இப்பக்கத்தின் முந்தைய உரையாடல்களைக் காணலாம்.

கவனிக்க!

நீங்கள் ஒரு நிரலர் எனில் உங்களது திறன் பற்றி தெரிவிக்கவும். விக்சனரிக்கு வளர்ச்சிக்கு, பல தேவை. உதவுக.
இன்று சனி, சூலை 2 , 2022, விக்கிப்பீடியாவில் 1,47,306 கட்டுரைகளும்: 2,05,995 பயனர்களும் உள்ளனர்.


பகுப்பு நகர்த்தல்தொகு

பகுப்பு ஒன்றின் தலைப்பை கட்டுரைகளை நகர்த்துவது போன்று நகர்த்த முடியாது. பகுப்பில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் சென்று பகுப்பை மாற்ற வேண்டும். பின்னர் பழைய பகுப்பை நீக்கி விட்டுப் புதிய பகுப்பை உருவாக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:45, 27 சனவரி 2015 (UTC)

உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. இதற்குரிய பைத்தான் நிரல் கட்டகம் அமைத்துக் கொண்டு இருந்தேன். பிறகு இயக்கிப் பார்த்த போது நீங்கள் மாற்றியதை உணர்ந்தேன். உரிய விக்கித்தரவினை பகுப்பில் இணைத்துவிட்டேன். --≈ உழவன் (உரை) 06:56, 27 சனவரி 2015 (UTC)
நான் தான் அவசரப்பட்டு விட்டேன்:)--Kanags \உரையாடுக 06:59, 27 சனவரி 2015 (UTC)
கிடைக்கும் நேரத்தில் விரைந்து செயலாற்றுகிறீர்கள். நமது நோக்கம் ஒன்றாக அமைந்துவிட்டது குறித்து, எனக்கும் மகிழ்ச்சியே--≈ உழவன் (உரை) 07:02, 27 சனவரி 2015 (UTC)

Train the Trainer Programதொகு

எனக்கு (hibayathulla@dinamani.com) தங்களின் மின்அஞ்சலை தெரியப்படுத்தவும்.--ஹிபாயத்துல்லா (பேச்சு) 11:24, 1 பெப்ரவரி 2015 (UTC)

அனுப்புகிறேன்.--≈ உழவன் (உரை) 16
20, 1 பெப்ரவரி 2015 (UTC)

உங்கள் மின்னஞ்சலை தெரியப்படுத்தவும் kurinjionlineஅட்gmail.com --குறிஞ்சி (பேச்சு) 09:02, 20 அக்டோபர் 2015 (UTC)

tha.uzhavanஅட்-ஜிமெயில்.காம்--உழவன் (உரை) 01:49, 21 நவம்பர் 2015 (UTC)

பொதுவகத்துக்கு நகர்த்தல்தொகு

வணக்கம் ஐயா, ஒரு சிறு வேண்டுகோள், பொதுவகத்துக்கு நகர்த்தும் படிமங்களின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுவதை விட அப்படிம பக்கத்திலேயே {{Now Commons}} இணைப்பிட்டால் அதனை நீக்க எளிதாய் இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:08, 20 பெப்ரவரி 2015 (UTC)

இனி தவறாமல் கடைப்பிடிக்கிறேன். இவ்வகையான சிறிய படிமங்களை அங்கு பதிவேற்றுவதைத் தவிர்க்க, எனக்கு அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது. புதிய பன்முக கோப்பிற்கு, அதன் உருவாக்குனரிடம் கேட்டுள்ளேன். தருவாரென்று எண்ணுகிறேன். அப்படி நடந்தால், உரிய கோப்புகளிலும், நீங்கள் கூறியபடி உரிய இணைப்புகளைத் தந்து விடுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.----≈ உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 19:44, 20 பெப்ரவரி 2015 (UTC)

பகுப்பு:தாய்ப் பகுப்புதொகு

தாய்ப் பகுப்பு என்பது முதற் பக்கத்தில் இட்ட பகுப்புகளின் தொகுப்பாகவும், தகவல் வகைகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. மாற்றம் தேவை எனின் உரையாடலாம். --Natkeeran (பேச்சு) 17:35, 24 ஏப்ரல் 2015 (UTC)

 • ஒரு எடுத்துக்காட்டுடன் எனது ஐயங்களை, கலந்துரையாட விரும்புகிறேன்.
 1. பகுப்பு:பட்டியல்கள் என்பது தாய்பகுப்பில் இருந்தது. அதன் சேய்பகுப்பாக பகுப்பு:தலைப்புகள் பட்டியல் என்பது இருக்கிறது. ஏனெனில் அது பட்டியல் என்பதால், அங்ஙனம் கோர்த்துள்ளனர் என புரிந்து கொள்ள இயலுகிறது. இவ்வாறு சேய்பகுப்பான ஒன்றே, மீண்டும் தாய்பகுப்பாக இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், இங்கு குறிப்பிட்ட சேய்பகுப்பில், தாய்பகுப்பு குறிப்புகளை நீக்கினேன். இது சரிதானே?
 2. மைசீக்குவெல் என்ற கட்டுரையில், பகுப்பு:தி்றந்த தரவுத்தள மேலாண்மை மென்பொருட்கள் என்ற பகுப்பை நீக்கினேன். ஏனெனில், அது பிழையான எழுத்துக்கூட்டலாக இருக்கிறது. மேலும், ஒரே பொருளுடைய பகுப்பாகவும் இருக்கிறது. அதுபற்றி இந்த உரையாடல் பக்கத்தில் தொடங்கியுள்ளேன்.--உழவன் (உரை) 02:41, 25 ஏப்ரல் 2015 (UTC)
பிழையான எழுத்துக்கூட்டலுடனான பகுப்பை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:56, 25 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்புதொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:21, 7 மே 2015 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:46, 29 சூன் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 7 சூலை 2015 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்தொகு


உளங்கனிந்த நன்றி!தொகு

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 25 சூலை 2015 (UTC)

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்தொகுஒரு வேண்டுகோள்தொகு

பைலசின் திமோன், விசயேந்திர சரஸ்வதி ஆகிய இரு பக்கங்களையும் சுற்றுக்காவல் புரிந்ததாகக் குறித்திருந்தீர்கள். சுற்றுக்காவல் புரியும்போது கட்டுரையை விக்கித்தரவில் இணைத்து விடுவதிலும் சற்றுக் கவனஞ் செலுத்துங்கள். சுற்றுக்காவல் புரியும்போதும் இணைக்காவிடின், புதிய கட்டுரைகள் விக்கித்தரவில் இணைக்கப்படாமல் தேங்கி நிற்கும் நிலை வந்து விடலாம். விசயேந்திர சரஸ்வதி என்ற கட்டுரையைத் தவறுதலாகக் குறித்து விட்டீர்கள் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 15:08, 3 செப்டம்பர் 2015 (UTC)

ஆம். மின்தடை ஏற்பட்டதால், அப்புறம் செய்யலாமென்று நினைத்து மறந்து விட்டேன். இனி கவனமாகச் செய்கிறேன். கட்டுரை வளரட்டும் என்றே சுற்றுக்காவல் செய்தேன். சரசுவதி என்று வழக்கம் வந்து விட்டதால், விசயேந்திர சரஸ்வதி என்ற வழிமாற்று தேவையில்லை நீக்கி விடலாமா? --உழவன் (உரை) 05:11, 4 செப்டம்பர் 2015 (UTC)

ஆம், நீக்கி விடலாம். விசயேந்திர சரசுவதி அல்லது விஜயேந்திர சரஸ்வதி என்றே பெரும்பாலும் தேடுவார்கள். --மதனாகரன் (பேச்சு) 09:51, 4 செப்டம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம், 2015தொகு

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
 • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்தொகு

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

 • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
 • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
 • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
 • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
 • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)

உதவி தேவைதொகு

1996 அமர்நாத் யாத்திரை துயரச் சம்பவம் என்ற கட்டுரையில் படம் பதிவேற்ற்ம் செய்யவும் --கி.மூர்த்தி 16:55, 22 நவம்பர் 2015 (UTC)

 Y ஆயிற்றுமுன்பு பொதுவகத்தில் இல்லாமல் இருந்தது. அதனால் முன்பு இங்கு தெரியவில்லை. உரிய மாற்றங்களை ஆங்கில விக்கிப்பீடியாவிலும், பொதுவகத்திலும் செய்து விட்டேன்.−முன்நிற்கும் கருத்து info-farmer (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தானியங்கிதொகு

பகுப்புகள் மாற்றம், வார்ப்புரு சேர்ப்பது போன்றவற்றுக்குத் தானியங்கிகளின் உதவியைப் பெறலாம்.--Kanags \உரையாடுக 11:33, 23 நவம்பர் 2015 (UTC)

யாரை, எங்கு கோர வேண்டும்?--உழவன் (உரை) 15:22, 23 நவம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
 2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
 4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)

தனியான தொடுப்பிணைப்பிதொகு

இங்கு பயனர்:Info-farmer/vector.js importScript('பயனர்:Info-farmer/தொடுப்பிணைப்பி.js'); என்பதனைத் சேர்த்துள்ளேன். இங்கு பயனர்:Info-farmer/தொடுப்பிணைப்பி.js என்பதில் நிரல்கள் உள்ளன. தொடுப்பிணைப்பி.js பகுதியில் உங்களுக்குத் தேவையான வார்ப்புருக்களை சேர்க்கலாம்.

taggerGadgetDefaultConfig.tags[15] = '{{Nowikidatalink}}';

taggerGadgetDefaultConfig.editSummary[taggerGadgetDefaultConfig.tags[15]] = '+ விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்பி]] வாயிலாக';

இதன் பின், tags[15] என்பதில் எண்களைக் கூட்டிக் கொண்டு (16, 17, 18 .....), அதற்கு உரிய வார்ப்புருக்களையும் சேர்த்துக் கொண்டு போகலாம். சிறப்பு:Preferences இதில் "கருவிகள்" என்பதை தெரிவு செய்து தொடுப்பிணைப்பி, எளிதாகத் துப்புரவு வார்ப்புருக்களைச் சில சொடுக்குகளில் ஒரு பக்கத்தில் இணைக்க உதவுகிறது. டுவிங்கிள் போன்றது. என்பதன் தெரிவினை நீக்கிவீடுங்கள்.

--AntanO 04:21, 1 திசம்பர் 2015 (UTC)

குறிப்பு: பயனர்:Info-farmer/தொடுப்பிணைப்பி.js என்பதை உலவியில் வைத்து தொகுப்பதில் சிக்கல் ஏற்படலாம். அப்படியாயில் Notepad, MS Word போன்ற ஒன்றில் தொகுத்து, பின் வெட்டி-ஒட்டிவிடுங்கள்.

--AntanO 04:30, 1 திசம்பர் 2015 (UTC)

அற்புதம். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தொடுப்பிணைப்பியின் கீழ் வரும் தனிப்பயன் தொடுப்பு என்பதன் பயன்பாடு என்ன?--உழவன் (உரை) 04:32, 1 திசம்பர் 2015 (UTC)
இது தொடுப்பிணைப்பியில் "தொடுப்பு" என்பதில் "'ஏனையவை -> (தயவுசெய்து தொகுப்புச் சுருக்கத்தையும் தருக)'" என்பதைத் தெரிவு செய்தால் தொடுப்பிணைப்பியில் இல்லாத வார்ப்புவை உள்ளிட {{}} என்ற வெற்று வரிகளை உருவாக்கும். இதில் தேவையான வார்ப்புருவை தட்டச்சு செய்யலாம்.--AntanO 05:02, 1 திசம்பர் 2015 (UTC)
எனது பங்களிப்பபை எளிமையாகச் செய்ய அடித்தளமிட்டமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.--உழவன் (உரை) 05:34, 1 திசம்பர் 2015 (UTC)

உதவி விக்கித்தரவுதொகு

@Kanags, மதனாஹரன், மற்றும் AntanO: பிறமொழிகளில் இல்லாத பக்கங்களை விக்கித்தரவில் சேர்ப்பது எப்படி என விளக்கவேண்டுகின்றேன். காட்டாக அக்கா தங்கை. நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 17:49, 3 திசம்பர் 2015 (UTC)

பிற மொழிகளில் உள்ளவற்றுக்கு மட்டும் விக்கித்தரவில் சேருங்கள். இல்லாதவற்றுக்கு சேர்ப்பது பயனற்றது. இவற்றுக்கு வார்ப்புரு இடுவதும் தேவையற்றது. பொதுவாக இவற்றைத் தானியங்கிகள் கவனித்துக் கொள்கின்றன.--Kanags \உரையாடுக 19:56, 3 திசம்பர் 2015 (UTC)

உதவி விக்கிமேற்கோள்தொகு

@Info-farmer, Kanags, மதனாஹரன், மற்றும் AntanO: விக்கிமேற்கோளில் நான் செய்துள்ள பிழையைச் (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், விக்கிமேற்கோள்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஐன்ஸ்டீன்) சரிசெய்ய உதவுங்கள் ! அனைத்து விக்கி திட்டங்களிலும் கட்டுரை / பக்க ஒன்றிணைப்பு ஒரே முறையானதா இல்லை வேறா? எவ்வாறாயினும் இரு/பல பக்கங்களை ஒன்றிணைப்பது எப்படி என நான் அறிந்துகொள்ள உதவுங்கள் ! - ʋɐɾɯnபேச்சு 19:57, 15 திசம்பர் 2015 (UTC)

இரட்டை வழிமாற்றுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. ஆனாலும், இவ்வாறான இரட்டை வழிமாற்றுகளைக் கவனிக்க அவ்வப்போது மெட்டாவிக்கி தானியங்கிகள் உலா வருகின்றன. அவை அவற்றைக் கவனித்துத் திருத்துகின்றன. இப்போது திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:03, 15 திசம்பர் 2015 (UTC)
@Kanags: இரு கட்டுரைகளை ஒன்றிணைத்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கட்டுரையை முதன்மையாக்கும் நோக்கில் அதன் உள்ளடக்கத்தை ஐன்ஸ்டீன் கட்டுரையில் இணைத்தேன். பின் ஐன்ஸ்டீன் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கட்டுரைக்கு நகர்த்த முயன்றால், பிழை எனக்காட்டியது. குழப்பத்தில் விக்கிமேற்கோள்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற பெயருக்கு நகர்த்திவிட்டேன். இப்போது வரை இக்கட்டுரைகளை ஒன்றிணைக்கும் வழியறியாமல் இருக்கின்றேன் ! - ʋɐɾɯnபேச்சு 20:25, 15 திசம்பர் 2015 (UTC)

@பயனர்:Wwarunn [[q:விக்கிமேற்கோள்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|விக்கிமேற்கோள்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] எனச்சுட்டினாலே போதும். முழுமையாகத் தெரிந்து கொண்டு, பிறரிடம் கேட்டு அறிந்து கொண்டு மாற்றங்களை செய்யுங்கள். இதுபோன்ற ஆர்வக்கோளாறு செயல்களை, ஆங்கிலத்திட்டத்தில் செய்தால், அதற்கான பரிசு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பயனர் கணக்கு தடை செய்யப்படுவது அல்லது அந்த உரிமை நீக்குவது ஆகும்.. இங்கு அவ்விதிகளை, முதலாவது தவறுக்கு, நான் பரிந்துரைக்க விரும்பவில்லை. இனி, எதையும் அதற்குரிய பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து விட்டு செய்யுங்கள். இங்கு பல துப்புரவு பணிகள் தேங்கிக் கிடைக்கின்றன. இதுபோல விக்கியிடைத் துப்புரவு பணியைத்தவிர்க்கவே, இதனைக் கூறுகிறேன். @பயனர்:Shanmugamp7 பேன்றவரே உரிய மாற்றத்தை அதன் வரலாற்றுப் பக்கத்தோடு மீளமைக்க முடியும். இது நம் திட்டம். எனவே, பேச்சுப்பக்கத்தினைப் பயன்படுத்துங்கள். புரிந்துணர்வு நம்மிடம் தழைக்க இது மிக மிக அடிப்படையானதாகும்.--உழவன் (உரை) 01:22, 16 திசம்பர் 2015 (UTC)

