Mayooranathan
|
---|
1-2-3-4-5 |
உதவி...
தொகுவணக்கம்; இங்கு தங்களின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:22, 1 ஏப்ரல் 2015 (UTC)
நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:47, 17 ஏப்ரல் 2015 (UTC)
Vote for Bengali People
தொகுI got involved in an edit war with Bangladeshis in the picture collage of Bengali people in English Wikipedia . After that voting started to reach a consensus . Till now most voters are Bangladeshis .please vote here https://en.wikipedia.org/wiki/Talk:Bengali_people#List_of_People Subhash Chandra Bose , Mani Lal Bhaumik , Chaitanya Mahaprabhu , Gobar Guha , Meghnad Saha , Rash Behari Bose , Jagadish Chandra bose , Satyendra Nath Bose , Swami Vivekananda , Satyajit Ray , Sharadindu Bandyopadhyay needs few more votes . The names are not in Tamil WP , so they are appearing red. The voting may close after two three days. thanks--CosmicEmperor (பேச்சு) 05:13, 6 ஏப்ரல் 2015 (UTC)
Peer review & document improvement request about "(Indian) Copyright Act, 1957" at en wikisource
தொகுIn last couple of days, at english language wikisource project, I have worked quite a bit on (Indian) Copyright Act, 1957 to update the same to include changes of copyright amendment act 2012. Please note on most of internet as of now Copyright Act, 1957 may not be uptodate with 2012 amendments, and en wikisource would be one of those few (and also free) places where people can refer the updated document, Provided that it is peer reviewed for accuracy.
I am seeking your kind help in peer review and improvement of this document at en wikisource.
Thanks and warm regards
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)
Peer review and document improvement request
தொகுThis is a Peer review request to seek broader input to improve page: meta:Help:Form I & Affidavit (Customised for relinquishment of copyright as per 'free cultural work' definition) an option available under (Indian) Copyright act 1957 rules.
Rgds.
Mahitgar (பேச்சு) 02:35, 2 சூன் 2015 (UTC)
ஐயம்...
தொகுவணக்கம்! கேட்டு உணரத்தக்க பேட்டிகளை (Audio) மட்டுமே செவ்வி எனக் கூறவேண்டுமா? அல்லது வாசித்து உணரத்தக்க பேட்டிகளையும் (Text) செவ்வி என அழைக்கலாமா?
(பின்குறிப்பு: செவ்வி எனும் சொல்லினை பிபிசி தமிழோசையில் மட்டுமே நான் கேட்டுள்ளேன்.) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:05, 5 சூன் 2015 (UTC)
- இலங்கையில் செவ்வி என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இச்சொல் இலங்கை வானொலியில் அறிமுகமாகியது என நினைக்கிறேன். செவ்வி என்ற சொல்லை பிபிசியில் விமல் சொக்கநாதன் அடிக்கடி பயன்படுத்துவார். அவரும் இலங்கை வானொலியில் அக்காலத்தில் பணியாற்றியவர். அப்போது தொலைக்காட்சி இருக்கவில்லை. வானொலி மட்டும் தான். செவி வழி நேர்காணலை செவ்வி என்றிருப்பார்கள்.--Kanags \உரையாடுக 08:11, 5 சூன் 2015 (UTC)
- செவ்வி என்ற சொல்லுக்கு பேட்டி, நேர்காணல் போன்ற பொருள்கள் தமிழ்ப் பேரகராதியில் தரப்படவில்லை. சிறீ குறிப்பிட்டிருப்பதுபோல் இலங்கையில் இச்சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் உருவானதால் அக்காலத்தில் ஒலிவழி நேர்காணலை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால், தற்காலத்தில் தொலைக்காட்சி நேர்காணலையும், இணையவழி நேர்காணல்களையும் செவ்வி என்ற சொல்லால் குறிப்பதைக் காணலாம். கூகிளில் தேடும்போது இதற்குப் பல எடுத்துக்காட்டுக்களைக் காண முடிகிறது. --மயூரநாதன் (பேச்சு) 10:16, 5 சூன் 2015 (UTC)
ஆக, நாம் படித்தறியும் பேட்டிகளை செவ்வி எனக் குறிப்பிடக் கூடாது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 5 சூன் 2015 (UTC)
- செல்வா கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி "செவ்வி" என்ற சொல் இலங்கை வழக்கு எனக் குறித்துள்ளதுடன் பின்வருமாறு பொருளும், எடுத்துக்காட்டும் தந்துள்ளது:
- செவ்வி பெ (இலங்) நேர்முகம்; பேட்டி; interview. யாழ்ப்பாணம் வந்திருந்த எழுத்தாளரை ஒரு பத்திரிகையாளர் செவ்வி கண்டார்.
- இதன்படி பத்திரிகைகளில் வருகின்ற பேட்டிகளையும் இலங்கை வழக்கில் செவ்வி எனலாம். -- மயூரநாதன் (பேச்சு) 18:00, 6 சூன் 2015 (UTC)
உதவி
தொகுஆக்கேட்டார் (கிண்ணக்குழி) கட்டுரையில் ஒரு படம் பதிவேற்ற உதவவும் --கி.மூர்த்தி 14:30, 5 செப்டம்பர் 2015 (UTC)
கூடுதல் விவரங்களை அளித்து தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 7 சூன் 2015 (UTC)
ஒரு வேண்டுகோள்...
தொகுதங்களின் பேச்சுப் பக்க உள்ளடக்கங்களை பரணிலிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 5 சூன் 2015 (UTC)
- ஆயிற்று. --மயூரநாதன் (பேச்சு) 07:34, 5 சூன் 2015 (UTC)
நன்றி; அப்படியே முந்தையத் தலைப்பிலுள்ள ஐயத்தினையும் தீர்க்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:48, 5 சூன் 2015 (UTC)
நாலாயிரவர் பதக்கம்
தொகுநாலாயிரவர் பதக்கம் |
மயூரநாதன், தமிழ் விக்கியில் 4,000 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளமைக்காக என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன், உங்கள் அயராத உழைப்புக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பில் நாலாயிரம் சாதனையாளர் என்னும் சிறப்புப் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். அன்புடன் --Kanags \உரையாடுக 08:59, 17 சூன் 2015 (UTC) |
- விருப்பம்--AntanO 09:40, 17 சூன் 2015 (UTC)
- +1 --மதனாகரன் (பேச்சு) 16:47, 18 சூன் 2015 (UTC)
- வாழ்த்துக்கள் மயூரநாதன்.--கலை (பேச்சு) 09:52, 17 சூன் 2015 (UTC)
- அன்பிற்கு அன்னை; அறிவுக்கு தந்தை என்பர்! (தமிழ் விக்கிப்பீடியாவின்) தந்தைக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்! ஐந்தாயிரம் எனும் இலக்கினை அடைந்து, தமிழுக்குப் பெருமை சேர்க்க... இவருக்கு இறையருள் துணை நிற்கட்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:48, 18 சூன் 2015 (UTC)
- வாழ்த்துக்கள் மயூரநாதன்.--கலை (பேச்சு) 09:52, 17 சூன் 2015 (UTC)
- வாழ்த்துக்கள் மயூரநாதன்.--Booradleyp1 (பேச்சு) 05:48, 18 சூன் 2015 (UTC)
- இடையறா உழைப்புக்கு வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:33, 18 சூன் 2015 (UTC)
- நண்பருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். பயனர்:கி.மூர்த்தி
சிறீ, உங்கள் பதக்கத்துக்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கள் தெரிவித்த அன்டன், மதனாகரன், கலை, மா. செல்வசிவகுருநாதன், Booradleyp1, இரவி, மூர்த்தி ஆகியோருக்கும் எனது நன்றிகள். உங்கள் எல்லோருடைய ஆதரவோடும், மேலும் முனைப்போடு நீண்ட காலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ---மயூரநாதன் (பேச்சு) 12:10, 20 சூன் 2015 (UTC)
உதவி
தொகு- பேச்சு:அரிமாணம் எனும் பக்கத்தில் தங்களின் உதவி தேவைப்படுகிறது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:47, 4 சூலை 2015 (UTC)
- ஐக்கிய அரபு இராச்சியத்தில் ரம்ஜான் திருநாள் எந்தநாளில் வருகிறது என்பதனை அறிந்துகொள்ள விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:04, 4 சூலை 2015 (UTC)
- செல்வா, அமீரகத்தில் இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு ஜூன் 18ல் தொடங்கியது. நோன்பு முடிந்து ஈத் அல் பித்ர் ஜூலை 17 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது (பிறை தெரிவதைப் பொறுத்து இது ஒரு நாள் முன்பின்னாக இருக்கலாம்). --மயூரநாதன் (பேச்சு) 17:27, 4 சூலை 2015 (UTC)
நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:27, 5 சூலை 2015 (UTC)
உதவித்தொகை பெற ஆதரவு கோரிக்கை
தொகுவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:29, 4 சூலை 2015 (UTC)
அறிய ஆவல்...
