிழ் சாரா பொதுவான பல தலைப்புகளுக்கு இலகுவாக சான்றுகள் தர முடியும். இவற்றை ஆங்கில விக்கியில் இருந்தே பெறலாம். எனவே, வெளி இணைப்புகளைத் தருவதன் காரணமாக சான்று இல்லை வார்ப்புருவை நீக்க வேண்டாம். அது தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை பற்றி ஒரு தவறான அளவீட்டையே தரும். நன்றி--இரவி (பேச்சு) 07:17, 30 மே 2012 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி இரவி! ஒரு கட்டுரையை எழுதியவரைத் தவிர வேறு யாருக்கும் எளிதாக அதனுடைய மூல நூல், உசாத்துணை போன்றவை தெரியாதல்லவா? அவ்வாறு எழுதப்பட்ட தலைப்புகளில் என்ன செய்ய வேண்டும்? அதற்கான சான்றுகளை எவ்வாறு சேர்ப்பது? (எ.கா. கட்டுமான விபரக்கூற்று, கட்டுமான ஆவணங்கள்) வெளி இணைப்புகள் ஒருவகையில் சான்றாக கொள்ளலாமென்று இந்த உரையாடலில் நற்கீரன் கூறியிருந்தார் ? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:13, 30 மே 2012 (UTC)Reply

//ஒரு கட்டுரையை எழுதியவரைத் தவிர வேறு யாருக்கும் எளிதாக அதனுடைய மூல நூல், உசாத்துணை போன்றவை தெரியாதல்லவா?//

ஒரு சில தலைப்புகளுக்கு இது பொருந்தும். பெரும்பாலும் பொதுக் கருத்துகளுக்கு நிறைய ஆதாரங்கள் இருக்கும் என்பதால் பொதுவான ஆதாரங்கள், நூற் பட்டியலைத் தரலாம். அப்படிக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நிலையில் கட்டுரையில் சான்று கோரி வார்ப்புரு இணைக்கலாம்.

//மேலும் படங்களும் வெளி இணைப்புகளும் கூட ஒரு வகையில் ஆதாரங்களே// என்று நற்கீரன் கூறியுள்ளதை இறுதி நிலை சான்றுகளாகக் கொள்ளலாம். முதல் நிலைச் சான்றுகளைச் சேர்க்க இயன்ற இடங்களில் அவற்றைச் சேர்க்க முனைய வேண்டும். --இரவி (பேச்சு) 09:16, 31 மே 2012 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி இரவி, விரைந்து ஆதாரங்களை சேர்க்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:54, 31 மே 2012 (UTC)Reply
மேலே எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ள கட்டுமான விபரக்கூற்று, கட்டுமான ஆவணங்கள் ஆகிய இரண்டும் நான் தொடங்கியவை. இவற்றை விரைவில் விரிவாக்க உள்ளேன். அப்போது சான்றுகளையும் சேர்த்து விடுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 19:43, 31 மே 2012 (UTC)Reply
நன்றி, மயூரநாதன் ! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:35, 1 சூன் 2012 (UTC)Reply
மயூரநாதன், நீங்கள் விரிவாக்குவதாக குறிப்பிடப்பட்ட கட்டுமான விபரக்கூற்று, கட்டுமான ஆவணங்கள் இரண்டு ஆண்டுகளாக அப்படியே உள்ளன, விரைந்து விரிவாக்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:15, 8 சூன் 2014 (UTC)Reply
Return to the project page "சான்று சேர்க்கும் திட்டம்".