தெளிவு படுத்தியமைக்கு நன்றி உழவன்.--Kanags \உரையாடுக 01:33, 16 திசம்பர் 2015 (UTC)
@Info-farmer: வழிகாட்டலுக்கு நன்றி! சில புரிதற்பிழைகள் உள்ளன என்றெண்ணுகின்றேன். :)

தவறே செய்ததில்லை என்பவர், புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர் - ஐன்ஸ்டைனின் கூற்று :)

 1. முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், எவரிடம் எங்ஙனம் கேட்பது என்பதில் கோளாறு உள்ளதால் வந்த விளைவு. சிலரை மட்டுமே மீண்டும் மீண்டும் வினவுவது சரிதானா எனச் சற்றுக் குழப்பமாக உள்ளது. (அவர்களின் பிற பணிகளுக்குத் தடங்கலேற்படும்?) :(
 2. தீக்குறும்பு / தீநோக்கிற்கும் அறியாமல் / முழுதாகப் புரியாமல் செய்த தவறுக்கும் விக்கியில் ஒரே வகையான தண்டனைதான் வழங்கப்படுமா? முழுமையாகப் புரிந்துகொள்ளாமைக்கு பயனர் மட்டுமே பொறுப்பா அல்லது சரியான வழிகாட்டலின்மையுமா? காட்டாக: விக்கிப்பீடியா:அகேகே, இன்றுவரை நிபுணரின் பார்வைக்குக் காத்திருக்கின்றது.
 3. பேச்சுப்பக்கத்தை மேலும் பயன்படுத்த முயல்கிறேன். இதுபோல் இருப்பது சரியா !?
 4. இது விக்கியிடைத் துப்புறவா எனத் தெரியவில்லை. விக்கிமேற்கோளில் உள்ள இரு பக்கங்களை இணைக்க எண்ணியபோது ஏற்பட்ட தவறு இது. இரண்டு (இப்பொழுது மூன்று) பக்கங்களும் விக்கிமேற்கோளிலேயே உள்ளன. ஒரே திட்டத்தில் இருக்கும் இரண்டு பக்கங்களை ஒன்றிணைக்கும் வழிகள் என்ன? விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரை சரியாகவே உள்ளது. இங்கு குறிப்பிட்டுள்ள வேண்டுகோள் தவறோ என்றெண்ணுகிறேன். விக்கிமேற்கோளிருந்து விக்கிபீடியாவிற்கல்ல, விக்கிமேற்கோளிலிருந்து விக்கிமேற்கோளிற்கே (விக்கிமேற்கோள்: என்ற முன்னிணைப்பை நீக்கி) மாற்றவேண்டும் !
 5. உண்மையில் இது என் சோதனை முயற்சி. இவ்வாறான பணிகளைப் பயில / பயிற்சி செய்யும் வழிகள் என்ன? காட்டாக கட்டுரைகளை ஒன்றிணைப்பது, பகுப்புகளில் மாற்றம் செய்வது ‎ பேன்றவை.
 6. துப்புரவுப் பணிகளில் உதவும் நோக்கிலேயே இச்சோதனையை முயன்றேன். துப்புரவில் பங்களிப்போரின் பளுவைக் குறைக்க, ஒவ்வொரு முறையும் கட்டுரையில் இணைப்பு வார்ப்புரு மட்டுமிடுவதை விட நாமே இணைக்கலாமே என்ற எண்ணத்தின் விளைவு இது. நேற்று மட்டும் என் கண்ணில் பட்டவை: பட்டினப் பிரவேசம், பட்டினப்பிரவேசம், காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், கே. வி. கே. குப்பம், கே வி கே குப்பம். :(
 7. இது நம் திட்டம் என்ற எண்ணமும் ஏதுவான சூழலும் கொண்டுள்ளதாலேயே நானும் பங்களித்துக்கொண்டிருக்கின்றேன். மேலும் இதுபோன்ற சூழல் வ(ள)ராதிருக்க என்னால் இயன்றதைச் செய்துவருகின்றேன்.
 8. விக்கிப்பீடியா:துப்பரவுக் குழுவிற்கு நானும் காத்திருக்கின்றேன்.

புரிதலுக்கும் எனது பிழைகளைத் திருத்திக்கொள்ள உதவுவதற்கும் நன்றிகள் ! - ʋɐɾɯnபேச்சு 06:54, 16 திசம்பர் 2015 (UTC)

@Wwarunn! நீங்கள் உட்பட அனைவரும் திரும்ப பெறமுடியாக் காலத்தை இங்கு அளிக்கின்றனர். நமது பிறரின் காலம் காப்பதே நமது முதற்பணியாக நான் எண்ணுகிறேன். சரி, தவறு என்ற அறிவிப்பு பெரும்பாலும் பங்களிப்பாளரின் மனதையே சென்றடைகிறது. அது அனுபவமின்மையால்/பழக்கமின்மையால் தவறாக மாற வாய்ப்புண்டு. எனவே, உரையாடி செய்யுங்கள். கற்றலின் கேட்டல் நன்று என்பது நமது முதுமொழி. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. சில வரிகள் அறிவிப்பு செய்வதால், பல வரிகள் மீண்டும் எழுத வேண்டிய நிலை உருவாகாது. அப்பொழுதே வந்தவர் நம்மை விட்டு விலகார். துப்புரவு செய்தல் மட்டுமே, மதிப்பைக் கூட்டுதல் ஆகாது. பல மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கி, துப்புரவு செய்யவேண்டிய நிலையில்லாக் கட்டுரைகளை, பிறருக்குக் காட்ட வேண்டும். பெருந்தரவைப் பேணும் போது, அதில் ஏற்படும் சிறுமைகளுக்கு முன்னுரிமைத் தரக்கூடாது. எனது வேண்டுகோள் : உங்களைப்பற்றி உங்கள் பயனர் பக்கத்தில் எழுதுங்கள். உங்கள் திறனை, பிறர் அறிந்தால் தானே பிறர் உங்களை நாடுவர். அரிதலில் ஆர்வம் கொள்ளாமல், அறிவிப்பில் ஆர்வம் கொள்ளுங்கள். ஒவ்வொன்றாக கற்போம். அவசரமில்லை. மீண்டும் மற்றுமொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 12:13, 16 திசம்பர் 2015 (UTC)

உதவிதொகு

இசுக்காண்டியம் சேர்மங்கள் என்ற பகுப்பை உருவாக்க எனக்கு படிப்படியாக சொல்லித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். --கி.மூர்த்தி 02:03, 17 திசம்பர் 2015 (UTC)

 1. நாம் பகுப்பை உருவாக்கப்போகிறோம் என்பதால், இந்த பகுப்புத்தொகுப்பிற்கு வர வேண்டும்.
 2. அங்கு நீங்கள் உருவாக்க இருக்கும் பகுப்பு ஏற்கனவே உள்ளதா என அரிதல் வேண்டும். அதற்கு அங்குள்ள சாளரத்தில் தேடிப்பாருங்கள். எப்பெயரிலும், அந்த நோக்கமுடைய பகுப்பு இல்லையெனில், கட்டுரையில் அப்பகுப்பை இணைத்து விடவும்.
 3. இணைத்த பகுப்பு சிவப்பாகத் தெரியும். அச்சிவப்புப்பகுப்பை, இத்துறைத் தொடர்புடைய, விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருக்கும் பகுப்புடன் இணைத்து விட்டால், உருவாக்கிய பகுப்பு, நீலமாக மாறிவிடும். அதற்கு,
 4. நீங்கள் தற்போது உருவாக்கிய பகுப்பு வேதியியல் சேர்மங்கள் என்பதால்,பகுப்புப்பக்கத்தொகுப்பின் தேடுசாளரத்தில் வேதி என்று தேடிப்பார்க்கவும். குறைந்த அளவு எழுத்துக்களைக் கொண்டு தேடணும். ஏனெனில், வேதியியல் சேர்மங்கள் என்றோ அல்லது வேதிச் சேர்மங்கள் என்றோ பெயர் இருக்கலாம். எனவே, வேதியியல் எனத் தேடாமல், இரண்டுக்கும் பொதுவாக வேதி எனத்தேடினால், பகுப்பு:வேதிச் சேர்மங்கள் உள்ளது தெரிய வரும்.
 5. பகுப்பு:வேதிச் சேர்மங்கள் என்ற பெயரை நகலெடுத்துக் கொண்டு, அதனை சிவப்பாகத்தெரியும் புதிய பகுப்பினுள் ஒட்டி விடவும்.
 6. இப்பொழுது புதிய பகுப்பைக் கட்டுரையுடன் உருவாக்கியிருப்பீர்கள். உருவாக்கிய பகுப்பும், ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் வேதியியல் தொடர்புடைய பகுப்புடன் இணைக்கப்பட்டிருக்கும்.முடிந்தால் , நாம் கற்றதைப் பிறருக்கும் காட்ட, இவ்வார இறுதியில் நிகழ்படப் பதிவு ஒன்றை உருவாக்கி, பொதுவகத்தில் இணைக்கிறேன்--உழவன் (உரை) 02:59, 17 திசம்பர் 2015 (UTC)
@கி.மூர்த்தி: பகுப்பு:இசுக்காண்டியம் சேர்மங்கள் பக்கத்தை ஆங்கில விக்கித் தரவுக்கு இணைத்து விடுங்கள். கட்டுரைகளை விக்கித் தரவில் இணைப்பது போன்றே பகுப்புகளை இணைப்பதும் மிகவும் அவசியமானதாகும். அத்துடன் கட்டுரைகளில் செயரத்தினாவின் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தகவலுழவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். --Kanags \உரையாடுக 06:41, 17 திசம்பர் 2015 (UTC)
@பயனர்:Kanags! மூர்த்தியும், நானும் இப்பொழுது ஒரே இடத்தில் இல்லை. அலைப்பேசி வழியே கற்றோம். அவர் அலுவலகம் செல்வதற்கான நேரம் வந்தமையால், வழமை போல வார இறுதியில் உரையாடுவோம். அப்பொழுது அவருக்கு அறிமுகப் படுத்துகிறேன்.--உழவன் (உரை) 06:59, 17 திசம்பர் 2015 (UTC)
பகுப்பு சரியா ? இசுக்காண்டியம் சேர்மங்கள் ஆங்கிலப் பகுப்புடன் இணைக்கப்படவில்லையே கவனித்தீர்களா? --கி.மூர்த்தி 12:53, 17 திசம்பர் 2015 (UTC)

தங்களின் கவனத்திற்கு...தொகு

இந்தத் தொகுப்பில் ஒரு சிறு தவறு ஏற்பட்டுள்ளது. வார்ப்புருவிற்கு கீழே மேலும் இரண்டு மேற்கோள்கள் இருக்கின்றன, பாருங்கள். மற்ற இடங்களில் தாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தெரிவிக்கிறேன்; தவறாக நினைக்க வேண்டாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:07, 18 திசம்பர் 2015 (UTC)

மிக்கநன்றி. இன்னும் சிறப்பாகச் செயற்படவல்ல தானியங்கிப் பயிற்சி எடுத்துக்கொண்ட போது, நீங்கள் கொடுத்தக்குறிப்பு பயனுள்ளதாக இருந்தது. இனி வார்ப்புருவை மெட்டாகுறிப்புகளுக்கு மேலிடு என அமைத்துக் கொள்கிறேன். வெளியிணைப்புகள் என்ற உட்பிரிவு அங்கு இல்லாமல் இருந்ததே, அதற்குக்காரணம். அதையும் உருவாக்கி விட்டேன். தொடர்ந்து கவனித்து, எனக்கு பின்னூட்டம் அளியுங்கள். அது என்னை என் பணியில் மேலோங்க உதவும். சந்திப்போம் . வணக்கம்.--உழவன் (உரை) 12:46, 18 திசம்பர் 2015 (UTC)

  விருப்பம்; நேர்மறை = தகவலுழவன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:52, 18 திசம்பர் 2015 (UTC)

உதவி...தொகு

வணக்கம். இந்தக் கட்டுரையிலிருந்து தரப்பட்டுள்ள வெளியிணைப்பிலிருந்த மின்னூல் நீக்கப்பட்டுள்ளது. காரணம் அறிய விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 13 சனவரி 2016 (UTC)

இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். நூலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருந்தேன். எனவே, வினவிச்சொல்கிறேன். அத்தளத்தில் பதிப்புரிமை அல்லது கொள்கை மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்..--உழவன் (உரை) 00:18, 14 சனவரி 2016 (UTC)

காப்புரிமை மீறல் சந்தேகம்தொகு

நீங்கள் பங்களித்துள்ள தாவரவியல் தொடர்பான கட்டுரைகளின் (எ.கா. வாழைக் குடும்பம் (தாவரவியல்), காஃபி குடும்பம் (தாவரவியல்) முதலியன) பெரும்பாலான பகுதிகள் தமிழக அரசின் 12ஆம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பதிப்புரிமை மீறலாக இருக்கக்கூடும். கவனிக்கவும். --சத்தியராஜ் (பேச்சு) 04:58, 18 பெப்ரவரி 2016 (UTC)

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 05:02, 18 பெப்ரவரி 2016 தங்கள் தொலைபேசி எண்ணைக் குறுஞ்செய்தி வழி அனுப்பவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:46, 26 பெப்ரவரி 2016 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: என்னுடைய தொலைபேசி எண்ணையா கேட்கிறீர்கள்? -- சத்தியராஜ் (பேச்சு) 04:31, 2 மார்ச் 2016 (UTC)

சத்தியராஜ்! என் பக்கம் வந்தமைக்கு நன்றி. நீங்கள் கூறும் காப்புரிமை குறித்த மாற்று எண்ணங்கள் உள்ளன. உண்மையில் அந்நூல் பல காப்புரிமை யற்ற நூல்களின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. எ.கா File:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf என்ற நூல் பல தொகுதிகளாக வந்துள்ளன. தமிழக அரசு அதிகாரிகளிடையே நெருங்கி வினவும் வாய்ப்பு, தற்போது மேற்கொண்டுள்ள உறைவிட விக்கிப்பீடியர் பணியால் வந்துள்ளது. அதனால், சில நடைமுறைசிக்கல்களை அறிய முடிகிறது. காப்புரிமை உள்ளவை அற்றவை என நாம் உரையாடுவதை விட, அது போன்ற தரவுகளை விக்கிக்காக வாங்குவதில் பல பங்களிப்பாளர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் சென்னையைச்சார்ந்தவரா? அல்ல எனின், உங்கள் அலைப்பேசி எண் தாருங்கள். ஒன்றாக உழைப்போம், உரிய உரிமத்தை பெற்று நம் விக்கிக்கு அளிப்போம். எனது எண் 90-95-34-33-42.ஆவலுடன்..--உழவன் (உரை) 08:33, 3 மார்ச் 2016 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: ஐயா! வணக்கம். தற்போது பெங்களூரில் இருந்து விக்கிபணிகளை செய்ய அனைத்து வசதிகளையும் இரவி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உடல் நலம் முன்பைவிட முன்னேற்றமே. இன்னும் பத்து நாட்களில் சென்னை வருவேன். அடுத்து உங்கள் தலைமையில் உருவான அறிவியல் களஞ்சியங்களை பதிவேற்றலாமென்று எண்ணியுள்ளேன். வழமையான அரசு அதிகாரிகளின் /, பேராசிரியர்களின் மனநிலை தங்களுக்குத் தெரிந்ததே. நேரில் சந்தித்து உங்கள் ஆலோசனையைப் பெறுவேன். வணக்கம்.--உழவன் (உரை) 08:33, 3 மார்ச் 2016 (UTC)

உதவிதொகு

CSVLoader மூலம் கட்டுரை உருவாக்கத்தில் உதவி தேவை. உதவுக-- மாதவன்  ( பேச்சு ) 14:00, 7 மார்ச் 2016 (UTC)

No changes
Press the "Skip" button below to skip to the next page. என தோன்றுகிறது.-- மாதவன்  ( பேச்சு ) 14:02, 7 மார்ச் 2016 (UTC)

வின்டோசை விட்டு 4-5 வருடங்கள் ஆகிறது. என்ன செய்த போது அங்ஙனம் வந்தது? இப்பக்கத்தில் தேடினீர்களா? -நான் கற்றவரை அனைத்தும் அப்பகுதியில் இருக்கிறது. இல்லையாயின், அதன் பேச்சுப் பக்கத்தில் வினவுங்கள். தவறாமல் பதில் அளிப்பார். -உழவன் (உரை) 15:45, 7 மார்ச் 2016 (UTC)