தொகுவணக்கம்! தாங்கள் தற்போது எங்கிருந்து பங்களிக்கின்றீர்கள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 18 சூலை 2015 (UTC)
- நான் அமீரகத்தில் வீட்டிலிருந்து பங்களிக்கிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 15:51, 18 சூலை 2015 (UTC)
இனிமையான விடுமுறை நாட்களாக அமைய வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 18 சூலை 2015 (UTC)
- உங்களுக்கும் அவ்வாறே அமையட்டும். -- மயூரநாதன் (பேச்சு) 15:56, 18 சூலை 2015 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த மதிப்புக் கூட்டு வரி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 18, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முப்பிரிவுகள் விதி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 8, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அலை-துகள் இருமை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 22, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தொல்பாணியியம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 20, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த துளசி மாடக் கோலம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 10, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த ஈஜிப்டோசோரஸ் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 10, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தான்-தானின் வீனசு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 8, 2015 அன்று வெளியானது. |
உளங்கனிந்த நன்றி!
தொகுவணக்கம்!
விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
சூழலியல்
தொகுபகுப்பு:சூழலியல், பகுப்பு:வாழ்சூழலியல் இரண்டும் ecology ஐக் குறிக்கின்றதா? அப்படியாயின் இரண்டையும் ஒன்றாக்கி விடலாமா? வாழிடம் (வாழ்சூழலியல்), சூழலியல் கட்டுரைகளையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:46, 31 சூலை 2015 (UTC)
- .--சிறீ ஒன்றாக்கி விடலாம். இரண்டுமே ஒன்றையே குறிப்பதாகத் தோன்றுகிறது. கட்டுரைகளிலும் இவ்விரு சொற்களும் ஒரே பொருளிலேயே பயன்பட்டிருக்கின்றன. --மயூரநாதன் (பேச்சு) 10:54, 31 சூலை 2015 (UTC)
திருகோணமலை மாவட்ட நிலப்படம்
தொகுதிருகோணமலை மாவட்ட பிரதேசச் செயலாளர் பிரிவுகள் தொடர்பான கட்டுரைகளில் இணைப்பதற்காக திருகோணமலை மாவட்ட நிலப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதில் உள்ள தமிழ்ப் பெயர்கள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வேறுபாடான பெயர்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் அப்படியே சிங்களப் பெயர்களைத் தமிழில் எழுதியுள்ளனர். (எ.கா: தம்பலகமுவ). தற்போது குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவு கட்டுரையில் மட்டும் இணைத்துள்ளேன். ஏதாவது பிழை இருந்தால் சரிசெய்துவிட்டு இது தொடர்பான எல்லாக் கட்டுரைகளிலும் இணைக்கலாம். --மயூரநாதன் (பேச்சு) 08:15, 13 ஆகத்து 2015 (UTC)
- நமது திருகோணமலைப் பயனர்கள் @G.Kiruthikan, Hobinath, and மு.மயூரன்: ஆகியோரையும் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 08:38, 13 ஆகத்து 2015 (UTC)
- சரியாகவே தெரிகின்றது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:16, 13 ஆகத்து 2015 (UTC)
- ஈச்சிலம்பத்தை -> ஈச்சிலம்பற்றை, மொராவெவ -> மொராவெவை, பதவிசிறீபுர -> பதவிசிறிபுரம் என்ற மாற்றங்கள் உகந்தன. மற்றவை சரியாகவே உள்ளன. குறிப்பு: இப்படங்களை பொதுவிலேயே பதிவேற்றி விடுங்கள். ஏனைய திட்டங்களிலும் பயன்படுத்தலாம். --AntanO 16:55, 13 ஆகத்து 2015 (UTC)
- சிவகுமார், அன்டன் நன்றி. -- மயூரநாதன் (பேச்சு) 17:09, 13 ஆகத்து 2015 (UTC)
தங்களின் பார்வைக்கு...
தொகுவணக்கம்! Decoding the Indus Script - இந்தக் கட்டுரையிலுள்ள தகவல்கள், தங்களின் ஆர்வத்திற்கு உணவிடலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:42, 14 ஆகத்து 2015 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், இவ்விடயத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இணைப்புக்கு நன்றி. --மயூரநாதன் (பேச்சு) 14:23, 14 ஆகத்து 2015 (UTC)
பார்க்க: Website of Madurai-based Pandya Nadu Centre for Historical Research (PCHR)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:18, 31 ஆகத்து 2015 (UTC)
இந்தப் பக்கம், தங்களுக்காக அவ்வப்போது இற்றை செய்யப்படும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:58, 2 செப்டம்பர் 2015 (UTC)
help
தொகுNHM writer does not works in my edit page. but it works in word file. how can i rectify this?--கி.மூர்த்தி 09:12, 22 ஆகத்து 2015 (UTC)
- @கி.மூர்த்தி: எனக்கும் சில வேளைகளில் இவ்வாறு நடப்பதுண்டு. கணினியை அணைத்து விட்டு, மீண்டும் தொடங்கிப் பார்த்தீர்களா? --மதனாகரன் (பேச்சு) 09:16, 22 ஆகத்து 2015 (UTC)
வாழ்த்துகளும் நன்றிகளும்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தங்களின் பங்கு மிக முக்கியமானது. தாங்கள், 11 ஆண்டுகளாக இத்தனை கட்டுரைகள் எழுதி எங்களை வியக்க வைப்பதோடு மட்டுமில்லாமல், எங்களைப் போன்றோருக்கு ஒரு உந்து சக்தியாகவும் உள்ளீர்கள். மேலும், தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து நாளையுடன் 11 ஆண்டுகள், 11 மாதங்கள், 11 நாட்கள் ஆகின்றன. (11-11-11 வருவதை கவனிக்க) அதற்காக எனது வாழ்த்துக்களை ஒருநாள் முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 11:30, 29 ஆகத்து 2015 (UTC)
- விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 12:11, 29 ஆகத்து 2015 (UTC)
- உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சக்திகுமார் லெட்சுமணன். இந்த 11-11-11 நிகழ்வைக் கண்டுபிடித்து அறியத்தந்ததற்கு இன்னொரு நன்றியும் உரித்தாகுக. நன்றி மதனாகரன். -- மயூரநாதன் (பேச்சு) 18:08, 29 ஆகத்து 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:39, 30 ஆகத்து 2015 (UTC)
- உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சக்திகுமார் லெட்சுமணன். இந்த 11-11-11 நிகழ்வைக் கண்டுபிடித்து அறியத்தந்ததற்கு இன்னொரு நன்றியும் உரித்தாகுக. நன்றி மதனாகரன். -- மயூரநாதன் (பேச்சு) 18:08, 29 ஆகத்து 2015 (UTC)
- விருப்பம்-- மாதவன் ( பேச்சு ) 06:44, 30 ஆகத்து 2015 (UTC)
- விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:04, 30 ஆகத்து 2015 (UTC)
- வாழ்த்துக்கள் மயூரநாதன்.--கலை (பேச்சு) 17:50, 5 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம் -- சுந்தர் \பேச்சு 18:16, 5 செப்டம்பர் 2015 (UTC)
உதவி
தொகுஆக்கேட்டார் ( கிண்ணக்குழி) கட்டுரையில் ஒரு படம் பதிவேற்ற உதவவும் --கி.மூர்த்தி 14:30, 5 செப்டம்பர் 2015 (UTC)
சிறு நினைவூட்டல்
தொகு100விக்கிநாட்கள் திட்டத்தினூடாகக் கட்டுரைகளை எழுதிவருவதற்கு நன்றி. இன்று மட்டும் நீங்கள் உருவாக்கிய 17 கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்தேன். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் விக்கித்தரவில் இணைத்துவிடுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:00, 8 செப்டம்பர் 2015 (UTC)
- சிறீகர்சனுக்கு நன்றி. 100விக்கிநாட்கள் திட்டத்தில் கலந்துகொண்டு பங்காற்றும் பயனர்களுக்கு நாம் பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்து செய்தல் வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:21, 8 செப்டம்பர் 2015 (UTC)
