விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023
சிறப்பு மாதம் போன்று, சிறப்புக் காலாண்டு.
தொடர்ச்சியான 3 மாதங்களில் ஒரு குறிப்பிட்ட வகைக் கட்டுரைகளை செம்மைப்படுத்துவதற்கான திட்டம்.
நோக்கம்
தொகு2017 ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளைத் திருத்தி, செம்மைப்படுத்துதல்.
முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023
மாதங்கள்/ நாட்கள்
தொகுஏப்ரல் 1, 2023 முதல் சூன் 30, 2023 வரை (மூன்று மாதங்கள்)
இலக்கு
தொகு- மொத்தமாக 1,092 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும்.
மாதம் | செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் (ஆரம்பம்) | 20% | செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் (முடிவு) |
---|---|---|---|
ஏப்ரல் | 2,238 | 448 | 1,790 |
மே | 1,790 | 358 | 1,432 |
சூன் | 1,432 | 286 | 1,146 |
நினைவுப் பரிசு
தொகுஇந்தத் திட்டத்தில் இணைந்து, 25 கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் 25 பயனர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படும்.
நினைவுப் பரிசாக முதுகில் அணியத்தக்க 'பயணியர் பை' (Backpack) வழங்கப்படும்.
வழிகாட்டல்
தொகுபொதுவானவை
தொகு- கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைக்கலாம்.
- தானியங்கித் தமிழாக்கக் கட்டுரைகளை நீக்கப் பரிந்துரைக்கலாம்.
- கட்டுரைகளை ஒருங்கிணைக்க வார்ப்புரு இட்டுவிட்டால், துப்புரவு முடிந்ததாகக் கருதலாம்.
- துப்புரவு முடிந்துவிட்டதாகக் கருதினால், துப்புரவு முடிந்த ---- மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பாக மாற்ற வேண்டும். (உ.ம் :
விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
என்பதனைதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
என மாற்ற வேண்டும்) தரவுகளைக் கொண்டிருப்பதற்காக இந்த வேண்டுகோள்.
குறைந்தபட்ச செம்மையாக்கம்
தொகு- குறைந்தது 5 முழுமையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- கலைக்களஞ்சியத்திற்குரிய நடையில் அறிமுகம் இருத்தல் வேண்டும்.
- குறைந்தது ஒரு மேற்கோள் இருக்க வேண்டும். அது முறையாக காட்டப்படல் வேண்டும்.
- குறைந்தது ஒரு பகுப்பாவது இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பொருத்தமான பகுப்பை, இயன்றளவு துல்லியமானதை இடவேண்டும்.
- சிவப்பிணைப்புகளை நீக்க வேண்டும்.
- கட்டுரைத் தலைப்பை விக்கித் தரவில் இற்றை செய்யவேண்டும்.
செயலாக்கம்
தொகுசெம்மைப்படுத்தப்பட வேண்டிய அனைத்துக் கட்டுரைகளும் அகர வரிசையில் இந்த இணைப்பில் தரப்பட்டன.
அகர வரிசையில் பட்டியலிடப்பட்ட அட்டவணைகளில் அவரவரின் பங்களிப்பை ஒவ்வொரு கட்டுரைக்கும் பதிவுசெய்யுமாறு பயனர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பங்களிப்பாளர்கள்
தொகு- பாலசுப்ரமணியன்
- கு. அருளரசன்
- Sridhar G
- கி.மூர்த்தி
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 3 ஏப்ரல் 2023 (UTC)
- சத்திரத்தான்
- சுப. இராஜசேகர்
- சா. அருணாசலம்
- மகாலிங்கம் இரெத்தினவேலு
- தியாகு கணேஷ்
- --பிரயாணி (பேச்சு) 14:41, 27 ஏப்ரல் 2023 (UTC)
- வசந்தலட்சுமி
- சத்தியராஜ்
- உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:31, 1 மே 2023 (UTC)
- Booradleyp1
- தாமோதரன் (பேச்சு) 03:44, 5 மே 2023 (UTC)
- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15.25, 5 மே 2023 (UTC)
- பயனர்:S.BATHRUNISA
- -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு)
- பாலாஜி (பேசலாம் வாங்க!)