User:Info-farmer விக்கி மூலத்தில் மெய்ப்பு பார்க்கப்பட்டு பின்னர் சரிபார்க்கப்பட்ட நூலில் காணப்படும் பிழையை எவ்வாறு திருத்துவது?--கி.மூர்த்தி 17:23, 8 சூன் 2016 (UTC)

வழமையான விக்கி நடைமுறை தான். எந்நிலையிலும், திருத்தலாம். ஏதேனும் இடரா?100% நோக்கி பயணிக்கிறோம். பல நேரங்களில், முதல் எட்டிலேயே அமைவதில்லைதானே. இப்பொழுது பள்ளிக்கல்வி மேம்பாட்டு ஆய்வு குழுவினரிடம்.. விரைவில் அனைத்துத் தமிழக கல்வி ஆவணங்களும் பொது உரிமத்தின் கீழ் வரவிருக்கிறது. இதைப் பார்த்தீர்களா?-- உழவன் (உரை) 18:07, 8 சூன் 2016 (UTC)

பஞ்சாப் மாதம்தொகு

2016 இந்திய விக்கி மாநாட்டை ஒட்டி நடைபெறும் பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பில் பங்கேற்க வேண்டுகிறேன். இதன் மூலம் பஞ்சாப் பற்றி நாம் அறிந்து கொள்வதுடன் இந்நிகழ்வை ஒருங்கிணைக்க உழைக்கும் பஞ்சாபியர்களுக்கு நாம் அளிக்கும் அன்புப் பரிசாகவும் இருக்கும். கூடுதல் பைட்டுகள் அல்லது சொற்களைச் சேர்க்கும் சமூகத்துக்குக் கேடயமும் உண்டு. எனவே, இன்றே வாரீர்! கட்டுரைகள் தாரீர் ! :)--இரவி (பேச்சு) 20:45, 15 சூலை 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 28 சூலை 2016 (UTC)

காப்புதொகு

உங்கள் பயனர் துணைப்பக்கங்கள் இரண்டு முடிவிலியாகக் காக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வது முறையற்றது. இது நிருவாக அணுக்கத்தைப் பிழையாகப் பயன்படுத்துவதாகவும் அர்த்தப்படுத்தக்கூடும். மேலதிக தகவலுக்கு காண்க: User pages and subpages can be protected upon a simple request from the user, as long as a need exists—pages in userspace should not be automatically or pre-emptively protected. Requests for protection specifically at uncommon levels (such as template protection) may be granted if the user has expressed a genuine and realistic need. --AntanO 09:10, 9 அக்டோபர் 2016 (UTC)

குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது 6மாதத்திற்கு செய்யலாமா? எனக்கு ஓரளவே ஆங்கிலம் தெரியும். விளக்குக.--உழவன் (உரை) 12:37, 9 அக்டோபர் 2016 (UTC)
காப்புச் செய்வதற்கான முறையான காரணம் இருந்தால் காப்புச் செய்யலாம். இல்லாவிட்டால் "பயனர் பக்கம் காப்புச் செய்ய வேண்டாம்" என்ற வழிகாட்டல் உள்ளது. பொதுவாக பயனர் பக்கம் தாக்குதலுக்கு உள்ளாகும்போது மட்டுமே காப்பதை ஆ.வி.யிலும் கண்டுள்ளேன். --AntanO 13:11, 9 அக்டோபர் 2016 (UTC)
ஓ..மிக்க நன்றி. கட்டக அணுக்கம்(sysop) பெற்றவருக்கான சுருக்கமான ஒரு வழிகாட்டல்களும், தொடர்ந்து விரிவாக அறிவதற்கான மூலப்பக்கமும் இருப்பின் பங்களிப்புகளை சீரமைத்துக் கொள்ள இயலும். அவ்வப்போது உரிய விதிகளை பக்கமொன்றில் தொகுத்து அளியுங்கள். எக்காலமும் அது பலருக்கும் கைகொடுக்கும். அறியாமை இருள் போய் விட்டால், ஒளி தானே! வணக்கம்.--உழவன் (உரை) 13:15, 9 அக்டோபர் 2016 (UTC)
எனக்கும் நீங்கள் குறிப்பிட்டவாறு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. ஆனால் அங்கு இருப்பவற்றை மொழிபெயர்ப்பது பெரிய வேலை. மேலும், பயனர் ஆர்வம் காட்டாமையும் அவற்றைத் தொடர்ந்து செய்யத் தூண்டுவதில்லை. இன்னும் முக்கிய வழிகாட்டல், கொள்கைகள் என்பன எம்மிடம் இல்லாமலும் அல்லது இற்றைப்படுத்தாமலும் உள்ளன எ.கா: en:WP:NOT. அவ்வப்போது சிலவற்றைச் செய்கிறேன். வழிகாட்டல், கொள்கைகள் போன்றவை இருந்தால் அனைவருக்கும் இலகுவாகவும் இருக்கும். தேவையற்ற கருத்தாடல்களும் குறைந்துவிடும். --AntanO 13:28, 9 அக்டோபர் 2016 (UTC)
ஆங்கிலபக்கங்கள் பெரியதாக இருப்பதால் தான் சுருக்கத்தையும், விரிவாக என்ற உரியதொடுப்பையும் தருக எனக்கேட்டேன். மாதம் ஒரு வழிகாட்டுதலையாவது, நமது வழிகாட்டுதல் பக்கத்தில் எழுதக் கோருகிறேன். இம்மாதத்திற்கு உரியதை எழுதி விட்டீர்கள்!. உரியபக்கத்தை உருவாக்கி நகலிடுக. அல்லது படித்து ஒலிக்கோப்புகளாக கூட அமைக்கலாம். ஏனெனில் தட்டச்சுப்பணியும் அயர்வை உண்டாக்கும். 2000 மேற்பட்ட import பங்களிப்புகளைச் செய்துள்ளீர்கள். அதுகுறித்து அடுத்த மாதம் குறிப்புகளைத் தருக.--உழவன் (உரை) 15:43, 9 அக்டோபர் 2016 (UTC)

தேவையற்ற வழிமாற்றுகள்தொகு

வணக்கம். பா.ரஞ்சித் போன்ற வழிமாற்றுகளை தேவையற்றதாக நீக்கி வருகிறீர்கள். இந்த வழிமாற்றுகள் இருப்பதில் தவறில்லை. பெரும்பாலாகத் தேடுபவர்கள் பா.ரஞ்சித் என்று எழுதியே தேடுவார்கள். அப்படி இல்லை என்றால் புதிய கட்டுரையே எழுதத் தொடங்கி விடுவார்கள். ஆங்கில விக்கியில் இவ்வாறான வழிமாற்றுகளை நீக்குவதில்லை.--Kanags \உரையாடுக 07:09, 10 அக்டோபர் 2016 (UTC)

அ. க. லோகிததாஸ் என்பது அவரது இயற்பெயர். விக்கிக்காக அ. க. லோகிததாசு என மாற்றப்பட்டுள்ளது. எனவே, அ. க. லோகிததாஸ் என்ற வழிமாற்று கட்டாயம் தேவையானது.--Kanags \உரையாடுக 07:24, 10 அக்டோபர் 2016 (UTC)
விளக்கமான பதில் எழுதினேன். நீங்கள் மீண்டும் மற்றொரு பதிவு செய்தமையால் அழிந்து விட்டது. இப்பொழுது வெளியில் செல்கிறேன். மீண்டும் தொடர்வோம்.உழவன் (உரை) 07:30, 10 அக்டோபர் 2016 (UTC)
மீண்டும் இணைவதில் மகிழ்கிறேன்.@Kanags:எனது நோக்கம் யாதெனில், தலைப்பு சொல்லில் புள்ளி இருப்பின், அதனை அடுத்து ஒரு இடைவெளி இட்டு, நீங்கள் வழிமாற்றல் இடுவதைக்கண்டேன். ஆனால், பல பக்கங்களுடன் ஒரு கட்டுரை இருப்பின், அவ்விதம் செய்யலாம் இல்லையெனில், வழிமாற்றல் தேவையற்றது என்றே எண்ணுகிறேன். மற்றொன்று நாம் வடமொழியை தவிர்த்தே வருகிறோம். தமிழல்லாத எழுத்துக்களை முடிந்தவரை தவிர்ப்போமே ?எனவே, 'தாசு' என மாற்றினேன். ஒருவரின் இயற்பெயரைக்கட்டுரையிலேயே குறிக்கப்பட்டுள்ளது.எந்த இயற்பெயரையும் மாற்றக்கூடாது என்ற விதியை இனிபின்பற்றவா? ஆங்கில விக்கியின் இந்த மொழியியல் விதிகளை, தமிழுக்கும் பின்பற்ற வேண்டுமா? நம் தமிழ் ஒலியியலில் தான் நாட்டுக்குநாடு வேறுபடுகிறது.தமிழ் மொழியியல் விதிகளில், சீர்மை இருப்பதாகவே எண்ணுகிறேன். ஆங்கிலத்தில் புள்ளி எழுத்துக்களுக்கு(அஃகுபெயர்கள்) தெளிவான நடையில்லை என்பதே நிலவரம். அமெரிக்க ஆங்கில விதி, பிரித்தானிய ஆங்கில விதி என்றே திகழ்கிறது. எந்த விதிகளைக் கொண்டு இனி மேற்கூறிய இலக்கை செய்ய வேண்டும்? --உழவன் (உரை) 09:47, 10 அக்டோபர் 2016 (UTC)
அக்டோபர் 06 போன்ற வழிமாற்றுகளை நீக்க வேண்டாம். நன்றி.--Kanags \உரையாடுக 20:45, 12 அக்டோபர் 2016 (UTC)
@Kanags:அக்டோபர் 06, அக்டோபர் 6 என்பவைகளில், மிகுந்த வேறுபாடு இல்லை. அவற்றில் நீக்கும் பக்கத்தில் இணைப்பு இல்லாமல் இருந்தால், வழிமாற்றுதல்களை நீக்குகிறேன். அம்முறை தவறு எனின் எதனால் நீக்கக் கூடாது? அறிந்து கொள்ள விருப்பம்?--உழவன் (உரை) 01:25, 13 அக்டோபர் 2016 (UTC)
அக்டோபர் 06 போன்ற தலைப்புகள் வார்ப்புருக்கள் மூலம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இதனால் சிவப்பு இணைப்புகள் உருவாகும். இவ்வாறான சிவப்பு இணைப்புகளை நீக்குவதற்கு எம்மிடம் தானியங்கிகள் இல்லை. அத்துடன் ஆள்பலமும் இல்லை. 1950 டிஏ போன்ற வழிமாற்றுகளைத் தேவையாகத் தான் உருவாக்கினேன். சில வழிமாற்றுகள் அவசியம் தேவை. இவற்றை வைத்திருப்பதில் ஏதாவது வசதியின்மை உள்ளதா? எழுத்துப்பிழைகள், அல்லது ஒருங்குறியல்லாதவை, அல்லது வேற்று மொழிச் சொற்கள் போன்றவற்றுக்கு மட்டுமே வழிமாற்றுகள் வைத்திருப்பதில்லை.--Kanags \உரையாடுக 06:25, 21 அக்டோபர் 2016 (UTC)
::அனுபவ பகிர்வுக்கு நன்றி. இருப்பினம் தெளிவுபடுத்தினால்,//இவ்வாறான சிவப்பு இணைப்புகளை நீக்குவதற்கு எம்மிடம் தானியங்கிகள் இல்லை. // நான் தானியங்கி உருவாக்க முயற்சிகளே மேற்கொண்டு முடிப்பேன். அச்சிவப்பு இணைப்புகள் உருவாகமல் இருக்க, வார்ப்புருவிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தலாம். அது கடினம் எனில், சிவப்பு இணைப்புகளை நீக்குதலுக்கான, தானியங்கி நிரல் உருவாக்க இயலும்.விக்கிமீடியக்கருவிச்சாலையில் பற்றி படித்து வருகிறேன். அங்கு இது போன்ற வசதிகளை உருவாக்க இயலும். இல்லையெனில்  இதில் அமைக்க முயலுகிறேன். அப்படி உருவாக்கினால், நமது பணியடர்வு குறையுமென நம்புகிறேன்.--உழவன் (உரை)  09:15, 21 அக்டோபர் 2016 (UTC)

12x9 = 108 வழிமாற்றுகளுக்காக நேரம் செலவழிக்க வேண்டுமா? நீங்களே ஆராய்ந்தறிந்து விரும்பியபடி செய்யுங்கள். இனிமேல் என்னால் இதில் தலையிட முடியாது. நன்றி.--Kanags \உரையாடுக 09:25, 21 அக்டோபர் 2016 (UTC)

பகுப்பு நகர்த்தல்தொகு

வணக்கம்!. பகுப்பு: கரிமகுளோரைடுகள் என்ற பகுப்பை பகுப்பு:கரிம குளோரைடுகள் என்ற பக்கத்திற்கு நகர்த்த வேண்டும். --கி.மூர்த்தி (பேச்சு) 08:01, 12 அக்டோபர் 2016 (UTC)

Organochloride என சேர்த்தே ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்.--Kanags \உரையாடுக 08:06, 12 அக்டோபர் 2016 (UTC)

ஆனால், நாம் தமிழில் கரிம புளோரைடுகள், கரிம புரோமைடுகள். கரிம அயோடைடுகள் என்று பகுப்புகள் பிரித்திருக்கிறோம். கரிம குளோரைடுகளும் இருந்தால் தவறில்லை என்று நினைக்கிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 08:12, 12 அக்டோபர் 2016 (UTC)

கனகு! நீங்களே எனக்கு ஒருமுறை வழிகாட்டியிருக்கிறீர்கள். நாம் ஆங்கில விதிகளை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. எனவே மூர்த்தியின் கூற்றை, நானும் ஏற்கிறேன். மூர்த்தி! வரும் ஞாயிறு அன்று நீங்களே அதனை மாற்றுவதற்கான நுட்பத்தை அறிமுக படுத்த விரும்புகிறேன். சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 12:02, 12 அக்டோபர் 2016 (UTC)
அது ஆங்கிலப் பெயர் அல்ல. IUPAC பெயர். தமிழில் கரிம(க்)குளோரைடுகள் என வரலாம். எனினும், இதனைக் கட்டுரைப் பக்கத்தில் உரையாடுவதே முறையானது.--Kanags \உரையாடுக 20:47, 12 அக்டோபர் 2016 (UTC)

சுற்றுக்காவல்தொகு

உலக அயோடின் நாள கட்டுரையை சுற்றுக்காவலிட்டதாய் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அக்கட்டுரை உசாத்துனை, விக்கியாக்கம் அற்று இருந்ததோடு பதிப்புரிமை மீறிய கட்டுரையாகவும் இருந்தது. சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்கும்போது விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்#எவற்றைச் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிப்பது என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள். --AntanO 06:57, 21 அக்டோபர் 2016 (UTC)

எப்படி பதிப்புரிமை மீறல்? என்பது குறித்தறிய,ஆலமரத்தடியின் தொழினுட்ப்ப் பகுதியில் வினவியுள்ளேன்?--உழவன் (உரை) 08:27, 21 அக்டோபர் 2016 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்புதொகு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 29 நவம்பர் 2016 (UTC)

முன்பே கொடுத்துள்ளேன். எனினும், இந்த அறிவிப்பு எதனால் என்பது புரியவில்லை. கூகுளின் அடிப்படையில் இருப்பதால், இது திறநிலை ஆவணமாக இல்லை. பலரின் எண்ணங்களை அறிய , இது அவசியம். மாற்றுவழி இல்லையா?உழவன் (உரை) 01:16, 30 நவம்பர் 2016 (UTC)

சந்திப்புதொகு

புதுவைபிரபு 12:45, 1 திசம்பர் 2016 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்; பயனரின் பேச்சுப் பக்கத்திலும் இட்டால், நாங்களும் வாழ்த்து / பாராட்டு / நன்றி தெரிவிக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:08, 2 திசம்பர் 2016 (UTC)

ஆம். முதலில் அங்குதான் இட்டிருக்க வேண்டும்.--உழவன் (உரை) 02:23, 2 திசம்பர் 2016 (UTC)