- சிறீகர்சன் நான் தொடங்கிய கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்ததற்கு நன்றி. சிலவேளைகளில் விக்கத்தரவில் இணைப்பது முடியாமல் இருக்கிறது. அதனால், பின்னர் செய்யலாம் என விடுவதால் பல கட்டுரைகள் இணைப்பில்லாமல் இருக்க நேர்கின்றது. இனிமேல் கூடிய கவனம் எடுக்க முயற்சி செய்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:35, 8 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 02:55, 9 செப்டம்பர் 2015 (UTC)
- சிறீகர்சன் நான் தொடங்கிய கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்ததற்கு நன்றி. சிலவேளைகளில் விக்கத்தரவில் இணைப்பது முடியாமல் இருக்கிறது. அதனால், பின்னர் செய்யலாம் என விடுவதால் பல கட்டுரைகள் இணைப்பில்லாமல் இருக்க நேர்கின்றது. இனிமேல் கூடிய கவனம் எடுக்க முயற்சி செய்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:35, 8 செப்டம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள்
தொகுதாங்கள் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள். நெடுங்காலமாக அயராது உழைத்துவரும் தங்களைப் போன்றவர்கள் தமிழ் விக்கியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள், என்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்குகிறீர்கள். முடிந்தவரை உங்களைப் பின் தொடர்கிறோம். --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 18:14, 19 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம்--இரவி (பேச்சு) 18:47, 19 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம்-- மாதவன் ( பேச்சு ) 19:27, 19 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:39, 19 செப்டம்பர் 2015 (UTC)
- விக்கி பிறந்தநாள் வாழ்த்துகள் மயூரநாதன்.--Kanags \உரையாடுக 21:43, 19 செப்டம்பர் 2015 (UTC)
- தொடரும் உழைப்பிற்கு நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:59, 20 செப்டம்பர் 2015 (UTC)
- உங்கள் விக்கிப் பயணம் விக்கி ஆர்வலர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக ஊக்கமளிக்கிறது. வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 05:50, 20 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:10, 20 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம். விக்கியில் தங்கள் அயராத உழைப்புக்கு வாழ்த்துக்கள் மயூரநாதன். உங்கள் பணி தொடரவும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகின்றேன்.--கலை (பேச்சு) 20:05, 20 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம் தமிழ் விக்கிக்கும் உங்கள் பங்களிப்பிற்கும் 12 ஆண்டுகள் நிறைந்திருப்பது மகிழ்வளிக்கின்றது. இன்னமும் புதுப்பயனரின் உற்சாகத்துடன் பங்களித்து வரும் உங்களது உழைப்பு எங்களுக்கு சிறந்த ஊக்கமாக இருந்துள்ளது. பணி தொடரவும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 08:51, 21 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம். இன்னும் பல்லாண்டு விக்கியுடன் இணைந்து எங்களை வழிநடத்த வாழ்த்துக்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 21 செப்டம்பர் 2015 (UTC)
- விருப்பம் வாழ்த்த வார்த்தைகளில்லை... --{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:43, 21 செப்டம்பர் 2015 (UTC)
தங்களின் கவனத்திற்கு...
தொகுவணக்கம்! காண்க: வாக்களிப்பு; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:11, 30 அக்டோபர் 2015 (UTC)
ஆசிய மாதம், 2015
தொகுவணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
- இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி
ஆசிய மாதம் - முதல் வாரம்
தொகுவணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
- இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
- (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
- இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.
நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)
99* (ஆட்டமிழக்கவில்லை)
தொகுநாளைக்கு ஒரு கட்டுரை எழுதிவிட்டீர்கள் என்றால்... வெற்றிகரமான இலக்கினை எட்டிவிடுவீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:10, 14 நவம்பர் 2015 (UTC)
- உண்மைதான். நாளை காலை 7 மணிக்கு தொடக்கம் முழு நாளும் ஒரு மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவ மனையில் இருக்கவேண்டும். போவதற்கு முன்னர் ஒரு குறுங் கட்டுரையாவது எழுதிவிடுவேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:18, 14 நவம்பர் 2015 (UTC)
100விக்கிநாட்கள் திட்டத்தை நிறைவு செய்த முதல் தமிழ் விக்கிப்பீடியர்!
தொகுதங்களின் இந்தச் செயற்திறன், தங்களின் பங்களிப்புகளில் மற்றுமொரு மகுடம்!; அனைவரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் தரம் நிறைந்த 192 கட்டுரைகளைத் தந்தமைக்கு நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 15 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:06, 15 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் --AntanO 08:14, 15 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 08:51, 15 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்--மணியன் (பேச்சு) 09:15, 15 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்-- மாதவன் ( பேச்சு ) 12:56, 15 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் போற்றுதலுக்குரிய பணி. வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 10:17, 16 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் நண்பரே! நன்றி!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:33, 16 நவம்பர் 2015 (UTC)
மா. செல்வசிவகுருநாதன் உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி. நந்தகுமார், அன்டன், சிறீ, மணியன், மாதவன், இரவி, சக்திகுமார் லெட்சுமணன், உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொடங்கும்போது, ஒரு நாளுக்கு ஒரு கட்டுரை எழுதுவதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்றுதான் எண்ணினேன். ஆனாலும், 100 நாட்களில் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. பயணத்தில் இருந்த நாட்கள், போன இடங்களில் இணைய இணைப்புப் பிரச்சினை, காலை 5.30க்கு அலுவலகத்துக்குப் புறப்பட்டால் சிலவேளைகளில் வீடு வந்து சேர இரவு 10.30 ஆகிவிடும். தூங்கப் போக முன் ஒரு கட்டுரை எழுதியாக வேண்டும். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல 100ம் நாளில் நடக்கவிருந்த முக்கியமான மருத்துவப் பரிசோதனை ஒன்றுக்காக 99ம் நாளே மருத்துவமனையில் சேர்ந்துவிடும்படி சொன்னர்கள். 100ம் நாள் கட்டுரை எழுத முடியாது என்று எண்ணியிருந்த வேளையில் நேரத்தை மாற்றி நூறாம் நாள் காலை 7 மணிக்கு வந்தால் போதும் என்றார்கள். இதனால், 5 மணிக்கே எழுந்து ஒரு குறுங் கட்டுரையை எழுதி 100வது நாளையும் நிறைவுசெய்ய முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. --மயூரநாதன் (பேச்சு) 14:12, 16 நவம்பர் 2015 (UTC)
- ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும், விதைத்தவர் முதல் பரிமாறுபவர் வரை அனைவரின் உழைப்பினையும் நினைத்துப் பார்ப்பேன். தமிழ் விக்கியில் அயராது உழைக்கும் அனைவரையும் இவ்விதமே நான் நினைத்துப் பார்க்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:15, 16 நவம்பர் 2015 (UTC)
- உண்மைதான் செல்வா நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும் பலருடைய உழைப்புப் பொதிந்துள்ளது. உலகின் ஒவ்வொரு செயற்பாடும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலரது உழைப்பு இல்லாமல் இடம்பெறுவதில்லை. --மயூரநாதன் (பேச்சு) 15:41, 16 நவம்பர் 2015 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்
தொகுவணக்கம்!
கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
- ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
- நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த யாழ்ப்பாணம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் திசம்பர் 20, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
தொகுவிக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் | |
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:01, 25 திசம்பர் 2015 (UTC) |
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் திசம்பர் 30, 2015 அன்று வெளியானது. |
இயல் விருது
தொகு- இந்தாண்டின் பெருமைமிகு இயல் விருதைப் பெற்றமைக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 02:55, 6 சனவரி 2016 (UTC)
- வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:03, 6 சனவரி 2016 (UTC)
- தமிழ் அறிவுப் பரப்பில் பரந்த கவனத்தை ஈர்க்கும் இயல் விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி. மற்ற பல விக்கிப்பீடியாக்களைக் கவனித்த வரை, முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பயனரின் பாங்கு இன்றியமையாதது. அந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியாவைச் சரியான வழியில் இட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி. இது தங்களைப் போன்று இன்னும் பலரை இது போன்று கட்டற்ற அறிவாக்கப் பங்களிப்புகளுக்கு அழைத்து வரும் என்று நம்புகிறேன். --இரவி (பேச்சு) 06:11, 6 சனவரி 2016 (UTC)
- வாழ்த்துகள் விருப்பம் --Commons sibi (பேச்சு) 06:16, 6 சனவரி 2016 (UTC)
- மயூரநாதனுக்கு விருது வழங்கியதன் மூலம் இயல் விருது தன் பெருமையினை அதிகரித்துக் கொண்டது. அவரது போற்றுதற்குரிய அரும்பணி இனி மேலும் பரவலாக அறியப்படும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கோபி (பேச்சு) 06:33, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் இயல் விருது பெற்றமைக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்.--கி.மூர்த்தி 06:38, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் 2015 இயல்விருதைப் பெற்ற மயூரநாதனை மனதார வாழ்த்துகிறேன்.--Kanags \உரையாடுக 07:08, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் இயல்விருது பெறும் தங்களை மனதார வாழ்த்துகின்றேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:28, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் இயல்விருது பெற்றிருக்கும் மயூரநாதனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.--கலை (பேச்சு) 07:31, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் மனமார்ந்த வாழ்த்துகள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 07:44, 6 சனவரி 2016 (UTC)
- மிக்க மகிழ்ச்சி; உழைப்பிற்கும், பொறுமைவாய்ந்த மனப்பக்குவத்திற்கும் கிடைத்த விருது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:37, 6 சனவரி 2016 (UTC)
- மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 08:42, 6 சனவரி 2016 (UTC)
- மனமார்ந்த வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:32, 6 சனவரி 2016 (UTC)
- வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 09:38, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் மயூரநாதன். மிக இனிய செய்தி.--செல்வா (பேச்சு) 14:13, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் சக விக்கிப்பீடியர் ஒருவருக்கு இவ்விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!! --AntanO 14:15, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்! --சிவகோசரன் (பேச்சு) 16:08, 6 சனவரி 2016 (UTC)
- விருப்பம் வாழ்த்துக்கள்!!!!!! இவ்விருதை தாங்கள் பெற்றமை கண்டு மிக மகிழ்கின்றேன்.-- மாதவன் ( பேச்சு ) 16:14, 6 சனவரி 2016 (UTC)
- மனமார்ந்த வாழ்த்துகள்--Booradleyp1 (பேச்சு) 05:11, 7 சனவரி 2016 (UTC)
- வாழ்த்துக்கள், தங்கள் தமிழுக்கு உழைத்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது-- arulghsrArulghsr (பேச்சு) 06:58, 8 சனவரி 2016 (UTC)
- வாழ்த்துகள்!! விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:10, 8 சனவரி 2016 (UTC)
- விருப்பம் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்! --குறும்பன் (பேச்சு) 22:58, 9 சனவரி 2016 (UTC)
பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விருதுக்கான தகுதி எனது தனிப்பட்ட பங்களிப்பின் சிறப்பினால் மட்டும் உருவானது அல்ல என்பதை நான் அறிவேன். தமிழ் மொழிமூலமான அறிவுத் தேட்டச் சூழலில் தமிழ் விக்கிப்பீடியாவின் தவிர்க்க முடியாத வகிபாகம் இதற்கு முக்கியமான காரணம். இது நிச்சயமாகப் கடந்த 12 ஆண்டுகளாகத் தமது உழைப்பை முதலீடாகத் தந்த பல நூறு பங்களிப்பாளர்களினால் ஏற்பட்டது. எனவே, இந்த விருது கிடைத்ததில் இவர்கள் எல்லோருடைய பங்களிப்பும் உண்டு. எல்லோருக்கும் எனது நன்றிகள். இவ்விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இதை, தமிழ் விக்கிப்பீடியாவும், மரபுவழியாக விருதுக்காகக் கருத்தில் கொள்ளப்படும் பிற துறைகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கான ஒரு அடையாளமாகவும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகவும் கொள்ளலாம். ---மயூரநாதன் (பேச்சு) 17:16, 6 சனவரி 2016 (UTC)
- இயல்விருதினை எங்களுக்காகப் பெற்றமைக்கு நன்றிகள்! :-) எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பில் தங்களது நேர்காணலைக் கேட்டேன். மிகத் தெளிவான நீரோடைப் போன்று இருந்தது. அளவற்ற தங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் தமிழன்னை சார்பில் வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:35, 3 பெப்ரவரி 2016 (UTC)
ஆசிய மாதம் - நிறைவு
தொகுவணக்கம்!
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.
குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:25, 13 சனவரி 2016 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த நெப்டியூன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 13, 2016 அன்று வெளியானது. |
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த புவி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சனவரி 10, 2016 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
கருத்திடுக
தொகுhttps://ta.wikisource.org/s/4l8 என்பதில் தங்களின் மேலான எண்ணங்களை பதியக் கோருகிறேன்.--த♥உழவன் (உரை) 04:29, 17 சனவரி 2016 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 20, 2016 அன்று வெளியானது. |
விக்கிப்பீடியா:புரூவ் இட்
தொகுவிக்கிப்பீடியா:புரூவ் இட் பயன்படுத்தவில்லை என்றால், பார்க்கவும். எளிமையாக உள்ளது. மிகவும் உதவியாக உள்ளது. --Natkeeran (பேச்சு) 18:59, 19 பெப்ரவரி 2016 (UTC)
நூல் அறிமுகம்-விக்கிமூலம் வருக.
தொகுFile:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf - ஒரு கட்டிடக் கலை அறிஞர் என்ற வகையில், இந்நூல் தங்களுக்கு ஈர்ப்பாக இருக்குமென எண்ணுகிறேன். விக்கிமூலத்தில் கட்டக அணுக்கர்( sysop) வாக்கெடுப்பு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்கள். இங்குள்ள ஆலமரத்தடியில் குறிப்பிட்டுள்ளேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 04:03, 4 மார்ச் 2016 (UTC)
Address Collection Notice
தொகுHi there, thank you for contributing to Wikipedia Asian Month in November 2015. You are qualified to receive (a) postcard(s) but we did not hear your back in past two months, or it could be an error on Google's server or a mistake. If you still willing to receive one, please use this new surveyto submit your mailing address. The deadline will be March 20th.
விக்கிக்கோப்பை
தொகுவிக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:44, 3 ஏப்ரல் 2016 (UTC)
Participate in the Ibero-American Culture Challenge!
தொகுHi!
Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.
We would love to have you on board :)
Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016
விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்
தொகுவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற பாலாஜீ, மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்
தொகுMediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை 2016
தொகுவிக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
Request
தொகுGreetings.
Could you create the article en:Azerbaijani rug in Tamil?
Thank you.
விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்
தொகுவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற மாதவன், உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)
பதக்கம்
தொகுபஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் | |
பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 05:21, 16 ஆகத்து 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
Block vandal
தொகுPlease block BormannaTranslate (vandalism-only account, LTA). Thanks in advance.--Syum90 (பேச்சு) 18:51, 18 ஆகத்து 2016 (UTC)
- The account has been globally locked. Regards.--Syum90 (பேச்சு) 18:57, 18 ஆகத்து 2016 (UTC)
- ஆயிற்று.--Kanags \உரையாடுக 23:55, 18 ஆகத்து 2016 (UTC)
வேண்டுகோள்
தொகுதாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:41, 9 நவம்பர் 2016 (UTC)
விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு
தொகுவணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 29 நவம்பர் 2016 (UTC)
- ஒரு நினைவூட்டல். ஏற்கனவே இந்தக் கருத்தெடுப்பில் கலந்து கொண்டீர்கள் என்றால் இந்த நினைவூட்டலைப் புறக்கணிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:41, 8 திசம்பர் 2016 (UTC)
விக்கிக்கோப்பை
தொகுவணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம்
தொகுமயூரநாதன், ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம் தமிழ் நூற்கள் எவற்றையாவது சேகரித்து வைத்துள்ளனவா என்று அறிய முடியுமா? நன்றி.--Natkeeran (பேச்சு) 15:35, 8 திசம்பர் 2016 (UTC)
கலைக் களஞ்சியன்
தொகுவணக்கம் நண்பரே, இந்த வார ஆனந்த விகடன் இதழ், 2016 ஆவது ஆண்டின் சிறந்த 10 மனிதர்களில் ஒருவராக உங்களைத் தேர்வு செய்துள்ளதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். விகடன் இதழ் குறிப்பிட்டுள்ள கலைக் களஞ்சியன் என்னும் பெயர் தங்களுக்கு மிகப் பொருத்தமான பெயராக இருக்குமென்பதை எண்ணி மகிழ்கிறேன்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 12:52, 29 திசம்பர் 2016 (UTC)
- நன்றி, சக்திகுமார் லெட்சுமணன். உங்களுடைய பாராட்டுக்களுக்குப் பொருத்தமானவனாக என்னை மேலும் வளர்த்தெடுக்க முயல்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 17:06, 29 திசம்பர் 2016 (UTC)
- விருப்பம். மிகப் பொருத்தமான பட்டம். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:55, 29 திசம்பர் 2016 (UTC)
- விருப்பம் வாழ்த்துக்கள் --குறும்பன் (பேச்சு) 23:09, 29 திசம்பர் 2016 (UTC)
- விருப்பம்உளங்கனிந்த வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:08, 30 திசம்பர் 2016 (UTC)
- விருப்பம் உங்களுக்கு மிகப் பொருத்தமான பெயரை ஆனந்தவிகடன் வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள். --கலை (பேச்சு) 11:59, 30 திசம்பர் 2016 (UTC)
- உடன் பங்களிக்கும் பயனர் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன். தங்களால் எங்களுக்கும் பெருமை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:34, 30 திசம்பர் 2016 (UTC)
- 2017ஆம் ஆண்டில் நான் செய்யவிருக்கும் கட்டுரைத் தொகுப்புகளில், ஆக்கபூர்வமாக அமைவனவற்றை உங்களுக்கு உரித்தாக்குவதில் பெருமையடைகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 31 திசம்பர் 2016 (UTC)
படிமம்
தொகுRBC Royal Bank.svg என்ற நியாயப்பயன்பாட்டுப் படிமம் கட்டுரையில் இல்லாது உள்ளது. தேவை இல்லையென்றால் நீக்கிவிடலாம். --AntanO 02:58, 31 திசம்பர் 2016 (UTC)
- கட்டுரையில் இப்போது படிமம் தெரிகிறது. ---மயூரநாதன் (பேச்சு) 03:20, 31 திசம்பர் 2016 (UTC)
- விருப்பம்--AntanO 03:22, 31 திசம்பர் 2016 (UTC)
ஜன்னிய இராகம்
தொகுஎண்ணிக்கை 1, 2 மற்றும் 3 உண்டு வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:32, 31 திசம்பர் 2016 (UTC)
- வாசு, சுரத்தானங்களை 16 ஆகக் கொண்டு ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் ஒவ்வொன்றுக்கும் 1, 2, 3 என மூன்று தானங்களைக் குறிப்பது உண்டுதான். ஆனால், கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள கே. ஏ. பக்கிரிசாமியின் "இந்திய இசைக்கருவூலம்" என்ற நூலில் 12 சுரத்தானங்களை எடுத்துக்கொண்டு பின்வருமாறுதான் குறியீடுகள் தரப்பட்டுள்ளன: (பக்கம் 14)
- ச - சட்ஜம்
- ரி1 - சுத்த ரிஷபம்
- ரி2 - சதுஸ்ருதி ரிஷபம்
- க1 - சாதாரண காந்தாரம்
- க2 - அந்தர காந்தாரம்
- ம1 - சுத்த மத்யமம்
- ம2 - பிரதி மத்யமம்
- ப - பஞ்சமம்
- த1 - சுத்த தைவதம்
- த2 - சதுஸ்ருதி தைவதம்
- நி1 - கைகிசி நிஷாதம்
- நி2 - காகலி நிஷாதம்
- ஏராளமான தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் 16 சுரத்தானங்களுக்குரிய குறியீடே பயன்படுத்தப்பட்டிருப்பதால் மாற்றுவதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால், கட்டுரைகளில் 16 சுரத்தானங்களுக்குரிய குறியீடுகளைக்கொண்ட வேறு நூல்கள் மேற்கோளாகக் காட்டப்படவேண்டும். --மயூரநாதன் (பேச்சு) 15:08, 31 திசம்பர் 2016 (UTC)
- மேலே கொடுக்கப்பட்ட வழிமுறையில் கனகாங்கி, சலநாட மற்றும் ரசிகப்பிரியா எப்படி வருகின்றன என காண்பிக்க முடியுமா? வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 03:42, 1 சனவரி 2017 (UTC)
விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1
தொகு
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்
தொகு
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.
அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி
தொகு
|
விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:49, 31 திசம்பர் 2016 (UTC)
யாழ்ப்பாண இராச்சியப் போர்கள்
தொகுயாழ்ப்பாண இராச்சியப் போர்கள் தொடர்பாக நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு முடிந்தளவு நம்பகரமான ஆங்கில மூலங்களை இணையுங்கள். உசாத்துணையில் (அல்லது மேற்கோள்) பகுதியில் இணைப்பது பொருத்தம் இல்லாவிட்டாலும், "மேலதிக வாசிப்பு" பகுதியில் அல்லது பேச்சுப்பக்கத்தில் இணையுங்கள். அவற்றைக் கொண்டு ஆ.வி.யில் கட்டுரை உருவாக்க உதவும். --AntanO 13:16, 4 சனவரி 2017 (UTC)
- en:Portuguese invasion of Jaffna kingdom (1591) என்ற கட்டுரையை உருவாக்கி "உங்களுக்குத் தெரியுமா?" பகுதிக்கு பரிந்துரைத்துள்ளேன். இங்கு சில விடயங்களை கவனித்து ஆலோசனை வழங்குங்கள். 1. Due to the murder of first son, //சங்கிலியின் முதல் மகனைப் போர்த்துக்கேயர் பிணைக் கைதியாக வைத்திருந்தனர்// 2. prince Gago, son-in law of Puvirasa Pandaram // எதிர்மன்னசிங்கத்தின் சகோதரனான இளவரசன் காகோ// --AntanO 02:11, 7 சனவரி 2017 (UTC)
- //Due to the murder of first son,// இந்த நிகழ்வு கேரோஸ் பாதிரியாரின் நூலில் உள்ளது. ஆனால், இது யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு அல்ல என்றும், தென்னிலங்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பாதிரியார் தவறுதலாக யாழ்ப்பாணத்துடன் இணைத்துவிட்டார் என்றும் ஒரு கட்டுரை/ நூலில் பார்த்தேன் (எங்கே என்று இப்போது ஞாபகமில்லை.). எனவே இந்தச் சர்ச்சைக்குள் புகாமல், "மூத்த மகன்" என்பதற்குப் பதிலாக "முடிக்குரிய இளவரசனைப் போர்த்துக்கேயர் பிணைக்கைதியாக வைத்திருந்தனர்" எனக் குறிப்பிடலாம்.