ஒருங்கிணைப்பாளர்கள்
தொகு- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:54, 18 மார்ச் 2023 (UTC)
- ஸ்ரீதர். ஞா (✉) 03:12, 26 மார்ச் 2023 (UTC)
புள்ளிவிவரம்
தொகுவார இலக்குகளும், எட்டியவையும்
தொகுவாரத்தின் வரிசை எண் | வாரத்தின் ஆரம்பம் | வாரத்தின் முடிவு | வார இலக்கு | வாரத்தில் எட்டியது | வாரத்தில் எட்டிய செயல்திறன் | ஒட்டுமொத்த இலக்கு | ஒட்டுமொத்தமாக எட்டியது | ஒட்டுமொத்தமாக எட்டிய செயல்திறன் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ஏப்ரல் 1 | ஏப்ரல் 7 | 112 | 85 | 75.89% | 112 | 85 | 75.89% |
2 | ஏப்ரல் 8 | ஏப்ரல் 14 | 112 | 115 | 102.68% | 224 | 200 | 89.29% |
3 | ஏப்ரல் 15 | ஏப்ரல் 21 | 112 | 44 | 39.29% | 336 | 244 | 72.62% |
4 | ஏப்ரல் 22 | ஏப்ரல் 28 | 112 | 43 | 38.39% | 448 | 287 | 64.06% |
5 | ஏப்ரல் 29 | மே 5 | 72 | 102 | 141.67% | 520 | 389 | 74.81% |
6 | மே 6 | மே 12 | 72 | 111 | 154.17% | 592 | 500 | 84.46% |
7 | மே 13 | மே 19 | 72 | 146 | 202.78% | 664 | 646 | 97.29% |
8 | மே 20 | மே 26 | 72 | 192 | 266.67% | 736 | 838 | 113.86% |
9 | மே 27 | சூன் 2 | 72 | 185 | 256.94% | 808 | 1,023 | 126.61% |
10 | சூன் 3 | சூன் 9 | 71 | 113 | 159.15% | 879 | 1,136 | 129.24% |
11 | சூன் 10 | சூன் 16 | 71 | 80 | 112.68% | 950 | 1,216 | 128.00% |
12 | சூன் 17 | சூன் 23 | 71 | 95 | 133.80% | 1,021 | 1,311 | 128.40% |
13 | சூன் 24 | சூன் 30 | 71 | 98 | 138.03% | 1,092 | 1,409 | 129.03% |
குறிப்பு:
- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அந்நாளின் இறுதியில் (இந்திய நேரம்) புள்ளிவிவரம் இற்றைப்படுத்தப்பட்டது.
- மாவட்டவாரியாக பகுக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு அட்டவணையில் பட்டியலிடப்பட்டிருந்தன. அந்தத் தரவுகளிலிருந்து புள்ளிவிவரம் பெறப்பட்டது.
பயனர்கள் வாரியாக
தொகுவரிசை எண் | பயனர் | செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை | ||
---|---|---|---|---|
1 | உலோ.செந்தமிழ்க்கோதை | 434★ | ||
2 | பாலசுப்ரமணியன் | 224 | ||
3 | கி.மூர்த்தி | 128 | ||
4 | மகாலிங்கம் இரெத்தினவேலு | 120 | ||
5 | பயனர்:Booradleyp1 | 105 | ||
6 | Sridhar G | 98 | ||
7 | மா. செல்வசிவகுருநாதன் | 74 | ||
8 | Jagadeeswarann99 | 62 | ||
9 | சத்திரத்தான் | 57 | ||
10 | கு. அருளரசன் | 39 | ||
11 | Kanags | 39 | ||
12 | ஜெ. பாலாஜி | 26 | ||
13 | தியாகு கணேஷ் | 9 | ||
14 | சத்தியராஜ் | 5 | ||
15 | பயனர்:S.BATHRUNISA | 5 | ||
17 | சா. அருணாசலம் | 3 | ||
16 | சுப. இராஜசேகர் | 2 | ||
18 | வசந்தலட்சுமி | 2 | ||
19 | தாமோதரன் | 1 | ||
20 | AntanO | 1 | ||
- | மொத்தம் | 1,434 | ||
★ பயனர் தெரிவித்த சில பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு, செயற்படுத்தப்படல் வேண்டும். |
கடைசியாக இற்றை செய்த நாள்: சூலை 1 (அதிகாலை 01:25)
குறிப்புகள்:
- பணியை முடித்த பின்னர் பங்களிப்பாளர்கள் இந்தப் பக்கத்தில் ஆவணப்படுத்தினார்கள். அந்தத் தரவுகளின் அடிப்படையில் புள்ளிவிவரம் இற்றைப்படுத்தப்பட்டது.
- வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் அந்நாளின் இறுதியில் (இந்திய நேரம்) புள்ளிவிவரம் இற்றைப்படுத்தப்பட்டது.
- புள்ளிவிவரத்தின் துல்லியம் = 98.3% (துல்லியத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கோள்ளப்பட்டன)
எண்ணிக்கை வித்தியாசம்
தொகுகாலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றபோது:- துப்புரவு முடிந்த (அல்லது) நீக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கைக்கும், பயனர்கள் பங்களிப்பின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையே சுமார் 25 எண்ணிக்கை வித்தியாசம் இருந்தது (பயனர்கள் பங்களிப்பின் மொத்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது).
கீழ்காணுபவை காரணங்களாக இருக்கலாம்:
- துப்புரவு முடிந்ததாக அட்டவணையில் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், கட்டுரையில் பகுப்பு மாற்றப்படாமல் இருக்கும்.
- நீக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். ஆனால், நீக்கப்படாமல் இருக்கும்.
- இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். ஆனால், 'துப்புரவு முடிந்த' எனும் பகுப்பு மாற்றப்படாமலிருக்கும்.