எழுத்துணரிதொகு

வணக்கம் தகவலுழவன், தமிழ் pdf கோப்பு ஒன்றை கணினிக்குப் புரியும்படியான எழுத்துகளாக மாற்றும் மென்பொருளை எங்கிருந்து தரவிறக்கலாம் என்பதை அறியத் தருவீர்களா?--Kanags \உரையாடுக 06:20, 10 திசம்பர் 2016 (UTC)

இதனைச் செய்ய உபுண்டு போன்ற லினக்சு வகை இயக்குதளம் வேண்டும். நான் உபுண்டுவில் செய்தேன். அது எளிது. அதனால் தான் இரண்டு மாதங்களில் ~3.5 இலட்சம் பக்கங்களை, விக்கிமூலத்திற்காக எழுத்துணரியாக்கம் செய்ய முடிந்தது. இந்த நிரல் பலரின் அனுபவங்களை உள்வாங்கி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயலாக்கத்தை சீனியின் இந்த ~15 நிமிட https:// [youtu.be/PH9TnD67oj4 யூடிப் நிகழ்படத்தில்] காணலாம். உரிய நிரல்கள் இந்த கிட்அப்பில் இருக்கிறது.--உழவன் (உரை) 06:48, 10 திசம்பர் 2016 (UTC)
நன்றி. என்னிடம் உபுண்டு இல்லை, ஆனாலும், சிறிய அளவு கோப்புகளுக்கு கூகுள்டாக்சை பயன்படுத்துவது இலகுவாக இருக்கும். இணைப்புகளுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 12:35, 10 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பைதொகு

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:10, 10 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: அறிவிப்புதொகு


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:44, 11 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்தொகு


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:43, 11 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டிதொகு

      
இன்று சூலை 2, 2022
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:45, 31 திசம்பர் 2016 (UTC)

உதவிதொகு

உங்கள் தானியங்கிக் கணக்கு மூலம் கரிமச் சேர்வைகள் என்ற பகுப்பை கரிமச் சேர்மங்கள் என மாற்றி விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:48, 12 சனவரி 2017 (UTC)

 Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 06:50, 12 சனவரி 2017 (UTC)
நன்றி மாதவன்.--Kanags \உரையாடுக 20:37, 12 சனவரி 2017 (UTC)

கருத்துக்கோரல்தொகு

இங்கு தங்கள் கருத்துகள் தேவைப்படுகின்றன--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:22, 13 சனவரி 2017 (UTC)

+Eudicots-->இருவித்திலைத் தாவரம்தொகு

Eudicots என்பது ஏன் இருவித்திலைத் தாவரம் என மாற்றப்படுகிறது? --AntanO 13:19, 16 சனவரி 2017 (UTC)

அது இணையான தமிழ்ச்சொல்.இருவித்திலைத் தாவரம் என்பதன் முதல் வரியைக் காணவும்.--உழவன் (உரை) 13:22, 16 சனவரி 2017 (UTC)
இருவித்திலைத் தாவரம் என்பதற்கான ஆ.வி கட்டுரை en:Dicotyledon என்பதாகும். ஆனால் en:Eudicots என்ற கட்டுரை குறிப்பது என்ன? --AntanO 15:15, 16 சனவரி 2017 (UTC)

இரண்டும் ஒன்றே. பல நேரங்களில், ஆங்கிலச்சொல்லும், இலத்தீனிய வகைப்பாட்டு சொல்லும் இவ்விதம் குழப்பத்தைத்தரும் என்பது இயல்பே. en:eudicots ஆங்கில விக்கியில் தாவரவியல் வகைப்பாடு இற்றைபடுத்தப்படாமல் இருக்கிறது. இதனை நாம் சீரான முறையில் சுருக்கமாகச் செய்தால், ஒரே வருடத்தில் தற்போதுள்ள கட்டுரை எண்ணிக்கையை இருமடங்காகச் செய்யலாம். எனக்கு ஆங்கில தட்டச்சு வராது. ஒருவிரல் தட்டச்சுதான். அதனால் தமிழ் அல்லாத இடங்களில் உரையாடற் பக்கத்தினை கையாள்வது சிரமமாக இருக்கிறது. எனினும், பல மணி நேரம் கல்லூரி நூல்களை மறுமுறை படித்த பின்பே, ஆங்கில விக்கியை நாடுகிறேன். சில import முறைகளை உங்களிடம் வினவ எண்ணியுள்ளேன். அதற்கு முன் சில அடிப்படைக் கட்டுரைகளை உருவாக்கிய பின்பு உங்களை அணுகுவேன். வகைப்பாட்டியலுக்கு, நீங்கள் விக்கியினங்கள் திட்டத்தையே நாடவும். அல்லது சீனம், செக் விக்கிப்பீடியர் , தங்கள் கட்டுரைகளில் (பெரும்பான்மை) புதிய செய்திகளை இடுகின்றனர்.--உழவன் (உரை) 17:22, 16 சனவரி 2017 (UTC)

காணொளி உருவாக்கல்தொகு

தாங்கள் விக்கிப்பொதுவகத்தில் படங்கள் பதிவேற்றல் தொடர்பான காணொளி ஒன்றை உருவாக்கியது எம்மென்பொருளி வைத்து எனக் கூற முடியுமா? காரணம் யானும் அவ்வாறானதொரு விளக்கக் காணொளி யை உருவாக்கவேண்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:48, 19 சனவரி 2017 (UTC)

@Shriheeran: ! பொதுவகத்தில் பதிவேற்றிய நிகழ்படங்களைப் பற்றியா, என்னிடம் வினவுகின்றீர்கள்?--உழவன் (உரை) 12:47, 19 சனவரி 2017 (UTC)
ஆம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:03, 19 சனவரி 2017 (UTC)
en:SimpleScreenRecorder--உழவன் (உரை) 14:09, 19 சனவரி 2017 (UTC)

பகுப்பு மாற்றம்தொகு

நேரம் கிடைக்கும் போது பகுப்பு:சமயங்கள் என்ற பகுப்பை பகுப்பு:சமயம் என மாற்றி விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:53, 24 சனவரி 2017 (UTC)

 Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 11:39, 24 சனவரி 2017 (UTC)
நன்றி மாதவன்.--Kanags \உரையாடுக 11:47, 24 சனவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்றுதொகு

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:22, 25 சனவரி 2017 (UTC)

நாட்டுடைமை நூல்கள்தொகு

நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்கமை வகையில் சேராது. அனைத்துக்கும், குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:38, 31 சனவரி 2017 (UTC)

எங்கே போறிங்கதொகு

Hi, Info-farmer. Do you speak English? I am trying to find the meaning in English of a Tamil word. At the beginning of this video, there are 2 Tamil words written: எங்கே போறிங்கா. Can you tell me what it means? நன்றி. Stephen G. Brown (பேச்சு) 04:17, 2 பெப்ரவரி 2017 (UTC)

Thanks for sharing the song. i really enjoyed the song .You are asking about the 3rd line. which means, Where(எங்கே) are you going?(போறிங்க not போறிங்கா<--the last letter is wrong) The first line is rhythm of Carnatic music. 2nd line is (வாடி தங்கச்சி) come on! younger sister. Hope you too enjoyed the song. See you later.--உழவன் (உரை) 16:24, 2 பெப்ரவரி 2017 (UTC)
Thank you very much, Info-farmer. Yes, I like this song. Stephen G. Brown (பேச்சு) 23:20, 2 பெப்ரவரி 2017 (UTC)

செயரத்தினாவின் கருவிதொகு

இக்கருவியைப் பயன்படுத்துகிறீர்களா?--Kanags \உரையாடுக 10:12, 3 பெப்ரவரி 2017 (UTC) பல நேரங்களில்,:புதுக்கட்டுரைகள் உருவாக்கும்போது பயன்படுத்துவேன்.--உழவன் (உரை) 11:11, 3 பெப்ரவரி 2017 (UTC)

வேண்டுகோள்தொகு

படிமம்:Singam 3 poster.jpg பழைய பதிப்பு நீக்கவும். --சிங்கம் (பேச்சு) 13:53, 5 பெப்ரவரி 2017 (UTC)

:புதிய பதிப்பே நிலைபெறும். முந்தையதை நீக்கத் தேவையில்லை--உழவன் (உரை)  10:33, 7 பெப்ரவரி 2017 (UTC)

உரையாடதொகு

தங்களோடு உரையாட வேண்டும். தாங்கள் ஏதாவது சமூக வலைத்தளம் பயன்படுத்துகின்றீர்களா?-- மாதவன்  ( பேச்சு ) 08:41, 7 பெப்ரவரி 2017 (UTC)

சுகைப்பில் (skype)பேசலாமா? சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது இல்லை?--உழவன் (உரை) 10:35, 7 பெப்ரவரி 2017 (UTC)
என்னிடம் இசுகைப் இல்லை. வைபர் (Viber) உள்ளதா?-- மாதவன்  ( பேச்சு ) 10:46, 7 பெப்ரவரி 2017 (UTC)
Viber-ஐ கணினியில் பயன்படுத்த முடியுமா? அதுவும் பயன்படுத்துவது இல்லை? உங்களுக்கு இணைய இணைப்பு வேகம் குறைவாக கிடைக்கிறது என்று எண்ணுகிறேன். மின்னஞ்சல் செய்யுங்களேன். அலைப்பேசியில் பேசி, அதனை ஒலிக்கோப்பாக கூட அனுப்பலாம்? அலைப்பேசியில் இணைய இணைப்பை பெறுதல் எனது செலவுகளுக்கு அப்பாற்பட்டது. வேறு ஏதேனும் குறிப்புகள் தந்தால், மற்ற நண்பர்களின் அலைப்பேசியின் வழியே தொடர்பு கொள்கிறேன்.--உழவன் (உரை) 11:05, 7 பெப்ரவரி 2017 (UTC)
Viberஐ கணினியில் பயன்படுத்தலாம்.([1]) நான் Chat செய்யவே கேட்டேன். அலைபேசியில் கதைப்பது கடினம். விக்கியில் Chat செய்வதும் சிக்கல். உடனுக்குடன் முடியாது. -- மாதவன்  ( பேச்சு ) 13:02, 7 பெப்ரவரி 2017 (UTC)
தாங்கள் கூகிள் mail தானே பயன்படுத்துகின்றீர்கள். அப்படியாயின் Hangouts ஐ பயன்படுத்தலாம். viber தேவையில்லை. [hangouts.google.com] எனது mailஐ இணைகுக்குக-- மாதவன்  ( பேச்சு ) 13:04, 7 பெப்ரவரி 2017 (UTC)

PAWSதொகு

PAWS கொண்டு அனைத்தையும் திருத்துவது சரியாகத் தெரியவில்லை. இந்த மாற்றத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:40, 7 பெப்ரவரி 2017 (UTC)

ஆம், கனக்ஸ் [[கரோலஸ் லின்னேயஸ்|L.]] உள்ளதை மறுதடவை replace செய்யலாமே? தகவலுழவன்-- மாதவன்  ( பேச்சு ) 10:49, 7 பெப்ரவரி 2017 (UTC)
மாதவன் அவர் சுட்டியதை மீண்டும் காணுங்கள். இருமுறை வந்த தவறுகளை, கனகு சுட்டுகிறார்.--உழவன் (உரை) 11:08, 7 பெப்ரவரி 2017 (UTC)
இது 3வது முயற்சியாக பதில் அளிக்கிறேன். மாதவனும், நீங்களும் மாறி, மாறி பதிவு செய்தமையால், அழிந்து விடுகிறது. தனித்தலைப்பில் உரையாடலைத் தொடங்குங்கள். தற்போதே நிரல் எழுதக் கற்று வருகிறேன். சீனிவாசன், நற்கீரன், சதீஸ் வழிகாட்டுகின்றனர். அதனை முழுமையாக தானியங்கி கணக்கில் செய்ய முயன்றேன். அந்நுட்பம் வேலை செய்யவில்லை. அதனால் சோதனை ஓட்டம், சில மணிநேரத்தில் விக்கியில் திருத்தம் செய்வேன். அதிகம் ஓரிரு நாள் தேவைப்படும். பெரும்பாலும் சில மணிநேரத்தில் திருத்தம் செய்து விடுவேன். அந்த அனுபவங்களை நிரலாக மாற்றுவேன். மீண்டும் சோதனை ஓட்டம்(Test cases)..எனவே, அவசரம் வேண்டாம்.தொடர்ந்து என்ன நடக்கிறது என்று கவனிக்க வேண்டுகிறேன்.--உழவன் (உரை) 11:05, 7 பெப்ரவரி 2017 (UTC)
சோதனை ஓட்டம் என்றால் ஒன்று முடிய ஒன்று ஒவ்வொன்றையும் பார்த்துத் திருத்த வேண்டாமா? முதலாவது தவறென்றால், அடுத்ததற்கு மாற்றம் செய்து பார்க்க வேண்டும். அதுவே சோதனை ஓட்டம்.--Kanags \உரையாடுக 11:23, 7 பெப்ரவரி 2017 (UTC)
நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன். ஆனால், உயிரியல் பெயரீடு என்பது பிற மொழிகளில் வரும் கட்டுரைகளை அனைத்து நாட்டினரும் புரிந்து கொள்ள தோன்றியதே, தாவரவியல் பெயரீட்டு முறை ஆகும். அதில் தற்போது பின்பற்றப் படும் இருசொற்பெயரீட்டு முறையில் ஒரு பெயருக்கு அடுத்து வருவது அதற்கே உரிய முறையில், அந்த ஆசிரியரை சொற்சுருக்கக் குறியீட்டு முறையில் தான் இருக்க வேண்டுமே ஒழிய, அவரவர் மொழியில் அல்ல.இந்த மூலிகைத் தரவுப்பக்கத்தினைக் காணவும்.. --உழவன் (உரை) 03:59, 9 பெப்ரவரி 2017 (UTC)
ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நபரின் பெயரும் அவ்வாறு இருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவும் கட்டாயமாக இருக்கலாம். ஆனால், பல உயிரியல் கட்டுரைகளில் உயிரியல் பெயரே தரப்படவில்லை. இவற்றை சரி செய்ய வேண்டும். உ+ம்: முள்வேங்கை. இக்கட்டுரையில் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: முள்வேங்கை அல்லது அடமருது (Bridelia retusa) என்பது ஒரு மூலிகை இனத்தைச் சேர்ந்த சேர்ந்த தாவரம் ஆகும். நன்றி.--Kanags \உரையாடுக 04:21, 9 பெப்ரவரி 2017 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── உங்களுடன் உரையாடிய பின்பு பிற மொழி விக்கிகளின் சில பக்கங்களைக் கண்டேன். குறிப்பாக இந்த சீன மொழி பக்கம். பிறகு வந்த கூட்டு எண்ணங்களால், பின்வருவனவற்றை முடிவு செய்ய, உங்களின் அனுபவத்தை, மேலும் பகிர வேண்டுகிறேன்.