- prince Gago, son-in law of Puvirasa Pandaram // எதிர்மன்னசிங்கத்தின் சகோதரனான இளவரசன் காகோ// இரண்டும் சரிதான். கீழேயுள்ள மேற்கோள்களைப் பார்க்கவும்.
- “…. When they came in sight in another stronger stockade, …… they met with great resistance under the eyes of Prince Gago, elder brother of Pera Ragerachegra Pandara, they killed him, and the device of his banner and white shield given him by the King because he was his Son-in-Law, …….” (Queroz, page 452 in AES edition)
- “ The younger prince Hendarmana Singa Cumara, brother of the one killed in the stockade, …….” (ibid, page 452)
- “Hendermana Singa Cumara, ……… was set up as King and Governer under the name of Pera Jara Chegara Pandara ……” (ibid, page 454)
இங்கே Pera Ragerachegra Pandara என்பதும் Pera Jara Chegara Pandara என்பது "பரராஜ சேகர பண்டாரம்" என்பதன் போர்த்துக்கேய வடிவங்கள்தான். இது எதிர்மன்னசிங்கத்தின் சிம்மாசனப் பெயர். எனவே இளவரசன் காக்கோ அரசன் புவிராச பண்டாரத்தின் மருமகனும், எதிர்மன்னசிங்கத்தின் மூத்த சகோதரனும் ஆவான். --மயூரநாதன் (பேச்சு) 03:20, 7 சனவரி 2017 (UTC)
- விருப்பம்--AntanO 15:17, 9 சனவரி 2017 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் மாபெரும் போட்டி
தொகுதமிழ் விக்கியின் தந்தையாகிய தாங்கள் இங்கு பரிந்திரைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பான கருத்துக்களை தவறாது இடவேண்டும் என்பது இச்சிறியோனின் விருப்பம்- தங்கள் பதிலை அங்கு எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:59, 13 சனவரி 2017 (UTC)
உதவி
தொகுஇப்போட்டி தொடர்பாக உரையாடுவதற்கு வருக! எனும் ஓர் மீடியாவிக்கி:தள அறிவிப்பை இடுவதற்குத் தங்கள் உதவி தேவை. இச்செய்தி போன்று தமிழ் விக்கிப்பீடியாவில் ஓர் போட்டியை பெருமளவில் முன்னெடுத்தல் தொடர்பான கலந்துரையாடலுல் பங்குபெறுக!
வணக்கம். துர்காவுலியா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஏற்கனவே உள்ளது. தவறுதலாக துர்கௌலியா என்ற தலைப்பில் மீண்டும் ஒரு கட்டுரையை பதிவேற்றி விட்டேன் . எனவே துர்கௌலியா கட்டுரையை நீக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 15:00, 20 சனவரி 2017 (UTC)
விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று
தொகுவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:56, 25 சனவரி 2017 (UTC)
பதக்கம்
தொகுவிக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் | |
யாழ்ப்பாணத்தான் என்பதை நிரூபிக்கும் கட்டுரைகளை உருவாக்கி விக்கிக்கோப்பையில் நான்காம் இடம் பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா! தமிழ் விக்கியின் தந்தையின் பணிகள் மெம்மேலும் தொடர வாழ்த்துகள்1 --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:35, 2 மார்ச் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:13, 3 மார்ச் 2017 (UTC)
- விருப்பம்//தமிழ் விக்கியின் தந்தை//--த♥உழவன் (உரை) 01:15, 3 மார்ச் 2017 (UTC)
- விருப்பம்--Arulghsr (பேச்சு) 03:49, 3 மார்ச் 2017 (UTC)
- விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 01.02:50, 3 மார்ச் 2017 (UTC)
- : விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:33, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம், Mayooranathan . நீங்கள் நான்காமிடம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:24, 4 மார்ச் 2017 (UTC)
- விருப்பம் அன்புமுனுசாமி 02:41, 04 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
9 மாதங்கள்
2017 ஏப்ரல்-டிசம்பர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:03, 5 மார்ச் 2017 (UTC)
தாங்கள் இப்போட்டி பற்றி தள அறிவிப்பிலும் இடுவதற்கு வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:03, 5 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)
உதவி
தொகுமீடியாவிக்கி:Sitenotice பக்கத்தில் கீழே உள்ள விடயத்தினை இற்றை செய்ய வேண்டுகின்றேன்.
விக்கிபீடியாவின் தொடர்பங்களிப்பாளர் போட்டியில் ₹ 30,000/= வெல்லுவதற்கு இன்றே பதிவு செய்யுங்கள்! |
விக்கித்திட்டம் 15 - இணைந்த வங்கிக்கணக்கு
தொகுவிக்கித்திட்டம் 15 இற்காக ஸ்ரீஹீரன் பெற்ற நல்கைத்தொகையை ஓர் இணைந்த கணக்கில் பேண வேண்டிய தேவை இருப்பதால் எதிர்வரும் வாரத்தில் காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொக்குவில் இலங்கை வங்கிக் கிளையில் கணக்கொன்றை ஆரம்பிக்க வர முடியுமா? --சிவகோசரன் (பேச்சு) 16:16, 17 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1
தொகு
அறிவிப்பு
•
போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
•
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
•
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:48, 18 மார்ச் 2017 (UTC)
உதவி...
தொகுவணக்கம். தாளங்கள் குறித்த கட்டுரைகளில் (பகுப்பு:தாளங்கள்) மேற்கோள்கள் / உசாத்துணை இல்லை. கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:35, 2 ஏப்ரல் 2017 (UTC)
- @Selvasivagurunathan m:, சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஊருக்குத் திரும்பிய பின்னர் கவனிக்கிறேன். --மயூரநாதன் (பேச்சு) 03:09, 3 ஏப்ரல் 2017 (UTC)
பயிற்சிப்பட்டறை
தொகுபயிற்சிப்பட்டறையில் காட்சிப்படுத்துவதற்கான Multemedia Presentationஇல் இருக்கக்கூடிய விபரங்கள்/விடயங்களினை ஒவ்வொன்றாக எடுத்துக்குறமுடியுமா? எ.கா:-விக்கிப்பீடியா அறிமுகம்:- கட்டற்ற கலைகளஞ்சியம், யாவரும் தொகுக்கலாம். இவ்வாறானவை. @Ravidreams, AntanO, and Kanags: ஏற்கனெவே இதற்கான கானொளி இருப்பினும் அதனை விடவும் விரிவாக நவீனமயப்படுத்தப்பட்ட ஒன்ரை உருவாக்குவதற்கே கேட்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:46, 12 ஏப்ரல் 2017 (UTC)
- @Shriheeran:, முன்னர் பயிற்சிப்பட்டறை ஒன்றுக்காகத் தயாரித்த "பவர் பொயின்ட்" அளிக்கை ஒன்று என்னிடம் உள்ளது. உங்கள் மின்னஞ்சலை எனக்கு அனுப்பினால் அனுப்பி விடுகிறேன். அதில் உங்களுக்கு வேண்டிய தகவல்கள் இருக்கலாம். ---மயூரநாதன் (பேச்சு) 03:19, 12 ஏப்ரல் 2017 (UTC)
கல்வெட்டுக்கள்
தொகுஇத்தகவல் தொடர்பில் ஏதேனும் வியடங்கள் கிடைத்ததா? 2013 இல் கொழும்பில் இடம்பெற்ற ஆவண மாநாட்டில் மட்டக்களப்பில் உள்ள கல்வெட்டுக்கள் பற்றிய பகுதிகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலை எங்கு பெறலாம்? மட்டக்களப்பு மாத்திரமல்ல ஏனைய பகுதிகளில் தமிழ் தொடர்பான கல்வெட்டுக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும் மகிழ்ச்சி. @சஞ்சீவி சிவகுமார்: --AntanO 03:42, 14 ஏப்ரல் 2017 (UTC)
- @AntanO:, ஆவண மாநாட்டுத் தொகுப்பு நூல் இந்த இணைப்பில் உள்ளது. இதன் 74ம் பக்கத்தில் மட்டக்களப்புக் கல்வெட்டுக்கள் குறித்த கட்டுரை ஒன்றும், 93ம் பக்கத்தில் இன்னொரு கட்டுரையும் உள்ளன. ஆவண மாநாட்டுத் தொகுப்பு நூலைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் உள்ள நூலக அலுவலகத்தில் வாங்கினேன். யாழ்ப்பாண அலுவலகத்திலும் இது உள்ளது.---மயூரநாதன் (பேச்சு) 07:06, 14 ஏப்ரல் 2017 (UTC)
- @AntanO:, பிற தமிழ்க் கல்வெட்டுக்கள் தொடர்பில் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் நூலையும் பார்க்கவும். --மயூரநாதன் (பேச்சு) 09:01, 14 ஏப்ரல் 2017 (UTC)
உதவி
தொகு- 1 தொகுப்புக்குமேல் செய்த பயனர்கள்
- சராசரி புதிய கட்டுரை உருவாக்கம்
- எல்லா விக்கிப்பீடியாவிலும் பங்களிப்போர்
ஆகிய விபரங்களைத் தந்துதவ வேண்டுகின்றேன். எனது இணைய இணைப்பு தாமதமாக உள்ளதால் இவை பற்றி அலசிப்பார்க்க முடியவில்லை. மேலும் வழிசெலுத்தல் என்பதன் ஆங்கிலப்பதம் யாது?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:11, 14 ஏப்ரல் 2017 (UTC)
- 10 தொகுப்புக்களுக்கு மேல் செய்த பயனர்கள் - 1645 (பெப் 2017)
- புதிய கட்டுரை உருவாக்கம் (6 மாத சராசரி) - 18.5 (செப் 2016 - பெப் 2017)
- தமிழ் விக்கியில் பதிவு செய்த மொத்தப் பயனர்கள் - 111,361
- எல்லா விக்கிப்பீடியாக்களிலும் பங்களித்தோர் (> 10 தொகுப்புக்கள்) - 2,372,320 (பெப் 2017)
- பக்கப் பார்வைகள் - 139,000/ நாள் (மார்ச் 2017)
- வழிசெலுத்தல் - navigation
-- மயூரநாதன் (பேச்சு) 10:03, 14 ஏப்ரல் 2017 (UTC)
- நன்றி ஐயா, இவற்றை எங்கிருந்து/எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள் என்பதை விளக்க இயலுமா? தகுந்த இணைப்புக்களையும் தந்துதவுக.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:28, 14 ஏப்ரல் 2017 (UTC)
- இது அல்லவா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:10, 14 ஏப்ரல் 2017 (UTC)
::: அதுவும் பின்வருவனவும்:
விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!
தொகு--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்
தொகுவணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)
- 26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:39, 6 மே 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு
தொகுவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு
தொகுபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
- ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
- ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
- 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
- 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:08, 21 மே 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
தொகுபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
- 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
- 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
- ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
- ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
- 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:53, 31 மே 2017 (UTC)
வணக்கம் மயூரநாதன்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (மொழி, எழுத்து முறை, கலை) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள் (ஓவியக் கலை, வரலாறு, தொல் பழங்காலம்) ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:30, 31 மே 2017 (UTC)
- வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட மொழி, எழுத்து முறை, கலை ஆகிய கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரைகளை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரைகளை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். உங்களால் முன்னர் முற்பதிவு செய்யப்பட்டிருந்த வரலாறு, தொல் பழங்காலம் கட்டுரைகள் இன்று முதல் 10 நாட்களுக்கு உங்களுக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 10:53, 11 சூன் 2017 (UTC)
Translating Ibero-America is back! Come and join us :)
தொகுHi!
Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.
We would love to have you on board :)
Please find the contest here
Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 00:34, 12 சூன் 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு
தொகுவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
படிமம்
தொகுFile:Water table.svg எனும் படிமத்தை தமிழாக்கம் (Illustrating water table.png
) செய்து இங்கு பதிவேற்றியுள்ளீர்கள். இதனைப் பொதுவில் பதிவேற்றுவது ஏற்புடையது. மேலும், மூலப் படிமம் "public domain" என்பதன் கீழ் பதிவேற்றப்பட்டிருக்க, அவ்வுரிமத்தின் கீழ் பதிவேற்றுவது ஏற்புடையது. நன்றி. --AntanO (பேச்சு) 03:30, 5 நவம்பர் 2017 (UTC)
ஆசிய மாதம், 2017
தொகுவணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
- குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
- உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
- 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
- தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
- உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:24, 14 நவம்பர் 2017 (UTC)
ஆசிய மாதம் - இறுதி வாரம்
தொகுவணக்கம்!
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
- நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:12, 25 நவம்பர் 2017 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:46, 18 பெப்ரவரி 2018 (UTC)
- @Sivakosaran: கண்டிப்பாக. தொடர்புகொண்டு பேசுவோம். --- மயூரநாதன் (பேச்சு) 16:22, 26 பெப்ரவரி 2018 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள மயூரநாதன்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)
- கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:38, 13 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் - கட்டுரைப் போட்டியில் முன்னிலை
தொகுவணக்கம். நடைபெற்று வரும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் தற்போதைய நிலவரப்படி இரண்டாம் இடத்தில் உள்ளீர்கள். தங்களைப் போன்ற பலரும் போட்டிக்குப் பங்களித்த கட்டுரைகளால் இந்த மாதம் மட்டும் இதுவரை 11,899 கூடுதல் பக்கப் பார்வைகளைப் பெற்றிருக்கிறோம் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முனைப்புடன் பங்களித்து போட்டியில் முன்னேறி தங்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பரிசு வெல்லவும் இன்னும் நிறைய வாசகர்களுக்குக் கட்டற்ற அறிவைத் தமிழில் கொண்டு சேர்க்கவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:20, 27 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் - மார்ச்சு மாதப் போட்டியில் பரிசு!
தொகுவணக்கம், மயூரநாதன். வேங்கைத் திட்டத்தின் கீழ் மார்ச்சு மாதப் போட்டியில் 27 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து இரண்டாம் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல், மே மாதமும் தொடர்ந்து மாதாந்த பங்களிப்புகள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். பரிசுகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விவரத்தைத் தனிமடலில் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்துக்கு 10 இலட்சம் இந்திய உரூபாய் மதிப்பில் 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. இன்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம். இது தொடர்ந்து உங்களுக்கு ஆர்வமுடைய தலைப்புகளில் பங்களிக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 20:44, 15 ஏப்ரல் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்
தொகுவணக்கம்.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.
இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.
நன்றி.
Thank you for keeping Wikipedia thriving in India
தொகுI wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.
Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.
This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.
Your efforts can change the future of Wikipedia in India.
You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:
https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics
Thank you,
— Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)
குறிப்பு
தொகுகட்டுரைகளை தொகுத்துக் கொண்டிருக்கம்போது "Under construction" அல்லது பொருத்தமான வார்ப்புருவைப் பயன்படுத்தினால், துப்புரவு மற்றும் கண்காணிப்புச் செய்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். இல்லாதுவிடில், பராமரிப்பு வார்ப்புருக்கள் இடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும். நன்றி. --AntanO (பேச்சு) 03:12, 18 மே 2018 (UTC)
உரோமனெசுக் கலை, ரோமனெசுக் கலை ஆகிய இரு கட்டுரைகள் உள்ளன. --AntanO (பேச்சு) 03:30, 18 மே 2018 (UTC)
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது
தொகுவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.
நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி
மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!
தொகுவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி
வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!
தொகுவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி
வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி
வேங்கைத் திட்டம் - மே மாதப் போட்டியில் பரிசு!