 1. ஒரு தாவரவகைப்பாட்டியல் அறிஞரை அதற்கே உரிய விதிப்படி, L. எனக்குறிப்பிடலாமென்று எண்ணுகிறேன். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர்சுருக்கத்திற்கு தமிழில் விளக்கம் கொடுத்தது போல இருக்கும். வகைப்பாட்டியல் விதிகளை பின்பற்றியதாகவும் ஆகும். இது போல பல இணைப்புகளை உருவாக்கினால், இதுபோல தமிழிலும் பக்கத்தினை உருவாக்கலாம்.
 2. இணைப்புக்கான வகைப்பாட்டியல் கட்டுரை இல்லையெனில், அவற்றின் சிவப்பு இணைப்புகளை நீக்கி, அச்சொல்லை அப்படியே விட்டுவிடுவது. ஏனெனில், இணையத்தில் தேடி விரிவுபடுத்த மிகவும் உதவும். தமிழ் ஒலிப்பாக மாற்றினால், பலர் செய்யும் போது வேறுபடுகிறது.
 3. மேற்கூறியவற்றால், வகைப்பாட்டியலின் சொற்களுக்கான, இதுபோன்ற சிவப்பு இணைப்புகளை நீக்கலாம்-
 4. உரிய தமிழ் பெயருக்கு எது வகைப்பாட்டியல் பெயர் என்பது பலருக்குத் தெரியாது. தெரிந்தவருக்கு இதுபோல இணைப்பு தர முள்வேங்கை எடுத்துக்காட்டையே, வழிகாட்டுதலாக் கூற வேண்டும். கூறுவேன். இயன்ற அளவு நானும் செய்கிறேன்.--உழவன் (உரை) 05:30, 9 பெப்ரவரி 2017 (UTC)


நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கும் ஏற்புடையதே. //உரிய தமிழ் பெயருக்கு எது வகைப்பாட்டியல் பெயர் என்பது பலருக்குத் தெரியாது// அப்படியல்ல. உயிரியல் பெயர் கட்டாயமாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பது பலர் அறிந்திருப்பதில்லை. முள்வேங்கை கட்டுரை எழுதியவர் ஆங்கில விக்கியில் இருந்தே கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், அக்கட்டுரையில் இருந்து உயிரியல் பெயரையும் சேர்த்துத் தர வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 05:42, 9 பெப்ரவரி 2017 (UTC)
இந்த மாற்றத்தில் ஒரு ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு தேவையில்லாமல் தமிழாக்கப்பட்டுள்ளது. மேற்கோள்களில் அல்லது வெளி இணைபுகளில் உள்ள வேற்று மொழி நூலின் தலைப்பை நாம் தமிழாக்கம் செய்வதில்லை. நீங்கள் PAWS ஐத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். subspecies என்ற சொல் ஒரு பொதுவான பல பயன்பாட்டுகளிலும் பயன்படுத்தப்படும் சொல். இதனை நாம் ஒரு தானியங்கி கொண்டு மாற்றுவது சரியானதல்ல. ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியே ஆய்ந்தறிந்து தேவைப்படும் இடங்களில் மட்டும் மாற்ற வேண்டும். --Kanags \உரையாடுக 09:07, 11 பெப்ரவரி 2017 (UTC)
இக்கருவி தானியங்கிக்கு பயன்படும் ஒரு நுட்பம். அதற்கான நிரல் ஊட்டங்களை வளர்த்து வருகிறேன். 10சொற்களுக்கு செய்த போது, ஒரு சொல்லுக்கு செய்க என்று வழிகாட்டியமையால், ஒவ்வொரு சொல்லாக செய்து வருகிறேன். அதனால் இந்நுட்பத்தை தவறாகப் பயன்படுகிறேன் என்று கருத வேண்டாம்.--உழவன் (உரை) 09:19, 11 பெப்ரவரி 2017 (UTC)
நீங்கள் இதனை சோதனைக்கு செய்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் நீங்கள் தவறுகளைத் திருத்துகிறீர்கள் இல்லையே?--Kanags \உரையாடுக 09:24, 11 பெப்ரவரி 2017 (UTC)
திருத்தம் வருவதை கவனித்து உரையாடவும்.-உழவன் (உரை) 09:26, 11 பெப்ரவரி 2017 (UTC)

ஆலோசனை தேவைதொகு

1. ஒரே கணனியில் 2 விக்கிபீடியா கணக்கு உருவாக்குவதன் மூலம் அந்த கணக்கு தடை செய்யப்படுவதற்கான காரணம் என்ன?

2. என்னுடைய Arnav 16 என்ற ஆங்கில விக்கிபீடியா தடை செய்யப்பட்டுள்ளது, Thilakshan என்ற விக்கிபீடியா மூலம் ஆங்கில கட்டுரை எழுத்துவதனால் தடை செய்யவதற்கான வாய்ப்பு உள்ளதா?--Thilakshan 20:27, 14 பெப்ரவரி 2017 (UTC)

 • Arnav 16 என்பது தவறு. [2] என்பதே சரி. பதிப்புரிமை செய்யப்பட்ட பனுவல்களை பயன்படுத்தியுள்ளீர்களென்று தெரிகிறது. 2013 முதல் பல கட்டுரைகளை, இதுபோல பதிவு செய்துள்ளீர்கள். நாம் எண்ணுவதை எல்லாம் இங்கு பதிவு செய்யக்கூடாது. விக்கிக்கு நாம் நல்லது கெட்டது என முடிவு செய்யாமல் பலருக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை முதலில் மேம்படுத்துங்கள். நமது எண்ணங்களில் தோன்றும், விக்கிப்பற்றிய அதிக ஈடுபாட்டையும், எண்ணங்களையும் குறைத்துக் கொண்டு, காலத்தையும் கடந்து நமது உழைப்பு நிலைநாட்ட எண்ணமிடுங்கள். உங்களது நோக்கத்திற்கு ஏற்ப, பல கட்டுரைகளை பல மொழிகளிலும் பாருங்கள். ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதனையே நாடாதீர்கள். எழுதப்பழகுவதற்கு முன், பல படங்களை தமிழ் கட்டுரைகளில் இணையுங்கள். படங்கள் பொதுவகத்தில் இருந்து, இங்கு எப்படி தெரிகிறது என்று கவனியுங்கள். தங்கள் பணியும், உழைப்பும் சிறக்க வாழ்த்துகள் வணக்கம்--உழவன் (உரை) 02:19, 15 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவில்தொகு

பல கட்டுரைகள் ஏற்கனவே விக்கித்தரவில் சேர்க்கப்பட்டுள்ளன. எதற்காக வார்ப்புரு?--Kanags \உரையாடுக 20:39, 15 பெப்ரவரி 2017 (UTC)

இதனை மீளமைத்துள்ளீர்கள். ஆனால், விக்கித்தரவில் அது இல்லையே? ஏன்?--உழவன் (உரை) 01:11, 16 பெப்ரவரி 2017 (UTC)
இக்கட்டுரை 2013 ஆம் ஆண்டிலேயே விக்கித்தரவில் இணைக்கப்பட்டு விட்டது. பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:26, 16 பெப்ரவரி 2017 (UTC)
தகவலுழவன்... சில கட்டுரைகள் தமிழில் மட்டுமே உள்ளன. அவற்றிற்கு இணையான கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லை. அவற்றிற்கும் வார்ப்புரு இட்டுள்ளீர்களே? என்ன செய்வது என்பது எனக்குத் தெரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:04, 16 பெப்ரவரி 2017 (UTC)
செல்வா, இவ்வாறான கட்டுரைகளுக்கு வார்ப்புரு தேவையில்லை. இவை சில நாட்களின் பின்னர் தானியங்கிகள் மூலம் விக்கித்தரவில் இணைக்கப்படும். கட்டுரையை ஆரம்பிப்பவர் ஆங்கிலக் கட்டுரைக்கு விக்கித் தரவில் இணைப்பது அவசியம். இல்லாதுவிடின், சில நாட்களின் பின்னர் அவை விக்கித்தரவில் தானியங்கிகள் மூலம் இணைக்கும். ஆனால் அவை ஆங்கில விக்கிக்கோ அல்லது வேறு மொழிகளுக்கோ இணைக்காது.--Kanags \உரையாடுக 01:01, 16 பெப்ரவரி 2017 (UTC)
 • @Selvasivagurunathan m:! ஆங்கில விக்கியின் நடைமுறைகள் அனைத்தும் நமக்கு ஏற்புடையதல்ல. ஆங்கிலம் நமக்கு அளவு கோலும் அல்ல. ஆங்கில கட்டுரையில் இல்லாத தமிழ் கட்டுரைகளுக்கு நாம் விக்கித்தரவினை உருவாக்கலாம். அதுபற்றி இங்கு கேட்டிருந்தேன். வழிகாட்டுதல் தரப்படவில்லை. அதனால், விக்கித்தரவில் சில மாதங்களிலேயே பல இலட்சம் பங்களிப்பு செய்தவர் பாலஜி. அவரிடம் பேசி, எந்த கட்டுரை தமிழில் உருவாக்கினாலும், தானியக்கமாக பிறமொழிகளில் இல்லாத தமிழ் கட்டுரைகளுக்கு இணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கிறேன். மேலும், மேலே கனகு கூறியது தவறான கூற்று. சாம்பல் நிறத்தில் தெரிவது விக்கித்தரவு இணைப்பில்லை. அவர் அவசரப்பட்டு கூறியுள்ளார். விக்கிமீடியாவின் எதிர்காலமே, விக்கித்தரவு தான். ஏனெனில், இட்டத்தரவு எங்கு இருக்கிறது என்பதை எளிதில் காட்ட உதவும் திட்டமே, விக்கித்தரவு. அதிக பயனர்களை அடையாத திட்டம். ஒரு அருங்காட்சியகம் தான். விக்கிப்பீடியா திட்டம், நூலகமாக மாற, விக்கித்தரவு மிகவும் இன்றியமையாத கட்டகங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது.--உழவன் (உரை) 03:28, 16 பெப்ரவரி 2017 (UTC)
என்ன சொல்கிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை. குறிப்பிட்ட கட்டுரைகள் விக்கித்தரவில் இணைக்கப்படவில்லையா? அவை இணைக்கப்பட்டுத்தானே உள்ளன?. //ஆங்கில கட்டுரையில் இல்லாத தமிழ் கட்டுரைகளுக்கு நாம் விக்கித்தரவினை உருவாக்கலாம்.// இதனைத் தான் தானியங்கிகள் செய்கின்றன.--Kanags \உரையாடுக 06:17, 16 பெப்ரவரி 2017 (UTC)
ஆம். தவறாகப் புரிந்து கொண்டேன். உரிய வார்ப்புருவை நானே நீக்கிவிடுகிறேன். விக்கித்தரவுத் தானியங்கி சில தவறான இணைப்புகளைத் தந்துள்ளது.உ-ம் அவற்றை நீக்கிய போது, தவறாகப் புரிந்து கொண்டேன். சுட்டியமைக்கு நன்றி. அத்தானியங்கி தவறுகளை மற்றொருமொரு நாளில் காட்டுகிறேன்.--06:29, 16 பெப்ரவரி 2017 (UTC)
இல்லை, அது தானியங்கியின் தவறல்ல. கட்டுரையை (பகுப்பை) உருவாக்கியவர் தகுந்த ஆங்கில விக்கி இணைப்பிற்கு இணைக்கவில்லை. இந்த வரலாற்றைப் பாருங்கள். விக்கித்தரவு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட பகுப்பு. ஆனால் அது ஆங்கில விக்கியின் Category:Social groups of Tamil Nadu என்ற பகுப்புக்கு எப்போதும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. விக்கித்தரவு அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆங்கில விக்கிக்கு இணைக்கப்படாத கட்டுரைகள், பகுப்புகள் அனைத்தையும் தானியங்கிகள் விக்கித்தரவில் புதிய இலக்கத்தைத் தந்துள்ளன. தானியங்கியை இணைப்பவர் தமிழ் தெரியாதவர். அவருக்கு இந்த இரண்டும் ஒன்று என்பது தெரிந்திருக்க நியாயமே இல்லை.

எனவே, கட்டுரை ஒன்று நீண்ட காலமாக விக்கித்தரவில் கட்டுரையாளராலோ அல்லது வேறு ஒரு பயனராலோ அதற்கேற்ற விக்கித்தர்வில் இணைக்கப்படாதிருந்தால், அக்கட்டுரை தமிழ் விக்கிக்கு எனத் தனித்தன்மையானது என தானியங்கி கருதிக் கொண்டு அதற்கு ஒரு புதிய விக்கித்தரவு எண்ணைத் தரும். எனவே நாம் ஆங்கிலக் கட்டுரை இருந்தால் மட்டுமே அதனை விக்கித்தரவில் இணைக்க வேண்டும். தமிழ் விக்கிக்கு எனத் தனித்தன்மையான கட்டுரைகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இதனைத் தான் நான் உங்களுக்கு முன்னர் ஒரு தடவை வேறோர் இடத்தில் கூறியிருந்தேன்.--Kanags \உரையாடுக 06:44, 16 பெப்ரவரி 2017 (UTC)

அற்புதம். //தானியங்கியை இணைப்பவர் தமிழ் தெரியாதவர். அவருக்கு இந்த இரண்டும் ஒன்று என்பது தெரிந்திருக்க நியாயமே இல்லை.// இதுபோன்ற கட்டுரைகளை நாம் இனம் காண இயலுமா? நாம் இதுவரை இணைத்துள்ள விக்கித்தரவு சரியானாத என எப்படி கண்டறிவது? Eudicots பற்றி படித்துக்கொண்டிருந்தபோது, இதுபோல மற்றொரு தவறைக் கண்டேன். விக்கித்தரவில் சரிபார்த்த இணைப்புகளை அடையாளமிட ஒரு பகுப்பினை உருவாக்கலாமா?--உழவன் (உரை) 06:51, 16 பெப்ரவரி 2017 (UTC)
இங்கு உள்ளது. இவை அனைத்தும் தற்போது விக்கித்தரவில் (புதிய எண் தரப்பட்டு) தானியங்கியால் இணைக்கப்பட்டு விட்டன..--Kanags \உரையாடுக 06:56, 16 பெப்ரவரி 2017 (UTC)
சரி. பிற மொழிகளில் இல்லாத கட்டுரைகளுக்கு விக்கித்தரவு உள்ளதைத் தெளிவா இப்பொழுது அறிந்து கொண்டேன். {{commons}} வார்ப்புரு தமிழ் கட்டுரையில் இருந்து, பொதுவகத்திற்கு இருப்பது போல, நீங்கள் கொடுத்த பக்கங்களுக்கு இணைப்புத்தர ஒரு {{விக்கித்தரவு}} வார்ப்புருவை உருவாக்கி இணைக்கலாமா? இதன் வழியே எளிமையாக , விக்கித்தரவினை ஒரு சொடுக்கில் அடைய இயலும். தற்போது நகலெடுத்து அங்கு சென்று ஒட்டி, தேடி என பல படிகள் உள்ளது. இதுபற்றிய உங்கள் எண்ணமென்ன?--07:12, 16 பெப்ரவரி 2017 (UTC)
//தற்போது நகலெடுத்து அங்கு சென்று ஒட்டி, தேடி என பல படிகள் உள்ளது.// இல்லையே. கட்டுரைப் பக்கத்திலேயே நேரடி இணைப்பு உள்ளதே. கட்டுரையின் இடப்பக்கம் உள்ள கருவிப்பெட்டியில் விக்கித்தரவுஉருப்படி என்பதைச் சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 07:28, 16 பெப்ரவரி 2017 (UTC)
2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பதனைப் பார்த்தேன். எனக்கு இடப்புறம், விக்கித்தரவுஉருப்படிஎன்று எதுவுமே இல்லையே? ஒரு திரைப்படிப்பை, நேரம் இருக்கும்எடுத்துத் தரக்கோருகிறேன். பலருக்கும் பயனாகும். இப்பொழுது சில மணிநேரம் வெளியே செல்கிறேன்.வந்தவுடன் காண்கிறேன். வணக்கம்--உழவன் (உரை) 07:34, 16 பெப்ரவரி 2017 (UTC)
நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை. (தானியங்கி தவறி விட்டது போல் தெரிகிறது. இவ்வாறு ஒரு சில கட்டுரைகள் இணைக்கப்படாமல் உள்ளதைக் கண்டுள்ளேன். இந்தக் கட்டுரையைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:40, 16 பெப்ரவரி 2017 (UTC)
நாம் ஒவ்வொன்றாக திறந்து பார்த்து கண்டறிவது காலவிரயம் என்பதால், சில நிரலாக்க முயற்சியை மேற்கொள்கிறேன். நல்ல பலன் கிடைக்குமெனின் பகிரந்து கொள்கிறேன். நல்லதொரு ஆக்கச் சிந்தனையை வித்திட்டமைக்கு நன்றி. --உழவன் (உரை) 11:31, 16 பெப்ரவரி 2017 (UTC)
இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். புதிதாக விக்கித்தரவில் சேர்க்க முன்னர் Andrographis echioides என்பதை (ஆங்கில விக்கியில் இல்லாது விட்டால்) விக்கித்தரவில் தேடுங்கள். கிடைத்தால், அதற்கு புதிய கட்டுரையை இணையுங்கள். இல்லையேல், புதிய உருப்படியைத் தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 08:41, 17 பெப்ரவரி 2017 (UTC)

மீளமைத்தல் ஏன்?தொகு

திரினிப்பழம் இங்கு தீருத்தம் மீளமைக்கப்பட்டது ஏன்? --AntanO 19:27, 17 பெப்ரவரி 2017 (UTC) விக்கித்தரவு உள்ளது என்பதால். உங்கள் உலாவியினை purge செய்யுங்கள்.--உழவன் (உரை) 19:29, 17 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவு வார்ப்புரு பற்றி நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. நிற்க, திரினிப்பழ மரத்தின் அறிவியல் பெயரைக் குறிப்பிடுங்கள் மேலதிக கருத்தைத் தெரிவிக்கிறேன். --AntanO 19:42, 17 பெப்ரவரி 2017 (UTC)
மீளமைத்தல் எங்கு செய்யலாம் என்பது பற்றி ஆங்கில விக்கியில் வழிகாட்டுதல் உள்ளது. திரினிப்பழம் கட்டுரையில் மேற்கொண்ட மீளமைத்தல் ஏற்புடையதல்ல. அல்லது குறைந்தபட்சம் ஏன் மீளமைக்கப்படுகிறது என்று தொகுப்புச் சுருக்கத்தில் தெரிவித்திருந்தாலும் அது ஒரு நல்ல விக்கிப் பண்பாக இருந்திருக்கும். ஒரு வார்ப்புவை இணைக்கும்போது ஏன் இணைக்கிறேன் என்று அறியாமல் செய்ய, நான் விக்கிக்கு புதியவனல்ல. பாராமரிப்பு வார்ப்புருவை நீக்கியதற்கான எச்சரிக்கை வார்ப்புருவை நான் பதிலுக்கு உங்கள் பேச்சுப்பக்கத்தில் இட்டிருந்தால், உங்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும். அப்போது தொடர்பங்களிப்பாளர், மூத்த பயனர், நிர்வாகி என்ற காரணங்கள் என் மீது அடுக்கப்பட்டிருக்கும். தயவுசெய்து இவ்வாறு செய்ய வேண்டாம். --AntanO 10:03, 18 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:23, 26 பெப்ரவரி 2017 (UTC)

தங்கள் வருகைக்கு நன்றி. நான் கருத்திட வேண்டுமெனில், நீங்கள் கூறியபடி விக்கிக்கோப்பையில் கலந்து கொண்டபோது, உருவாக்கிய கட்டுரையான க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்பதில் உங்களின் கருத்தினை எதிர்பார்க்கிறேன். அதன் உரையாடற்பக்கம் காண்க. அதற்கும் முன் கட்டுரையில் வரலாற்றுகளை ஒப்பிட்டு எப்படி கட்டுரை மாற்றப்பட்டிருக்கிறது என்பதையும் ஒரு முறை கவனிக்கவும். தமிழக அறிஞரைப் பற்றி எழுதினால், அவரைப் பற்றி, தமிழகத்திற்கு வெளியே வாழ்பவர், தொடர்ந்து மாற்றுக்கருத்திடுவது சமூகு வளர்ச்சிக்கான முறையாகப் படவில்லை. தமிழகத்தின் வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகள் பல உள்ளன. அவற்றைத் தேடி பிடித்து எழுதுபவருக்கு இது மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. சமூக ஒற்றுமை என்பது, பிறமொழி சமூக ஒப்புதல் பெற்ற முடிவுகளை செயற்படுத்துதல் அன்று. நம் சமூகத்தார் அனைவரின் கருத்தினையும் உள்வாங்கி செயற்படுவதே ஆகும். நீங்கள் உங்களின் எண்ணத்தை தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.ஏனெனில், சில மணிநேரம் படித்துவிட்டு, ஒரு அரைமணிநேரம் கட்டுரை எழுதினால், அதனை நீக்குவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளதால், உங்களோடு தொடர்ந்து ஈடுபடுவது குறித்து சிந்தித்து வருகிறேன் --உழவன் (உரை) 02:39, 28 பெப்ரவரி 2017 (UTC)
இது தமிழ்நாட்டுக்கோ ஈழத்துக்கோ சொந்தமான கலைக்களஞ்சியம் அல்ல. மேலும் கட்டுரையை பிரதேச, இன, மத வேறுபாடுகளின்றி யாரும் தொகுக்கலாம், கேள்விக்குட்படுத்தலாம். குறிப்பிட்ட வகையினர்தான் தொகுக்க வேண்டும் என்று, நிருவாகியாக இருந்து கொண்டு கருத்திட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். --AntanO 03:07, 28 பெப்ரவரி 2017 (UTC)
ஆன்டன் என் பேச்சுப்பக்கத்தில் நானும் மற்றொருவரும் உரையாடுகிறோம். இடையில் உங்கள் கருத்துக்களை நாங்கள் உரையாடிய பின் இடக்கோருகிறேன். ஏற்கனவே, பேச்சு:மூங்கில் என்ற பக்கத்தில் ஏற்கனவே உங்கள் கருத்தினை இட்டுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் ஒரே கருத்தினை இடுதல் (பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1), சகபங்களிப்பாளரின் பதிவுகளை தொடர்ந்து மதிப்பிடுவது தவறு. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டது எனக்கு வருத்தமே. பல மென்மையான. பட்டுப்பூச்சிகளை பற்றிய அருமையான கட்டுரைகளை உருவாக்கிய ஆன்டன் வன்மையாக பதிவுகள் செய்யாமல் உரையாடக் கோருகிறேன் ஏனெனில், மனித உள்ளம், வண்ணத்துப்பூச்சிகளைப் போல மென்மையானது; முழுமையறறது. வாழ்க்கை முழுமையை நோக்கிய பயணம். சுட்டுங்கள். ஒருமித்து செயற்படுவோம். நான் இன்னும் கூட்டுப்புழுவாக இருப்பதாக நினைத்தால், சிறகடித்துப் பறக்க வழிகாட்டுங்கள். --உழவன் (உரை) 03:28, 28 பெப்ரவரி 2017 (UTC)
தவறு என்றால் தக்க இடத்தில் முறையிடலாம். அப்போது சரியா தவறா என என்னால் பதிலளிக்க முடியும். நிற்க, என்னுடைய கருத்தைத்தான் இங்கு பதிவு செய்துள்ளேன், குறித்த உரையாடலில் பங்குபெறவில்லை என்பதைக் கவனிக்க. --AntanO 04:14, 28 பெப்ரவரி 2017 (UTC)

கருத்திட்டாயிற்று. திட்டம் தொடர்பில் கருத்திடுங்கள் தகவலுழவன் ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:38, 28 பெப்ரவரி 2017 (UTC)

நன்றி. ஸ்ரீஹீரன்! அந்நூலைப் பேணலாம் என்று கூறுவதாக அறிந்தேன். அப்படித்தானே? ஆம் எனில், வாக்கிடக் கோருகிறன்.--உழவன் (உரை) 10:43, 28 பெப்ரவரி 2017 (UTC)

//தமிழக அறிஞரைப் பற்றி எழுதினால், அவரைப் பற்றி, தமிழகத்திற்கு வெளியே வாழ்பவர், தொடர்ந்து மாற்றுக்கருத்திடுவது சமூகு வளர்ச்சிக்கான முறையாகப் படவில்லை. தமிழகத்தின் வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகள் பல உள்ளன. அவற்றைத் தேடி பிடித்து எழுதுபவருக்கு இது மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. சமூக ஒற்றுமை என்பது, பிறமொழி சமூக ஒப்புதல் பெற்ற முடிவுகளை செயற்படுத்துதல் அன்று. நம் சமூகத்தார் அனைவரின் கருத்தினையும் உள்வாங்கி செயற்படுவதே ஆகும். நீங்கள் உங்களின் எண்ணத்தை தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.//

இக்கருத்து விக்கிப்பீடியா கொள்கைக்கு முரணாகவும் தமிழ் விக்கிப்பீடியர் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது. தாங்கள் தொடர்ந்து பல அடிப்படையான செயற்பாடுகளுக்குக் கூட சரியான புரிதல் இன்மையுடன் பங்களித்து வருவது, ஒரு நிருவாகியாக முன்மாதிரியான செயற்பாடு அன்று. --இரவி (பேச்சு) 10:07, 28 பெப்ரவரி 2017 (UTC)

//பல அடிப்படையான செயற்பாடுகளுக்குக் கூட சரியான புரிதல் இன்மை// எவை என அறிய விரும்புகிறேன். ஒவ்வொன்றாகக் கூறினால் எனது எண்ணங்களைத் தெரிவிக்கிறேன். தவறு என்னில் சரியானச் சொன்னால் திருத்திக் கொள்கிறேன்.
இதன் தொடக்கப்புள்ளி, க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 குறிப்பிட்ட நூலில் உங்களின் கருத்தை வாக்கிடக்கோருகிறேன். ஆன்டன் அவர்களே, அவருக்கு அந்நூல் பற்றி தெரியாது என்கிறார். ஆனால், தொடர்ந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறார். அதனால் தான் வாக்கெடுப்பு. அம்முறை தவறா?
//ஒரு நிருவாகியாக முன்மாதிரியான செயற்பாடு// வாக்கெடுப்பு நடத்தக்கூடாதா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அல்லது நீக்கத்தான் வேண்டுமெனில், நான் என்ன செய்வது? விக்கிமீடியா தண்டனைக் களமோ அல்லது கருத்துகளமோ அல்ல என்பதை வாக்கெடுப்பு அனைவருக்கும் தெளிவு படுத்தும் என்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 10:43, 28 பெப்ரவரி 2017 (UTC)
தங்களுக்குத் தேவையான வழிகாட்டலை ஏற்கனவே பல்வேறு பக்கங்களில் உடன் பங்களிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றைக் கவனித்துச் செயற்படுத்த வேண்டுகிறேன். //இதன் தொடக்கப்புள்ளி, க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 குறிப்பிட்ட நூலில் உங்களின் கருத்தை வாக்கிடக்கோருகிறேன். // இவ்வாறு தொடர்பற்ற இடங்களில், தொடர்பற்ற பயனர்களை ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் கருத்திடுமாறு விக்கியிலும் விக்கிக்கு வெளியேயும் கேட்பதே முறையன்று. அவ்வாறு கருத்திட்டால் தான் மற்றவரின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பேன் என்பதும் முறையன்று (நீங்கள் இங்கு சிறிகீரனிடம் வேண்டியது போல). இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
நீக்கல் வேண்டுகோள்களை கட்டுரையின் உரையாடற் பக்கத்தில் எதிர்கொள்ளல், உரையாடல்களில் இணக்க முடிவு இல்லையெனில் வாக்கெடுப்பு நோக்கி நகர்தல் ஆகியவை வழக்கமான செயற்பாடுகளே. இதில் நான் கருத்து கூற ஒன்றும் இல்லை. --இரவி (பேச்சு) 13:59, 5 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:57, 12 மார்ச் 2017 (UTC)

விளக்கம் தேவைதொகு

இத்தொகுப்பில்

 • ஒரு கட்டுரை உருவாக்கப்படும் போதும், நீக்கப்படும் போதும் அந்தந்த பயனர்களுக்கு அறிவிப்பு இட்டு மாற்றங்களைக் கோருவது பல விக்கிகளில் நடைமுறையில் உள்ளது. நீக்குதலுக்கும் சில நாட்கள் தரப்படுகிறது. நமது தமிழ் சமூகத்திலும் அத்தகைய நிலைவரின், நமது பயனர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதை பல சூழ்நிலையில் எண்ணி ஏங்கியிருக்கிறேன்.
 • நாம் நம்மை மாற்றிக் கொள்வது எளிது. பிறரின் மனநிலை அறிதல்/மாற்றுவது கடினம்.
என்றதன் வாயிலாக நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன? குறித்த பயனர் தான் செய்தது சரியென்றும், என் மீது தன்னிலை விளக்க குற்றச்சாட்டும் சுமத்திக் கொண்டிருக்க, நீங்கள் ஏன் பொருத்தமற்ற விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் ஏன் விக்கி கொள்கையை விளக்க முடியவில்லை? en:Wikipedia:Criteria for speedy deletion#G8._Pages_dependent_on_a_non-existent_or_deleted_page என்பதன்படி கட்டுரையை உடனடியாக நீக்கலாம் என்று தெரியாதா? ஒரு நிருவாகி நடுநிலையுடன்தான், விக்கி நடைமுறைப்படி செயற்படுகிறார் என ஏன் உங்களால் குறிப்பிட முடியவில்லை. நான் செயற்பட்டது பிழை என்கிறீர்களா? அல்லது செயற்பட்டது நான் என்பதால் தவிர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களா? மேலும், மின்னல் கருவி வழியாக பயனர்களுக்கு அறிவிப்பு நீக்கலாம். ஆனால், 27 திசம்பர் 2015 அன்று தொழினுட்ப, மொழிபெயர்ப்பு உதவி கேட்டிருந்தேன். இதுவரை எந்தளவிற்கு பங்களிப்பு நல்கப்பட்டது? இவற்றையெல்லாம் விடுத்து, தமிழ் விக்கியை குற்றம் சுமத்துவதும், பயனர்களிடம் தமிழ் விக்கியில் குறையுள்ளதாகவும் குறிப்பிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குறையே இல்லாத விக்கிப்பீடியா ஒன்றைக் காட்ட முடியுமா? குறித்த பயனரின் கட்டுரை ஆ.வியிலும் நீக்கப்பட்டது. அங்கு இங்குபோல் இந்தளவிற்கு விட்டுக்கொடுப்பு இருக்குமா? ஆர்தி ரானா கட்டுரையை நான் இரண்டு தடவைகள மட்டுமே தொகுத்துள்ளேன் என பயனர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பதை இதைக் காணும் நிர்வாகியால் கண்டறிய முடியும். --AntanO 08:55, 2 ஏப்ரல் 2017 (UTC)
ஒரு மாதமாகியும் பதில் இல்லை. --AntanO 08:12, 5 மே 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)

Wikimedian in Residence BoF at Wikimania 2017தொகு

Hello!

My name is David Alves (User:Horadrim~usurped), and I'm an Wikipedian in Residence at RIDC NeuroMat (User:Horadrim). I've reach your contact through the Wikimedian in residence page in Outreach. As you may know, Wikimania 2017 is coming! I am here because, as a fellow WiR, I believe this would be a great opportunity for us to share experiences, discuss difficulties and exchange solutions, creating a community among us capable of supporting in other projects that would benefit from residents. In that sense, I have submitted a proposal of a Birds of a Feather activity to Wikimania that you can check out here. I hope to count with your support in this project and would like to invite you to join us if you participate in Wikimania. In case of any doubts, please feel free to contact me, either in my talk pages or by e-mail at david.alves outlook.com.