தொகுவணக்கம், மயூரநாதன். வேங்கைத் திட்டத்தின் கீழ் மே மாதப் போட்டியில் மட்டும் புதிதாக 67 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து மூன்றாம் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்புக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு நல்ல ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:25, 1 சூன் 2018 (UTC)
Project tiger contest
தொகுHi, greetings from Gopala. You won the prize in Project tiger contest. We (CIS-A2K) would like to send the prize to you. Please send an email with your bank details to gopala cis-india.org. --Gopala Krishna A (CIS-A2K) (பேச்சு) 08:48, 8 ஆகத்து 2018 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
தொகுபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:35, 2 நவம்பர் 2018 (UTC)
ஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டை
தொகுவணக்கம். ஆசிய மாதம் 2018-இல் பங்களித்தமைக்கு நன்றிகள். உங்களுடைய அஞ்சல் அட்டை பெறுவதற்கான தகவல்களை இங்கே பதியவும். தகவல்களை அனுப்ப சனவரி 10 இறுதி நாள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:41, 21 திசம்பர் 2018 (UTC)
Project Tiger 2.0
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
We are glad to inform you that Project Tiger 2.0/GLOW is going to start very soon. You know about Project Tiger first iteration where we saw exciting and encouraging participation from different Indian Wikimedia communities. To know about Project Tiger 1.0 please see this page
Like project Tiger 1.0, This iteration will have 2 components
- Infrastructure support - Supporting Wikimedians from India with internet support for 6 months and providing Chromebooks. Application is open from 25th August 2019 to 14 September 2019. To know more please visit
- Article writing contest - A 3-month article writing contest will be conducted for Indian Wikimedians communities. Following community feedback, we noted some community members wanted the process of article list generation to be improved. In this iteration, there will be at least two lists of articles
- Google-generated list,
- Community suggested list. Google generated list will be given to the community members before finalising the final list. On the other hand, the community may create a list by discussing among the community over Village pump, Mailing list and similar discussion channels.
Thanks for your attention,
Ananth (CIS-A2K) (talk)
Sent by MediaWiki message delivery (பேச்சு) 11:41, 21 ஆகத்து 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
Kanags பற்றி நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் முறையிடப்பட்டுள்ளது
தொகுவிக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை --Ramsey1982 (பேச்சு) 09:54, 22 அக்டோபர் 2019 (UTC)
Thank you and Happy Diwali
தொகுஆசிய மாதம், 2019
தொகுவணக்கம்.
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:12, 3 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:11, 25 நவம்பர் 2019 (UTC)
Hello @Mayooranathan:, would you mind to check this article, I am not 100% comfortable regarding my translation. Thank you very much. All my very best, --2A01:E34:ED6C:C760:4CF6:3112:B7F7:E336 07:55, 29 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
தொகுவனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:47, 4 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
தொகுவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:26, 17 சனவரி 2020 (UTC)
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
தொகுDear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
பாபா லக்க்ஷி (ஞானசேகரம், ஜெயகுமாரன்)
தொகுநன்றி மயூரநாதன் அவர்களே, உங்களுடைய பங்களிப்புக்கு. என்னுடைய கட்டுரையின் மிகமுக்கியமான இணைப்புகளான மேற்குறிம்படவரின் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலம், இந்த கட்டுரையின் மூலபொருளையும், அவரின் ஒலிப்படகலையை தன்னார்வலர் சேவையாக தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், அவர்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தலில் மிகமுக்கிய பங்கை செலுத்திவருகின்றார் என்பதை இனம் கண்டு குறிப்பிட்டு சொன்னமைக்கு நன்றி.
இது என்னுடைய முதல் கட்டுரையாக இருந்தபோதிலும், கட்டுரையின் மூலப்பொருளை உணர்த்தும் வகையில், தேவையானவற்றை இணைத்து எழுதியுள்ளேன் என்பது மகிழ்ச்சியையும், தொடந்து எழுதும் ஆர்வத்தையும் கொடுத்துள்ளது. மேலும் கட்டுரையை சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டது கருத்தில் கொள்ளப்பட்டு, அதன்அளவுகுறித்தும் அதை திருத்துவதற்கான வேலையை ஆரம்பித்துள்ளேன், விரைவில் திருத்தப்பட்ட கட்டுரையை வெளியிடுகின்றேன். உங்கள் ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி. Thamilaraci (பேச்சு) 10:22, 6 சூலை 2020 (UTC)
GFDL
தொகுHi!
Wikimedia Foundation Board decided in 2009 to stop using GFDL as a sole license per this resolution.
GFDL is not a good license because it makes it hard to reuse the images (and the articles where the image is used).
You have uploaded one or more files with GFDL. You can see the files in Category:Wikipedia license migration candidates. You can also click this link and scroll down to see your name.
If you are the photographer/creator you can help to relicense the file(s). You can do so by changing {{GFDL}} to {{self|GFDL|cc-by-sa-4.0}}.
If you are not the photographer/creator please check if you have added a source and author. --MGA73 (பேச்சு) 11:27, 6 சூன் 2021 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
Invitation for Wiki Loves Women South Asia 2021
தொகுWiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!
Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.
We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.
Best wishes,
Wiki Loves Women Team HirokBot (பேச்சு) 21:59, 18 ஆகத்து 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் Mayooranathan,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
தொகுவிக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!
இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
--MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)
தொகுவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)
தொகுவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)
தொகுவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)
தொகுவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.
குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
How we will see unregistered users
தொகுHi!
You get this message because you are an admin on a Wikimedia wiki.
When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.
Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.
If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.
We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.
Thank you. /Johan (WMF)
18:19, 4 சனவரி 2022 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
தொகுவணக்கம்.
இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில், நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 10:48, 9 சூன் 2022 (UTC)
பரிந்துரைகள் வேண்டல்
தொகுவணக்கம், வேங்கைத் திட்ட மூன்று நாள் பயிற்சி நடைபெற உள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது விக்கிப்பீடியர்களுக்கான திறன் மேம்பட்டுப் பயிற்சி. தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்கக் கிடைத்துள்ள மிகச் சிறப்பான வாய்ப்பாகக் கருதுகிறேன். தொடக்கக் காலப் பயனர் என்றவகையில் இதில் இத்திட்டம் வளர என்ன மாதிரியான பயிற்சிகளை அமைக்கலாம் என்ற பரிந்துரையை நீங்கள் அளிக்க இயலுமா? எதை நோக்கி இத்திட்ட வளரவேண்டும் எங்கெல்லாம் கவனம் செலுத்தலாம் போன்ற பரிந்துரைகளையும் வரவேற்கிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:23, 10 சூன் 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகுசெம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நிகழ்வு
தொகுவணக்கம் ஐயா. இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தில், தமிழ்நாட்டிலுள்ள ஏற்காடு எனும் ஊரில் (சேலம் மாநகருக்கு அருகில் உள்ளது) தமிழ் விக்கிப்பீடியா நிகழ்வு ஒன்றினை நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். 2 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
கலந்துகொள்வதற்கான வாய்ப்பு குறித்து தெரிவித்தீர்கள் எனில், மேற்கொண்டு திட்டமிட உதவியாக இருக்கும். இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்து திரும்புவதற்கான போக்குவரத்து, இலங்கையில் உள்ளூர்ப் போக்குவரத்து, தமிழ்நாட்டில் உள்ளூர்ப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு வசதி ஆகிய செலவுகளுக்கு விக்கிமீடியா அமைப்பிடமிருந்து நிதி உதவியை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பெறுவர். விசா தொடர்பான விசயங்களை மட்டும் நீங்கள் பொறுப்பெடுத்துக்கொள்ளும் வகையில் இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:10, 15 ஏப்பிரல் 2024 (UTC)
வணக்கம் ஐயா. தங்களின் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். உங்களின் பதில் கடிதத்திற்கு மிக்க நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:20, 16 ஏப்பிரல் 2024 (UTC)
கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்
தொகுவணக்கம் ஐயா. இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:34, 5 சூன் 2024 (UTC)