Thank you very much! ‎Horadrim~usurped (talk) 00:33, 13 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 30 ஏப்ரல் 2017 (UTC)

ஆசிரியர் பயிற்சிக் கட்டுரைகள்தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)#தமிழக ஆசிரியர்களின் பயிலரங்குக் கட்டுரைகளை நீக்குதல் குறித்து இங்கு நான் எழுதியதைக் கவனியுங்கள். பகுப்பு:ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள் எனும் பகுப்பு உருவாக்கியுள்ளேன்.--சி.செந்தி (உரையாடுக) 06:37, 9 மே 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புதொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:02, 21 மே 2017 (UTC)

உதவி...தொகு

வணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#தாவரவியல் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:50, 28 மே 2017 (UTC)

கூட்டுழைப்புக்கு அழைத்தமைக்கு நன்றி. இதுபோல ஆயிரகணக்கான கட்டுரைகள் வர உள்ளன. எனவே, ஆசிரியர்களிடத்தில் பயிலுமிடத்தின் (மணல்தொட்டி முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதற்குரிய ஒருங்கிணைப்புகளை நீங்கள் செய்தால், அது இதனை விட மிகுந்த பலனை உண்டாக்கும். அப்பொழுதே திரண்டு வரும் கட்டுரைகளைச் சமாளிக்க முடியும். இல்லையேல், நீக்கல் என்ற முறையே ஓங்கி,புதியவர்களை தக்க வைக்கா சமூகச் சூழல் தோன்றும். இது குறித்த உங்களது எண்ணங்களையும், ஆசிரியர்களுக்கு ஒருங்களிணைப்புப் பக்கத்தில் குவிக்கக்கோருகிறேன். புறத்தோல் என்ற கட்டுரையாளர் என்னிடம் வினவிய போது, இது குறித்தத் தேவையை அவருக்கு உணர்த்தியுள்ளேன். அவரும் தொடர்ந்து அவரது பயிலுமிடத்தில் உருவாக்கி என்னிடம் அவ்வப்போது, அவரது சூழ்நிலைக்கு ஏற்ப கலந்துரையாடி வருகிறார். வணக்கம்.--உழவன் (உரை) 07:39, 28 மே 2017 (UTC)

தற்போது அலுவலகப் பணியின் காரணமாக இந்தியாவிற்கு வெளியே இருப்பதால், ஆசிரியர்களுக்கான பயிற்றுவிப்பு முயற்சியில் முழுமையாக பங்குகொள்ள இயலாத நிலையிலுள்ளேன். எனவே எனது பங்களிப்பாக, இந்தப் பகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டுரைகளை வகைப்படுத்தியுள்ளேன். உங்களைப் போன்ற துறைசார் ஆர்வலர்கள் மூலமாக கட்டுரைகளை விக்கிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:48, 28 மே 2017 (UTC)

மகிழ்சசி. வகைப்படுத்துதல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. . அது உந்து கோலாக இருக்கிறது. பலருக்கும் பயனாகும். விக்கிப்படுத்துவோம். வணக்கம்.--உழவன் (உரை) 01:44, 29 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:37, 31 மே 2017 (UTC)

விக்கித்தரவு பயிற்சிதொகு

விக்கித்தரவு பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்வது தொடர்பான விவரங்களுக்கு trulytito @ gmail dot com அணுகுங்கள். உதவி தேவையெனில் என் எண்ணை அழையுங்கள். --இரவி (பேச்சு) 10:53, 5 சூன் 2017 (UTC)

பக்க நீக்கம்தொகு

நீங்கள் ஒலி விலகல் என்ற கட்டுரையை இன்னொரு கட்டுரை இருப்பதாகக் குறிப்பிட்டு நீக்கியுள்ளீர்கள். அக்கட்டுரை எதுவெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தக் கட்டுரைக்கு ஒலி விலகலை வழிமாற்றி விடுகிறீர்களா?--Kanags \உரையாடுக 11:21, 19 சூன் 2017 (UTC)

மீளமைத்துள்ளேன். பக்கத்தினை நகர்த்துதலின் போது, இந்நிகழ்வு நடந்தது. இனி இருமுறை சரிபார்த்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. வணக்கம்.--உழவன் (உரை) 13:54, 19 சூன் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சிதொகு

வணக்கம்! பயிற்சி குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களை விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 21 - 23 எனும் பக்கத்தில் இடலாம். உதாரணமாக -

 1. எத்தனை பேர் பங்களித்தனர்?
 2. எவ்வளவு நேரம் பயிற்சி தரப்பட்டது?
 3. எந்தெந்த தலைப்புகளில் பயிற்சி தரப்பட்டது?
 4. பயிற்சியின்போது ஏதேனும் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டால், இணைக்கலாம்.

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:47, 20 சூன் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புதொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்புதொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

பதக்கம்தொகு

  சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
நடந்து முடிந்துள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு சிறப்பாக வழிகாட்டியமைக்காகவும், ஒரு புதுப்பயனரின் பார்வையில் இருந்து நாம் செய்ய வேண்டிய மாறுதல்கள், ஒருங்கிணைப்புகளைப் பற்றிய புரிதலைக் கூட்டியமைக்காகவும் இப்பதக்கத்தை வழங்குகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:58, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

சுற்றுக் காவல்தொகு

வணக்கம். சர் சி வி ராமன் கட்டுரையைச் சுற்றுக்காவல் செய்ததாகக் குறித்துள்ளீர்கள். ஆனால், கட்டுரை விக்கி நடையில் இல்லை. குறித்த தலைப்பில் ச. வெ. இராமன் என்று இன்னொரு கட்டுரை விரிவாக உள்ளது. இந்தச் சூழலில் புதிய கட்டுரையின் பொருத்தமான உள்ளடக்கங்களை பழைய கட்டுரையுடன் சேர்க்க வேண்டும். அல்லது, புதிய கட்டுரையை நீக்க வேண்டும். பயனருக்கு இது குறித்து வழிகாட்டி அறிவுறுத்த வேண்டும். சுற்றுக்காவல் நடைமுறைகளைக் கவனித்துப் பார்க்க வேண்டுகிறேன். இவற்றின் அனைத்துப் படிகளையும் கவனிக்காமல் ஒரு கட்டுரையைச் சுற்றுக் காவல் செய்ததாகக் குறிக்க வேண்டாம். ஐயங்கள் இருந்தால் கேட்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:22, 16 சூலை 2017 (UTC)

நான் கவனித்து உள்ளேன். என்பதற்கு சுற்றுக்காவல் குறித்துள்ளேன். ஏனெனில், பலர் ஒருவேளையை செய்யக்கூடாது என்பதற்கு..பிறகு, பேச்சு:சர் சி வி ராமன் பக்கத்தில் அதன் உருவாக்குனருக்கு தெரிவித்துள்ளேன். --உழவன் (உரை) 08:18, 16 சூலை 2017 (UTC)
அப்படி குறிக்க வேண்டாம். ஒரு வேளை, உங்களுக்கு வேறு பணிகள் வந்து இக்கட்டுரையை மீண்டும் கவனிக்க இயலாமல் போனால், வேறு பயனர்களின் பார்வையிலும் போகும் வாய்ப்பு உண்டு. ஒரு கட்டுரை சுற்றுக் காவல் வரையறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டும் சுற்றுக்காவல் முடித்ததாக குறிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 09:46, 16 சூலை 2017 (UTC)

ஐயம்தொகு

வணக்கம் த♥உழவன் நெல் தொடர்பான கட்டுரைகளை இயற்றி வருகிறேன், ஒவ்வொரு நெல் வகைக்கும் இனம், மற்றும் பேரினம் (species / genus) மாறுபடுமா, அல்லது அனைத்து நெல் வகைக்கும் இனம், மற்றும் பேரினம் ஒன்றுதானா. தெளிவுப்படுத்த இயன்றால் உதவுங்கள். நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக! : 10:46, 9 செப்டம்பர் 2017 (UTC)'

ஆசிய மாதம், 2017தொகு

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:31, 14 நவம்பர் 2017 (UTC)

இரண்டாயிரமவர்தொகு

--இரண்டாயிரம் கட்டுரைகளுக்கு மேல் எழுதிய பயனர்களில் ஒரு பயனரான எனக்கு இரண்டாயிரமவர் பதக்கம் வழங்க வேண்டுகிறேன். நன்றி.-- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 18;48, 27 சனவரி 2018 (UTC)

மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்களது படைப்புகள். என்னை விட, இப்பதக்கத்தை வழங்க @Kanags: அவர்களை வேண்டுகிறேன். --உழவன் (உரை) 14:52, 27 சனவரி 2018 (UTC)

ஆதரவுதொகு

தங்கள் ஆதரவு இங்கே தரவும். நன்றி. --UKSharma3 உரையாடல் 14:16, 1 பெப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்தொகு

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:28, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு

அன்புள்ள த.உழவன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:49, 13 மார்ச் 2018 (UTC)

பயனர் தடைதொகு

வணக்கம், நீங்கள் பயனர் ஒருவர் பங்களிப்பதற்கு ஒரு வார காலத் தடை வித்திருக்கிறீர்கள். இது அவசியமானதாக எனக்குத் தெரியவில்லை. அப்புதிய பயனர் புடலங்காயைப் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில் எத்தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனை மீள்வித்திருக்கிறீர்கள். மற்றைய கேள்வி அக்கட்டுரைக்குத் தேவையற்றதே. ஆனாலும், தடை விதிப்பதற்கான அவசியமான பங்களிப்பாக எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்து ஒருவர் தவறான கருத்துகளைக் கூறியிருந்தால் தடை விதிப்பதற்குக் காரணம் இருக்கலாம். இப்பயனருக்கான தடையை மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 23:03, 21 ஏப்ரல் 2018 (UTC)

எவ்வளவு நாட்கள் தரலாம்? புதிய களமொன்றை புரிந்து கொள்ள ஒரு வாரம் தேவை என்றே கருதுகிறேன். மற்றொன்று தடை என்ற சொல், அடுத்தவர் மனதிற்கு நெருடலாக இருக்கும் என்பதால், அச்சொல்லைத் தவிர்த்து, அவரது பேச்சுப்பக்கத்தில் உரையாடி உள்ளேன். இதுபோல நிகழ்வு, தொடக்க காலத்தில், ஆங்கில விக்சனரியில் எனக்கு நிகழ்ந்துள்ளது. அதற்குப்பிறகே விக்சனரியில் ஓரளவு பங்களிப்பு செய்ய முற்பட்டேன்.--உழவன் (உரை) 01:37, 22 ஏப்ரல் 2018 (UTC)
எல்லோரும் தவறு விட்டுத்தான் விக்கிநடையைப் புரிந்து கொள்வார்கள். முதல் பங்களிப்பிலேயே, அதுவும் கட்டுரையில் அல்லாமல், பேச்சுப் பக்கப் பங்களிப்புக்காக, ஒரு வாரத் தடை என்பது அதிகம். தடையை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags (பேச்சு) 01:53, 22 ஏப்ரல் 2018 (UTC)
ஒரு நாளாக மாற்றியுள்ளேன். அக்கட்டுரையை சிறிது விரிவாக்கச் செல்கிறேன்.--உழவன் (உரை) 02:02, 22 ஏப்ரல் 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறதுதொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

தொகுப்பு மறுப்புதொகு

இங்குள்ள தொகுப்பு மறுப்பு விக்கிப்பீடியாவின் எவ்விதியின் கீழ் அடங்குகிறது? இதற்கென தனித்துவமான அனுமதி விக்கிச் சமூகத்தில் பெறப்பட்டதா? தடை, காப்பு, மட்டுப்படுத்தப்பட்ட வேண்டுகோள் ({{In use}}, {{Under construction}}) தவிர "தொகுக்க வேண்டாம்" எனக் அறிவிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது? காண்க: Terms of Use --AntanO (பேச்சு) 07:36, 28 மே 2018 (UTC)

 • நண்பரே! நடந்து கொண்டு இருக்கும் கட்டுரைப் போட்டியில் தமிழ் முன்னிலை வகிக்க என்னால் இயன்றதை செய்கிறேன். சமவெளி என்ற கட்டுரையினை உருவாக்கிக் கொண்டு இருந்த போது மற்றொரு நண்பர் மேற்கூறிய வார்ப்புரு இருந்தும் தொகுத்ததால் தமிழுக்குரிய புள்ளி வர இயலாது நிலை ஏற்பட்டதாகவே கருதுகிறேன். அதனால் அக்கட்டுரைய அவரது தொகுக்கப் பட்ட பிறகு மீண்டும் சொற்களை அதிகரித்து, போட்டி பட்டியலில் இணைத்தேன். மீண்டும் அது நடக்கா வண்ணம் இருக்க, நான் மேற்கொள்ளும் வழிமுறை தவறு எனில், பிற வழிமுறையைக் கூறவும். பின்பற்றுகிறேன். --உழவன் (உரை) 07:52, 28 மே 2018 (UTC)
{{In use}} இணைத்துவிடுங்கள். அவற்றை என் கவனிப்புப் பட்டியலில் வைத்திருந்து, மற்றவர்கள் தொகுத்தால், விளக்கி, அக்கட்டுரையை தவிர்க்க வைக்கிறேன். --AntanO (பேச்சு) 07:58, 28 மே 2018 (UTC)
அப்படி செய்தால் கூட, புள்ளி கணக்கு விட்டு போய்விடுமென்றே கருதுகிறேன். எனினும் இட்டுள்ளேன். fountain கருவியல் இணைத்து விட்டு எழுதலாமா?--உழவன் (உரை) 08:10, 28 மே 2018 (UTC)
நீங்கள் பயன்படுத்திய {{Under construction}} வார்ப்புருவைவிட {{In use}} வார்ப்புரு மற்றவர்களுக்கு தெளிவாக தொகுத்தலைத் தவிர்க்க அறிவிக்கின்றது. தேவைப்பட்டால், en:Template:In creation என்ற வார்ப்புவையும் இங்கு உருவாக்கிவிடலாம். மற்றவர்கள் தொகுப்பதால் புள்ளி கணக்கு விட்டு போய்விடுமா? அப்படியாயின், அந்த விதிமுறை தளர்த்தப்படுவது அல்லது மாற்றப்படுவது அவசியம். --AntanO (பேச்சு) 11:52, 28 மே 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

ஏற்காடு தலைப்புகள்தொகு

ஏற்காடு குறித்த தலைப்புகள் கட்டுரைப் போட்டியில் எந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்று சுட்டி உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:53, 31 மே 2018 (UTC)

பட்டியலைப் பார்க்கவில்லை. கருவி ஏற்கிறதா என பார்த்தேன். ஏற்றது. அதனால் தொடர்ந்து, எனது வாழிடங்களைப் பற்றி எழுதினேன். பொருத்த மற்றது எனில் நீக்கி விடவும்.--உழவன் (உரை) 15:14, 31 மே 2018 (UTC)
தெளிவுபடுத்தியதற்கு நன்றி. போட்டியின் விதிகள் கருதி இவற்றுக்குப் புள்ளிகள் தராமல் Fountain கருவியில் இருந்து விலக்கியுள்ளேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு நீங்கள் மீண்டும் முனைப்பாக கட்டுரைகள் ஆக்குவது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:51, 1 சூன் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

விக்கிபீடியா சிறப்பு பயிற்சி தொடர்பாகதொகு

தகவல் உழவன் நீங்கள் என்று எந்த விமானத்தடக் குழுமத்தில் இராஞ்சி செல்ல பதிவு செய்ய உள்ளீர்கள் என அறிவிக்கவும். கி. மூர்த்தி அவர்களையும் கலந்துகோள்ளவும். சிறப்பு பயிற்சிக்கு நாம் மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரவி கூறியுள்ளார்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:52, 15 சூன் 2018 (UTC)

AYYA! Vannakkam.

Sorry to write in English. I am using third person mobile. Moorthy informed about this. CIS will call with journey tickets. In my experience, I know that Ravi always take care. Take full rest till they announce participants list. If they call, we will plan._உழவன் (உரை) 14:21, 15 சூன் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:50, 2 நவம்பர் 2018 (UTC)

வணக்கம் தகவல் உழவன், தாங்கள் விக்கிப்பீடியா ஆசிய மாதம் தொடர் தொகுப்புப் போட்டியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் இன்னும் மூன்று கட்டுரைகள் புதிதாக, நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் உருவாக்கினால் உங்களுக்கு சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டை அனுப்புவர். முயற்சிக்கவும். நன்றி. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:54, 27 நவம்பர் 2018 (UTC)

உதவிதொகு

வணக்கம் உழவன்.காலியம்(III) தெலுரைடு என்ற கட்டுரையை காலியம்(III) தெலூரைடு என்ற தலைப்புக்கு நகர்த்த உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 02:01, 30 நவம்பர் 2018 (UTC)

நன்றிதொகு

தங்கள் தகவலுக்கு நன்றி ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 12:29, 25 திசம்பர் 2018 (UTC)

கூகுள்தொகு

கூகிள் என இருக்கும் கட்டுரைகளின் தலைப்பை கூகுள் என தங்களால் மாற்றித்தர இயலுமா? அல்லது நானே மாற்றலாமா? அவ்வாறு மாற்றும் போது அதன் பேச்சுப் பக்கத்தையும் மாற்றலாமா? தங்களின் உதவி தேவை நன்றி ஸ்ரீ (talk) 04:56, 13 மே 2019 (UTC)

இதனை நிரலாக்கம் வழி செய்யலாம். பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாகவும், மன அலுப்பின் காரணமாகவும் தள்ளிப் போட்டு வருகிறேன். தற்போது விக்கிமூலத்தில் உள்ள நிரல்களை முழுமை செய்ய படித்து வருகிறேன். அவற்றை ஓரிரு மாதங்களில் முடித்து விடுவேன். இப்போதைக்கு, வழிமாற்றே போதும். பிற ஆக்கப்பணிகளில் இறங்குங்கள்.--உழவன் (உரை) 05:45, 13 மே 2019 (UTC)

தகவல்களுக்கு நன்றி. ஸ்ரீ (talk) 05:56, 13 மே 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: நீங்களே மாற்றலாம். கட்டுரைகள் அதிகமில்லை. வழிமாற்றை வைத்திருங்கள். கூகிள் என எழுதுவதும் சரியானதே. பேச்சுப் பக்கத்தை வழிமாற்றில்லாமல் மாற்றலாம். கட்டுரைத் தலைப்புகளை மாற்றிய பின்னர், {{கூகுள்}} என்ற வார்ப்புருவில் உள்ள இணைப்புகளையும் சரியான தலைப்புகளுக்கு மாற்றுங்கள். பகுப்புகளை மாற்ற விரும்பினால் எனக்கு அறியத்தாருங்கள். தானியங்கி மூலம் மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 07:59, 13 மே 2019 (UTC)
@Kanags: நன்றி --ஸ்ரீ (talk) 11:09, 13 மே 2019 (UTC)

Project Tiger 2.0தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

இணைப்புதொகு

Wikimedian-in-Residence at TVAதொகு

I am updating this page: outreach:Wikipedian_in_Residence. Can I confirm when the Wikimedian-in-Residence at TVA ended? Also is there a URL that I can link to with information?

I'm building w:template:WiR_table_row to help automate the Wikipedians_in_Residence table. I'm building w:template:WiR_table_row to help automate the Wikipedians_in_Residence table. Do you have an existing qid? See wikidata:Q25212744#P106 as an example. Evolution and evolvability (பேச்சு) 11:27, 29 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

WikiConference India 2020: IRC todayதொகு

{{subst:WCI2020-IRC (Oct 2019)}} MediaWiki message delivery (பேச்சு) 05:27, 20 அக்டோபர் 2019 (UTC)

WikiConference India 2020: IRC todayதொகு

Greetings, thanks for taking part in the initial conversation around the proposal for WikiConference India 2020 in Hyderabad. Firstly, we are happy to share the news that there has been a very good positive response from individual Wikimedians. Also there have been community-wide discussions on local Village Pumps on various languages. Several of these discussions have reached consensus, and supported the initiative. To conclude this initial conversation and formalise the consensus, an IRC is being hosted today evening. We can clear any concerns/doubts that we have during the IRC. Looking forward to your participation.

The details of the IRC are

Note: Initially, all the users who have engaged on WikiConference India 2020: Initial conversations page or its talk page were added to the WCI2020 notification list. Members of this list will receive regular updates regarding WCI2020. If you would like to opt-out or change the target page, please do so on this page.

This message is being sent again because template substitution failed on non-Meta-Wiki Wikis. Sorry for the inconvenience. MediaWiki message delivery (பேச்சு) 05:58, 20 அக்டோபர் 2019 (UTC)

Thank you and Happy Diwaliதொகு

 
 Thank you and Happy Diwali  
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --Titodutta (பேச்சு) 13:12, 27 அக்டோபர் 2019 (UTC)

ஆசிய மாதம், 2019தொகு

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:13, 3 நவம்பர் 2019 (UTC)

வேங்கைதொகு

வேங்கைத்திட்டப் போட்டியில் சதமடித்ததற்கு வாழ்த்துகள் தகவல் உழவன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:30, 20 நவம்பர் 2019 (UTC)

  விருப்பம்--ஸ்ரீ (✉) 15:20, 24 நவம்பர் 2019 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த நடுவர் பதக்கம்
வேங்கைத் திட்டம் 2.0-வில் சிறப்பான முறையில் பங்களிப்பாளர்களை வழிநடத்தி வருவதற்கும், கட்டுரைகளில் காணும் குறைகளை கனிவுடன் தெரிவிப்பதற்கும், விரைவாகக் கட்டுரைகளை மதிப்பீடு செய்து வருவதற்காகவும் அனைத்து பங்களிப்பாளர்கள் சார்பாகவும் தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை அளிப்பதில் மகிழ்ச்சி --ஸ்ரீ (✉) 15:14, 24 நவம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி--உழவன் (உரை) 15:56, 24 நவம்பர் 2019 (UTC)
  விருப்பம்Fathima (பேச்சு) 04
13, 25 நவம்பர் 2019 (UTC)
  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:04, 25 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:04, 25 நவம்பர் 2019 (UTC)

வார்ப்புரு இற்றைப்படுத்தலால் சிவப்பு இணைப்புகள்தொகு

வணக்கம், நீங்கள் அண்மையில் செய்த சில மாற்றங்கள், ஏராளமான (பல்லாயிரக்கணக்கான) கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகளைத் தந்திருக்கிறது. ஒரேயொரு உதாரணம்: வார்ப்புரு:lang-ru. இது போன்று பல வார்ப்புருக்கள். கட்டுரைகளின் முதல் வரிகளிலேயே சிவப்பு இணைப்புகள். இவற்றை எவ்வாறு எங்கு சென்று திருத்துவது எனத் தெரியவில்லை:(--Kanags \உரையாடுக 01:48, 1 திசம்பர் 2019 (UTC)

{{lang-fa}} பாரசீகம்: اردبیل, {{lang-az}} அசர்பைஜான்: [اردبیل ] error: {{lang}}: text has italic markup (உதவி), {{lang-peo}} {{lang-peo}}, Akkadian: 𒊏𒂵𒀪, {{lang-elx}} ஈலமைட்டு மொழி: 𒊩𒋡𒀭இவை போன்ற அரபு மொழிக்குடும்பத்தின் பண்டைய மொழிகளை தமிழ் திட்டத்தில் தெரிய வைக்க எடுத்த முயற்சியில், அவ்விளைவுகள் பின் விளவாக ஏற்பட்டுள்ளன. அனைத்து மொழிகளிலும் விக்கித்தரவுகளுக்கு ஏற்ப வார்ப்புருக்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உடன் உதவி வேண்டுமெனில், பயனர்:Aswn பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டது போல உதவ முடியும் என்றே எண்ணுகிறேன் அல்லது phabricator என்ற விக்கிப்பிரிவு இதற்கென்றே இயங்குகிறது. அங்கு முன்னுரிமை அடிப்படையில் மாற்றங்கள் செய்வது வழமை. --உழவன் (உரை) 03:06, 1 திசம்பர் 2019 (UTC)

மேற்குறிப்பிட்ட மொழிகள் தமிழில் வர என்ன செய்தீர்கள்? உருசிய மொழி அல்லது வேறு மொழிகள் தமிழில் வர எங்கு மாற்ற வேண்டும் எனக் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 03:12, 1 திசம்பர் 2019 (UTC)
சில வழிகள் உள்ளன. எளியது யாதெனில், ஒன்று வார்ப்புருவைத் திறந்து, இங்கு படியிடல். அவ்வாறு செய்யும் போது, அதனை உருவாக்கியவர் பெயர் இங்கு பக்கவரலாற்றில் தோன்றாது. மற்றொன்று சிறப்புப்பக்கங்களின் வழி பதிவிறக்க வேண்டும். அப்படி செய்யும் போது இதுவரை உழைத்தவர்களின் பெயர்களும் பக்க வரலாற்றில் பதிவேறும். அதோடு தொடர்புடையை மாற்றங்களை அவர்கள் வேறு மொழியில் உரையாடிவிட்டே ஏற்படுத்தியிருப்பர் என்பதால், நாம் அவற்றை நாம் பின்பற்றலாம். ஒரு மொழிக்கு உரியதில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டி வரலாம். அதனை பேஃபிரிகேட்டர் பங்களிப்பாளர்கள் கவனிப்பர். அவ்வாறு நாம் சொல்லும் போது தான், எதிர்காலத்தில் எம்மொழிக்கும் ஏற்றவாறு உருவாக்குவர். இல்லையெனில் பல நுட்பங்கள் தமிழ் பின்தங்கி விடும். மீளமைக்காமல் தொடர்ந்து உரையாடுதலுக்கு நன்றி. ஏனெனில், மீளமைக்கும் பணி என்பது ஆயாமல் செய்யும் எளிய பங்களிப்பு-உழவன் (உரை) 04:09, 1 திசம்பர் 2019 (UTC)
நான் என்ன கேட்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அதாவது, Влади́мир Ильи́ч Ле́нин என எழுதிச் சேமித்தால் உருசிய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин என வர வேண்டும். நீங்கள் செய்துள்ள மாற்றத்தினால் உருசியம்: Влади́мир Ильи́ч Ле́нин என வருகிறது. இதனை எவ்வாறு சரி செய்வது? பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளிலும் உள்ள வார்ப்புருக்களை நீக்க வேண்டுமா? அல்லது வேறு வழி உள்ளதா? எங்கு சென்று மாற்ற வேண்டும். இதில் இரகசியம் ஏதேனும் உள்ளதா? அவ்வளவு இலகுவல்ல எனில் சொல்லுங்கள். (மீளமைக்க முடியாமல் இருப்பதால் தான் கேட்கிறேன்).--Kanags \உரையாடுக 06:37, 1 திசம்பர் 2019 (UTC)
எனக்கும் புரியலை. பிறரிடம் கேட்போமா?. நான் கற்றது கைமண் அளவே--உழவன் (உரை) 09:13, 1 திசம்பர் 2019 (UTC)
 
வேறுபாடற்ற உருசிய எழுத்துருக்கள்
எனக்கு ஒன்று போலவே படத்தில் காட்டியபடி, எந்த வேறுபாடும் இல்லாமல் வருகிறது. இப்பொழுது உங்களுக்கு நன்றாக தெரிகிறதா? --உழவன் (உரை) 00:48, 2 திசம்பர் 2019 (UTC)

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Surveyதொகு

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (பேச்சு) 05:10, 12 திசம்பர் 2019 (UTC)

விக்கிதரவகம்தொகு

அன்ணா ஈரான் சுத்தம் செய்துவிட்டேன். கண்டு அழைக்கவும். கட்டுரையின் மேலே உங்களுக்கு விக்கித்தரவு வருவது போல எனக்கும் வர என்ன் செய்யுனும்? படம் உருவாக்கித்தாருங்கள்--Rabiyathul (பேச்சு) 11:44, 21 திசம்பர் 2019 (UTC)

 • தமிழில் தட்டச்சு செய்யும் போது, தமிழ் 99 வழி செய்யவும். விரைவில் திரைச்தட்டச்சுப் பலகையை விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, இங்கு என பயன்படுத்த ஆவண செய்கிறேன். அதுவரை இத்தளத்தில் சென்று, style3 தேர்ந்தெடுத்துப் பயிலவும். ஆங்கிலம் வழி தமிழ் எழுத கற்க வேண்டாம்.(எழுதிய வரிகளில் உள்ள பிழைகள்: அண்ணா, என்ன், செய்யணும், பாடம்)
 • இடது பக்கம் உள்ள பொதுவகம் என்பதை அழுத்தினால், அவ்விடம் செல்லும். அங்கு விக்கித்தரவு எனத் தமிழில் தேடவும். ஒரு பகுப்பு(category) வரும். அதில் வேண்டியதை அவ்வப்போது இணைப்பேன். ஏற்கனவே சிலவற்றை இணைத்துள்ளேன். வேறு என்ன வேண்டும் எனக் கூறினால், உருவாக்கி இணைக்கிறேன்.--உழவன் (உரை) 00:43, 22 திசம்பர் 2019 (UTC)

கவனிக்கதொகு

கட்டுரையில் தமிழில் எழுதியுள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளை அடைப்புக் குறிக்குள் எழுதுவதைத் தவிர்க்கலாம். {உம்: பேபாகன்) நீங்கள் தமிழ் வார்த்தக்கான அதன் பாரசீக வார்த்தைகளை எழுதியுள்ளதால் அதுவே போதும். மேலும் அதனையும் அதிகமாக இருக்காமல் பார்த்துக் கொண்டால் நலம். ஏனெனில் போட்டிக்கு வார்த்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் மற்ற மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நன்றிஸ்ரீ (✉) 12:54, 21 திசம்பர் 2019 (UTC)

அதனால் தான் எனது சொற்களின் எண்ணிக்கையை 320 என வைத்துக்கொண்டு எழுதுகிறேன். பொதுவாக ஈரான் குறித்த கட்டுரைகளில் அப்படிதான் இருக்கும். எனினும், எதிர்காலத்தில் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்கிறேன். இருப்பவற்றை நீக்குகிறேன். ஈரான் குறித்த கட்டுரைகளையும் மேம்படுத்துவேன்.--உழவன் (உரை) 00:28, 22 திசம்பர் 2019 (UTC)

இணப்பது எப்படி?தொகு

அண்ணா நீங்கள் கூறியபடி விரிவாக்கியுள்ளேன். போட்டியில் இணைப்பது எப்படி? பாடம் உருவாக்கி தாருங்கள்--Rabiyathul (பேச்சு) 12:46, 26 திசம்பர் 2019 (UTC)

யூடிப்பில் பார்த்தேன். இங்கும் பார்க்கும் படி செய்தால், அங்கு போக வேண்டியதில்லை.--Rabiyathul (பேச்சு) 11:33, 27 திசம்பர் 2019 (UTC)

கட்டுரைகள் மேம்படுத்தல்தொகு

வணக்கம் தங்களின் ஒசநே+04:30, ஒசநே+03:30 கட்டுரைகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஒரே செய்தியைப் பல கட்டுரைகளிலும் இடுவதைத் தவிர்க்கவும். மேம்படுத்தியபின் கருவியில் ஏற்றவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 20:26, 31 திசம்பர் 2019 (UTC)

அவை ஆசிய மாதத்திற்கு உருவாக்கப்பட்டவை. விரிவு படுத்துகிறேன்.--உழவன் (உரை) 00:36, 1 சனவரி 2020 (UTC)

WAM 2019 Postcardதொகு

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 4 சனவரி 2020 (UTC)

புதியவர்களின் கட்டுரைகளை விரைந்து கவனிக்கக் கோருகிறேன்.--உழவன் (உரை) 00:24, 5 சனவரி 2020 (UTC)


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:22, 17 சனவரி 2020 (UTC)

WAM 2019 Postcardதொகு

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)

[WikiConference India 2020] Conference & Event Grant proposalதொகு

WikiConference India 2020 team is happy to inform you that the Conference & Event Grant proposal for WikiConference India 2020 has been submitted to the Wikimedia Foundation. This is to notify community members that for the last two weeks we have opened the proposal for community review, according to the timeline, post notifying on Indian Wikimedia community mailing list. After receiving feedback from several community members, certain aspects of the proposal and the budget have been changed. However, community members can still continue engage on the talk page, for any suggestions/questions/comments. After going through the proposal + FAQs, if you feel contented, please endorse the proposal at WikiConference_India_2020#Endorsements, along with a rationale for endorsing this project. MediaWiki message delivery (பேச்சு) 18:21, 19 பெப்ரவரி 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut downதொகு

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

Translation requestதொகு

Hello.

Can you translate and upload the article en:List of mammals of Azerbaijan in Tamil Wikipedia?

Yours sincerely Karalainza (பேச்சு) 23:51, 27 ஏப்ரல் 2020 (UTC)

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipientsதொகு

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

REMINDER - Feedback from writing contest jury of Project Tiger 2.0தொகு

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the article writing jury process.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 06:24, 13 June 2020 (UTC)

Digital Postcards and Certificationsதொகு

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)

Wikipedia Asian Month 2020தொகு

Hi WAM organizers and participants!

Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

 1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
 2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
 3. Inform your community members WAM 2020 is coming soon!!!
 4. If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.

If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!

Here are some updates from WAM team:

 1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
 2. The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
 3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2020

Sincerely yours,

Wikipedia Asian Month International Team 2020.10

விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020தொகு

வணக்கம் உழவன் தங்களிடம் மீண்டும் உரையாடுவதில் மகிழ்ச்சி. விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் . எனவே, இந்தத் திட்டத்தில் விக்கிமூலம் மற்றும் விக்சனரி பற்றிய தங்களது புரிதல்களை மாணவர் சமூகத்திற்கு கூறுவதில் உங்களுக்கும் மகிழ்ச்சியே என நம்புகிறேன். இதில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 12:44, 16 அக்டோபர் 2020 (UTC)

உள்ளகப் பயிற்சி-2020தொகு

வணக்கம்,தகவலுழவன் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020

]] இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2 தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஸ்ரீ (✉) 13:03, 29 நவம்பர் 2020 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meetingதொகு

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have r